
ஆந்தாலஜி படம் மூலம் ரீ-என்ட்ரி கொடுக்கும் சுப்பிரமணியபுரம் நடிகை
சுப்பிரமணியபுரம், கனிமொழி, போராளி போன்ற படங்களில் நடித்து பிரபலமான நடிகை சுவாதி, தற்போது ஆந்தாலஜி படம் மூலம் ரீ-என்ட்ரி கொடுக்க உள்ளார். தமிழில் சுப்பிரமணியபுரம் படம் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர் சுவாதி. இந்த படத்தில் இடம்பெற்ற கண்கள் இரண்டால் உன் கண்கள் இரண்டால் என்னை கட்டி இழுத்தாய் பாடலில் சுவாதியின் நடிப்பு பேசப்பட்டது.
2018-ல் சுவாதிக்கும், கேரளாவை சேர்ந்த விமானி விகாஸ் என்பவருக்கும் காதல் மலர்ந்து திருமணம் செய்து கொண்டனர். திருமணத்துக்கு பிறகு சினிமாவை விட்டு விலகிய நடிகை சுவாதி, தற்போது மீண்டும் ரீ-என்ட்ரி கொடுக்க உள்ளாராம். அதன்படி தெலுங்கில் உருவாகும் ‘பஞ்ச தந்திரம்’ என்கிற ஆந்தாலஜி படத்தில் அவர் நடிக்க ஒப்பந்தமாகி உள்ளார். இதில் சமுத்திரகனியும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். அறிமுக இயக்குனர் ஹர்ஷா புலிப்புகா இந்தப்படத்தை இயக்குகிறார்.













































