ப்ரா குறித்த கேள்விக்கு பிரியா பவானி ஷங்கர் பதில்
நடிகை பிரியா பவானி ஷங்கர் தொலைக்காட்சியில் செய்தி வாசிப்பாளராக பணியாற்றி தற்போது சினிமா நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கிறார். இடையில் சீரியல்களிலும் நடித்திருக்கிறார்.
ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய பிரபலம் பெற்று இருக்கும் பிரியா பவானிசங்கர் இணைய பக்கங்களிலும் ஆக்டிவாக இயங்கி வருகிறார். அவ்வப்போது ரசிகர்களுடன் கலந்துரையாடுவதை வாடிக்கையாக கொண்டிருக்கும் இவர் இடையில் ரசிகர் ஒருவருடன் ரசிகர்களுடன் கலந்துரையாடினார்.
அப்போது இணையவாசி ஒருவர் உன்னுடைய ப்ரா சைஸ் என்ன..? என்று கேள்வி எழுப்பியிருந்தார். இந்த கேள்வியை பார்த்து கடுப்பான ப்ரியா பவானி சங்கர் அந்த இணையவாசியை கடுமையாக திட்டி பதில் கொடுத்திருந்தார்.
பொதுவாக நடிகைகள் இப்படியான கேள்விகளை கடந்து சென்று விடுவார்கள். ஏனென்றால், இப்படியான கேள்விகளுக்கு பதில் கொடுக்கும் பொழுது அது மிகப்பெரிய விஷயமாக மீடியாக்களில் பேசப்படும் என்பதால் எப்படி என கேள்விகளை தவிர்த்து விட்டு சென்று விடுவார்கள்.
ஆனால், பிரியா பவானி ஷங்கர், நின்று தன்னுடைய எதிர்ப்பை பதிவு செய்திருந்தார். இது குறித்து சமீபத்திய பேட்டி ஒன்றில், நீங்கள் மீடியா துறையில் இருந்து இருக்கிறீர்கள்.. இதற்கு பதில் கொடுத்தால் இது எவ்வளவு பெரிய விஷயமாகும் என்று உங்களுக்கு தெரியும்.
ஆனாலும் நீங்கள் அதை செய்திருக்கிறீர்கள். என்ன காரணம்..? என்று கேள்வி எழுப்பப்பட்டது. நிச்சயமாக எனக்கு தெரியும். நான் இதற்கு பதில் கொடுத்தால் கண்டிப்பாக இது மீடியாவில் பெரிய விஷயமாக பேசுவார்கள் என்பதை தெரிந்தே தான் நான் பதில் கொடுத்தேன். ஏனென்றால் என்னிடம் தவறாக நடந்து கொள்ளக்கூடிய ஒரு நபருக்கு நான் தான் முதலில் எதிர்வினை ஆற்ற வேண்டும். எனக்காக நானே பேச தயங்கினால் வேறு யார் வந்து பேசுவார்கள் என்ற எண்ணம் எனக்குள் இருந்தது.
நாம் ஒரு பிரபலம், சினிமா நடிகை இதெல்லாம் தாண்டி ஒரு தனி மனிதனாக என் மீது இப்படியான கேள்விகளை எழுப்பும் போது எனக்கு கோபம் வரத்தான் செய்யும். அதற்குண்டான எதிர்வினை தான் அது. எனக்காக நானே கொடுத்துக் கொண்ட ஒரு குரல் தான் அது. இப்படி எதிர்வினை ஆற்றினால் தான் அந்த விஷயங்கள் குறையும். இப்போது, நான் இப்படி கோபமாக பதில் அளிப்பதால் இப்படி கேள்வி கேட்பவர்கள் திருந்தி விட போகிறார்களா..? என்றால் கிடையாது. ஆனால், இப்படி பேசினால் என்னிடமிருந்து இப்படி பதில் வரும் என அவர்களுக்கு தெரிய வைத்து விட்டேன். எனவே இப்படியான கேள்வி கேட்பவர்களுடைய எண்ணிக்கை குறையும் என்ற நம்பிக்கையில் தான் அப்படி செய்தேன் என கூறியிருக்கிறார் நடிகை பிரியா பவானி சங்கர்.
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · TamilPoonga
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva