
மீண்டும் நடிக்க வருகிறார் கவுண்டமணி
தமிழ் திரையுலகில் 40 வருடங்களுக்கு மேல் நகைச்சுவை நடிகராக கொடி கட்டி பறந்தவர் கவுண்டமணி. அனைத்து முன்னணி நடிகர்களுடனும் நடித்து இருக்கிறார். இவரும், செந்திலும் இணைந்து நடித்த காமெடி காட்சிகள் ரசிகர்களை வயிறு குலுங்க சிரிக்க வைத்தன. ஒரு கட்டத்தில் சினிமாவை விட்டு கவுண்டமணி ஒதுங்கினார். சில வருடங்களுக்கு முன்பு 49ஓ, எனக்கு வேறு எங்கும் கிளைகள் கிடையாது என்ற படங்களில் மட்டும் நடித்து இருந்தார். அதன்பிறகு நடிக்கவில்லை.
கவுண்டமணியை சிவகார்த்திகேயன் சமீபத்தில் நேரில் சந்தித்தார். அப்போது தனது படத்தில் நடிக்கும்படி கேட்டதாகவும், அதற்கு கவுண்டமணி சம்மதிக்கவில்லை என்றும் கூறப்பட்டது. இந்த நிலையில் நீண்ட இடைவெளிக்கு பிறகு புதிய படமொன்றில் கதையின் நாயகனாக நடிக்க கவுண்டமணி சம்மதித்து உள்ளார். மதுரை செல்வம் தயாரிக்கிறார். 'பேயை காணோம்' படத்தை இயக்கி பிரபலமான அன்பரசன் டைரக்டு செய்கிறார். இந்த படத்துக்கு 'பழனிச்சாமி வாத்தியார்' என்று பெயர் வைத்துள்ளனர்.

- ·
- · GomathiSiva

- ·
- · GomathiSiva

- ·
- · GomathiSiva

- ·
- · GomathiSiva

- ·
- · GomathiSiva

- ·
- · GomathiSiva

- ·
- · GomathiSiva

- ·
- · GomathiSiva

- ·
- · GomathiSiva

- ·
- · GomathiSiva

- ·
- · GomathiSiva

- ·
- · GomathiSiva

- ·
- · GomathiSiva

- ·
- · GomathiSiva

- ·
- · GomathiSiva

- ·
- · GomathiSiva

- ·
- · GomathiSiva

- ·
- · GomathiSiva

- ·
- · TamilPoonga

- ·
- · GomathiSiva

- ·
- · GomathiSiva

- ·
- · GomathiSiva

- ·
- · GomathiSiva

- ·
- · GomathiSiva