தமிழ்ப்பூங்காவின் இனிய நத்தார் வாழ்த்துகள்
உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும்
தமிழ்ப்பூங்காவின் இனிய நத்தார் வாழ்த்துகள்
- · 6 friends
- · 6 followers
பக்தர்களை தன் மனதில் வைத்திருக்கும் முருகனுக்கு உரிய தைப்பூச திருநாள் 2021 ஜனவரி 28ஆம் தேதி அதாவது தை மாதம் 15ஆம் தேதி பூச நட்சத்திரத்தில் கொண்டாடப்படுகிறது. பூச நட்சத்திரம் ஜனவரி 28ஆம் தேதியான அதிகாலை 4.48 மணியிலிருந்து தொடங்குகிறது என்பதால் விரதத்தின் போது எப்படி இருக்க வேண்டுமோ அந்த விதிகளை இந்த நேரத்திலிருந்து கடைப்பிடிப்பது நல்லது.
தைப்பூச சிறப்புகள்
தேவர்களுக்கும், அசுரர்களுக்கும் இடையே ஏற்பட்ட போரில் தேவர்களால் அசுரர்களை வெற்றி பெற முடியவில்லை. இதையடுத்து அடிக்கடி தொல்லை கொடுத்து வரும் அசுரர்களை வெல்ல என்ன செய்வதென்று தெரியாமல் தவித்த தேவர்கள் சிவபெருமானிடம் முறையிட்டனர்.
அசுரர்களுடன் போரிட தலைமை தாங்கி செல்லக்கூடிய சக்தி வாய்ந்த தலைவன் தேவை என ஈசனிடம் வேண்டினர். கருணைக்கடலான எம்பெருமான், தன் தனிப்பட்ட சகதியிலிருந்து, நெற்றிக்கண்ணிலிருந்து உருவானவர் தான் கந்தன்.
நெற்றிக்கண்ணிலிருந்து வெளிப்பட்ட ஆறு தீப்பொறிகள் ஆறு அழகிய குழந்தைகளாகின. அந்த குழந்தைகளை கார்த்திகை பெண்கள் வளர்த்தனர். பின்னர் ஆறுமுகமாக உருவெடுத்தார்.
ஆண்டி கோலத்தில் பழனி மலை மீது நின்றிருக்கும் முருகனுக்கு ஞான வேல் வழங்கிய இந்த தைப்பூச திருநாளில் தான்.
இதன் காரணமாக தான் மற்ற முருகனின் ஆறுபடை வீடுகளைக்களை காட்டிலும் பழனியில் மிக கோலாகலமாக கொண்டாடப்படுகிறது.
அப்படி பார்வதி தேவி கொடுத்த ஞான வேலை கொண்டு அசுரர்களை அழித்ததாகப் புராண காதை கூறுகின்றது.
தைப்பூச விரத முறைகள்:
தைப்பூசம் நாளில் காலையில் எழுந்ததும், வீட்டை சுத்தம் செய்து குளித்துவிட்டு, நெற்றி நிறைய திருநீறு அணிந்து, விரதத்தை தொடங்கலாம். வீட்டில் விளக்கேற்றி தெய்வங்களை வழிபட்டு, குறிப்பாக முருகப்பெருமானை வழிபட்டு, கந்த கந்த சஷ்டி கவசம், கந்தரலங்காரம், கந்தரனுபூதி, திருமுருகாற்றுப்படை, திருப்புகழ், கந்த, கலிவெண்பா உள்ளிட்ட முருகப்பெருமானுக்கு உகந்த பாடல்களை காலையிலிருந்து மாலை வரை படிக்கலாம்.
வேலைக்கு செல்பவர்கள் அதிகாலையிலேயே பூஜை செய்து முருகன் போற்றி பாடி விட்டு வேலைக்கு செல்லலாம். எந்த வேலை செய்வதானாலும் ‘ஓம் சரவணபவ’ எனும் திருமந்திரத்தை உச்சரித்தவாறே செய்வது நல்லது.
விரதத்தில் இருப்பவர்கள் காலை மதியம் இருவேளையும் பால், பழம் மட்டும் எடுத்துக்கொள்ளலாம். மாலை வேளையில் அருகில் உள்ள முருகன் கோயிலுக்கு சென்று முருகப்பெருமானை வழிபட்டு வருவது நல்லது. அங்கு கொடுக்கப்படும் பிரசாதத்தை எடுத்துக்கொள்ளலாம்.
காலை, மாலை வேளையில் கோயிலுக்கு சென்று முருகன் வழிபாடு செய்து வரலாம்.
முருகனுக்கு உகந்த இந்தாளில் விரதமிருந்து காவடி எடுத்தல் மற்றும் பால் குடம் தூக்குதல் போன்ற நிகழ்வுகளில் கலந்து கொள்ளலாம்.
நன்றி:சைவம் நெட்
இலங்கை பொலிஸ் சேவைக்கு ஆட்சேர்ப்பு செய்வதற்கான உடற்தகுதிகாண் பரீட்சை வவுனியா நகரசபை மைதானத்தில் இன்றுகாலை 8 மணி முதல் இடம்பெற்று வருகின்றது.
குறித்த பரீட்சையில் வடமாகணத்தை சேர்ந்த 551 பரீட்சார்த்திகள் கலந்து கொண்டனர். ஏற்கனவே அவர்களிற்கான நேர்முகத் தேர்வுகள் கடந்த வருடம் இடம்பெற்றிருந்த நிலையில் இன்றையதினம் அவர்களிற்கான உடற்தகுதிகாண் பரீட்சைகள் இடம்பெற்றிருந்தது.
வவுனியா மாவட்ட பொலிஸ் அத்தியட்சகர் திஸ்சலால் டி சில்வாவிவின் மேற்பார்வையில் இடம்பெற்றிருந்த இந்நிகழ்வில், பொலிஸ் உயர் அதிகாரிகள், மற்றும் சுகாதார பிரிவினர் கலந்துகொண்டிருந்தனர்.
இந்தியாவில் இருந்து சுமார் 5 லட்சம் கொரோனா தடுப்பூசி குப்பிகள் எதிர்வரும் வியாழக்கிழமையன்று இலங்கைக்கு அனுப்பப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்திய அரசாங்கத்திடம் இருந்து இதற்கான தகவல் கிடைத்துள்ளது.
இந்தநிலையில் இந்தியாவுக்கும், இலங்கைக்கும் இடையிலான நீண்ட கால உறவின் அடிப்படையிலேயே இதற்கான உடன்பாடு எட்டப்பட்டதாக இலங்கையின் அமைச்சரவை தெரிவித்துள்ளது.
இதன் ஒருக்கட்டமாகவே இந்தியா 5 லட்சம் கொரோனா தடுப்பூசிகளை இலங்கைக்கு அனுப்பவுள்ளது.
எனினும் முன்னதாக இது தொடர்பில் தகவல் வழங்கியிருந்த இலங்கையின் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச, ஒக்ஸ்போட் எஸ்ட்ராசெனேகாவின் 6 இலட்சம் தடுப்பூசிக்குப்பிகள் எதிர்வரும் 27 ஆம் திகதி இந்தியாவில் இருந்து தரவுள்ளதாக தெரிவிக்கப்பட்டிருந்தது.
யாழில் குடும்பத் தலைவர் வெளியே சென்றிருந்தபோது வீட்டில் தனித்து இருந்த பெண்களைத் தாக்கிய குற்றச்சாட்டில் அரச உத்தியோகத்தர்களான சகோதரர்கள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.
முல்லைத்தீவில் உள்ள பாடசாலை ஒன்றில் கல்வி கற்பிக்கும் ஆசிரியர் ஒருவரும் யாழ். சிறைச்சாலை உத்தியோகத்தர் ஒருவருமே இவ்வாறு கைது செய்யப்பட்டனர்.
இந்த சம்பவம் கடந்த வெள்ளிக்கிழமை இரவு இடம்பெற்றுள்ளது.
சம்பவத்தில் பாதிக்கப்பட்ட மேற்படி மூன்று பெண்களும் சிகிச்சைக்காக யாழ்.போதனா வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
இவர்களில் தாய் ஆசிரியர் எனவும் பிள்ளைகள் இருவரும் மாணவிகள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மதில் கட்டுவது தொடர்பாக ஏற்பட்ட முரண்பாடே இச்சம்பவத்திற்கு காரணம் எனக் கூறப்படுகின்றது.
எல்லை மதில் அமைப்பது தொடர்பாக இரு தரப்பினருக்கும் இடையே ஏற்பட்ட முரண்பாடு நீதிமன்றில் வழக்கு விசாரணையில் உள்ளது.
இந்நிலையில் எதிர்வரும் 2 ஆம் திகதிக்குள் மதில் கட்டி முடிக்குமாறு நீதிமன்று உத்தரவிட்டமைக்கு இணங்க இரு தரப்பினரின் நிதியில் மதில் அமைக்கப்பட்டது எனவும் இதன்போது ஏற்பட்ட முரண்பாட்டை அடுத்து எல்லைக் காணிக்கு சொந்தமானவரின் இரு மகன்மாரும் வெள்ளி இரவு குறித்த வீட்டினுள் நுழைந்து அங்கிருந்த பெண்களைத் தாக்கியதாகவும் கூறப்படுகின்றது.
இது தொடர்பாக பாதிக்கப்பட்ட தரப்பினர் செய்த முறைப்பாட்டை அடுத்து தாக்கிய இரு அரச உத்தியோகத்தர்களும் வட்டுக்கோட்டை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளதுடன் பாதிக்கப்பட்ட பெண்களிடம் வைத்தியசாலைப் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.
வேலணைப் பிரதேச செயலக ஒருங்கிணைப்புக்குழு கூட்டம் நேற்று (25) இடம்பெற்ற போது, காணி சுவீகரிப்பிற்கு எதிராக போராட்டம் நடந்தது. வேலணை பிரதேச செயலகத்திற்குட்பட்ட மண்டைதீவு, மண்கும்பான் புங்குடுதீவு பகுதிகளில் 79 குடும்பங்களிற்கு சொந்தமான 50 ஏக்கர் காணிகளை கடற்படையினால் சுவீகரிக்க முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
ஒருங்கிணைப்புக்குழு கூட்டம் ஆரம்பிப்பதற்கு முன்னர், கூட்ட மண்டபத்திற்கு முன்பாக ஆர்ப்பாட்ட போராட்டம் நடந்தது.
தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் கஜேந்திரகுமார் பொன்னம்பலம், செ.கஜேந்திரன், சட்டத்தரணி க.சுகாஷ் உள்ளிட்டவர்கள் போராட்டத்தில் கலந்து கொண்டனர்.
ஒருங்கிணைப்புக்குழு தலைவர் அங்கஜன் இராமநாதன் கூட்டத்திற்கு வந்து, போராட்டத்தில் ஈடுபட்ட கஜேந்திரகுமார் பொன்னம்பலத்துடன் பேச்சு நடத்தினார். ஒருங்கிணைப்பு கூட்டத்திற்கு வருமாறும், அங்கு பேசலாம் என்றும் தெரிவித்தார். எனினும், அதை மறுத்த கஜேந்திரகுமார், மக்களிற்கான நிரந்தர தீர்வை வழங்கும்படி வலியுறுத்தினார்.
ஒருங்கிணைப்புக்குழு கூட்டம் ஆரம்பித்த போது, மக்களின் போராட்டத்திற்கு பதில் கூறிவிட்டு கூட்டத்தை ஆரம்பிக்கும்படி கஜேந்திரன் எம்.பி வலியுறுத்தினார். அவர்கள் போராடுகிறார்கள். அழைத்தேன். வரவில்லை. கூட்டத்தின் முடிவில் பேசுகிறேன் என அங்கஜன் தெரிவித்தார். கஜேந்திரன் விடாப்பிடியாக உடனடியாக அந்த விடயத்தை ஆராய வேண்டுமென கூறினார். அங்கஜன் மறுத்தார். இந்த இழுபறி நீடித்த போது, வேலணை பிரதேசசபையின் ஐ.தே.க, ஈ.பி.டி.பி உறுப்பினர்கள், அங்கஜனை காப்பாற்ற தலையிட்டனர்.
காணி விவகாரம் ஆராயப்பட்டு, அந்த காணி மக்களிற்கே வழங்கப்பட வேண்டுமென நாடாளுமன்ற உறுப்பினர்கள் கஜேந்திரன், சிறிதரனும் வலியுறுத்தினர். பின்னர் காணி விவகாரம் ஆராயப்பட்டது.
போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கூட்டத்திற்கு அழைக்கப்பட்டு ஆராயப்பட்டது. காணி உரிமையாளர்கள் கண்ணீருடன் தமது நிலைமையை தெரிவித்தனர்.
இதையடுத்து, அந்த காணிகள் மக்களிற்கே சொந்தமென்றும், அந்த நிலைப்பாட்டை சம்பந்தப்பட்ட அமைச்சிற்கு அறிவிப்பதென தீர்மானிக்கப்பட்டது.
“காணி சுவீகரிப்பு இந்த அரசாங்கத்தில் மட்டும் நடக்கவில்லை. சென்ற அரசாங்கத்திலும் இச் செயற்பாடு இடம்பெற்றது. எமது மக்களால் ஏற்றுக்கொள்ள முடியாத நில ஆக்கிரமிப்பினை அபிவிருத்திக்குழுத் தலைவர் என்ற அடிப்படையில் நிச்சயமாக சம்பந்தப்பட்ட அமைச்சிற்கு இச் செய்தியை கொண்டு செல்வேன். நில ஆக்கிரமிப்பு செயற்பாடு பிரதேச செயலரால் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது.
மக்களால் ஏற்றுக்கொள்ள முடியாத விடயத்தை செய்ய முடியாது. இதனை மறுபரிசீலனை செய்ய வேண்டும் எனவும் உரிய தரப்பினரை வலியுறுத்துவோம்.
எனினும், மற்றொரு வழியிலும் இந்த பிரச்சனையை தீர்க்கலாம். காணிப்பிரச்சனை பற்றி உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்த தீர்வை பெற்றுக்கொள்ள முடியும். இங்கு நிறைய ஜாம்பவான்கள் உள்ளனர். ஜனாதிபதி சட்டத்தரணிகளான அந்த ஜாம்பவான்கள் உள்ளனர். ஏன் இந்த போராட்டத்திலும் அந்த ஜாம்பவான்கள் கலந்து கொண்டுள்ளனர். அவர்கள் நீதிமன்றங்களில் வழக்குகளை தொடர்ந்து தீர்வுகளை பெற்றுக்கொள்ள முடியும்.
அந்தவகையில் மக்களால் ஏற்றுக்கொள்ள முடியாத செயற்பாட்டினை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என இப் பிரதேச ஒருங்கிணைப்புக் கூட்டத்தில் தீர்மானம் ஒன்றினையும் நிறைவேற்றுவோம் என மேலும் அவர் தெரிவித்திருந்தார்.
யாழ்ப்பாணத்தில் அமைக்கப்பட்டுள்ள நெடுதூர சேவை பேருந்து நிலையத்தில் தமிழ் மொழி புறக்கணிக்கப்பட்டுள்ளதாக, யாழ்ப்பாணம் மாநகர சபையின் பிரதி முதல்வர் து.ஈசன் குற்றம்சாட்டியுள்ளார்.
அத்தோடு தமிழ் மொழிக்கு முன்னுரிமை வழங்கப்படாது விட்டால் தான் பேருந்து நிலைய திறப்பு விழாவில் கலந்துகொள்ளப் போவதில்லை எனவும் அவர தெரிவித்துள்ளார்.
மேலும் அவர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
புதிய பேருந்து நிலையமானது கடந்த ஆட்சியின் போது முன்னாள் முதல்வர் ஆனல்ட் காலத்தில் அடிக்கல் நாட்டப்பட்டிருந்தது.
எனினும் தற்போது இதன் வேலைகள் நிறைவடைந்து 27 ஆம் திகதி காலை திறப்பதற்கான வேலைகள் இடம்பெற்று வருகின்றது.இந்த நேரத்தில் வடகிழக்கின் நிருவாக மொழியான தமிழ் மொழி புறக்கனிக்கப்பட்டு பெயர் பலகையில் இரண்டாவது இடத்தில் இருப்பதை காணக்கூடியதாக இருக்கிறது.
அத்தோடு இங்கு இருக்கும் சகல வர்த்தக நிறுவனங்களிலும் தமிழ் மொழிக்கு முன்னுரிமை கொடுக்க வேண்டுமென நாங்கள் ஒரு தீர்மானம் நிறைவேற்றி இருக்கின்றோம்.
அவ்வாறான இடங்களை நாங்கள் திருத்தி அமைத்துக்கொண்டு வருகின்ற சூழ்நிலையில் இவ்வாறு இடம்பெற்றுள்ளது மன வருத்தத்திற்குரியது.அந்த வகையில் இதன் பெயர் மாற்றத்தை செய்யாத பட்சத்தில் யாழ். மாநகர சபையின் பிரதி முதல்வர் என்ற அடிப்படையில் நான் கலந்துகொள்ள போவதில்லை.
அத்தோடு எங்ளுடைய மொழி புறக்கனிக்கப்படும் இடத்தில் நான் கலந்துகொள்வது பொருத்தம் இல்லை.மேலும் இதற்கு மேலதிகமாக சபையில் ஒரு தீர்மானத்தை கொண்டுவந்து இந்த பெயரை மாற்றுவேன் என்றார்.
யாழ்ப்பாணம் ஏ 9 வீதி தென்மராட்சி, எழுதுமட்டுவாள் பகுதியில் கனரக வாகனம் விபத்திற்குள்ளாகியுள்ளது.
வாகனங்களை ஏற்றி வரும் கனரக வாகனமொன்றே இவ்வாறு இன்று அதிகாலை விபத்திற்குள்ளாகி, வீதியோமாக சரிந்து விழுந்துள்ளது.
வாகன சில்லில் காற்று போனதால் இந்த விபத்து ஏற்பட்டதாக மேலும் குறிப்பிடப்படுகிறது.
சித்தூர் மாவட்டம் மதனப்பள்ளி சிவாலயம் என்ற பகுதியில் வசித்து வந்தவ புருஷோத்தம்- பத்மஜா தம்பதிக்கு அலேக்கியா, சாய் திவ்யா என்று இரு மகள்கள் உண்டு. வேதியியலில் பட்டம் பெற்ற புருஷோத்தம் அரசு பெண்கள் கல்லூரியில் துணை முதல்வராக பணியாற்றினார். பத்மஜா கணித பேராசிரியர். இவர், பல்கலையில் படிக்கும் போது தங்கப்பதக்கம் பெற்றவர். ஐ.ஐ.டி கோச்சிங் சென்டரிலும் மாணவர்களுக்கு பயிற்சி அளித்து வந்துள்ளார். மெத்த படித்திருந்தாலும் இந்த தம்பதிக்கு பூஜைகளில் அதீத நம்பிக்கை உண்டு.
பத்மஜாவுக்கு வலிப்பு நோய் இருந்து வந்துள்ளது. வலிப்பு நோய் குணமாவதற்காக அவ்வப்போது வீட்டில் பூஜை செய்து வந்துள்ளனர். இதற்கிடையே, கர்நாடகத்தை சேர்ந்த சாமியார் ஒருவர் , இரு மகள்களையும் நரபலி கொடுத்தால், பத்மாஜாவின் வலிப்பு நோய் குணமாகும் என்று கூறியதாக தெரிகிறது. ஏற்கனவே , பூஜைகளில் அதிக நம்பிக்கை கொண்ட தம்பதியர், தங்களுக்கு இதனால் கூடுதல் ஆயுள் கிடைக்கும் என்றும், தங்கள் பூஜை காரணமாக நரபலி கொடுக்கப்பட்ட மகள்கள் உயிர்த்தெழுந்து விடுவார்கள் என்றும் நம்பியுள்ளனர்.
இந்த நிலையில், கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு தங்களின் இரு மகள்களையும் பூஜை நடத்தி தாய் பத்மஜா அடித்து கொன்றுள்ளார். அதற்கு புருஷோத்தம் உடைந்தையாக இருந்துள்ளார். மகள்களை கொன்ற பிறகு, தன் நண்பரான ராஜூ என்பவரை போனில் அழைத்த புருஷோத்தம், மகள்களை மனைவி பத்மஜா அடித்து கொன்று விட்டதாக தகவல் கூறியுள்ளார். ராஜூ பதறியபடி வீட்டுக்கு சென்ற போது, அவரை வீட்டுக்குள் விட தம்பதி மறுத்துள்ளனர். தொடர்ந்து, போலீசுக்கு தகவல் அளிக்கப்பட்டது. போலீசார் வீட்டுக்குள் புகுந்து இளம்பெண்களின் உடல்களை மீட்டனர்.
கொல்லப்பட்ட ஒரு இளம் பெண்ணின் உடல் பூஜை அறையில் கிடந்தது. மற்றோரு பெண்ணின் உடல் இன்னோரு அறையில் கிடந்துள்ளது. இரு உடல்களையும் சிவப்பு வண்ண துணி கொண்டு போர்த்தி வைத்திருந்தனர். தற்போது, புருஷோத்தம் , பத்மஜா ஆகியோரிடத்தில் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. வீட்டில் இருந்த சி.சி.டி.வி காட்சிகளையும் போலீஸார் ஆராய்ந்து வருகின்றனர். வீட்டிலிருந்து ஏராளமான கடவுள் சிலைகள் கைப்பற்றப்பட்டன. பூஜை நடத்தும் பொருள்களும் கண்டெடுக்கப்பட்டுள்ளன.
கொரோனா லாக்டவுனுக்கு முன்னதாக, இந்த புது வீட்டில் தம்பதியினர் குடியேறியதாக சொல்லப்படுகிறது. லாக்டவுன் காரணமாக போபாலில் உள்ள Indian Institute of Forest Management நிறுவனத்தில் பணியாற்றி வந்த அலெக்கியா சிவில் சர்வீஸ் தேர்வுக்கு படிக்கும் வகையில் பணியை ராஜினாமா செய்து விட்டு பெற்றோருடன் வந்து தங்கியுள்ளார். ரகுமான் இசை கல்லூரியில் படித்து வந்த சாய் திவ்யாவுக்கு பெற்றோருடனே தங்கியிருந்துள்ளார். கொல்லப்பட்ட சாய் திவ்யா ஏற்கனவே ஒரு முறை வீட்டின் மாடியிலிருந்து குதித்து தற்கொலைக்கு முயன்றதாக சொல்லப்படுகிறது.
மேலும், சாய் திவ்யா கொல்லப்படுவதற்கு 3 நாள்களுக்கு முன்பு தன் ஃபேஸ்புக் பக்கத்தில் சந்தேகத்துக்குரிய பதிவு ஒன்றை வெளியிட்டதாகவும் போலீஸார் சொல்கிறார்கள். அக்கம் பக்கத்தினரிடத்தில் நடந்த விசாரணையில் , இந்த தம்பதி ஞாயிற்றுக்கிழமை இரவில் உக்கிரமாகவே இருப்பார்கள். வீட்டில் இருந்து சந்தேகத்துக்குரிய வகையில் சத்தம் கேட்ட வண்ணம் இருக்கும் என்கின்றனர். இரு இளம் பெண்களும் ஞாயிற்றுக்கிழமை இரவில்தான் கொல்லப்பட்டார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.
வவுனியாவில் பெண்ணின் தங்கசங்கிலியை அறுத்து சென்ற சம்பவம் ஒன்று கோவில்குளம் பகுதியில் நேற்று மாலை இடம்பெற்றுள்ளது.
குறித் சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருகையில் , வவுனியா நகரில் பணியாற்றும் குறித்த பெண்மணி பணி முடிந்து தனது வீடு நோக்கி சென்றுள்ளார்.
இதன் போது மோட்டார் சைக்கிளில் வந்த இனம்தெரியாத இரு நபர்கள் அவர் அணிந்திருந்த நான்கு பவுண் தங்க சங்கிலியை அறுத்து சென்றுள்ளனர்.சம்பவம் தொடர்பாக வவுனியா பொலிசாருக்கு அறிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு சென்ற வவுனியா குற்றத்தடுப்பு பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
பண்டராரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் பொருட்களை கையாளும் புதிய டெர்மினல் ஒன்று அமைப்பதற்கான பனி 25ம் திகதி உத்தியோகபூர்வமாக ஆரம்பித்துவைக்கப்பட்டது.
ஆண்டுக்கு 150,000டொன் பொருட்களை கையாளும் வினைத்திறனுடன் புதிய டெர்மினல் அமைக்கப்படவுள்ளது. 236கோடி ரூபாய் செலவில் அமைக்கப்படும் இந்த டெர்மினல் ஊடாக ஆண்டுக்கு 300கோடி ரூபாய் வருமானம் எதிர்பார்க்கப்படுகிறது.
பொருட்களை ஏற்றியிறக்கும் வினைத்திறன் மேலும் 150,000 டொன் அதிகரிப்பதனூடாக புதிய சந்தைவாய்ப்புகளும் எதிர்பார்க்கப்படுகிறது.
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபல நிகழ்ச்சி சூப்பர் சிங்கர். இதுவரை 7 சீசன்கள் முடிவடைந்துள்ள நிலையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை 8வது சீசன் கோலாகலமாக தொடங்கியது.
இந்த சீசனின் தொடக்க நிகழ்ச்சியில் பல இசைக்கலைஞர்கள், பாடகர்கள் பங்கேற்றனர். அவர்களுடன் விஜய் டிவி பிரபலங்களும் பங்கேற்றனர்.
பொதுவாக சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியை பிரியங்கா தான் தொகுத்து வழங்குவார். அவருடன் இணைந்து மாகாபா தொகுத்து வழங்குவார்.
ஆனால் இந்த முறை மாகப மற்றும் மணிமேகலை ஆகியோர் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி தொடக்க விழாவை தொகுத்து வழங்கியுள்ளனர்.
இதனால் பிரியங்கா ரசிகர்கள் அப்செட் ஆகி உள்ளனர். பிரியங்கா இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்க மாட்டாரா அல்லது விஜய் டிவியை விட்டு விலகிக் கொண்டாரா என ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
ரஜினிகாந்த்தின் அண்ணாத்தே படத்தை வரும் தீபாவளிக்கு (நவம்பர் 4, 2021) வெளியீட இருப்பதாக சன் பிக்சர்ஸ் அறிவித்துள்ளது.
கிளிநொச்சி நகர் மற்றும் அதனை அண்டியப்பகுதிகளில் காகங்கள் இறந்து
கிடப்பதனை அடிக்கடி காண முடிக்கிறதாக பொதுமக்கள் தெரிவிக்கின்றனர். கடந்த சில வாரங்களுக்கு முன் இறந்த காகம் ஒன்றின் வயிற்றுப் பகுதி
கிழித்து பார்த்த போது உள்ளே லஞ் சீற் காணப்பட்டதாகவும் பொது மக்களால்
தெரிவிக்கப்படுகிறது.
கனடாவை சேர்ந்த வின்ஸ்டன் பிளாக்மோர் ( வயது 64) 27 மனைவிகள், 150 குழந்தைகளுடன் ஒரே வீட்டில் குடும்பமாக வசித்து வருகின்றனர்.
சுமார் 200 குடும்ப உறுப்பினர்களுடன் பாலிகேமி முறையில், மகிழ்ச்சியாக,என்று வின்ஸ்டனின் குடும்பத்தினர் வாழ்ந்து வருகின்றனர்.பாலிகேமி என்பது கணவன் ஒன்றுக்கு மேற்பட்ட மனைவிகளுடன் வாழும் முறை.
அமெரிக்காவில் வசித்து வரும் பிளாக்மோரின் மகன் மெர்லின், டிக்டாக்கில் தனது குடும்பத்தினர் போட்டோக்களை இணைத்து வீடியோவாக வெளியிட்டுள்ளார். அதில், அனைவரும் கூட்டுக்குடும்பமாக வசித்து வந்தோம் . ஆனால் சமீபகாலமாக தான் வேலை நிமித்தமாக அமெரிக்காவின் வெவ்வேறு பகுதிகளில் வசித்து வருவதாக தெரிவித்தார்.
தன் அம்மாவை ‘மம்’ எனவும், அப்பாவின் பிற மனைவிகளை ‘மதர்’ என அழைப்பதாக பதிவுட்டுள்ளார் மெர்லின். 3 குடும்பத்தை சேர்ந்த அக்கா மற்றும் தங்கைகளை தனது தந்தை திருமணம் செய்து கொண்டுள்ளதாகவும், பிற சகோதர, சகோதரிகளை போல தாங்கள் சண்டையிட்டுக்கொள்வதில்லை என்றும் குறிப்பிட்டுள்ளார்.
தனது அப்பாவுக்கு, அதிகபட்சமாக ஒரே ஆண்டில் 12 குழந்தைகள் பிறந்திருக்கிறது. அவர்கள் அனைவருக்கும் ‘எம்’ என்கிற ஆங்கில எழுத்தில் துவங்கும் பெயர்கள் தான் வைக்கப்பட்டுள்ளது. எங்களுக்கு தேவையான காய்கறிகளை நாங்களே விவசாயம் செய்து அறுவடை செய்து கொள்வோம் என்று மெர்லின் கூறியுள்ளார்.
ரஷ்யாவில் கடந்த 24 மணி நேரத்தில் மேலும் 19,290 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம் ரஷ்யாவில் வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை தற்போது 37,38,690 ஆக உயர்ந்துள்ளது. கொரோனா தொற்றுக்கு மேலும் 456 பேர் உயிரிழந்ததால், அங்கு பலியானோர் எண்ணிக்கை 69 ஆயிரத்து 918 ஆக உயர்ந்துள்ளது.
ரஷ்யாவில் இதுவரை கொரோனா தொற்றில் இருந்து 31,50,763 பேர் சிகிச்சை பெற்று குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். தற்போது 5,18,009 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். பாதிக்கப்பட்ட நாடுகளின் வரிசையில் தற்போது ரஷ்யா 4-வது இடத்தில் உள்ளது.