Ads
புலோலி விக்னேஸ்வரா முன்பள்ளியின் விளையாட்டு நிகழ்வு பதிவுகள்
புலோலி விக்னேஸ்வரா முன்பள்ளியின் விளையாட்டு நிகழ்வு பதிவுகள்
Empty
டாப்ஸி ஆடுகளம் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர். முதல் படமே வெற்றிமாறனின் இயக்கத்தில் நடித்ததாலும்; படம் மெகா ப்ளாக் பஸ்டர் ஆனதாலும் தமிழில் பெரிய ரவுண்டு வருவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் ஆடுகளத்துக்கு பிறகு சில தமிழ் படங்களில் மட்டுமே நடித்த அவர் ஹிந்தியில் கவனம் செலுத்த ஆரம்பித்தார். அவரது நடிப்பில் கடைசியாக டன்கி திரைப்படம் வெளியானது. சூழல் இப்படி இருக்க திருமணம் குறித்து மனம் திறந்து பேசியிருக்கிறார்.வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடித்த ஆடுகளம் படத்தில் ஹீரோயினாக அறிமுகமானவர் டாப்ஸி. அந்தப் படம் மெகா ஹிட்டானது. மேலும் டாப்ஸியின் நடிப்பும், அழகும்கூட ரசிகர்களை கவர்ந்தது. அதனையடுத்து வந்தான் வென்றான், ஆரம்பம் உள்ளிட்ட சில தமிழ் படங்களில் நடித்தார். அதேசமயம் ஹிந்தியில் தனது முழு கவனத்தையும் செலுத்தினார் அவர். அங்கு அவர் நடித்த படங்கள் சொல்லிக்கொள்ளும்படியான ஹிட்டுகளை பெற்றன. இதனால் ஹிந்தியிலேயே நிலைகொண்டார் அவர்.திருமணம்: சூழல் இப்படி இருக்க டென்மார்க் நாட்டை சேர்ந்த மத்யாஸ் போ என்பவரை காதலித்தார் அவர். பல வருடங்கள் டேட்டிங் செய்துவந்த அவர்கள் சில மாதங்களுக்கு முன்பு திருமணம் செய்துகொண்டார்கள். அவர்களது திருமணம் நெருங்கிய உறவினர்கள் மற்றும் நண்பர்கள் முன்னிலையில் படு சிம்ப்பிளாக அவர்களது திருமணம் நடந்தது. திருமணத்துக்கு பிறகும் தொடர்ந்து நடிப்பில் கவனம் செலுத்திவரும் டாப்ஸி முதன்முறையாக மத்யாஸ் போ பற்றியும் அவருடன் டேட்டிங் சென்றது பற்றியும் மனம் திறந்திருக்கிறார்.டாப்ஸி பேட்டி: அவர் நடித்திருக்கும் ஃபிர் ஆய் ஹாசின் தில்ருபா படத்தின் ப்ரோமோஷனில் கலந்துகொண்ட அவர் பேசுகையில், "மத்யாஸ் போவை நான் முதன்முதலாக 2013ஆம் ஆண்டு சந்தித்தேன். பழக ஆரம்பித்தபோது டேட்டிங் குறித்து மத்யாஸ் என்னிடம் பேச ஆர்மபித்தார். நமது முதல் டேட்டிங் எங்கு அமைய வேண்டும் என்று நீயே முடிவு எடு என்று என்னிடம் கூறினார் அவர். டென்மார்க் என்றால் புதிதாக விசா எடுக்க வேண்டும் என்று நினைத்து துபாயை ஃபிக்ஸ் செய்தேன்.துபாய் பயணம்: பிறகு நான் நான்கு மணி நேரமும், அவர் ஆறு மணிநேரமும் துபாய்க்கு பயணம் செய்தோம். இருந்தாலும் ஒரு வெளிநாட்டவர் என்னுடன் டேட்டிங் செய்ய ஏன் இவ்வளவு ஆர்வம் காட்டுகிறார் என்று தோன்றியது. இதனை நான் எனது நண்பர்களிடம் சொன்னேன். உடனே அவர்கள் என்னை எச்சரிக்க ஆரம்பித்தார்கள். அதாவது நீ புதிய நபரை சந்திக்கிறாய். எனவே கவனமாக இரு என்று அறிவுரை எல்லாம் சொன்னார்கள். மேலும் துபாயில் இருக்கும் தங்களுக்கு தெரிந்தவர்களிடமும் இதுகுறித்து தகவல் கொடுத்தார்கள்.அத்தனை பதற்றங்கள், அறிவுரைகளுக்கு இடையேதான் மத்யாஸ் போவை துபாயில் சந்தித்தேன். அவரை சந்தித்த பிறகு எனது பதற்றங்கள் அத்தனையும் மாறின. அந்த நிமிடமே எனது வாழ்க்கையின் நம்பிக்கைக்குரியவர் இவர்தான் என்று எனக்கு தோன்றியது. பிறகு சந்திப்புகள் தொடர்ந்துகொண்டிருந்தன. அந்த சமயத்தில் என்னிடம் அவரது காதலை சொன்னார். பிறகு காதலர்கள் ஆனோம். பிறகு திருமணம் செய்துகொண்டோம்" என்றார்.
- 119
நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலை முன்னிட்டு எதிர்வரும் செப்டெம்பர் 20 ஆம் திகதி அனைத்து பாடசாலைகளுக்கும் விடுமுறை வழங்கப்படும் என கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.விடுமுறை வழங்கப்படும் பாடசாலைகள் மீண்டும் எதிர்வரும் 23 ஆம் திகதி ஆரம்பமாகும்.மேலும், வாக்குச் சாவடி மையங்களாகப் பயன்படுத்தப்படும் பாடசாலைகளை செப்டம்பர் 19 ஆம் திகதி பாடசாலை நேரம் முடிந்த பின்னர் கிராம அலுவலர்களுக்கு வழங்க வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.வாக்கு எண்ணும் நிலையங்களாக பயன்படுத்தப்படும் பாடசாலைகளுக்கு அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளபடி தொடர்புடைய காலங்களில் மட்டுமே விடுமுறை வழங்கப்படும் எனவும் கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.
- 129
ஜனாதிபதி தேர்தலை முன்னிட்டு, வாக்காளர்கள் தங்களது வாக்களிப்பு நிலையங்களை அணுகும் வகையில் இணையவழி முறையை தேர்தல் ஆணைக்குழு அறிமுகப்படுத்தியுள்ளது.இதற்கமைவாக, வாக்களிப்பதற்கான அட்டைகளை ‘On-line Registration’ என்ற இணைய வழி பதிவு மூலம் பார்வையிட முடியும். வாக்களிப்பதற்கான உத்தியோகபூர்வ வாக்காளர் அட்டையை இதுவரை பெறாத வாக்காளர்கள் ஆள் அடையாளத்தை உறுதிப்படுத்தி குறிப்பிட்ட வாக்களிப்பு நிலையத்தில் வாக்களிக்கலாம்.தபால் மூலம் வாக்காளர் அட்டைகளை இதுவரை பெறாத வாக்காளர்கள் சம்பந்தப்பட்ட தபால் நிலையங்களில் அவை தொடர்பான விபரங்களை கண்டறியுமாறும் தேர்தல்கள் ஆணைக்குழு அறிவுறுத்தியுள்ளது.
- 136
பிளாஸ்டிக், காகிதம், கண்ணாடி, உலோகம் போன்ற பொருட்களில் உள்ள ரசாயனங்கள், உணவுப் பொருட்களில் கண்ணுக்குத் தெரியாமல் கலப்பது அறியப்பட்டுள்ளது. இது தொடர்பாக, "எக்ஸ்போசர் சயின்ஸ் அண்டு என்விரான்மென்ட்டல் எபிடமியாலஜி" என்ற இதழில் ஒரு ஆய்வறிக்கை வெளியாகியுள்ளது.சுவிட்சர்லாந்தின் சூரிச் நகரில் உள்ள உணவுப் பேக்கேஜிங் கூட்டமைப்பின் அறக்கட்டளையை சேர்ந்த ஆராய்ச்சியாளர் பிர்கிட் கியூக்கி கூறியதாவது: உணவோடு தொடர்புடைய 100 வகையான ரசாயனங்கள், மனித ஆரோக்கியத்திற்கு ஆபத்தானவையாக தற்காலிகமாக வரையறுக்கப்பட்டுள்ளன. இந்த ரசாயனங்களில் சில, பொதுவாக பயன்படுத்தப்படும் பாத்திரங்களில் பூசப்படும் பிஎஃப்ஏ நுண்ணறி பொருட்கள் (PFAS), மற்றும் பிளாஸ்டிக் குடுவைகளில் இருக்கும் பிஸ்ஃபெனால் ஏ (Bisphenol A) போன்றவை, உணவோடு கலந்து உடலில் செல்வது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.இது மட்டும் அல்லாமல், நாம் உணவை உட்கொள்வது வாயிலாக, 3,601 விதமான வேறு ரசாயனங்கள் மனித உடலில் கலப்பது கண்டறியப்பட்டது. இவை, உடல் உபாதைகளை ஏற்படுத்தக்கூடிய அபாயத்தை ஏற்படுத்துகிறது. குறிப்பாக, பிஸ்ஃபெனால் ஏ (BPA), மனித உடலில் கலப்பதால், ஹார்மோன் மாற்றங்களை ஏற்படுத்தும் ஆபத்துள்ளது. இதன் காரணமாக, பல நாடுகளில் குழந்தைகளின் பால் புட்டியில் BPA பயன்படுத்தத் தடை செய்யப்பட்டுள்ளது. மேலும், மலட்டுத்தன்மையை உண்டாக்கக்கூடிய ஃபேலேட்ஸ் (Phthalates) ரசாயனமும் உணவின் மூலம் உடலில் சேர்கிறது.இந்த ஆபத்தில் இருந்து தப்பிக்க, கடைகளில் வாங்கிய உணவுப் பொருட்களை உடனே பொட்டலங்களில் இருந்து எடுத்து, வீட்டில் பாதுகாப்பான பாத்திரங்களில் வைத்துக் கொள்வது மிக முக்கியம். குறிப்பாக, பிளாஸ்டிக், அலுமினியம் ஃபாயில் போன்றவற்றில் கொண்டு வரும் உணவுகளை சூடேற்றி சமைத்து சாப்பிட கூடாது.
- 144
'காக்கசூரா மட்டப்பா' இவர் யாருனு தெரியுமா?என்னப்பா இது பெயர்... காக்கா, குருவின்னு சொல்றியேன்னு கேட்காதீங்க... இவர்தான் நம்ம எல்லாரும் விரும்பி சாப்பிடறோமே மைசூர் பாக்கு அதை கண்டுபிடிச்சவர்.இவர் மைசூர் அரண்மனையில சமையல்காரரா இருந்திருக்கார். சாப்பிட்டு முடிச்சதுமே, இனிப்பு சாப்பிடுறத மன்னர் வழக்கமா வச்சிருந்திருக்கார். அன்னைக்குன்னு பார்த்து இனிப்பு தீர்ந்து போகவே, நம்ம காக்கசூரா கடலைமாவு, சக்கரை, நெய் எல்லாத்தையும் சேர்த்து அவசரம் அவசரமா கிண்டி பாகு காய்ச்சி ஒரு இனிப்பு மாதிரி செஞ்சி மன்னர் கிட்ட கொண்டு போய் கொடுத்திருக்கார். அதுக்குள்ள அது கெட்டியா போய்டுச்சு. மன்னர் என்ன சொல்ல போறாரோன்னு பயந்துகிட்டே இருந்த காக்கசூராவுக்கு ஒரே ஆச்சர்யம். மன்னர் அந்த இனிப்பு சாப்பிட்டதும் அவருக்கு ரொம்ப பிடிச்சி போய், இது பேரு என்னன்னு, காக்கசூராகிட்ட கேட்க, அவரும் அவசரத்துக்கு 'நளபாக்' னு சொல்லி வச்சிட்டார். அரண்மனை ஆஸ்தானா இனிப்பாவே மாறிப்போன அந்த 'நளபாக்', மைசூர் அரண்மனையில கண்டுபிடிக்கப்பட்டதால பின் நாட்கள்ல 'மைசூர்பாக்' னு பெயர் மாறிடுச்சு.அவ்வளவுதான் இந்த மைசூர் பாக்கோட வரலாறு.ஆனா பிற்காலத்தில நம்ம ஆளுங்க இது என்னடா இவ்வளவு சுவையான இனிப்பா இருந்தாலும் கடிக்க இவ்வளவு அழுத்தமா இருக்குன்னு சொல்லிட்டு, அதுல நெய் கொஞ்சம் அதிகமா சேர்த்து 'நெய் மைசூர் பா' செஞ்சாங்க.இந்த மைசூர் பாக்குக்கும், நெய் மைசூர் பாவுக்கும் என்ன வித்தியாசம்னா மைசூர் பாக்கு கடிக்க கொஞ்சம் அழுத்தமா சின்ன சின்ன துவாரங்களோட இருக்கும். நெய் அதிகமா சேர்க்க மாட்டாங்க.ஆனா இந்த 'மைசூர் பா' நெய் அதிகமா சேர்க்கிறதால ரொம்ப மென்மையா, சாப்பிட ரொம்ப ஈஸியா இருக்கும். பெரும்பாலும் குழந்தைங்க இந்த 'நெய் மைசூர் பா' வைத்தான் விரும்பி சாப்பிடுவாங்க. ஆனா இந்த பாரம்பரிய மைசூர் பாக்கோட சுவை ரொம்ப அலாதியா இருக்கும். இந்த பாரம்பரிய 'மைசூர் பாக்கு' வீட்லயே எப்படி செய்யலாம்னு பார்க்கலாம்.தேவையான பொருட்கள் :கடலை மாவு : 1 கப் ரிபைண்ட் ஆயில் : 1 கப் சர்க்கரை : 1 1/2 கப்தண்ணீர் : 3/4 கப் நெய் : 1 டே. ஸ்பூன் செய்முறை :ஒரு பாத்திரத்தில எண்ணெய் மற்றும் கடலை மாவு இரண்டையும் சேர்த்து, நல்லா கட்டியில்லாம கலந்துக்கோங்க.அடி கனமான பாத்திரத்தை அடுப்பில வச்சு சர்க்கரை மற்றும் தண்ணீர் சேர்த்து நல்லா கிளறிகிட்டே இருங்க. ஒரு கம்பி பதம் வந்ததும் கரைச்சு வச்சிருக்க கடலைமாவு கரைசலை சேர்த்து கைவிடாம கிளறிக்கிட்டே இருங்க.மாவு கரைசல் வெந்து சுருண்டு வரும் போது நெய் சேர்த்து கீழே இறக்கி எண்ணெய் தடவிய தட்டில ஊத்திடுங்க. சூடு ஆறினதும் துண்டு போட முடியாது. அதனால மிதமான சூடு இருக்கும் போதே கட் பண்ணி துண்டுகளா போட்டுடுங்க.சரியான முறையில செஞ்ச மைசூர் பாக்கு மேல மஞ்சள், ப்ரவுன், டார்க் ப்ரவுன் கலர்னு பார்க்கவே அழகா இருக்கும். சுவைக்கும் குறைவிருக்காது. மஞ்சள் நிற பகுதி மிருதுவாகவும் , ப்ரவுன் கொஞ்சம் கெட்டியாகவும் டார்க் ப்ரவுன் இன்னும் கொஞ்சம் அழுத்தமாவும் இருக்கும். வெட்டியெடுக்கப்பட்ட மைசூர் பாக்கு தேன் கூடு போல சின்ன சின்ன துவாரங்களை கொண்டிருக்கும். இப்படி சரியான முறையில் செய்த மைசூர் பாக்கு சாப்பிட கெட்டியாகவும் சுவையாகவும் இருக்கும். திகட்டாது.மைசூர்பாக் செய்ய தரமான மற்றும் புதுசா அரைச்ச கடலைமாவு பயன்படுத்துங்க.மைசூர்பாக் கிளறும் போது குறைவான தீயில் வச்சு கிளறணும். தீ அதிகமா வச்சா, அடி பிடிச்சுடும் இல்லாட்டி மைசூர்பாக் ரொம்ப கெட்டியாகிடும்.அவ்வளவுதான் ப்ரண்ட்ஸ்... சுவையான பாரம்பரிய மைசூர் பாக் தயார்..
- 256
பழம்பெரும் நடிகை சிஐடி சகுந்தலா காலமானார். அவருக்கு வயது 84.தமிழ் தெலுங்கு, மலையாளம், கன்னடம் என பல்வேறு மொழிகளில் நடிகையாக திகழ்ந்தவர் ஏ.சகுந்தலா. 1970ஆம் ஆண்டு ஜெய்சங்கர் நடிப்பில் வெளியான ’சிஐடி சங்கர்’ படத்தில் அறிமுகமானதால், அதன் பிறகு ‘சிஐடி’ சகுந்தலா என்று அழைக்கப்பட்டார். சேலம் மாவட்டத்தின் அரிசிபாளையத்தைச் சேர்ந்த சகுந்தலா சென்னையில் லலிதா, பத்மினி, ராகினி நடத்தி வந்த நடன நிகழ்ச்சிகளில் பங்கேற்று நடனமாடி வந்தார். அப்போது கிடைத்த அறிமுகங்களின் மூலம் திரையுலகில் நுழைந்து சின்ன சின்ன கதாபாத்திரங்களில் நடித்தார்.‘படிக்காத மேதை’, ‘கை கொடுத்த தெய்வம்’, ‘திருடன்’, ‘தவப்புதல்வன்’, ‘வசந்த மாளிகை’, ‘நீதி’, ‘பாரத விலாஸ்’, ‘ராஜராஜ சோழன்’, ‘பொன்னூஞ்சல்’, ‘என் அண்ணன்’, ‘இதயவீணை’ என ஏராளமான திரைப்படங்களில் நடித்துள்ளார். தமிழ் தவிர, தெலுங்கு, மலையாளம், கன்னடம் உள்ளிட்ட மொழிகளில் நடித்து வந்தார்.சினிமாவிலிருந்து விலகிய பிறகு சீரியல்களில் நடித்து வந்தார். அதன்பிறகு வயது மூப்பு காரணமாக பெங்களூருவில் உள்ள தனது மகள் வீட்டில் தங்கியிருந்த அவருக்கு, செப்டம்பர்.17 ஆம் திகதி நெஞ்சு வலி ஏற்பட்டுள்ளது. அங்குள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். சகுந்தலாவின் மறைவுக்கு திரையுலக பிரபலங்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
- 343
தமிழ் வருடம் ஸ்ரீ குரோதி, புரட்டாசி மாதம் 3 ஆம் தேதி மேஷம் -ராசி: தாய்மாமன் வழியில் அனுசரித்து செல்லவும். எதையும் பகுத்தறிந்து முடிவெடுப்பது நல்லது. எதிர்பாராத சில செலவுகளால் நெருக்கடிகள் உண்டாகும். கால்நடை பணிகளில் பொறுமை காக்கவும். மற்றவர்களின் தேவைகளை அறிந்து நிறைவேற்றுவீர்கள். ரகசியமான செயல்பாடுகள் அதிகரிக்கும். கணவன் மனைவிக்கு இடையே நெருக்கும் மேம்படும். பகை விலகும் நாள்.அதிர்ஷ்ட எண் : 8அதிர்ஷ்ட நிறம் : பொன்னிறம் ரிஷபம் ராசி: குழந்தைகளால் மகிழ்ச்சியான சூழல்கள் ஏற்படும். உயர் பதவியில் இருப்பவர்களின் அறிமுகம் உண்டாகும். பூர்வீக சொத்துக்களால் அனுகூலம் ஏற்படும். உழைப்புக்கு உண்டன பாராட்டுகள் கிடைக்கும். இலக்கிய துறைகளில் தனிப்பட்ட கவனம் ஏற்படும். மன ஒருமைப்பாட்டு விஷயங்களில் ஆர்வம் ஏற்படும். வரவுகள் மூலம் சேமிப்புகள் அதிகரிக்கும். வெற்றி நிறைந்த நாள்.அதிர்ஷ்ட எண் : 7அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள்மிதுனம் -ராசி: கல்வியில் இருந்த மந்த தன்மை குறையும். வியாபார இடமாற்ற சிந்தனைகள் ஏற்படும். பயணங்கள் மூலம் அனுகூலம் ஏற்படும். மருத்துவம் சார்ந்த துறைகளில் திறமைகள் வெளிப்படும். மனை சார்ந்த துறைகளில் இருப்பவர்களுக்கு லாபம் உண்டாகும். உறவினர்கள் வழியில் ஒத்துழைப்புகள் கிடைக்கும். அரசு சார்ந்த துறைகளில் முன்னேற்றம் ஏற்படும். நன்மை நிறைந்த நாள்.அதிர்ஷ்ட எண் : 8அதிர்ஷ்ட நிறம் : வெண்மைகடகம் -ராசி: கணவன் மனைவிக்கிடையே இருந்த மன வருத்தங்கள் நீங்கும். சுப காரியம் தொடர்பான மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். பொழுதுபோக்கு விஷயங்களில் ஆர்வம் ஏற்படும். ஆன்மீகப் பணிகளில் ஈடுபாடு ஏற்படும். மனதில் நினைத்த நீண்ட நாள் ஆசைகள் நிறைவேறும். விலை உயர்ந்த பொருட்கள் மீது ஆர்வம் உண்டாகும். போட்டிகள் நிறைந்த நாள்.அதிர்ஷ்ட எண் : 4அதிர்ஷ்ட நிறம் : பொன்னிறம்சிம்மம் -ராசி:இனம் புரியாத சில சிந்தனைகளால் குழப்பங்கள் ஏற்படும். புதிய உணவுகளை தவிர்க்கவும். உத்தியோகத்தில் வளைந்து கொடுத்து செயல்படவும். எதிர்பார்த்த சில வரவுகளில் தாமதம் ஏற்படும். பயனற்ற விவாதங்களை தவிர்ப்பது நல்லது. பொன் பொருள்களில் கவனம் வேண்டும். குடும்ப விஷயங்களில் விவேகத்துடன் செயல்படவும். பொறுமை வேண்டிய நாள்.அதிர்ஷ்ட எண் : 8அதிர்ஷ்ட நிறம் : அடர் நீலம் கன்னி -ராசி: சுப காரியம் தொடர்பான எண்ணங்கள் ஈடேறும். நண்பர்களைப் பற்றிய புரிதல்கள் மேம்படும். கூட்டு வியாபாரத்தில் முன்னேற்றம் உண்டாகும். புதிய நபர்களின் அறிமுகங்கள் ஏற்படும். வெளி வட்டாரத்தில் மதிப்புகள் அதிகரிக்கும். போட்டி தேர்வுகளில் சாதகமான முடிவுகள் கிடைக்கும். வாழ்க்கைத் துணைவர் வழியில் ஒத்துழைப்புகள் உண்டாகும். பாராட்டு கிடைக்கும் நாள்.அதிர்ஷ்ட எண் : 4அதிர்ஷ்ட நிறம் : இளம் சிவப்புதுலாம் -ராசி: கடினமான வேலைகளையும் சாதாரணமாக செய்து முடிப்பீர்கள். வித்தியாசமான சிந்தனைகள் உருவாகும். கடன் சார்ந்த உதவிகள் கிடைக்கும். நெருக்கமானவர்களுடன் அனுசரித்து நடந்து கொள்ளவும். பிடித்த பொருள்களை வாங்கி மகிழ்வீர்கள். எதிர்பாராத சில பயணங்கள் செல்ல நேரிடும். வியாபார பணிகளில் புதுமையான சூழல் ஏற்படும். ஆலோசனை கிடைக்கும் நாள்.அதிர்ஷ்ட எண் : 8அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள்விருச்சிகம்- ராசி: உணர்ச்சிவசப்படாமல் பொறுமையுடன் செயல்படவும். திடீர் பயணங்கள் உண்டாகும். பணிபுரியும் இடத்தில் மாற்றமான சூழ்நிலைகள் ஏற்படும். கலை சார்ந்த துறைகளில் வருமானம் அதிகரிக்கும். அறிவுத்திறமையை வெளிப்படுத்துவதற்கான வாய்ப்புகள் அமையும். எதிர்கால துறைகளில் நிபுணத்துவம் வெளிப்படும். உயர்வு நிறைந்த நாள்.அதிர்ஷ்ட எண் : 6அதிர்ஷ்ட நிறம் : பச்சை தனுசு -ராசி: ஆன்மீக பெரியோர்களின் சந்திப்புகள் ஏற்படும். சமூக பணிகளில் செல்வாக்குகள் அதிகரிக்கும். வழக்குகளில் சாதகமான சூழல் அமையும். நீண்ட தூர பயண வாய்ப்புகள் சாதகமாகும். திட்டமிட்ட காரியங்கள் நிறைவேறும். மனை மற்றும் வீடு வாங்குவது தொடர்பான எண்ணங்கள் அதிகரிக்கும். வாகன பயணங்களில் விவேகம் வேண்டும். களிப்பு நிறைந்த நாள்.அதிர்ஷ்ட எண் : 7அதிர்ஷ்ட நிறம் : வெளிர் மஞ்சள்மகரம் -ராசி:கல்வி சார்ந்த முயற்சிகளில் முன்னேற்றம் ஏற்படும். வழக்குகளில் சாதகமான முடிவுகள் ஏற்படும். ஆடை ஆபரண சேர்க்கை உண்டாகும். எதிலும் விவேகத்துடன் செயல்படவும். இழுபறியான வரவுகள் கிடைக்கும். அலுவலகத்தில் இருந்த பிரச்சனைகள் குறையும். தொழில் நிமித்தமான போட்டிகள் விலகும். பாசம் மேம்படும் நாள்.அதிர்ஷ்ட எண் : 4அதிர்ஷ்ட நிறம் : பொன்னிறம்கும்பம் –ராசி:பிற மொழி பேசும் மக்களால் ஆதாயம் மேம்படும். தடைப்பட்ட வரவுகள் கிடைக்கும். எதிர்பாராத சிலரின் சந்திப்பு மாற்றத்தை ஏற்படுத்தும். தாயாரின் உடல் ஆரோக்கியம் மேம்படும். இனம் புரியாத சில சிந்தனைகளால் குழப்பங்கள் உண்டாகும். கணிதம் சார்ந்த துறைகளில் முன்னேற்றம் உண்டாகும். பெரியோர்களின் ஆலோசனைகள் தெளிவை ஏற்படுத்தும். அன்பு நிறைந்த நாள்.அதிர்ஷ்ட எண் : 5அதிர்ஷ்ட நிறம் : ஊதாமீனம் -ராசி: உடல் ஆரோக்கியத்தில் கவனம் வேண்டும். புதிய வாய்ப்புகளில் சிந்தித்து செயல்படவும். கல்லூரி கால நண்பர்களின் சந்திப்புகள் ஏற்படும். கணவன் மனைவி இடையே விட்டுக்கொடுத்து செல்வது நல்லது. எதிலும் தாழ்வு மனப்பான்மை இன்றி செயல்படவும். செயல்பாடுகளில் ஒரு விதமான சோர்வுகள் ஏற்பட்டு நீங்கும். அமைதி நிறைந்த நாள்.அதிர்ஷ்ட எண் : 7அதிர்ஷ்ட நிறம் : பச்சை இன்றைய நாள் இனிய நாளாக அமைந்திட வாழ்த்துகள்.
- 853
சர்ச்சைக்குள்ளாகியுள்ள ஐந்தாம் தர புலமைப்பரிசில் பரீட்சையின் முதலாம் வினாத்தாளை இரத்துச் செய்வது தொடர்பில் இதுவரை கிடைக்கப்பெற்றுள்ள முறைப்பாடுகள் தொடர்பில், தொடர்ந்தும் ஆராய்ந்து இறுதித் தீர்மானத்தை எடுப்பதற்கு எதிர்பார்த்துள்ளதாகப் பரீட்சை ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர தெரிவித்துள்ளார். ஐந்தாம் தர புலமைப்பரிசில் பரீட்சை தொடர்பான அனுமானங்களின் அடிப்படையிலான வினாத்தாள் ஒன்று வட்ஸ்அப் ஊடாக பகிரப்பட்டிருந்தது. குறித்த வினாத்தாளிலிருந்த சில கேள்விகள், அண்மையில் நடைபெற்று முடிந்த புலமைப்பரிசில் பரீட்சையில் வழங்கப்பட்ட வினாத்தாளிலிருந்த சில கேள்விகளுக்கு இணையாகவுள்ளதாகப் பெற்றோர் குற்றம் சாட்டியிருந்தனர். இதனையடுத்து புலமைப்பரிசில் பரீட்சையின் முதலாம் பகுதியிலிருந்து 3 வினாக்களை நீக்கப் பரீட்சை திணைக்களம் தீர்மானித்தது. எனினும் இந்த தீர்மானத்தினால், தமது பிள்ளைகளுக்கு அநீதி இழைக்கப்படுவதாக, பெற்றோர்கள் நேற்று கொழும்பு, அநுராதபுரம், கேகாலை உள்ளிட்ட இடங்களில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதேவேளை, போராட்டத்தில் ஈடுபட்ட பெற்றோர்கள் குழுவொன்று நேற்று பரீட்சைகள் ஆணையாளர் நாயகத்தைச் சந்தித்துக் கலந்துரையாடலில் ஈடுபட்டது. அதன் பின்னர் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில், கருத்துரைத்த பரீட்சைகள் ஆணையாளர் நாயகம், கிடைக்கப்பெற்ற முறைப்பாடுகள் தொடர்பில், விசாரணை இடம்பெற்று வருகின்றது. விசாரணை நிறைவில் உரிய வினாத்தாள் கசிந்துள்ளமை உறுதிப்படுத்தப்பட்டால், மீண்டும் பரீட்சையை நடத்தத் தயங்கப் போவதில்லை எனப் பரீட்சை ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது000
- 860
லெபனானில் வாக்கி டாக்கிகள் ஒரே நேரத்தில் வெடித்ததில் 3 பேர் உயிரிழந்துள்ள நிலையில், தற்பொழுது பலி எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக அந்நாட்டுச் சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. இந்த பலி எண்ணிக்கை 14 ஆக உயர்வடைந்துள்ளதாகவும், 450 பேர் காயமடைந்துள்ளனர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. லெபனானில் நேற்றுமுன்தினம் ஒரே நேரத்தில் பேஜர் கருவிகள் வெடித்து உலக நாடுகளை அதிர்ச்சி அடையச் செய்த நிலையில், அடுத்த நாளில் இந்த சம்பவம் நடந்துள்ளது. இதனைத் தொடர்ந்து, லெபனானின் செஞ்சிலுவைச் சங்கத்தின் ஆம்புலன்ஸ் பணியாளர்கள் பலர் காயமடைந்தவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டனர். தெற்கு லெபனான், பெய்ரூட் நகரின் தெற்கு புறநகர்ப் பகுதிகள் மற்றும் மத்திய பெக்கா பள்ளத்தாக்கு பகுதிகளில் லெபனானின் செஞ்சிலுவைச் சங்கத்தின் 30 க்கும் மேற்பட்ட மருத்துவ குழுவினர் பணியில் ஈடுபட்டனர்.இதனால், 60 வீடுகள் மற்றும் கடைகளில் தீ பரவியது. அவற்றைக் கட்டுப்படுத்தும் பணியும் நடந்தது. இந்த சம்பவத்தில் 15 மகிழுந்துகள் மற்றும் 20க்கும் மேற்பட்ட உந்துருளிகளும் தீப்பிடித்துக் கொண்டன என்றும் வெளிநாட்டுச் செய்திகள் தெரிவிக்கின்றமை குறிப்பிடத்தக்கது000
- 862
இலங்கை மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியின் முதல் நாள் ஆட்டம் நேற்று நிறைவடைந்துள்ளது.போட்டியில் தமது முதலாவது இன்னிங்சிற்காக துடுப்பாடி வரும் இலங்கை அணி முதலாம் நாள் ஆட்ட நேர முடிவு வரை 7 விக்கெட்டுக்களை இழந்து 302 ஓட்டங்களைப் பெற்றிருந்தது.துடுப்பாட்டத்தில் இலங்கை அணி சார்பாக கமிந்து மெண்டிஸ் 114 ஓட்டங்களைப் பெற்றுக் கொடுத்தார்.இதன்மூலம் இலங்கை அணிக்காகக் குறைந்த போட்டிகளில் அதிக சதங்களைப் பெற்ற வீரர் என்ற சாதனையை கமிந்து மெண்டிஸ் படைத்துள்ளார். இதன்படி கமிந்து மெண்டிஸ் 11 இன்னிங்ஸ்களில் 4 சதங்களைப் பெற்றுள்ளார்.000
- 864
எதிர்வரும் 21 ஆம் திகதி இடம்பெறவுள்ள ஜனாதிபதி தேர்தலின் போது வாக்கெடுப்பு நிலையங்களினுள்ளும் வாக்கெண்ணும் நிலையங்களிலுள்ளும் தடைவிதிக்கப்பட்ட செயற்பாடுகள் தொடர்பில் தேர்தல் ஆணைக்குழுவினால் நேற்றையதினம் (18) விசேட ஊடக அறிக்கை வெளியிட்டுள்ளது.அதில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது - வாக்கெடுப்பு நிலையங்களினுள்ளும் வாக்கெண்ணும் நிலையங்களினுள்ளும் பின்வரும் நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு சட்டத்தினால் தடைவிதிக்கப்பட்டுள்ளது என்பதும், அவ்வாறான நடவடிக்கைகளை தவிர்ந்துகொள்வது அத்தியாவசியமானது என்பதும் சம்பந்தப்பட்ட அனைத்துத் தரப்புகளுக்கும் வலியுறுத்தப்படுகிறது.கையடக்கத் தொலைபேசிகளைப் பாவித்தல் நிழற்படமெடுத்தல் வீடியோ செய்தல் ஆயுதங்களை தம் வசம் வைத்திருத்தல் புகைபிடித்தல், மதுபானம் அருந்துதல் மற்றும் வேறு போதைப்பொருள்களைப் பாவித்தல்.மதுபானம் அருந்திவிட்டு அல்லது போதைப்பொருள்களைப் பாவித்துவிட்டு வருகை தருதல் என்பன தடைவிதிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.000
- 865
அனைத்து வாக்கு கணக்கெடுக்கும் மையங்களிலும் இரண்டாம் விருப்பத்தேர்வை எண்ணுவதற்கு தேவையான ஏற்பாடுகளை உடனடியாக தயார் செய்யுமாறு அனைத்து மாவட்ட தேர்தல் அலுவலர்களுக்கும் தேர்தல்கள் ஆணைக்குழு கடிதம் அனுப்பியுள்ளது.அதன்படி, கூடுதல் அலுவலர்களை தயார்படுத்தும் பணியில் மாவட்ட தேர்தல் அலுவலர்கள் மற்றும் வட்டார தேர்தல் அலுவலர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.இதுகுறித்து கடந்த 10 ஆம் திகதி தேர்தல்கள் ஆணைக்குழு கூட்டத்தில் மாவட்ட தேர்தல் அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது.ஜனாதிபதித் தேர்தலுக்கான வாக்களிப்பு நாடளாவிய ரீதியில் 13,421 வாக்களிப்பு நிலையங்களில் நடைபெறவுள்ளது.வாக்கு எண்ணிக்கைக்கு தயார் நிலையில் உள்ள வாக்கு எண்ணிக்கை மையங்களின் எண்ணிக்கை 1274 ஆகும்.இந்நிலையில், வாக்குச்சாவடிகளில் பொலிஸ் அதிகாரிகளுக்கு மேலதிகமாக பொலிஸ் விசேட அதிரடிப்படை அதிகாரிகளும் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்படவுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.000
- 873
2025 ஆம் ஆண்டுக்கான புதிய பாடசாலை தவணைக்கு முன்னர் அனைத்து பாடசாலைகளுக்கும் தேவையான சீருடைகள் வழங்கப்படும் என கல்வி அமைச்சர் சுசில் பிரேம்ஜயந்த் தெரிவித்துள்ளார்.சீன அரசாங்கத்தின் உதவியின் கீழ் இந்த சீருடைகள் 100 வீதம் இலவசமாக வழங்கப்படுவதாக கல்வி அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.இதன் காரணமாக அரசாங்கத்திற்கு 7000 மில்லியன் ரூபாவை சேமிக்க முடியும் என கல்வி அமைச்சர் தெரிவித்துள்ளார்.கல்வி அமைச்சர், சீனத் தூதுவர் மற்றும் அந்நாட்டு அரசாங்கத்தின் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுடன் நடத்திய கலந்துரையாடலின் விளைவாக இந்த உதவி வழங்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.2025ஆம் ஆண்டுக்கான புதிய பாடசாலை தவணைக்கான 43 இலட்சம் பாடசாலை மாணவர்களுக்குத் தேவையான சீருடைகள் பொதி செய்யப்பட்டு வழங்கப்பட உள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.இதன்படி, இலங்கைக்கு நவம்பர் 13ஆம் திகதி முதல் கப்பலும், 21 ஆம் திகதி இரண்டாவது கப்பலும், டிசம்பர் 20ஆம் திகதி மூன்றாவது கப்பலும் சீருடையுடன் இலங்கை வரும் என்பதை சீன அரசாங்கம் ஏற்கனவே உறுதிப்படுத்தியுள்ளது.மேலும், 2025 ஆம் ஆண்டுக்கான புதிய பாடசாலை தவணை ஜனவரி 20 ஆம் திகதி ஆரம்பிக்கும் எனவும், அதற்கு முன்னர் சீருடைகள் விநியோகிக்கப்பட உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.இந்த உதவியை வழங்கிய சீன அரசாங்கத்திற்கும், சீன தூதுவருக்கும் தனது நன்றியை தெரிவித்துக் கொள்வதாக கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது000
- 870
சமூக ஊடகங்கள் தொடர்பில் தீவிர அவதானம் செலுத்தப்படும் என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதிப் பொலிஸ் மா அதிபர் சட்டத்தரணி நிஹால் தல்துவா தெரிவித்துள்ளார்.தேர்தல் நாட்களிலும் தேர்தலுக்குப் பின்னரும் பிரச்சார நடவடிக்கைகள் முடிந்தாலும் சமூக ஊடகங்கள் ஊடாக மேற்கொள்ளப்படும் பிரச்சாரங்கள் தொடர்பில் அவதானம் செலுத்தப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.சமூக ஊடகங்கள் ஊடாக நாட்டின் தேசிய பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் ஏற்படும் வகையில் செயற்பட்டால் அதற்குரிய சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.அதற்கமைய, குறிப்பாக கணினி குற்றப் புலனாய்வுப் பிரிவு தனியான சேவை ஆரம்பித்துள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.தேர்தலின் போதும் அதன் பின்னரும் உளவுத்துறையினர் தேவையான முழுமையான சோதனைகளை மேற்கொள்கின்றனர்.இந்த விடயம் தொடர்பில் சமூக ஊடகங்கள் ஊடாக எந்தவொரு தகவல் கிடைத்தாலும் அவதானம் செலுத்துமாறு பொலிஸ் ஊடகப் பேச்சாளர் நிஹால் தல்துவா பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.நாட்டின் அமைதியை சீர்குலைக்கும் இவ்வாறான செயற்பாடுகள் தொடர்பில் பொலிஸார் விசேட அவதானம் செலுத்தி வருவதாகவும், அவ்வாறான செயற்பாடுகளில் ஈடுபடும் சமூக ஊடக செயற்பாட்டாளர்களை தேடுவதற்கு சமூக ஊடக நிறுவனங்களின் உதவியை நாடவுள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.புலனாய்வுப் பிரிவினர், குற்றப் புலனாய்வுத் திணைக்களம் மற்றும் பொலிஸார் இணைந்து இது தொடர்பில் செயற்பட்டு வருவதாக அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்000
- 871
ஜனாதிபதித் தேர்தலுக்கான பிரசார நடவடிக்கைகள் நேற்று (18) நள்ளிரவுடன் நிறைவடையவுள்ளது.இந்த நிலையில், செப்டெம்பர் 21 ஆம் திகதிவரை அமைதியான காலப்பகுதியாக அறிவிக்கப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் ஆர். எம்.ஏ.எல். ரத்நாயக்க தெரிவித்தார்.இக்காலப்பகுதியில் ஊடகங்களிலும் சமூக வலைத்தளங்களிலும் முன்னெடுக்கப்படும் அவசியமற்ற பிரசாரங்கள் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுக்க விசேட குழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது000
- 873
ஸ்ரீ குரோதி வருடம் புரட்டாசி மாதம் 3 ஆம் தேதி வியாழக்கிழமை 19.9.2024சந்திர பகவான் இன்று மீன ராசியில் பயணம் செய்கிறார்.இன்று காலை 06.41 வரை பிரதமை. பின்னர் துவிதியை. இன்று பிற்பகல் 11.15 வரை உத்திரட்டாதி. பின்னர் ரேவதி. மகம், பூரம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு சந்திராஷ்டமம். சற்று கவனமுடனும் எச்சரிக்கையுடனும் நடந்துகொள்வது அவசியம்.
- 873
ஜனாதிபதித் தேர்தலுக்கு வாக்களிக்கச் செல்லும் பயணிகளுக்காக விசேட பேருந்து சேவையொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.வாக்களிப்பதற்காக கிராமங்களுக்குச் செல்லும் மக்களின் வசதிக்காக நீண்ட தூரப் பயணச் சேவைகளுக்காக மேலதிக பேருந்துகள் பயன்படுத்தப்படவுள்ளதாக இலங்கை போக்குவரத்துச் சபை தெரிவித்துள்ளது.இதேவேளை, அன்றையதினம் மேலதிக தனியார் பேருந்து சேவைகள் இடம்பெறாது என தனியார் பேருந்து சங்கங்கள் தெரிவித்துள்ளதுடன் தனியார் பேருந்து ஊழியர்களும் வாக்களிக்க செல்வதே காரணம் என கூறப்படுகிறது.மேலும் இதற்காக கூடுதல் புகையிர சேவைகளை நடத்துவது குறித்து எந்த முடிவும் எடுக்கப்படவில்லை என்றும், அத்துடன் ஞாயிற்றுக்கிழமை 22 ஆம் திகதி நீண்ட தூர சேவைகளுக்காக புகையிரதம் இயக்கப்படும் என்றும், குறுகிய தூர புகையிரதம் சில குறைப்புக்கள் ஏற்படக்கூடும் குறிப்பிடப்பட்டுள்ளது000
- 876
யார் என்று தெரிகிறதா?நீங்கள் கண்டுபிடிக்க சில வரிகள்...சினிமாவில் ஒரு விஷயம் ஹிட்டாகி விட்டால் அது அப்படியே தொடர்ந்து டிரண்டாகும்.அப்படி தான் பிரபலங்களின் பட பாடல்களில் வரும் சின்ன நடனங்கள் ரசிகர்களிடம் அதிகம் பிரபலமாகிவிடும். ஒரு பாடலில் வரும் சின்ன போஷன் டிரண்டாகும் ரசிகர்களும் அதை வைத்து ரீல்ஸ் வீடியோ வெளியிடுவார்கள்.அப்படி தமிழ், இந்தி படங்களில் நடித்துவரும் இந்த நடிகை இடம்பெற்ற பாடல்கள் கடந்த சில மாதங்களாக டிரண்டிங்கில் இருந்து வருகிறது. சூப்பர் ஸ்டாருடன் ஒரு பாடல் நடனம், பேய் படத்தில் அவர் ஆடிய நடனம் என செம ஹிட் தான்.மேலே கூறப்பட்ட சில ஹின்ட்களை படித்ததும் அவர் யார் என தெரிந்திருக்கும், ஆம் அவரே தான். காவாலா, அச்சோ அச்சோ அச்சச்சோ போன்ற பாடல்களில் நடனம் ஆடி ரசிகர்களை மயக்கிய நடிகை தமன்னா தான் இது.
- 1274
கூலி படத்தின் ஷூட்டிங் ஸ்பாட்டில் எடுக்கப்பட்ட சண்டை காட்சி தற்போது லீக் ஆகி இருக்கிறது. நாகர்ஜுனா சுத்தியால் ஒருவரை அடிப்பது போல அந்த காட்சி இருக்கிறது. ஷூட்டிங்கில் இருந்த யாரோ அதை ரெக்கார்ட் செய்து வெளியிட்டு இருக்கின்றனர்.காட்சி லீக் ஆனதால் 2 மாத உழைப்பு வீண் ஆகி விட்டது என லோகேஷ் ட்விட்டரில் கோபமாக பதிவிட்டுள்ளார்.
- 1281
வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் நடித்த GOAT படம் கடந்த செப்டம்பர் 5ம் தேதி ரிலீஸ் ஆனது. படத்தை ரசிகர்கள் மட்டுமின்றி குடும்ப ரசிகர்களும் கொண்டாடி வருகின்றனர். அதனால் படத்திற்கு நல்ல வசூல் இரண்டாவது வாரத்திலும் வந்து கொண்டிருக்கிறது.13 நாட்களில் கோட் படம் வசூலித்து இருக்கும் தொகையை ஏஜிஎஸ் தயாரிப்பு நிறுவனம் தற்போது அதிகாரபூர்வமாக அறிவித்து இருக்கிறது. உலகம் முழுவதிலும் 413 கோடி ரூபாய் வசூல் வந்திருக்கிறது என தெரிவித்து உள்ளனர். இந்த தகவல் அறிந்த விஜய் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.
- 1285
கனடாவின் நோர்த் யோர்க் பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கி சூட்டு சம்பவத்தில் இரண்டு பேர் கொல்லப்பட்டுள்ளனர். இருவரும் 20 வயதுகளை உடையவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. டிரிப்வுட் மற்றும் ஜேன் ஸ்ட்ரீட் ஆகிய பகுதிகளுக்கு அருகாமையில் துப்பாக்கிச் சூட்டு சம்பவம் இடம்பெற்றதாக கிடைக்கப்பெற்ற தகவல்களின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு விரைந்ததாக ரொறன்ரோ பொலிஸார் தெரிவித்துள்ளனர். இதன்போது இரண்டு பேர் துப்பாக்கிச் சூட்டு காயங்களுடன் கிடந்ததாக தெரிவிக்கின்றனர்.உயிர்காப்பு பணியாளர்கள் இருவரையும் காப்பாற்ற முயற்சித்த போதும் சம்பவ இடத்திலேயே ஒருவர் உயிரிழந்து விட்டதாக தெரிவிக்கப்படுகிறது. ஏனையவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் உயிரிழந்தார் எனவும் தெரிவிக்கப்படுகிறது. இந்த சம்பவத்தில் உயிரிழந்தவர் பற்றிய விபரங்கள் எதுவும் வெளியிடப்படவில்லை.இரண்டு குழுக்களுக்கு இடையிலான மோதல் சம்பவம் என சந்தேகிப்பதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். சம்பவம் தொடர்பான விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் இரு தரப்பினர் துப்பாக்கிச் சூடு நடத்திக் கொண்டுள்ளதாக விசாரணைகள் மூலம் தெரிய வந்துள்ளது.
- 1289
கீர்த்தி சுரேஷ் மலையாள முன்னணி தயாரிப்பாளரான சுரேஷின் மகள். இவர் குழந்தை நட்சத்திரமாக மலையாள சினிமாவில் பல படங்களில் நடித்துள்ளனர். வளர்ந்த பின்னர் கதாநாயகியாகவும் நடிக்கத் தொடங்கினார். தமிழில் அவரின் முதல் படம் ஏ எல் விஜய் இயக்கிய ‘இது என்ன மாயம்’ திரைப்படம்தான். அதன் பின்னர் வெளியான ரஜினி முருகன் படம் அவரை முன்னணி நடிகையாக்கியது.இப்போது தமிழ் சினிமாவில் தனக்கென்று ஒரு நிலையான மார்க்கெட் வைத்திருக்கும் நடிகைகளில் கீர்த்தி சுரேஷும் ஒருவர். ரஜினி, விஜய், சூர்யா, சிவகார்த்திகேயன் உள்ளிட்ட முன்னணி நடிகர்களோடு இணைந்து நடித்துள்ள அவர் இடையில் நடிகையர் திலகம் திரைப்படத்துக்காக சிறந்த நடிகைக்கான தேசிய விருதைப் பெற்றார்.அதன் பின்னர் பெண்குயின், சாணிக் காயிதம் மற்றும் ரகு தாத்தா போன்ற கதாநாயகிக்கு முக்கியத்துவம் கதைகளிலும் நடித்து வருகிறார். இந்நிலையில் அவர் தமிழ் சினிமாவில் அறிமுகமாகி 10 ஆண்டுகளை சமீபத்தில் நிறைவு செய்தார். சமீபத்தில் சைமா விருதுகளில் சிறந்த நடிகைக்கான விருது பெற்ற அவர் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.
- 1293
பாரிஸில் 2024 ஆம் ஆண்டுக்கான ஒலிம்பிக் மற்றும் பரா ஒலிம்பிக் போட்டிகள் சிறப்பாக இடம்பெற காரணமாக இருந்த பொதுமக்களுக்கு நன்றி தெரிவிக்கும் பிரச்சார பணிகள் இன்று ஆரம்பிக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.இதன்படி, ”Merci” எனும் ஒற்றை வார்த்தையுடன் கூடிய பதாகைகள், சுவரொட்டிகளை நாளை முதல் பல இடங்களில் காணக்கூடியதாக இருக்கும். இந்த நடவடிக்கைகாக 1,500 சுவரொட்டிகள் அச்சிடப்பட்டுள்ளன. 350 இடங்களில் அவை ஒட்டப்பட உள்ளன. மேலும் 1,100 இடங்களில் பதாகைகளும் நிறுவப்பட உள்ளன. மேலும், ஒலிம்பிக் போட்டிகள் ஆரம்பமாவதற்கு முன்னர், “உலக மக்களை பாரிஸுக்கு வரவேற்கிறோம் எனும் தொனிப்பட ”la bienvenue à Paris au monde entier” எனும் வார்த்தைகளை அச்சிட்டு இதுபோல் பிரச்சாரம் மேற்கொண்டிருந்தது.
- 1434
கனடாவில் டிக்டொக் காணொளி ஒன்றை பகிர்ந்த நபர் ஒருவருக்கு ஆறு ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.தீவிரவாத சம்பவங்கள் தொடர்பிலான டிக்டொக் காணொளியை குறித்த நபர் பகிர்ந்த கல்கரியைச் சேர்ந்த நபர் ஒருவருக்கு இவ்வாறு தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.ஐ.எஸ் தீவிரவா இயக்கத்திற்கு ஆட்சேர்ப்பு செய்வது குறித்த காணொளியொன்றே இவ்வாறு பகிரப்பட்டுள்ளது. ஸகாரியா ரைடா ஹுசெய்ன் என்ற நபர் இவ்வாறு நீதிமன்றினால் தண்டிக்கப்பட்டுள்ளார். ஸகாரியாவிற்கு எதிராக சுமத்தப்பட்டிருந்த நான்கு தீவிரவாத குற்றச்சாட்டுக்களில் ஒரு குற்றச்சாட்டினை அவர் ஒப்புக்கொண்டுள்ளார்.தீவிரவாத இயக்கத்திற்கு ஆட்சேர்ப்பு மற்றும் குண்டு தயாரித்தல் உள்ளிட்ட காணொளிகளை சமூக ஊடகங்களின் வழியாக தாம் பகிர்ந்ததாக அவர் ஒப்புக்கொண்டுள்ளார். குறித்த நபர் கடந்த ஜூன் மாதம் கைது செய்யப்பட்டிருந்தார்.
- 1439
தென்னாப்பிரிக்காவில் உள்ள நாடுகளில் 40 ஆண்டுகளில் இல்லாத வரலாறு காணாத வறட்சி நிலவி வருகிறது. இந்நிலையில் உணவுப் பஞ்சத்தை எதிர்கொண்டுள்ள மக்களுக்கு உதவும் வகையில் கடந்த சில வாரங்களுக்கு முன்னர் 83 யானைகள் உட்பட சுமார் 700 வன உயிரினங்களை கொல்ல உள்ளதாக நமீபியா அறிவித்திருந்தது.இந்த நிலையில், நமீபியாவை தொடர்ந்து ஜிம்பாப்வேயிலும் யானைகளை கொன்று மக்களுக்கு உணவாக வழங்க திட்டமிடப்பட்டுள்ளது. ஜிம்பாப்வே நாட்டில் கடந்த 40 ஆண்டுகளில் இல்லாத அளவு கடும் வறட்சி வாட்டி வதைத்து வருகிறது. 2023இல் மட்டும் 50 யானைகள் கொல்லப்பட்ட நிலையில், தற்போது 200 காட்டு யானைகளை கொன்று இறைச்சியை மக்களுக்கு விநியோகிக்க திட்டமிடப்பட்டுள்ளது.
- 1440