Feed Item
·
Added article

கடந்த 1997ம் ஆண்டில் பிரபுவின் பொன்மனம் என்ற படம் மூலம் தமிழில் என்டரி ஆனவர் நடிகர் முத்துக்காளை. முன்னதாக ஸ்டண்ட் மாஸ்டராக இவர் படங்களில் பணியாற்றிய நிலையில் அடுத்தடுத்து வடிவேலுவுடன் இணைந்து பல படங்களில் நகைச்சுவை வேடங்களில் நடித்து ரசிகர்களை கவர்ந்துள்ளார்.

சில ஆண்டுகளுக்கு முன்பு வரை இவர் குடிநோயால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில் கடந்த ஆறு ஆண்டுகளாக குடி இல்லாத வாழ்க்கையை வாழ்ந்து வருகிறார். இந்த வாழ்க்கையை தான் மேற்கொள்வதற்கு தனக்கு படிப்பு தான் முக்கியமாக உதவியதாகவும் முத்துக்காளை முன்னதாக பேட்டியொன்றில் தெரிவித்துள்ளார். இளங்கலையில் அடுத்தடுத்து மூன்று டிகிரிகளை நிறைவு செய்துள்ளார் முத்துக்காளை. 

தன்னுடைய 58வது வயதில் 3வது டிகிரியை இவர் முடித்துள்ளார். இந்நிலையில் எதை இழந்தாலும் கல்வியை இழக்காதீர்கள் என்று நண்பர் ஒருவர் கூறியதை கேட்டு தான் குடியிலிருந்து மீண்டு படிப்பில் கவனம் செலுத்தியதாக முத்துக்காளை முன்னதாக தெரிவித்துள்ளார். மேலும் இழந்த அனைத்தையும் மீட்டெடுக்க ஆசைப்பட்டதாகவும் இந்த வயதில் படிப்பதை பார்த்து தன்னை பலரும் கிண்டல் செய்தனர் என்றும் கூறியிருந்த முத்துக்காளை, தனக்கு கோடிக்கணக்கில் சொத்து இருந்திருந்தாலும் தான் சந்தோஷப்பட்டு இருக்க மாட்டேன் என்றும் தனக்கு கிடைத்த படிப்பு தான் தன்னை மிகப் பெரிய அளவில் உற்சாகமும் சந்தோஷமும் கொள்ள செய்தது என்றும் தெரிவித்திருந்தார்.மிகப்பெரிய அளவில் குடியால் பாதிக்கப்பட்டிருந்த முத்துக்காளை கடந்த ஆறு ஆண்டுகளாக குடி இல்லாத வாழ்க்கையை நிறைவு செய்ததை பாராட்டி அவருக்கு ஆல்கஹால் அனானிமஸ் அமைப்பு பாராட்டு விழா ஒன்றை நடத்தியுள்ளது. அதில் வசனகர்த்தா மற்றும் இயக்குநர் லியாகத் அலிகான் கலந்துகொண்டு நடிகர் முத்துக்காளைக்கு மெடல் அணிவித்து பாராட்டி வாழ்த்தியுள்ளார். குடியிலிருந்து மீண்டு அனைவரை போலவும் சகஜமான வாழ்க்கை வாழ்வதற்கு தனக்கு படிப்பு தான் முக்கியமான காரணமாக அமைந்ததாக முத்துக்காளை மகிழ்ச்சி தெரிவித்துள்ளார். 

  • 473