Ads
அல்வாய் மனோகரா முன்பள்ளியின் விளையாட்டு விழா
அல்வாய் மனோகரா முன்பள்ளியின் விளையாட்டு விழா பதிவுகள்
Empty
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுடன் இன்னும் ஐந்து வருடங்களுக்கு இந்த நாடு முன்னோக்கிச் செல்ல வேண்டும் என்று தேசிய பாதுகாப்பு ஆலோசகர் சாகல ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.இது தொடர்பில் அவர் மேலும் கூறுகையில்,"கோவிட் காலத்தில் அப்போதைய அரசு வரிச் சுமைகளைக் குறைத்தமையின் காரணமாகவே இலங்கை நெருக்கடிக்குள் சிக்கியது.அதேபோல் இரசாயன உர இறக்குமதிக்குத் தடை விதித்தமையினால் இலங்கையின் விவசாய உற்பத்திகள் முற்றாகச் சரிவைக் கண்டன.அதனால் புதிய வகையிலான விளைச்சல்களை கண்டுபிடிப்பதற்கான முயற்சிகளும் பாதிப்பை எதிர்கொண்டன.அந்த நிலையிலிருந்து மீளவே நாம் சர்வதேச நாணய நிதியத்துடன் பயணிக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டது. அதனாலேயே நாட்டின் அத்தியாவசியப் பொருட்களின் தட்டுப்பாடுகளிலிருந்து மீண்டு வர முடிந்தது.குறிப்பாக சர்வதேச நாடுகள் மத்தியில் இலங்கை மீதான நம்பிக்கை ஏற்பட்டது. அதனால் சுற்றுலாத்துறையும் மூச்சுவிட ஆரம்பித்தது.அதனால் அப்போது ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவால் மேற்கொள்ளப்பட்ட நிதி முகாமைத்துவம் உள்ளிட்டச் செயற்பாடுகள் தேசிய பொருளாதாரத்தை நிலைப்படுத்தியிருந்தது.அதன்படி இப்போது துரித அபிவிருத்திக்கான வேலைத்திட்டம் அவசியப்படுகின்றது. இந்த வருடத்தின் இறுதியில் சுற்றுலாப் பயணிகள் வருகையை 25 இலட்சமாக அதிகரிப்பதற்கான வேலைத்திட்டத்தை ஜனாதிபதி தயாரித்திருக்கின்றார்.அதேபோல் எமது இறக்குமதிகளுக்குச் செலுத்தவே வருமானம் போதுமாக இருப்பதால் ஏற்றுமதி பொருளாதாரத்தை உருவாக்கி அதிக வருமானத்தை ஈட்டும் திட்டங்களையும் அவர் தயார்படுத்தியுள்ளார்.தற்போதும் இலங்கை பல நாடுகளுடன் சுதந்திர வர்த்தக ஒப்பந்தங்களில் கைசாத்திட்டுள்ளது. மேலும் மீள் புதுப்பிக்கக்கூடிய வலுசக்தி உற்பத்தியை ஆரம்பித்துள்ளோம் என்றும் அவர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.000
- 21
எதிர்வரும் 5 வருடங்களுக்குள் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் பிரச்சினைக்குத் தீர்வு காணப்படும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மீண்டும் தெரிவித்துள்ளார். அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் ஏற்பாட்டில் யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற தேர்தல் பிரசார கூட்டத்தில் கலந்து கொண்ட போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.இதன்பொது அவர் மேலும் கூறுகையில் - வடக்கில் உள்ள மக்களின் பிரச்சினைகளை, அரசியல் பிரச்சினைகளுக்கு மாத்திரம் மட்டுப்படுத்த முடியாது.வடக்கிற்கு அபிவிருத்தியும் அவசியம். ஏனைய மாகாணங்கள் முன்னேறுகையில் வடக்கு பின்தங்கிவிடும். சர்வதேச நாணய நிதியத்துடன் இலங்கை அரசாங்கம் ஆரம்பித்துள்ள வேலைத்திட்டத்தை முன் கொண்டு செல்ல வேண்டும் ஏற்றுமதி வருமானத்தை அதிகரித்து அதனை அடிப்படையாகக் கொண்ட பொருளாதாரத்தை உருவாக்க வேண்டும்.இந்தநிலையில், எதிர்வரும் ஐந்து வருடங்களுக்குள் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் பிரச்சினைகளுக்கான தீர்வு காணப்படும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.000
- 23
எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் கள்ள வாக்கு அளிக்கும் நபர்களுக்கு 2023ஆம் ஆண்டு 21ஆம் இலக்க சட்டத்தின் பிரகாரம் 12 மாதங்கள் வரை சிறை தண்டனையும் 2 இலட்சம் ரூபா தண்டப்பணமும் விதிக்கப்படும் என தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.ஜனாதிபதித் தேர்தலில் அதிகமான கள்ள வாக்குகளை அளிக்க சிலர் முற்பட கூடும் என பலக் கட்சிகள் தேர்தல்களை ஆணைக்குழுவிடம் குற்றச்சாட்களை முன்வைத்துள்ளன.இதனால், வாக்குப் பெட்டியை வாக்கு எண்ணும் தேர்தல் மத்திய நிலையங்களுக்கு கொண்டுசெல்லும் போது குறித்த வாகனத்துடன், தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் சார்ப்பில் இருவரை தேர்தல்கள் ஆணைக்குழுவின் வாகனத்தை பின்தொடர அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.இந்த நிலையில் கள்ள வாக்கு அளிக்கும் நபர்களுக்கு கடுமையான தண்டனைகளை மேல் நீதிமன்றத்தின் ஊடாக அளிக்க முடியும் என ஆணைக்குழுவின் மேலதிக ஆணையாளர் சிந்தக குலரத்ன தெரிவித்தார்.கள்ள வாக்கு அளிப்பவர்களுக்கு 2 இலட்சம் ரூபா தண்டப்பணத்தை விதிக்க முடியும். அல்லது 12 மாதங்கள் சிறை தண்டனையை விதிக்க முடியும். அல்லது இரண்டு இலட்சம் அபராதத்துடன், தண்டனையையும் வழங்க முடியும்.1981 ஆம் ஆண்டு 15 இலக்க சட்டத்தின் பிரகாரம் 500 ரூபா தண்டப்பணமே கள்ள வாக்கு அளிப்பவர்களுக்கு விதிக்கப்பட்டது. என்றாலும், கடந்த ஆண்டு மேற்கொள்ளப்பட்ட ஜனாதிபதித் தேர்தல் தொடர்பிலான சட்டத்திருத்தின் ஊடாக இந்த தொகை 2 இலட்சமாக அதிகரிக்கப்பட்டது.கள்ள வாக்கு அளித்த குற்றவாளியாக அடையாளம் காணப்படும் நபர்களுக்கு மேற்படி தண்டனைகளை விதிப்பதுடன், அவர்களுக்கு 7 ஆண்டுகள் வாக்களிக்கவும் வாக்காளர் பதிவேட்டில் பதியவும் தடைவிதிக்கப்படும் என்றும் சிந்தக குலரத்ன கூறினார்.000
- 26
வடக்கில் மாகாண சபையை வலுப்படுத்தி அதிகாரங்களை வழங்குவது தொடர்பாக தனது கொள்கைப் பிரகடனத்தில் உள்ளடக்கியுள்ளதாகவும், மத்திய அரசாங்கத்திற்கு உதவும் வகையில் 09 மாகாண சிற்றரசுகளின் கீழ் அபிவிருத்தி வேலைத்திட்டம் துரிதப்படுத்தப்படும் எனவும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் ஏற்பாட்டில் யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற “ரணிலால் இயலும்” வெற்றிப் பேரணியில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.மேலும் தேசிய காணி ஆணைக்குழு மற்றும் உண்மை நல்லிணக்க ஆணைக்குழு ஸ்தாபிக்கப்படும் எனவும் நவாஸ் ஆணைக்குழுவின் பரிந்துரைக்கமைவாக எதிர்வரும் 05 வருடங்களில் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் பிரச்சினைக்கு தீர்வு காண நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் ஜனாதிபதி நம்பிக்கை வெளியிட்டார்.இதன்போது மேலும் கருத்து தெரிவித்த ஜனாதிபதி,''வடக்கின் விடயங்களை அரசியல் பிரச்சினைகளுக்கு மாத்திரம் மட்டுப்படுத்த முடியாது. அப்பிரதேசத்திற்கு அபிவிருத்தியும் அவசியம். இல்லையெனில் ஏனைய மாகாணங்கள் முன்னேறுகையில் வடக்கு பின்தங்கிவிடும் .வடக்கின் அபிவிருத்தியை போன்றே அரசியல் பிரச்சினைகளுக்கும் தீர்வு காண்பேன்.முன்னாள் விவசாய அமைச்சர் அனுரகுமார எவ்வாறு தென்னிலங்கையில் மாகாண சபைகளுக்கு எதிராக மாபெரும் போராட்டத்தை முன்னெடுத்தார் என்பதை நினைவுகூர்ந்த ஜனாதிபதி, இன்று யாழ்ப்பாணம் வந்து மக்களுக்கு பல்வேறு வாக்குறுதிகளை வழங்கிய போதிலும் இந்த விடயங்கள் தொடர்பில் மக்களுக்கு உறுதிமொழி அளிக்க வேண்டும்“ எனவும் வலியுறுத்தினார்சர்வதேச நாணய நிதியத்துடன் இலங்கை அரசாங்கம் ஆரம்பித்துள்ள வேலைத்திட்டத்தை வலுவாக தொடராவிட்டால் நாட்டின் பொருளாதாரம் மீண்டும் வீழ்ச்சியடையக்கூடும் என சர்வதேச நாணய நிதியம் நேற்று விடுத்த எச்சரிக்கையை நினைவுகூர்ந்த ஜனாதிபதி, நாட்டைக் கட்டியெழுப்பும் திட்டத்தைப் பாதுகாப்பது அனைவரினதும் பொறுப்பாகும் என்றார்.இன்னும் 03 வருடங்களுக்கு இந்த வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்தினால் நாட்டின் பொருளாதாரத்தை மீண்டும் எவராலும் உடைக்க முடியாது என சுட்டிக்காட்டிய ஜனாதிபதி வடக்கை அபிவிருத்தி செய்யும் வேலைத்திட்டமொன்று வடக்கிற்கு அவசியம் எனவும் சஜித் பிரேமதாசவிடமோ அனுரகுமாரவிடமோ அதற்கான தீர்வு இல்லை" எனவும் ஜனாதிபதி மேலும் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது000
- 26
ஸ்ரீ குரோதி வருடம் ஆவணி மாதம் 30 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை 15.9.2024.சந்திர பகவான் இன்று மகர ராசியில் பயணம் செய்கிறார்.இன்று மாலை 03.30 வரை துவாதசி. பின்னர் திரியோதசி.இன்று மாலை 05.03 வரை திருவோணம். பின்னர் அவிட்டம்.திருவாதிரை, புனர்பூசம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு சந்திராஷ்டமம். சற்று கவனமுடனும் எச்சரிக்கையுடனும் நடந்துகொள்வது அவசியம்.
- 117
அடுத்த வருடம் முதல் வாகனங்கள் இறக்குமதி செய்யப்படும் என்றாலும், வரியின்றி எந்தவொரு நபருக்கும் வாகனங்களை இறக்குமதி செய்ய முடியாது என அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.சர்வதேச நாணய நிதியத்துடன் செய்து கொள்ளப்பட்ட உடன்படிக்கைகளின் பிரகாரம் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.இந்த வருடம் ஒக்டோபர் மாதம் முதலாம் திகதி முதல் பல கட்டங்களின் கீழ் வாகனங்களை இறக்குமதி செய்வதற்கு அமைச்சரவை தீர்மானித்துள்ளது.இதன்படி பொது போக்குவரத்து சேவைகளுக்காக பயன்படுத்தப்படும் வாகனங்கள் முதலில் இறக்குமதி செய்யப்படும்.வர்த்தக மற்றும் சரக்கு வாகனங்கள் இந்த வருடம் டிசம்பர் மாதம் முதலாம் திகதி முதல் இறக்குமதி செய்யப்படும் என அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்."அனைத்து வகையான வாகனங்களும் 2025 ஆம் ஆண்டின் இரண்டாவது மாதத்தின் முதலாம் திகதியிலிருந்து இறக்குமதி செய்ய அனுமதிக்கப்படும். அதன்படி, அன்று முதல் முதல் கார்கள், வேன்கள், விளையாட்டு பயன்பாட்டு வாகனங்கள், பிக்கப்கள் போன்றவற்றை இறக்குமதி செய்ய அனுமதிக்கப்படும்." என்றார்.
- 398
அந்தமான், நிக்கோபார் தீவுகளின் தலைநகர் “போர்ட் பிளேயர்” பெயர் “ஸ்ரீ விஜயபுரம்” என மாற்றம் செய்யப்பட்டவுள்ளதாக இந்தியா தெரிவித்துள்ளது.அந்தமான், நிக்கோபார் தீவுகள் வங்காள விரிகுடா கடல் பகுதியில் அமைந்துள்ளது. இந்தியாவின் யூனியன் பிரதேசங்களில் ஒன்றான அந்தமான் நிக்கோபார் தீவுகளின் தலைநகராக போர்ட் பிளேயர் உள்ளது.தலைநகர் போர்ட் பிளேயரின் பெயரை மாற்றவுள்ளதாக இந்தியா அறிவித்துள்ளது. போர்ட் பிளேயரின் பெயரை ஸ்ரீ விஜயபுரம் என்று மாற்றவுள்ளதாக இந்திய மத்திய அரசாங்கம் அறிவித்துள்ளது.இந்த அறிவிப்பை இந்திய உள்விவகார அமைச்சர் அமித்ஷா வெள்ளிக்கிழமை (13) வெளியிட்டுள்ளார். இது தொடர்பாக இந்திய உள்விவகார அமைச்சர் அமித்ஷா வெளியிட்ட பதிவில்,காலனி ஆதிக்க (ஆங்கிலேய ஆட்சியின்) முத்திரைகளில் இருந்து நாட்டை விடுவிக்க வேண்டும் என்ற (இந்திய) பிரதமர் மோடியின் தொலைநோக்கு பார்வையால் உத்வேகம் பெற்று போர்ட் பிளேயர் பெயரை ஸ்ரீ விஜயபுரம் என பெயர் மாற்றம் செய்ய முடிவு செய்துள்ளோம்.சோழ பேரரசின் கடற்படை தளமாக செயல்பட்ட அந்தமான் நிக்கோபார் தீவுகள் நாட்டின் சுதந்திர போராட்ட வரலாற்றில் ஈடுஇணையற்ற இடம்பிடித்துள்ளது. தற்போது நாட்டின் வளர்ச்சிக்கு முக்கிய தளமாகவும் திகழ்கிறது' என குறிப்பிட்டுள்ளார்.
- 401
ஏர் கனடா விவகாரத்தில் அரசாங்கம் தலையிடாது என கனேடிய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ கூறியுள்ளார்.வேலைநிறுத்தம் அல்லது கதவடைப்பைத் தவிர்ப்பதற்கான ஒப்பந்தத்தை எட்ட வேண்டிய பொறுப்பு ஏர் கனடா மற்றும் விமானிகள் சங்கத்தின் மீது உள்ளதாக மத்திய அரசாங்கத்தின் மீது அல்ல என்றும் அவர் கூறினார்.ஏர் கனடா விமானிகள் சங்கத்தின் வேலை நிறுத்த எச்சரிக்கைகளுக்கு மத்தியில், வெள்ளிக்கிழமை (13) மாண்ட்ரீலில் ஊடகவியலாளர் சந்திப்பில் உரையாற்றும் போது ட்ரூடோ இதனைக் கூறியுள்ளார். இதன்போது அவர் மேலும் கூறுகையில், வேலை நிறுத்தத்தால், விமானப் பயணத்தை நம்பியிருக்கும் மில்லியன் கணக்கான கனேடியர்கள், நாடு முழுவதும் உள்ள ஆயிரக்கணக்கான வணிகங்கள் பாதிக்கப்படாமல் இருப்பதை எப்படிக் கண்டறிவது என்பதை ஏர் கனடா மற்றும் விமானிகள் சங்கம்தான் செய்ய வேண்டும்.ஏர் கனடா மற்றும் அவர்களின் விமானிகளைப் பிரதிநிதித்துவப்படுத்தும் தொழிற்சங்கம் பேச்சுவார்த்தையில் ஒரு ஒப்பந்தத்தை எட்டுவதற்கு கூட்டாட்சி அரசாங்கம் தொடர்ந்து அழுத்தம் கொடுத்து வருவதாகவும் ட்ரூடோ கூறினார்.ஏர் லைன் பைலட்ஸ் அசோசியேஷன் (ALPA), தொழிலாளர் பிரச்சினையில் உள்ள ஏர் கனடா விமானிகளைப் பிரதிநிதித்துவப்படுத்தும் தொழிற்சங்கம், வெள்ளிக்கிழமை ஏர் கனடாவுடன் ஒரு ஒப்பந்தத்தை உருவாக்க முயற்சிப்பதாகக் கூறுகிறது.அதேவேளை ஞாயிற்றுக்கிழமைக்குள் (15) தீர்வு எட்டப்படாவிட்டால், 5,200 ஏர் கனடா விமானிகளைப் பிரதிநிதித்துவப்படுத்தும் ஏர் லைன் பைலட்ஸ் அசோசியேஷன் (ALPA), 72 மணிநேர கதவடைப்பு அல்லது வேலைநிறுத்த அறிவிப்பை வெளியிடலாம் என்று கூறப்படுகிறது.
- 416
தமிழ் வருடம் ஸ்ரீ குரோதி, ஆவணி மாதம் 29 ஆம் தேதி மேஷம் -ராசி: குழந்தைகளின் கல்வி தொடர்பான சிந்தனைகள் மேம்படும். மனதில் புதுவிதமான இலக்குகள் பிறக்கும். சில விஷயங்களில் அனுபவ அறிவு வெளிப்படும். பூர்வீக சொத்துக்களை மாற்றியமைப்பதற்கான வாய்ப்புகள் உண்டாகும். பலம் மற்றும் பலவீனங்களை புரிந்து கொள்வீர்கள். வியாபாரம் தொடர்பான பணிகளில் மாற்றம் உண்டாகும். மேன்மை நிறைந்த நாள். அதிர்ஷ்ட எண் : 3அதிர்ஷ்ட நிறம் : நீலம் ரிஷபம் ராசி: உறவினர்களிடம் இருந்துவந்த கருத்து வேறுபாடுகள் குறையும். சேவை துறைகளில் இருப்பவர்களுக்கு ஆதாயம் மேம்படும். கல்வி பணிகளில் ஆர்வமின்மை உண்டாகும். மற்றவர்களின் எண்ணங்களை அறிந்து செயல்படுவீர்கள். விருந்தினர்களின் வருகை உண்டாகும். விவசாயப் பணிகளில் கவனம் வேண்டும். பயணங்களால் புத்துணர்ச்சியான சூழல் அமையும். வெற்றி நிறைந்த நாள். அதிர்ஷ்ட எண் : 1அதிர்ஷ்ட நிறம் : சிவப்புமிதுனம் -ராசி: எதிர்பாராத பயணங்களின் மூலம் அலைச்சல் உண்டாகும். சகோதரர்களிடம் சிந்தித்துச் செயல்படவும். விளையாட்டு தொடர்பான செயல்களில் பொறுமை வேண்டும். எண்ணிய பணிகள் நிறைவடைவதில் காலதாமதம் ஏற்படும். பழைய நினைவுகள் மூலம் செயல்பாடுகளில் ஒருவிதமான சோர்வு உண்டாகும். புதிய மின்னணு, மின்சார சாதனங்களில் கவனம் வேண்டும். நிதானம் வேண்டிய நாள். அதிர்ஷ்ட எண் : 9அதிர்ஷ்ட நிறம் : அடர்சிவப்புகடகம் -ராசி: புதிய தொழில் தொடங்கும் முயற்சிகளில் சாதகமான பலன்கள் ஏற்படும். உத்தியோகப் பணிகளில் இருந்துவந்த எதிர்ப்புகள் குறையும். பொருளாதாரம் தொடர்பான விஷயங்களில் மேன்மை உண்டாகும். சுபகாரியம் தொடர்பான எண்ணங்கள் கைகூடும். வருவாயை மேம்படுத்துவது தொடர்பான சிந்தனைகள் அதிகரிக்கும். பலதரப்பட்ட மக்களின் அறிமுகம் ஏற்படும். போட்டி நிறைந்த நாள். அதிர்ஷ்ட எண் : 6அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சுசிம்மம் -ராசி:ரகசியமான சில விஷயங்களால் ஆதாயம் ஏற்படும். ஞாபக மறதி தொடர்பான பிரச்சனைகள் குறையும். எதிராக இருந்தவர்கள் விலகிச் செல்வார்கள். போட்டித் தேர்வுகளில் சாதகமான முடிவுகள் கிடைக்கும். உடல் ஆரோக்கியம் மேம்படும். சிந்தனை திறனில் மாற்றங்கள் உண்டாகும். வியாபாரம் தொடர்பான முதலீடுகள் அதிகரிக்கும். சுபம் நிறைந்த நாள். அதிர்ஷ்ட எண் : 3அதிர்ஷ்ட நிறம் : மயில்நீலம் கன்னி -ராசி: பூர்வீக சொத்துக்களால் ஆதாயம் ஏற்படும். கடன் தொடர்பான நெருக்கடிகள் குறையும். வெளியூர் பயணங்களில் சிந்தித்துச் செயல்படவும். சிந்தனைகளில் மாற்றமும், அனுபவ அறிவும் வெளிப்படும். கலை துறைகளில் இருப்பவர்களின் அறிமுகம் ஏற்படும். பாரம்பரிய விஷயங்களை பற்றிய புரிதல் உண்டாகும். தனம் நிறைந்த நாள். அதிர்ஷ்ட எண் : 5அதிர்ஷ்ட நிறம் : வெளிர்சிவப்புதுலாம் -ராசி: மனதிற்கு பிடித்த பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். வாகன பயணங்களால் ஆதாயம் ஏற்படும். வீடு தொடர்பான சிந்தனைகள் மேம்படும். அரசு பணி நிமித்தமான செயல்பாடுகளில் விவேகம் வேண்டும். பலம், பலவீனத்தை உணர்வீர்கள். வழக்குகளில் எதிர்பார்த்த முடிவுகள் கிடைக்கும். சக ஊழியர்களின் ஆதரவு கிடைக்கும். வரவு நிறைந்த நாள். அதிர்ஷ்ட எண் : 6அதிர்ஷ்ட நிறம் : நீலம்விருச்சிகம்- ராசி: திட்டமிட்ட காரியங்கள் நிறைவேறும். உலக வாழ்க்கை பற்றிய புதுவிதமான கண்ணோட்டம் பிறக்கும். இசை துறைகளில் புதிய வாய்ப்புகள் கிடைக்கும். குறுகிய தூர பயணங்களின் மூலம் மனதில் மாற்றம் ஏற்படும். வீட்டின் தேவைகளை அறிந்து நிறைவேற்றி வைப்பீர்கள். வேலையாட்களின் ஒத்துழைப்பு மேம்படும். முயற்சி மேம்படும் நாள். அதிர்ஷ்ட எண் : 1அதிர்ஷ்ட நிறம் : ரோஸ் தனுசு -ராசி: வாக்கு சாதுரியம் மூலம் நினைத்த காரியங்களை செய்து முடிப்பீர்கள். பொருளாதாரம் ஏற்ற, இறக்கமாக இருக்கும். நட்பு வட்டாரம் விரிவடையும். பொன், பொருள் சேர்க்கை உண்டாகும். உடன்பிறந்தவர்களிடம் விட்டுக்கொடுத்துச் செயல்படவும். அனுபவப்பூர்வமான பேச்சுக்கள் மூலம் மதிப்பு அதிகரிக்கும். உங்கள் மீதான நம்பிக்கை மேம்படும். உயர்வு நிறைந்த நாள். அதிர்ஷ்ட எண் : 5அதிர்ஷ்ட நிறம் : இளநீலம்மகரம் -ராசி:சவாலான வேலைகளையும் சாதாரணமாக செய்து முடிப்பீர்கள். தடைகளால் செயல்களில் தாமதம் ஏற்படும். எதிர்காலம் குறித்த சிந்தனைகள் மேம்படும். வர்த்தக செயல்களில் விவேகத்துடன் செயல்படவும். இழுபறியான வரவுகள் கிடைக்கும். கருத்துகளை கூறும்பொழுது சூழ்நிலை அறிந்து செயல்படுவது நல்லது. குடும்ப உறுப்பினர்களிடம் அனுசரித்து நடந்து கொள்ளவும். கவலை மறையும் நாள். அதிர்ஷ்ட எண் : 3அதிர்ஷ்ட நிறம் : ரோஸ்கும்பம் –ராசி:சம வயதினர் மூலம் மாற்றமான தருணங்கள் உண்டாகும். விலை உயர்ந்த பொருட்கள் மீதான ஆர்வம் அதிகரிக்கும். வியாபாரம் நிமித்தமான முதலீடுகள் மேம்படும். கணவன், மனைவிக்கிடையே அனுசரித்துச் செல்லவும். எதிர்பாராத திடீர் பயணங்கள் மூலம் நெருக்கடிகள் தோன்றி மறையும். ஆடம்பர பொருள் வாங்குவதில் ஆர்வம் உண்டாகும். லாபம் நிறைந்த நாள். அதிர்ஷ்ட எண் : 1அதிர்ஷ்ட நிறம் : இளஞ்சிவப்பு நிறம்மீனம் -ராசி: சமயோசிதமான செயல்பாடுகளின் மூலம் வளர்ச்சி அடைவீர்கள். உயர் கல்வியில் மேன்மை ஏற்படும். பொருளாதாரத்தில் இருந்துவந்த ஏற்ற, இறக்கங்கள் குறையும். பணிகளில் சக ஊழியர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். மனதில் இருந்துவந்த குழப்பம் நீங்கி தெளிவுடன் காணப்படுவீர்கள். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களின் ஆதரவு கிடைக்கும். ஜெயம் நிறைந்த நாள். அதிர்ஷ்ட எண் : 2அதிர்ஷ்ட நிறம் : பழுப்பு இன்றைய நாள் இனிய நாளாக அமைந்திட வாழ்த்துகள்.
- 650

- 652
ஸ்ரீ குரோதி வருடம் ஆவணி மாதம் 29 ஆம் தேதி சனிக்கிழமை 14.9.2024.சந்திர பகவான் இன்று மகர ராசியில் பயணம் செய்கிறார்.இன்று மாலை 05.05 வரை ஏகாதசி. பின்னர் துவாதசி.இன்று மாலை 05.57 வரை உத்திராடம். பின்னர் திருவோணம்.மிருகசீரிஷம், திருவாதிரை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு சந்திராஷ்டமம். சற்று கவனமுடனும் எச்சரிக்கையுடனும் நடந்துகொள்வது அவசியம்.
- 676
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மாத்திரமே அரச ஊழியர்களுக்குச் சம்பள அதிகரிப்பு செய்ய வழி செய்திருக்கின்றார் என்று கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்தார்.அவர் மேலும் கூறுகையில்,"2022 ஆம் ஆண்டில் நாட்டில் பல பிரச்சினைகள் காணப்பட்டபோது எதிர்க்கட்சி உறுப்பினர்கள் கைகொடுக்காமையினால் மாற்றுக் கட்சி உறுப்பினர்களுடன் வேலை செய்ய வேண்டிய நிலைமை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு வந்தது. நாட்டின் நிலையைக் கருத்தில் கொண்டு அந்தச் சவாலையும் அவர் ஏற்றுக்கொண்டார்.எதிர்க்கட்சி உறுப்பினர்கள் அரச ஊழியர்களைப் பணிப் புறக்கணிப்புக்களுக்கு மாத்திரம் பயன்படுத்திவிட்டு கைவிட்டு விடுவர். ஆனால், ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மாத்திரமே அரச ஊழியர்களுக்கு சம்பள அதிகரிப்பு செய்ய வழி செய்திருக்கின்றார்.இன்று பங்களாதேஷில் தற்காலிக அரசு அமைக்கப்பட்டுள்ளது. இருப்பினும் அங்கு வரிசை யுகம் தோன்றியுள்ளது. இதே கஷ்டங்களை இலங்கையும் அனுபவித்தது. அவ்வாறானதொரு கஷ்டத்தை கடந்தே இன்றைய நிலைக்கு வந்திருக்கின்றோம்.இந்தியா, பங்களாதேஷ் போன்ற நாடுகளிடம் பெற்றக் கடனையும் நாம் திருப்பிச் செலுத்தியிருக்கின்றோம். என்றும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது000
- 786
புலமைப் பரிசில் பரீட்சை நிறைவடைந்தவுடன் மாணவர்களை சுதந்திரமாக நடமாட விடுமாறு விசேட வைத்திய நிபுணர் ரூமி ரூபன், பெற்றோர்களிடம் கோரிக்கை விடுத்துள்ளார். இந்த வருடத்திற்கான தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சை நாளைய தினம் நடைபெறவுள்ளது. மேலும், புலமைப்பரிசில் பரீட்சைக்கு முன்னரும் பின்னரும் தங்களது பிள்ளைகளை ஏனைய பிள்ளைகளுடன் ஒப்பிடுவதை தவிர்க்குமாறும் வைத்தியர் பெற்றோர்களிடம் கேட்டுக் கொண்டுள்ளார்.இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில் - கடந்த சில மாதங்களாக புலமைப்பரிசில் பரீட்சைக்கு தயாரான மாணவர்கள் அதிக மன அழுத்தத்தில் இருந்தனர். இனி மாணவர்கள் மீது அழுத்தம் கொடுக்க வேண்டாம்.பரீட்சை எழுதிய பின், பரீட்சை வினாத்தாளை மீண்டும் மாணவர்களிடம் கொடுத்து, அவர்களை எழுத வைத்து, விடைகள் சரியாக உள்ளதா என சோதித்து பார்ப்பதில் பலனில்லை.புலமைப்பரிசில் பரீட்சை என்பது மாணவர்களின் வாழ்வில் சந்திக்கும் இடையூறுகளில் ஒன்று. வாழ்க்கையில் இது போன்ற அனுபவங்கள் இன்னும் அதிகமாக இருக்கும் என்பதை மாணவர்களின் பெற்றோர்கள் தங்களது பிள்ளைகளுக்கு கூறி அவர்களை பலப்படுத்த வேண்டும்.மேலும், புலமைப்பரிசில் பரீட்சை காலத்தில் மாணவர்கள் இழந்த தங்களது குழந்தைப் பருவத்தை மீண்டும் அவர்களுக்கு வழங்குங்கள் என குறிப்பிட்டுள்ளார்.000
- 784
கிளிநொச்சி மாவட்டத்தில் ஜனாதிபதி தேர்தலுக்கான ஏற்பாடுகள் பூர்த்தி செய்யப்பட்டுள்ளதுடன் இதுவரை 10 தேர்தல் விதிமுறை மீறல்கள் தொடர்பான முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்று இருப்பதாக மாவட்ட அரசாங்க அதிபர் எஸ் முரளிதரன் தெரிவித்துள்ளார்.இன்று (14.09.2024) கிளிநொச்சி மாவட்ட செயலகத்தில் நடைபெற்ற ஊடக சந்திப்பிலேயே அவர் மேற்கண்டாவாறு குறிப்பிட்டுள்ளார்.தொடர்ந்து குறிப்பிடுகையில், “கிளிநொச்சி மாவட்டத்தில் ஒரு லட்சத்து தொள்ளாயிரத்து ஏழு வாக்காளர்கள் வாக்களிக்க தகுதி உடையவர்களாக உள்ளனர்.கிளிநொச்சி மாவட்டத்தில் 108 வாக்களிப்பு நிலையங்களும் எட்டு வாக்கெண்ணும் நிலையங்களும் ஏற்பாடு செய்யப்பட்டிருக்கின்றதுஇதுவரை தேர்தல் தொடர்பான பத்து முறைப்பாடு முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றிருக்கின்றன. இதில் ஆறு முறைப்பாடுகள் சிறிய அளவிலான முறைப்பாடுகளும் நான்கு முறைப்பாடுகள் சாதாரண முறைப்பாடுகளாகவும் காணப்படுகின்றன.அதே நேரம் தேசிய அடையாள அட்டை இல்லாதவர்களுக்கு தற்காலிக அடையாள அட்டைகளை வழங்குவதற்கான செயற்பாடுகள் கிராம அலுவலர்கள் ஊடாக முன்னெடுக்கப்பட்டுள்ளது” என்றும் அரசாங்க அதிபர் எஸ் முரளிதரன் குறிப்பிட்டுள்ளார்000
- 787
தமிழ் மக்களது பிரச்சினைகளுக்கு நிரந்தர தீர்வை காணும் நடைமுறைச் சாத்தியமான வழிமுறையை எவ்வாறு பெற்றுக் கொள்ளவேண்டும் என்பதை தீர்மானிக்கும் உரிமை எமக்கானது மாறாக உத்தரவு போடுவதற்கு இங்கு எமக்கு எவரும் எஜமானர்கள் இல்லை என தெரிவித்த அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அங்கொரு ஒரு முகத்தையும், இங்கொரு முகத்தையும் காட்டுபவர்கள் இல்லை என்று தெரிவித்துள்ளார்.ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் ஏற்பாட்டில் ஜனாதிபதி வேட்பாளர் ரணில் விக்ரமசிங்கவின் வெற்றியை உறுதிசெய்யும் வகையில் யாழ்ப்பாணத்தில் இன்றையதினம் ஏற்பாடு செய்யப்பட்ட மாபெரும் பிரசார கூட்டம் பல்லாயிரக்கணக்கான மக்களின் எழுச்சியுடன் நடைபெற்றது.யாழ்ப்பாணம் நாவாந்துறை சென் மேரிஸ் பிளையாட்டு மைதானத்தில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் தலைமையில் குறித்த பிரசாரக் கூட்டம் நடைபெற்றது.யாழ் மாவட்டத்தின் அனைத்து பிரதேசங்களிலும் இருந்தும் அணிதிரண்ட பல ஆயிரக்கணக்கான மக்கள் ரணில் விக்கிரமசிங்கவுக்கு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா வழங்கியுள்ள ஆதரவை வலுப்படுத்தும் வகையில் தமது ஆதரவை வழங்கியிருந்தனர். இதன்போது உரையாற்றுகையி லயே அவர் இவ்வாறு தெரிவித்திருந்தார்.குறித்த கூட்டத்தில் அவர் மேலும் கூறுகையில் - எமது மக்களின் அரசியல், அபிவிருத்தி, அன்றாடப் பிரச்சினைகளுக்கு தீர்வை தரக்கூடிய ஒரு தலைவராக ரணில் விக்ரமசிங்கவே இருந்துவருகின்றனர் இதேநேரம் தேசிய நல்லிணக்க வழிமுறையு{டாக நடைமுறைச் சாத்தியமான தீர்வை எவ்வாறு பெற்றுக் கொள்ளவேண்டும் என்பதை நாமே தீர்மானிக்க வேண்டும்.தமிழ் மக்களுக்கான அரசியல் பிரச்சினைக்புரிய தீர்வுக்கு ஆரம்பம் எவ்வாறானதாக இருக்கமுடியும் என்று தொடர்ச்சியாக நாம் கூறிவருவதை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தனது தேர்தல் விஞ்ஞாபனத்தில் சாதகமாக வெளிப்படுத்தியுள்ளார் குறிப்பாக தமிழ் மக்களின் பிரதேசங்களை அபிவிருத்தியால் கட்டியெழுப்பவும் வாழும் மக்களின் பொருளாதாரத்தை மேம்படுத்தவும் சிறந்த பொறிமுறைகளை ஜனாதிபதி ரணில் தனது விஞ்ஞாபனத்தில் உள்வாங்கியிருக்கின்றார். இதேநேரம் அதலபாதாளத்தில் வீழ்ந்துகிடந்த நாட்டுக்கும் தத்தளித்துக்கொண்டிருந்த மக்களுக்கும் ஆபத்பாண்டவர்பொன்று வந்து மீட்சியை கொடுத்துள்ளார்குறிப்பாக மறைபொறுமானத்தில் கிடந்த நாட்டின் பொருளாதாரத்தை கடந்த இரண்டு வருடங்களில் தனது ஆற்றல்மிக்க தலைமைத்துவத்தினூடாக தூக்கி நிறுத்தியிருக்கின்றார். இவ்வாறான நிலையில் அந்த மயற்சிகளை தொடர்ந்தும் முன்னெடுத்துச் செல்ல அவருக்கு மேலும் ஒரு சந்தர்ப்பத்தை நாட்டு மக்கள் ஒன்றிணைந்து வழங்க வேண்டும் என கோருகின்றேன்.இதேநேரம் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் ஆற்றலையும் ஆழுமையையும் அருகில் இருந்து பார்த்துவரும் வகையில் இருப்பதை பாதுகாத்துக்கொண்டு நாட்டை முன்னோக்கிக் கொண்டு செல்வதற்கு அவரே தலைமை வகிக்க வேண்டும் என அவரது எரிவாயு சிலிண்டர் சின்னமே உங்கள் ஒவ்வொருவரது தெரிவாகவும் இருக்க வேண்டும். அதனூடாக அந்த வெற்றியில் தமிழ் மக்களும் முழுமையான பங்காளிகளாக இருக்க வேண்டும் என்பதை நான் உங்களிடம் வலியுறுத்துகின்றேன். இதேநேரம் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மக்களுக்கு கொடுக்கும் வாக்குறுதிகளுக்கும் நான் உங்கள் முன்னால் கூறியவற்றுக்கும் நாமே பொறுப்பாகவும் இருப்போம் என சுட்டிக்காட்டிய அமைச்சர் அரசியலுக்காகவோ அல்லது வாக்குக்காகவோ எதையும் நான் பேசுவதில்லை. உங்களதும் நாட்டினதும் எதிர்காலத்தை ஒளிமயமாக்கும் வேலைத் திட்டங்களை அவர் செய்து காட்டியுள்ளார். இதேநேரம் மக்கள் நலன் சார்ந்தே எனது அனைத்து செற்பாடுகள் அமையும். அதனடிப்படையில் தமிழ் மக்களது பிரச்சினைகளுக்கு தீர்வுகாணப்பட வேண்டும் என்பதில் நான் உறுதியாக இருக்கின்றேன்.அந்த வகையில் எதிர்வரும் 21 ஆம் திகதியன்று உங்கள் ஒவ்வொரு வாக்கினூடாக எரிவாயு சிலிண்டர் சின்னத்தை வலுப்படுத்தி அந்த சந்தர்ப்பத்தை ரணில் விக்ரமசிங்கவுக்கு கொடுப்பதன் ஊடாகவும் அவரோடு நாம் ஒவ்வொருவரும் சேர்ந்து பயணிப்பதன் ஊடாகவும் எமது மக்கள் எதிர்கொள்ளுகின்ற பிரச்சினைகளில் இருந்து விடுதலைபெற முடியும் எனவும் அவர் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.000
- 807
சர்வதேச விண்வெளி நிலையத்தில் (ISS) சிக்கியுள்ள நாசா விண்வெளி வீரர்களான சுனிதா வில்லியம்ஸ் மற்றும் புட்ச் வில்மோர் ஆகியோர் இன்று இந்திய நேரப்படி இரவு 11:45 மணிக்கு விண்வெளியில் இருந்து நேரடி ஊடகவியலாளர் சந்திப்பில் பங்கேற்கவுள்ளனர்.குறித்த ஊடகவியலாளர் சந்திப்பானது நாசா+, நாசா செயலி மற்றும் நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் நேரடியாக ஒளிபரப்பு செய்யப்படும் எனத் தெரிவிக்கப்படுகின்றது.இதன்போது, சுனிதா வில்லியம்ஸ் மற்றும் புட்ச் வில்மோர் ஆகியோர் தங்கள் நீட்டிக்கப்பட்ட பணியின் நுண்ணறிவு மற்றும் அனுபவங்களைப் பகிர்ந்து கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.வில்லியம்ஸ் மற்றும் வில்மோர் ஜூன் 5 ஆம் திகதி போயிங்கின் ஸ்டார்லைனர் விண்கலத்தில் பூமியிலிருந்து புறப்பட்டனர். அவர்கள் பயணித்த விண்கலமானது ஜூன் 6 ஆம் திகதி சர்வதேச விண்வெளி நிலையத்தை அடைந்தது.இருப்பினும், விண்கலத்தில் ஏற்பட்ட பிரச்சினைகள் காரணமாக அவர்கள் சர்வதேச விண்வெளி நிலையத்தில் தங்கியிருப்பது எதிர்பாராதவிதமாக நீட்டிக்கப்பட்டது.எட்டு நாட்கள் பணிக்காக சென்ற அவர்கள், தற்சமயம் மூன்று மாதங்களாக அங்கு தங்கியுள்ளனர்.பாதுகாப்புக் காரணங்களுக்காக விண்வெளி வீரர்கள் திரும்புவது 2025 பெப்ரவரி வரை தாமதமாகும் என்று நாசா அண்மையில் உறுதி செய்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.
- 1468
கனடாவின் முன்னணி விமான சேவை நிறுவனமான எயார் கனடா நிறுவனம் தொழிற்சங்க பிணக்கு தொடர்பில் அரசாங்கத்தின் உதவியை நாடியுள்ளது.விமான சேவை நிறுவனத்தின் விமானிகள் தொழிற்சங்க போராட்டத்தை முன்னெடுக்க திட்டமிட்டுள்ளனர். பல்வேறு கோரிக்கைகளை முன் வைத்து விமானிகள் எயார் கனடா நிறுவனத்துடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.தங்களது கோரிக்கைகள் நிறைவேற்றப்படாவிட்டால் பணிப் புறக்கணிப்பு போராட்டம் முன்னெடுக்க நேரிடும் என எச்சரிக்கை விடுத்துள்ளனர். எனவே இரண்டு தரப்புகளுக்கும் இடையில் அரசாங்கம் மத்தியஸ்தம் வகித்து பிணக்குகளை தீர்க்க உதவ வேண்டும் என எயார் கனடா கோரிக்கை விடுத்துள்ளது. இந்த பிரச்சனையை இரு தரப்புக்களும் தீர்த்துக் கொள்ள வேண்டும் என அரசாங்கம் தெரிவித்துள்ளது. தொழிற்சங்கப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டால் நாள் ஒன்றுக்கு சுமார் ஒரு லட்சத்து பத்தாயிரம் பயணிகள் பாதிக்கப்படுவர் என எயார் கனடா விமான சேவை நிறுவனம் தெரிவித்துள்ளது.எனவே அரசாங்கம் இந்த விவகாரத்தில் தலையீடு செய்து தீர்வுகளை பெற்றுக் கொடுக்க வேண்டும் என எயார் கனடா நிறுவனத்தின் உயர் அதிகாரிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.விமானிகள் நியாயமற்ற வகையில் சம்பள அதிகரிப்பு கோரிக்கையை முன்வைத்து வருவதாக விமான சேவை நிறுவனம் தெரிவித்துள்ளது. எயார் கனடா விமான சேவையில் சுமார் 5200 விமானிகள் பணியாற்றி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
- 1641