Ads

புளியம்பொக்கனை நாகதம்பிரான் ஆலயம்

புளியம்பொக்கனை நாகதம்பிரான்  ஆலய வருடாந்த பங்குனி உத்தர பொங்கல் விழா

0 0 0 0 0 0
 • 344
 • 195
 • 195
 • 189
 • 186
 • 185
 • 189
 • 187
 • 179
 • 189
 • 167
Comments (0)
Author
 ·   · 15 albums
 •  · 16 friends
 •  · 16 followers
Info
Created:
Updated:
Recent Images
 • 100
 • 95
 • 109
 • 105
 • 104
 • 167
 • 175
 • 176
 • 172
 • 183
 • 170
 • 177
 • 183
 • 191
 • 183
 • 168
 • 184
 • 172
 • 179
 • 167
 • 189
 • 179
 • 187
 • 189
**வடமராட்சி கரணவாய் வடமேற்கு உட்பட்ட வீதியின் நீர்வாய்க்கால் ஒன்று மீள்வேலை செய்யப்படுகிறது.**
 • 15
 • 15
Added a news 
ஒமைக்ரான் தொற்று பரவிய நிலையில், தென்ஆப்பிரிக்காவுடனான விமான போக்குவரத்துக்கு பல்வேறு நாடுகள் தடை விதித்துள்ளன. இந்தநிலையில், ஜெனீவாவில் நேற்று நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில் உலக சுகாதார அமைப்பின் தலைவர் டெட்ரோஸ் ஆதனோம் ஜிப்ரியசஸ் பேசுகையில் கண்டனம் தெரிவித்துள்ளார். தடுப்பூசி போடுவதில் நாடுகளிடையே ஏற்றத்தாழ்வு நிலவும்போது, கொரோனா வைரஸ் உருமாற்றம் அடைய வாய்ப்புள்ளது என்று பலதடவை கூறியுள்ளோம். இதை யாரும் தடுக்கவோ, கணிக்கவோ முடியாது. அதுதான் ஒமைக்ரானாக வந்துள்ளது.ஒமைக்ரான் வைரசை விரைவாக கண்டுபிடித்ததற்கு தென்ஆப்பிரிக்காவுக்கும், போட்ஸ்வானாவுக்கும் நன்றி. ஆனால், சில நாடுகள் தென்ஆப்பிரிக்காவுடனான நேரடி விமான போக்குவரத்தை நிறுத்தியது எனக்கு மிகுந்த ஏமாற்றம் அளிக்கிறது என்றும் அவர் பேசினார்.
 • 37
Added a news 
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வேலைக்கு ஆட்கள் தேர்வு நடப்பதாகவும், எவ்வளவு வேலை காலியாக உள்ளது என்றும் வேலைக்கு ஏற்ற சம்பளம் உள்ளிட்ட விவரங்கள் அடங்கிய துண்டு பிரசுரம் சமூக வலைதளத்தில் வெளியிடப்பட்டு இருந்தது. இது, போலியானது, என திருமலை-திருப்பதி தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.இதுகுறித்து தேவஸ்தானம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-திருமலை-திருப்பதி தேவஸ்தானத்தில் வேலை வாய்ப்புகள் இருப்பதாக சமூக வலைதளங்களில் சிலர் வெளியிடும் உண்மைக்குப் புறம்பான அறிக்கையை நம்பி ஏமாற வேண்டாம். கடந்த காலங்களில், தேவஸ்தானத்தில் வேலை வாங்கி தருவதாக சிலர் மோசடி செய்து, சில அப்பாவிகளிடம் இருந்து பணம் வசூலித்த சம்பவங்கள் நடந்துள்ளன. அத்தகைய நபர்கள் மீது கிரிமினல் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.வேலை வாய்ப்பு தொடர்பாக தேவஸ்தான இணையதளத்தில் அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு வெளியிடப்படும். கடந்த காலங்களில் இதுபோன்ற விஷயங்களில் பொதுமக்களுக்கு தெளிவான விளக்கத்தை அளித்துள்ளோம். பொதுமக்கள் விழிப்புடன் இருக்க வேண்டும். வேலை வாங்கி தருவதாக வெளியிடப்படும் போலி விளம்பரங்களை யாரும் நம்ப வேண்டாம். இதுபோன்ற உண்மைக்குப் புறம்பான பிரசாரத்தை செய்பவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அதில் கூறப்பட்டுள்ளது.
 • 43
Added a news 
தென் ஆப்பிரிக்காவில் கண்டறியப்பட்டுள்ள புது வகையான கொரோனா வைரசான ஒமைக்ரான் தற்போது உலகை அச்சுறுத்தி வருகிறது. இந்த புதிய வகை வைரஸ் பரவும் நாடுகளில் இருந்து வரும் பயணிகளுக்கு உலகம் முழுவதும் பல்வேறு கட்டுப்பாடு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.இந்நிலையில், ஆக்ஸ்ஃபோர்டு - ஆஸ்ட்ராசெனகா தடுப்பூசியை உருவாக்கியவர்களில் ஒருவரான பேராசிரியர் டேம் சாரா கில்பெர்ட், பெருந்தொற்றுகள் குறித்து உலக நாடுகளுக்கு எச்சரித்துள்ளார். இது குறித்து அவர் கூறியதாவது:-ஒரு வைரஸ் நம் உயிரையும் வாழ்வாதாரத்தையும் அச்சுறுத்துவது இது கடைசியாக இருக்காது. உண்மை என்னவென்றால், அடுத்து வருவது இன்னும் மோசமானதாக இருக்கலாம். அது அதிகம் பரவக்கூடியதாகவோ அல்லது கொடியதாகவோ அல்லது இரண்டுமாகவோ இருக்கக்கூடும்.நாம் அடைந்திருக்கும் பொருளாதார இழப்புகள், தொற்றைத் தடுப்பதற்கான நிதி இல்லை என்பதை உணர்த்துகிறது. பெருந்தொற்றால் ஏற்படும் இழப்புகளைத் தடுக்க, அதிக நிதி தேவைப்படும். ஒமைக்ரான் கொரோனா திரிபுக்கு எதிராக தடுப்பூசிகள் குறைந்த செயல்திறன் கொண்டதாகவே இருக்கும். அதுவரை கவனத்துடன் இருப்பதோடு புதிய கிருமிப்பரவலின் வீரியத்தைக் குறைக்கும் நடவடிக்கைகள் நாம் மேற்கொள்ளப்பட வேண்டும் என்றும் அவர் கூறினார்.
 • 44
Added a news 
ஜம்மு காஷ்மீர் முன்னாள் முதல் மந்திரியும், மக்கள் ஜனநாயக கட்சித் தலைவருமான மெகபூபா முப்தி, டெல்லி ஜந்தர் மந்தரில் நேற்று தர்ணா போராட்டம் நடத்தினார்.காஷ்மீர் மக்கள் மீதான அடக்குமுறையையும், அப்பாவி மக்கள் ரத்தம் சிந்துவதையும் உடனடியாக தடுக்க வலியுறுத்தி இந்த போராட்டத்தை நடத்துவதாக மெகபூபா தெரிவித்தார்.‘காஷ்மீர் வலியில் இருக்கிறது’ என்ற வாசகம் கொண்ட அட்டையை கையில் ஏந்தியிருந்த மெகபூபா, தான் காஷ்மீரில் போராட்டம் நடத்த அனுமதிக்கப்படுவதில்லை. எனவேதான் நாட்டின் தலைநகரில் தர்ணா மேற்கொள்ள முடிவெடுத்ததாக கூறினார். அப்போது, புகைப்படம் எடுப்பதற்காக முககவசத்தை அகற்றும்படி பத்திரிகை புகைப்படக்காரர்கள் சிலர் மெகபூபா முப்தியிடம் வேண்டுகோள் விடுத்தனர். உடனே அவர் புன்னகையுடன், ‘நான் முககவசத்தை அகற்றினால், உடனே என் மீது சட்டவிரோத செயல்பாடுகள் தடுப்புச்சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்துவிடுவார்கள்’ என்றார்.
 • 45
Added a news 
கொரோனாவால் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு ரூ.50 ஆயிரம் வழங்க தமிழக அரசு உத்தரவிட்டு அரசாணை வெளியிட்டுள்ளது. மாநில பேரிட நிதியில் இருந்து உடனடி நிவாரணம் வழங்க தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.கொரோனா தொற்று இரண்டாவது அலை பரவல் குறைந்து வரும் நிலையில், தென்னாப்பிரிக்காவில் உருவான ஒமிக்ரோன் தொற்று மீண்டும் பரவத் தொடங்கியுள்ளது.கொரோனாவால் பாதிக்கப்பட்டு வரும் நிலையில் உயிரிழப்புகளும் ஏற்படுகிறது. தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 10 பேர் உயிரிழந்தனர். இதனால் இதுவரை மொத்தமாக உயிரிழந்தோரின் எண்ணிக்கை 36,539 ஆக அதிகரித்துள்ளது.மாநில பேரிடர் நிதியிலிருந்து உடனடியாக கொரோனா நிவாரணம் வழங்க அரசு அறிவுறுத்தியுள்ளது.
 • 44
Added a news 
மூடப்பட்டுள்ள ´சபுகஸ்கந்த எரிபொருள்´ சுத்திகரிப்பு பணிகள் இன்று (7) செவ்வாய்க்கிழமை தொடக்கம் மீண்டும் ஆரம்பமாகும். களஞ்சியப்படுத்தப்பட்ட மசகு எண்ணெய் நிறைவடைந்ததால் கடந்த மாதம் 15 ஆம் திகதி முதல் இந்த சுத்திகரிப்பு நிலையம் தற்காலிகமாக மூடப்பட்டிருந்தது.எதிர்வரும் 2 வாரங்களில் 90 ஆயிரம் மெற்றிக் தொன் மசகு எண்ணெயை ஏற்றிக் கொண்டு ஒரு கப்பல் இலங்கையை வந்தடையவுள்ளது.ஜனவரி மாத நடுப்பகுதியிலும், எரிபொருளை ஏற்றிக் கொண்டு மற்றுமொரு கப்பல் கொழும்பு துறைமுகத்தை வந்தடையவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
 • 46
Good Morning...
 • 45
Added a news 
நேற்று மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் நினைவுநாளையொட்டி அவரது நினைவிடத்தில் அதிமுக கட்சியை சேர்ந்த எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம், ஜெயக்குமார் உள்ளிட்ட பல அதிமுக பிரமுகர்கள் மலர் தூவி மரியாதை செய்தனர். தொடர்ந்து அமமுக பொது செயலாளர் டிடிவி தினகரனும் அங்கு வர இருந்ததால் அமமுகவினரும் குவிந்திருந்தனர்.மரியாதை செலுத்தி முடித்து எடப்பாடி பழனிசாமி புறப்பட்ட நேரத்தில் அதிமுக – அமமுகவினரிடையே தகராறு எழுந்ததாக கூறப்படுகிறது. அப்போது அடையாளம் தெரியாத நபர் செருப்பை எடப்பாடி பழனிசாமி கார் மீது வீசியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுதொடர்பாக அமமுகவினர் 100க்கும் மேற்பட்டோர் மீது அண்ணா சதுக்கம் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
 • 91
Added article 
பிக்பாஸ் நிகழ்ச்சியை நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வந்தார். சில நாட்களுக்கு முன்பு கமல்ஹாசன் கொரோனா வைரஸ் பாதிப்பால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை மேற்கொண்டார். இதனால் பிக்பாஸ் நிகழ்ச்சியை கமல் தொகுத்து வழங்கமுடியாத நிலை ஏற்பட்டது.கமலுக்குப் பதிலாக பிக்பாஸ் நிகழ்ச்சியை கடந்த வாரம் ரம்யா கிருஷ்ணன் தொகுத்து வழங்கினார். பூரண நலம் பெற்ற கமல்ஹாசன் 4-ந் தேதி மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார். மருத்துவ மனையிலிருந்து புறப்பட்டு நேராக பிக்பாஸ் படப்பிடிப்பு நடக்கும் ஈவிபி அரங்கத்திற்கு சென்று படப்பிடிப்பில் கலந்து கொண்டார்.இந்நிலையில், சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன், மருத்துவமனையில் இருந்து கொரோனா விதிமுறைகளை மீறி நேராக படப்பிடிப்புச் சென்றது தொடர்பாக கமலுக்கு தமிழக மருத்துவத்துறை விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பபடும் என்று கூறியிருக்கிறார்.
 • 90
Added article 
தர்மதுரை திரைப்படத்திற்குப் பிறகு டைரக்டர் சீனு ராமசாமி இயக்கத்தில் விஜய் சேதுபதி நடித்துள்ள திரைப்படம் 'மாமனிதன்'. இந்த திரைப்படத்தை யுஎஸ்ஆர் பிலிம்ஸ் சார்பாக யுவன் சங்கர் ராஜா தயாரித்துள்ளார். மேலும், இந்தப் படத்திற்கு இளையராஜா மற்றும் யுவன் சங்கர் ராஜா இருவரும் இணைந்து இசையமைத்துள்ளனர். எம். சுகுமார் இந்த படத்திற்கு ஒளிப்பதிவு செய்துள்ளார்.இந்தப் படத்தின் பணிகள் முடிந்து நீண்ட நாட்களாகியும் படத்தின் வெளியீடு தள்ளிக்கொண்டே போனது. இந்த நிலையில் 'மாமனிதன்' திரைப்படத்தின் டீசர் இன்று வெளியாகியுள்ளது. டீசர் வெளியாகியுள்ள நிலையில் படம் விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
 • 90
Added a news 
கிராமப்புற குறைந்த வருமானம் ஈட்டுவோரின் வீட்டுப் பிரச்சினைகளை தீர்க்கும் வகையில் ´உங்களுக்கு ஒரு வீடு - நாட்டிற்கு எதிர்காலம்´ வேலைத் திட்டத்தின் கீழ் 2024 ஆம் ஆண்டளவில் 71,110 வீடுகளை நிர்மாணிப்பதற்கு எதிர்பார்த்துள்ளதாக நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சரும் பிரதமருமான மஹிந்த ராஜபக்ஷ இன்று (06) முற்பகல் தெரிவித்தார்.2022ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்திற்கான நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சின் செலவின தலைப்பு விவாதத்தை ஆரம்பித்து வைத்து உரையாற்றும் போதே கௌரவ பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ இவ்வாறு குறிப்பிட்டார்.பிரதமர் ஆற்றிய முழுமையான உரை வருமாறு, நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சின் கீழ் 4 இராஜாங்க அமைச்சுக்கள் செயற்படுகின்றன.நாம் இதுவரை 21 நகர அபிவிருத்தி திட்டங்களை நிறைவுசெய்துள்ளோம். மேலும் 52 நகர திட்டங்கள் நிறைவடையும் தருணத்தில் உள்ளன. அத்துடன் 2024 ஆம் ஆண்டளவில் மேலும் 136 நகர அபிவிருத்தி திட்டங்களை மேற்கொள்வதற்கு எதிர்பார்க்கிறோம்.பின்தங்கிய நகரங்களின் மேம்பாடு மற்றும் அழகுபடுத்தும் நோக்கில் ஆரம்பிக்கப்பட்ட ´நூறு நகரங்கள்´ திட்டத்தின் கீழ் 117 நகரங்கள் அழகுபடுத்துவதற்காக தெரிவு செய்யப்பட்டுள்ளன. இந்தத் திட்டத்தின் கீழ் 2022 ஆம் ஆண்டுக்குள் மேலும் 100 நகரங்களை மேம்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.நகர்ப்புற போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வாக 12 வாகன நிறுத்தங்களை நிர்மாணிக்கும் திட்டங்களும் திட்டமிடப்பட்டுள்ளன.சுபீட்சத்தின் நோக்கு கொள்கை திட்டத்திற்கமைய ஒவ்வொரு குடும்பத்திற்கும் சகல வசதிகளுடன் கூடிய வீடொன்றை பெற்றுக்கொடுப்பதே அரசாங்கத்தின் நோக்கமாகும். இதன் கீழ் நகர, கிராம, தோட்ட மற்றும் இடம்பெயர்ந்த மக்களை மீள்குடியேற்றுவதற்கும் வீடுகள் நிர்மாணிக்கப்படும்.உலகளாவிய கொவிட்-19 தொற்று நிலைமைக்கு மத்தியில் முழு உலகமும் பின்தங்கிய நிலைக்கு தள்ளப்பட்ட போதிலும், நகர அபிவிருத்தி, வீடமைப்பு உள்ளிட்ட எமது அமைச்சின் விடயப்பரப்பிற்கு உரிய அபிவிருத்தி நடவடிக்கைகளை முன்னெடுக்க முடிந்தது என்று நம்புகின்றோம் என பிரதமர் தெரிவித்தார்.
 • 93
Added a news 
விளையாட்டு சங்கங்கள் ஊடாக எதிர்காலத்தில் 23 வயதுக்கு உட்பட்டோருக்கான போட்டியை நடத்த ஏற்பாடுகள் செய்யப்படும் என விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்தார்.கொவிட் தொற்று காரணமாக 19 வயதுக்குட்பட்ட பாடசாலை மட்டப் போட்டிகளில் இழந்தவர்களுக்கு இதனூடாக விசேட வாய்ப்பு வழங்கப்படும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.இன்று (6) தேசிய விளையாட்டு சபை கேட்போர் கூடத்தில் இடம்பெற்ற நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.  இதேவேளை, 23 வயதுக்குட்பட்ட ஒரு அணியை ஒவ்வொரு விளையாட்டிலும் அறிமுகப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
 • 91
Added a news 
இந்தியாவில் கொரோனா பாதிப்புகள் குறைந்து வந்த சூழலில், உருமாறிய புதிய வகை கொரோனாவான ஒமைக்ரான், தென் ஆப்பிரிக்காவில் முதன்முதலாக கடந்த 24-ந் தேதி கண்டறியப்பட்டது.  இந்த வைரஸ் 10 நாட்களில் 38-க்கும் மேற்பட்ட நாடுகளில் தடம் பதித்து உலகை அதிர வைத்து வருகிறது.ஒமைக்ரான் வைரஸ் தோன்றியுள்ள தகவல் வெளியானதும் இந்தியா எச்சரிக்கை அடைந்தது. இந்த தொற்றை தடுப்பதற்காக அனைத்து விமான நிலையங்களிலும் வெளிநாட்டு பயணிகள் வந்திறங்குவது தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகிறது. எனினும், இந்தியாவையும் ஒமைக்ரான் விட்டு வைக்கவில்லை. இந்தியாவில் நேற்று காலை வரை 5 பேருக்கு ஒமைக்ரான் பாதிப்பு உறுதி செய்யப்பட்டு இருந்தது.அவர்களில் கர்நாடகாவில் இருவருக்கும், குஜராத், டெல்லி மற்றும் மராட்டியத்தில் தலா ஒருவருக்கும் என மொத்தம் 5 பேருக்கு ஒமைக்ரான் பாதிப்பு உறுதி செய்யப்பட்டு இருந்தது.இந்த நிலையில், நேற்று மராட்டியத்தில் கூடுதலாக 7 பேருக்கு ஒமைக்ரான் பாதிப்பு ஏற்பட்டது.  இதனால், மராட்டியத்தில் மொத்தம் 8 பேருக்கு பாதிப்பு உறுதி செய்யப்பட்டு இருந்தது.ராஜஸ்தான் மாநிலத்தின் ஜெய்ப்பூர் நகரில் 9 பேருக்கு ஒமைக்ரான் வகை கொரோனா தொற்று நேற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் இந்தியாவில் ஒமைக்ரான் வகை கொரோனா தொற்று கண்டறியப்பட்டோர் எண்ணிக்கை 21 ஆக அதிகரித்தது. ராஜஸ்தானில் ஒமைக்ரான் பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்ட 9 பேரில் 4 பேர் ஒரே குடும்ப உறுப்பினர்கள் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.இந்த நிலையில், மராட்டியத்தில் கூடுதலாக 2 பேருக்கு ஒமைக்ரான் பாதிப்பு இன்று உறுதி செய்யப்பட்டு உள்ளது.  தென் ஆப்பிரிக்காவில் இருந்து வந்த 37 வயதுடைய நபர் மற்றும் அவருடைய நண்பரான, அமெரிக்காவில் இருந்து திரும்பிய 36 வயதுடைய நபர் என இரண்டு பேருக்கு பாதிப்புகள் கண்டறியப்பட்டு உள்ளன.  இதனால் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 10 ஆக உயர்வடைந்து உள்ளது.  இதேபோன்று, நாட்டில் மொத்த ஒமைக்ரான் பாதிப்பு 23 ஆக உயர்வடைந்து உள்ளது.
 • 93
"நீ யாராக இருந்தாலும் பரவாயில்லை..நீ எண்ணுவது விண்மீனாக இருந்தாலும் உன் உழைப்பால் நீ எண்ணியது உன்னை வந்து சேரும்.நீ நீயாக இரு".!*அப்துல் கலாம்*அருளியது.
 • 131
Added a news 
இலங்கை கால்நடை வைத்தியர்கள் சங்கத்தின் 73 ஆவது வருடாந்த மாநாடு மற்றும் பொதுச் சபை கூட்டம் கௌரவ பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் 04 ஆம் திகதி கொழும்பு ஷங்கிரிலா ஹோட்டலில் இடம்பெற்றது.கால்நடை வைத்தியர்கள் சங்கத்தின் முன்னேற்றத்திற்காக பாடுபட்ட சிரேஷ்ட கால்நடை மருத்துவர்களான எச்.பீ. பிரேமசிறி மற்றும் ஆர்.எம்.பீ.எச். தசநாயக்க ஆகியோருக்கு இதன்போது கௌரவ பிரதமரினால் சிறப்பு பாராட்டு விருது மற்றும் நினைவு பரிசுகள் வழங்கிவைக்கப்பட்டன.இலங்கை கால்நடை வைத்தியர்கள் சங்கத்தின் 73 ஆவது மாநாட்டின் தலைவர் கால்நடை வைத்தியர் எரந்திகா குணவர்தன அவர்களினால் வருடாந்த மாநாட்டிற்கு வருகை தந்த பிரதமர் உள்ளிட்ட விருந்தினர்கள் வரவேற்கப்பட்டனர்.இதன்போது இடம்பெற்ற பொதுச்சபை கூட்டத்தின் போது இலங்கை கால்நடை வைத்தியர்கள் சங்கத்தின் புதிய தலைவராக கால்நடை வைத்தியர் சுசந்த மல்லவஆராச்சி தெரிவு செய்யப்பட்டார்.
 • 141
Added a news 
சனிக்கிழமை இரவு ´கெசெல்வத்த பவாஸ்´ என்பவரின் கொலையுடன் தொடர்புடையவர்கள் என சந்தேகிக்கப்படும் 4 பேரை கொழும்பு குற்றத் தடுப்பு பிரிவினர் கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
 • 142
Added a news 
இந்திய-ரஷிய உச்சி மாநாடு டெல்லியில் இன்று (திங்கட்கிழமை) நடக்கிறது. இதில் பங்கேற்பதற்காக ரஷிய அதிபர் விளாடிமிர் புதின் பிற்பகலில் டெல்லி வருகிறார். விமான நிலையத்தில் இருந்து நேராக மாநாடு நடைபெறும் ஐதராபாத் இல்லத்துக்கு செல்கிறார். அங்கு அவரை பிரதமர் மோடி வரவேற்கிறார்.பின்னர் இரு தலைவர்களும், தங்கள் நாட்டு உயர்மட்ட குழுவினருடன் பரஸ்பரம் பேச்சுவார்த்தை நடத்துகின்றனர். இதில் இரு நாட்டு ராணுவ மற்றும் வெளியுறவு மந்திரிகளும் இடம்பெறுகின்றனர். இதைத்தொடர்ந்து மோடி-புதின் இடையேயான நேருக்கு நேர் சந்திப்பு நடைபெறுகிறது.இந்த உச்சி மாநாட்டுக்கு இறுதியில் இரு நாடுகளுக்கு இடையே 10 ஒப்பந்தங்கள் கையெழுத்திடப்படுகின்றன. மேலும் இந்த பேச்சுவார்த்தைகள், விவாதங்கள் மற்றும் புரிந்துணர்வு ஒப்பந்தங்களின் அடிப்படையில் கூட்டறிக்கை ஒன்றும் வெளியிடப்படும் என டெல்லி வட்டாரங்கள் தெரிவித்தன. இந்த மாநாடு நிறைவடைந்ததும் விளாடிமிர் புதின் நாடு திரும்புகிறார்.இந்த மாநாட்டுக்கு முன்னதாக இந்திய வெளியுறவு மந்திரி ஜெய்சங்கரும், ரஷிய வெளியுறவு மந்திரி செர்ஜெய் லவ்ரோவும் சந்திக்கிறார்கள். இதைப்போல இந்திய ராணுவ மந்திரி ராஜ்நாத் சிங் மற்றும் ரஷிய ராணுவ மந்திரி செர்ஜெய் ஷோய்குவும் சந்தித்து பேசுகின்றனர்.பின்னர் இந்த 4 மந்திரிகளும் பங்கேற்கும் 2+2 பேச்சுவார்த்தையும் நடைபெறுகிறது. இந்த சந்திப்புகளில் பரஸ்பர, பிராந்திய மற்றும் சர்வதேச அரசியல் மற்றும் பாதுகாப்பு அம்சங்கள் குறித்து இருநாட்டு மந்திரிகளும் பேச்சுவார்த்தை நடத்த இருப்பதாக வெளியுறவு அமைச்சகம் கூறியுள்ளது.
 • 143
உங்கள் சிந்தனைக்கு.....
 • 142
Good Morning...
 • 142
Added a news 
கிளிநொச்சி உமையாள்புரம் சோலை நகர் பகுதியில் மர்மப்பொருள் ஒன்றை பரிசோதித்தபோது அது  வெடித்ததில் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதுடன்  மேலும் 13 வயது சிறுவன் ஒருவன் படுகாயமடைந்த நிலையில் கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.கிளிநொச்சி உமையாள்புரம் சோலை நகர் பகுதியில் இன்று (05-12-2021 ) பிற்பகல் 3-30 மணியளவில் மர்மப் பொருள் ஒன்றை கிரைண்டர் ஒன்றினால் வெட்டியபோது குறித்த பொருள் வெடித்ததில் ஒருவர் உடல் சிதறி பலியாகியுள்ளதுடன் சம்பவத்தில் 13 வயதுடைய சிறுவன் ஒருவனும் படுகாயமடைந்த நிலையில் கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.இச்சம்பவத்தின் போது( சிவலிங்கம் யுவராஜ் வயது- 25) உயிரிழந்துள்ளதுடன் சிவலிங்கம் நிலக்சன் என்ற சிறுவன் படுகாயமடைந்த நிலையில் கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்இச் சம்பவம் தொடர்பில் கிளிநொச்சி பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.வெடிப்பு சம்பவம் இடம்பெற்ற வீட்டை சூழவுள்ள வீட்டின் சில பகுதிகளிலும் ஆபத்தான வெடிபொருட்கள் அடையாளம் காணப்பட்டுள்ள மை இங்கு குறிப்பிடத்தக்கது-
 • 168
Added a news 
சந்தேகத்துக்கிடமான முறையில் இளைஞர் ஒருவர் குறித்த பகுதியில் நடமாடுகின்றார் என்று முல்லைத்தீவு மாவட்ட போலீஸ் அத்தியட்சகர் கலும் C திலகரட்ன, மற்றும் உதவி போலீஸ் அத்தியட்சகர் வசந்த விதாரண, மற்றும் மல்லாவி போலீஸ் நிலைய பொறுப்பதிகாரி லக்மால் அம்பாலிகம , குற்றப்பிரிவு போலீஸ் உத்தியோகத்தர் யூட் அந்தோணி ஆகியோருக்கு கிடைக்கப்பட்ட ரகசிய தகவலை அடுத்து மல்லாவி போலீஸ் உத்தியோகத்தர்களான சபேசன் , நிர்மலன் , பகீரதன் , புஸ்பகுமார ஆகியோர் இணைந்த கைது நடவடிக்கையில் குறித்த சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.பளை பகுதியை சேர்ந்த குறித்த சந்தேக நபருக்கு யாழ் மாவட்டங்களில் இடம்பெற்ற பல்வேறு வாள்வெட்டு தாக்குதல்கள் உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுக்களின் அடிப்படையில் மூன்று நீதிமன்ற பிடியாணை வழங்கப்பட்டுள்ள நிலையில் நீதிமன்றத்தை அவமதித்தார் என்ற குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
 • 180
Added a news 
மன்னார் மாவட்ட மக்களின் நலனை கருத்தில் கொண்டும் மக்களை கொரோனா தொற்றிலிருந்து பாதுகாக்கும் வகையில் மட்டுப்படுத்தப்பட்ட அளவிலான கடை தொகுதிகளுடன் கடுமையான சுகாதார நடைமுறைகளுடன் பண்டிகைக்கால வியாபார நடவடிக்கைகளை முன்னெடுக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக மன்னார் நகர முதல்வர் ஞானப்பிரகாசம் அன்ரனி டேவிட்சன் தெரிவித்தார்.ஊடகங்களுக்கு மேலும் கருத்து தெரிவிக்கையில்,,,இவ் வருடம் நத்தார் புதுவருட பண்டிகைகளை முன்னிட்டு மன்னாரில் பண்டிகைக்கால வியாபார நடவடிக்கைகளை கடுமையான சுகாதார நடைமுறைகளுடன் முன்னெடுக்க மன்னார் நகர சபையால் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.நகர சபை வருமானத்தை ஈட்டும் நடவடிக்கையாக இதனை முன்னெடுக்கவில்லை. மக்களை கொரோனா தொற்றிலிருந்து பாதுகாக்கும் நோக்கோடு குறித்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.கடந்த 2 வருடங்களாக கொரோனா தொற்று காரணமாக மன்னார் நகர சபையினால் மன்னாரில் பண்டிகைக்கால வியாபார நடவடிக்கைக்கு அனுமதி வழங்கப்படவில்லை.எனினும் குறித்த காலப்பகுதியில் மக்களின் நடமாட்டம் அதிகரித்து காணப்பட்டது. நாங்கள் மக்களுக்கு பல வழிகளிலும் அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்ட போதும்,மக்கள் அதற்கு செவி சாய்க்கவில்லை.பஜார் பகுதி உள்ளடங்கலாக மக்களின் நடமாட்டம் அதிகரித்து காணப்பட்டது. ஒவ்வொரு வர்த்தக நிலையங்களிலும் அதி கூடிய மக்களே கூடி நின்றமை அவதானிக்கக்கூடியதாக இருந்தது.இதனால் கொரோனா தொற்று அதிகரிக்கும் சந்தர்ப்பம் இருந்தது.குறித்த விடயங்களை அவதானித்த நிலையில் இவ்வருடம் பண்டிகைக்கால வியாபார நடவடிக்கைகளுக்கு மட்டுப்படுத்தப்பட்ட அளவில் கடைத் தொகுதிகளை வழங்குவதன் ஊடாக மக்களின் நெரிசலை கட்டுப்படுத்த முடியும் என எதிர்பார்த்துள்ளோம்.கொரோனா தொற்றை கட்டுப்படுத்த ஏதுவாக இருக்கும் என்பதற்காக மன்னார் நகர சபை குறித்த தீர்மானத்தை நிறைவேற்றியது. நேற்றைய தினம் வெள்ளிக்கிழமை (3) காலை மன்னார் நகர சபையில் சுகாதார துறையினர்,பொலிஸார் மற்றும் மன்னார் நகர சபையின் தலைவர்,உப தலைவர், செயலாளர்,உறுப்பினர்கள் ஒன்றிணைந்து கலந்துரையாடல் மேற்கொள்ளப்பட்டது.குறித்த கலந்துரையாடலில் இறுக்கமான தீர்மானங்கள் எடுக்கப்பட்டது.வியாபார நடவடிக்கைகளுக்கு வருகின்ற வெளிமாவட்ட வியாபாரிகள் அனைவருக்கும் கொரோனா தடுப்பூசிகள் இரண்டும் பெற்றுக் கொண்டுள்ளதுடன் தடுப்பூசி அட்டை வைத்திருத்தல் வேண்டும்.குறித்த வியாபாரிகளுக்கு அன்டிஜன் பரிசோதனைகள் மேற்கொள்ளப்படும்.சுகாதார நடைமுறைகளைப் பின்பற்றி முகக்கவசம் அணிந்து வியாபார நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.குறித்த தீர்மானங்களையும்,சுகாதார நடைமுறைகளையும் கடை பிடிக்காத வர்த்தகர்களுக்கு எதிராக உடனடியாக பொலிஸார் மற்றும் சுகாதார துறையினர் உரிய சட்ட நடவடிக்கைகளை மேற்கொள்வார்கள் என்ற தீர்மானம் எடுக்கப்பட்டது.சுகாதார நடைமுறைகளைப் பின்பற்றி மக்களின் அதிகமாக நடமாட்டத்தை கட்டுப்படுத்தும் நோக்குடன் பண்டிகைக்கால வியாபார நடவடிக்கை மேற்கொள்ள நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.எதிர்வரும் 18ஆம் திகதி தொடக்கம் 31 ஆம் திகதி வரை பண்டிகைக்கால வியாபார நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும்.என அவர் மேலும் தெரிவித்தார்
 • 179
Added a news 
கிளிநொச்சி விஜயம் மேற்கொண்டிருந்த முன்னாள் அமைச்சர் சம்பிக்க ரணவக்க தமிழர் விடுதலைக்கூட்டணியின் செயலாளர் வீ.ஆனந்தசங்கரியை சந்தித்து கலந்துரையாடடியிருந்தார். குறித்த கலந்துரையாடல் இன்று காலை 11 மணியளவில் கிளிநொச்சியில் அமைந்துள்ள தமிழர் விடுதலைக்கூட்டணி அலுவகலத்தில் இடம்பெற்றது.இதன்போது சமகால அரசில் நிலைமைகள் தொடர்பில் கலந்துரையாடப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.
 • 185
Added a news 
தமிழ்த்தேசியக்கூட்டமைப்பு மக்கள் சக்தியுடன் எந்தவித பேச்சுவார்த்தையிலும் ஈடுபடவில்லை எனவும், பிரதேசவாதம் சாராது அனைத்து மக்களின் நலன்சார்ந்தே அனைவரும் செயற்படுகின்றோம் எனவும், சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார். கிளிநொச்சிக்கு விஜயம் மேற்கொண்டிருந்த அவர் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஊடகவியலாளர் சநித்திப்பின்போது வினவப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.இந்த பிரதேசம் யுத்த காலத்திலும், அதற்கு பின்னரான காலத்திலும் மிகவும் பாதிக்கப்பட்டு துன்பங்களை அனுபவித்த பிரதேசமாக இருக்கின்றது. 10 ஆண்டுகளிற்கு பினரும் இவர்களின் பிரச்சினைகளிற்கு தீர்வு பெற்றுக்கொடுக்க வேண்டும் என்ன நிலைப்பாடு இருக்கின்றது. உள்ளக வீதிகள் உள்ளிட்ட பிரச்சினைகளிற்கு முகம் கொடுத்த வரும் இவர்கள் விசேடமாக விவசாயிகள் உரம் தொடர்பகின்றனர்.அதேவேளை கொவிட்ட நிலை காரணமாக மிகவும் இவர்கள் பாதிக்கப்பட்டுள்ளார்கள். மிகவும் பாதிக்கப்பட்டுள்ள இவ்வாறான பிரதேசங்களை அடையாளம் கண்டு அவர்களிற்கு தீர்வுகளை பெற்றுக்கொடுக்க வேண்டி உள்ளது.இனம், மதம், சமயம் என்ன விரச்சினைகளிற்கு அப்பால், அனைத்து இல்ஙகை மக்களும் பல்வேறு பிரச்சினைகளை எதிர்கொள்கின்றனர். குறிப்பாக சொல்லப்Nபுhனால் காஸ், எரிபொருள் உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகளிற்கு நாட்டு மக்கள் முகம் கொடுக்கின்றனர்.இந்த நேரத்தில் அனை;தது மக்களும் ஒன்றாக வேண்டும். தமிழ் சிங்கள முஸ்லிம் மக்கள் அனைவரும் ஒன்றாக செயற்பட வேண்டும்.பாராளுமன்றத்தை அச்சுறுத்தும் வகையில் நடந்து கொள்கின்றனர் என்பதை மக்கள் உணர்ந்துகொள்ள வேண்டும். தமிழ் சிங்கள முஸ்லிம் மக்களும் இதனை புரிந்துகொள்ள வே;ணடும்தமிழ்த் தேசியக்கூட்டமைப்புடன் இதுவரை தமிழ் மக்களுடைய பிரச்சினைகள் தொடர்பில் எவ்வித பேச்சுக்களும் இடம்பெறவில்லை. ஆயினும், பாராளுமன்றில் சாதாரணமாக காணப்படும் பிரச்சினைகள் தொடர்பிலலும், ஒட்டுமொத்தமாக மக்களின் பிரச்சினைகள் தொடர்பில் பாராளுமன்றில் ஒன்றாக செயற்படுகின்றோம்.பிரதேசவாதங்களை களைந்து அனைத்து மக்களின் பிரச்சினைகள் தொடர்பில் நாங்கள் ஒன்றாக செயற்படுகின்Nறூம் என அவர் இதன்Nபுhது எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கும்போது தெரிவித்திருந்தார்்.
 • 185
Added a news 
யாழ்.உரும்பிராய் - மானிப்பாய் வீதியில் சைக்கிளில் சென்ற நபர் மீது ஹயஸ் வாகனம் மோதியதில் ஒருவர் பலியான நிலையில் முந்தைய நாள் இரவு மோதியதில் சம்பவ இடத்தில் குறித்த நபர் பலியானதாக தெரிவிக்கப்பட்டது.சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது, குறித்த வீதியால் சைக்கிளில் சென்று கொண்டிருந்த நபர் மீது ஹயஸ் வாகனம் மோதியதில் 42 வயது மதிக்கதக்க நபர் குறித்த இடத்திலேயே பலியானார். இதனையடுத்து வாகனத்தை துரத்தி சென்ற இளைஞர்கள் சாரதியை பிடித்து நையப்புடைத்த நிலையில் பெருமளவு பொதுமக்கள் கூடி பதற்றமான நிலையேற்பட்டது.இதனையடுத்து நிலைமையை கட்டுக்குள் கொண்டு வருவதற்காக பொலிஸார் வானத்தை நோக்கி வேட்டுக்களை தீர்த்துள்ளனர்.பின்னர் வாகன சாரதியை கைது செய்துள்ளதுடன் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டிருக்கின்றனர்.
 • 187
Added a news 
இழுவைமடி மீன்பிடித் தொழிலுக்கு எதிரான சட்டங்களை நடைமுறைப்படுத்தி நிலையான மீன்பிடித் தொழிலை உறுதிப்படுத்த கோரி இன்றையதினம் யாழ்ப்பாணத்தில் கையெழுத்து சேகரிக்கும்நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.தேசிய மீனவ ஒத்துழைப்பு இயங்கம் மற்றும் வட மாகாண கடற்றொழிலாளர் இணையும் ஆகியவற்றின் ஏற்பாட்டில் முன்னெடுக்கப்பட்ட இந்த மக்களிடம் கையெழுத்து சேகரிக்கும் நடவடிக்கை இன்றையதினம் யாழ்ப்பாண நகர பகுதியில் முன்னெடுக்கப்பட்டுள்ளது.மக்களிடம் பெற்றுக்கொள்ளப்படும் கையெழுத்துகளுடனான மகஜர் ஜனாதிபதி, சட்டமா அதிபர் மற்றும் கடற்றொழில் அமைச்சரிம் கையளிக்கப்படவுள்தாக தெரிவிக்கப்பட்டுள்து.ஏற்கனவே மன்னார், கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களில் கையெழுத்து சேகரிப்பு நடவடிக்கை இடம்பெற்ற நிலையில் இன்றையதினம் யாழ் நகர பகுதியில் முன்னெடுக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது
 • 184