Ads

எங்க ஊரு பழங்கள்

எங்க ஊரு பழங்கள்

0 0 0 0 0 0
  • 155
  • 49
  • 44
  • 47
  • 45
  • 46
  • 47
  • 43
Comments (0)
Author
 ·   · 14 albums
  •  · 12 friends
  •  · 12 followers
Info
Created:
Updated:
Recent Images
  • 32
  • 33
  • 32
  • 36
  • 32
  • 31
  • 36
  • 33
  • 30
  • 40
  • 35
  • 43
  • 40
  • 44
  • 38
  • 37
  • 36
  • 37
  • 48
  • 39
  • 39
  • 49
  • 41
  • 44
Added a news 
சென்னையை அடுத்த கேளம்பாக்கத்தில் செயல்பட்டு வரும் சுஷில் ஹரி பள்ளியின் நிறுவனர் சிவசங்கர் பாபா மீது அப்பள்ளியின் முன்னாள் மாணவிகள் சமூக வலைதளத்தில் பாலியல் புகார் தெரிவித்தனர்.இதனை தொடர்ந்து, மாநில குழந்தைகள் உரிமை பாதுகாப்பு ஆணையம் கடந்த 11 ஆம் தேதி சிவசங்கர் பாபா உள்ளிட்ட பள்ளி நிர்வாகிகள் 6 பேரும் நேரில் விசாரணைக்கு ஆஜராகுமாறு சம்மன் அனுப்பியது.இதனையடுத்து, சென்னையில் உள்ள குழந்தை உரிமைகள் பாதுகாப்பு ஆணையத்தில், சுஷில் ஹரி பள்ளி நிர்வாகிகள் நாகராஜன், வெங்கட்ராமன் உட்பட 3 பேர் நேரில் ஆஜராகினர். ஆனால், சிவசங்கர் பாபா உட்பட 3 பேர் ஆஜராகவில்லை. சிவசங்கர் பாபா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பதாக கூறி அவருக்கு பதிலாக வழக்கறிஞர் ஆஜராகினர்.இதனைத் தொடர்ந்து பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை அளித்ததாக வந்த புகாரில் கேளம்பாக்கம் போலீசார் சிவசங்கர் பாபா மீது போக்சோ உள்ளிட்ட 3 பிரிவுகளின் கீழ் நேற்று முன்தினம் வழக்குப்பதிவு செய்தனர். இந்த வழக்கு சி.பி.சி.ஐ.டி விசாரணைக்கு மாற்றப்பட்டது.இந்நிலையில், பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை அளித்த புகாரில் சிக்கியுள்ள சுஷில் ஹரி பள்ளி நிர்வாகி சிவசங்கர் பாபா உத்தரகாண்ட் மாநிலம் டேராடூனில் உள்ள ஒரு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக சிபிசிஐடி போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.இதனை தொடர்ந்து சிவசங்கர் பாபாவை கைது செய்ய தனிப்படை போலீசார் டேராடூன் விரைந்துள்ளனர். சிபிசிஐடி டிஎஸ்பி குணவர்மன் தலைமையிலான தனிப்படையினர் டேராடூன் விரைந்துள்ளனர்.
  • 29
Added a news 
கனடாவில் கொரோனா தொற்றினால், கடந்த 24 மணித்தியாலத்தில் ஆயிரத்து 157பேர் பாதிக்கப்பட்டதோடு 13பேர் உயிரிழந்துள்ளனர்.கனடாவில் இதுவரை மொத்தமாக 14இலட்சத்து மூவாயிரத்து 285பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும், 25ஆயிரத்து 944பேர் உயிரிழந்துள்ளனர்.கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ள 15ஆயிரத்து 954பேர் அங்குள்ள மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் 670பேரின் நிலை கவலைக்கிடமாக உள்ளது.இதுவரை கொரோனா தொற்றிலிருந்து 13இலட்சத்து 61ஆயிரத்து 387பேர் பூரண குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.
  • 29
Added a news 
கொவிட் மரணங்கள் அதிகரித்தாலும் தொற்றாளர்களின் எண்ணிக்கையில் குறிப்பிடத்தக்க வீழ்ச்சியை காணக்கூடியதாய் உள்ளதாக கொவிட் கட்டுப்பாட்டு இராஜாங்க அமைச்சர் விசேட வைத்திய நிபுணர் சுதர்ஷனி பெர்ணான்டோ புள்ளே தெரிவித்துள்ளார்.ராகம போதனா வைத்தியசாலையில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போது அமைச்சர் இதனை தெரிவித்தார்.பயணக் கட்டுப்பாட்டை அரங்சாங்கம் தற்போது நீட்டித்துள்ளது. மருத்துவ பார்வையில் இது மிகவும் நல்லது. எனினும் நாட்டு மக்களுக்கு அசௌகரியும் உள்ளது. தற்போது நோயாளர்கள் குறைவடைந்து வருகின்றனர். மரணங்கள் குறைவடைய இன்னும் இரண்டு மூன்று வாரங்கள் செல்லும். உருமாறிய புதிய வைரஸ் காரணமாக தொற்று ஏற்பட்டு 10 நாட்களுக்குள் மரணம் ஏற்படுவதாக அமைச்சர் தெரிவித்தார்.
  • 30
Added article 
சிம்பு மற்றும் ஹன்சிகா நடிப்பில் உருவாகியுள்ள படம் மஹா. இப்படத்தை உபைத் ரஹ்மான் ஜமீல் இயக்கியுள்ளார். இப்படதில் தனது கதையை வைத்துதனக்கே தெரியாமல் இப்படத்தை முடித்து ஓடிடியில் வெளியிட உள்ளதாகவும் இதற்குத் தடை விதிக்க வேண்டுமென சென்னை உயர் நீதிமன்றத்தில் இயக்குநர் ஜமீல் வழக்கு தொடர்ந்திருந்தார்.இப்படத்தில் தனக்கு ஊதியமாக தர ஒப்புக்கொண்ட ரூ 24 லட்சத்தில் வெறும் 8 லட்சத்து 15 ஆயிரம்தான் தந்துள்ளனர். மீதிப்பணத்தை தர உத்தரவேண்டுமெனவும், இப்படத்தை என்னை எடுக்க விடாமல் செய்ததற்காக ரூ. 10 லட்சம் இழப்பீடு தர உத்தரவிடவேண்டுமென ஜமீல் தனது மனுவில் கூறியிருந்தார்.இயக்குநர் ஜமீலுக்கு சம்பள பாக்கியில் ரூ.5 லட்சத்து 50 ஆயிரம் வழங்கத் தயாராக உள்ளதாக தயாரிப்பு நிறுவனம் கூறியதை அடுத்து ஜமீல் அதை ஏற்றுக் கொண்டதாகவும் கூறப்பட்டது. இயக்குநர் சங்கத்தில் இதுகுறித்து நடைபெற்ற பேச்சுவார்த்தையில் இருதரப்பினருக்கும் இடையே உடன்பாடு எட்டப்பட்டு ஓடிடி தளத்தில் இப்படத்தை வெளியிடுவதற்கான நடவடிக்கைகளை எடுத்துவருவதாக கூறப்பட்டது. இப்படத்தை வெளியிட இடைக்கால தடைவிதிக்கக் கூறிய மனுவை தள்ளுபடி செய்து நீதிபதி ஜெயசந்திரன் உத்தரவிட்டார். இந்த வழக்கு விசாரணையை வரும் ஜூன் 28 ஆம்தேதி தள்ளி வைத்து அன்று இரு தரப்பினரும் எழுத்து பூர்வமான உத்தரவாதம் தாக்கல் செய்யவேண்டுமென உத்தரவிட்டுள்ளார்.
  • 28
Added article 
சினிமா வாய்ப்புக்காக சில நடிகைகள் தங்களின் உடல் கவர்ச்சியை காட்டி, அதனை புகைப்படங்களாக பதிவு செய்து இணையத்தில் பகிர்வதை வழக்கமாக வைத்துள்ளனர்.லாக்டவுன்னால் சில நடிகைகளின் பழைய புகைப்படங்கள் தற்போது வைரலாகி வருகிறது.தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி என அனைத்து மொழிகளிலும் பிரபல நடிகையாக கொடிகட்டி வலம் வந்தவர் கமாலினி முகர்ஜி. தமிழ் சினிமாவில் இவர் கிளாமர் காட்சிகளில் நடித்தது இல்லை. ஆனாலும் தமிழில் இவருக்கு ஓரளவு ரசிகர்கள் இன்றளவும் இருக்கிறார்கள்.சில வருடங்களுக்கு முன் இவர் கடற்கரையில் சொட்ட சொட்ட நனைந்த கவர்ச்சி உடையில் ஒய்யாரமாக அமர்ந்து கொண்டிருக்கும் சில புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களின் கவனத்தை சுண்டி இழுத்துள்ளார்.
  • 32
Added article 
அசின் கேரளாவில் பிறந்து நம் தென்னிந்திய சினிமாவில் தன் நடிப்பை ஆரம்பித்து, பாலிவுட் வரை சென்றவர்.  சிறந்த பரதநாட்டிய டான்சர், எட்டு மொழிகளில் சரளமாக பேசக்கூடியவர், தன் அனைத்து படங்களுக்கும் தானே டப்பிங் பேசியவர். சினிமாவில் நடிப்பு மட்டும் அல்லாது பல விளம்பரங்களிலும் நடித்தவர். மிராண்டா, தனிஷ்க், லக்ஸ் போன்றவற்றின் பிராண்ட் அம்பாசடர். எம்.குமரன் சன் ஆப் மகாலட்சுமி, கஜினி, சிவகாசி, போக்கிரி, தசாவதாரம் என பெரும் ஹீரோக்களின் வெற்றிப்படங்களில் நடித்து கலக்கியவர்.கோலிவுட்டில் முன்னணி நாயகியாக இருந்த பொழுது, கஜினி ஹிந்தி ரீமேக்கில் அமீர்கானுடன் நடித்தார். அதுவே அவரின் பாலிவுட் என்ட்ரி. பின்னர் ஹிந்தி படங்களில் பிஸியானார்.அக்‌ஷய்குமாருடன் நடிக்கும் போது அவர் மூலமாக அவருடைய நண்பரான, மைக்ரோமேக்ஸ் நிறுவனத்தின் அதிபரான ராகுல் ஷர்மாவுடன் காதல் ஏற்பட, தன் கைவசம் இருந்த படங்களை நடித்து முடித்துவிட்டு  2016 ல் அவரை மணந்துக்கொண்டார்.இந்த தம்பதியருக்கு தற்போது மூன்று வயதில் அரின்  என்கிற பெண் குழந்தை இருக்கிறார். அசின் தனது மகளின் புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் பதிவிடுவது வாடிக்கையான ஒன்று. சமீபத்தில்  மூன்று வயது அரினின் வார இறுதி கதக் பயிற்சி என குறிப்பிட்டு ஒரு புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படத்திற்கு நிறைய லைக்ஸ் குவிந்து வருகிறது.
  • 31
Added a post 
ஆனிமாதம் உத்திர நட்சத்திரத்தன்று நடக்கும் தரிசனமாகையால் இத்தினம் ஆனி உத்திரம் எனவும் ஆனித்திருமஞ்சனம் எனவும் அழைக்கப்படுகிறது. சிவபெருமானின் பஞ்சசபைகளில் பொற்சபையாகவும், பஞ்சபூத தலங்களில் ஆகாய தலமாகவும் போற்றப்படுவது சிதம்பரம் நடராஜர் ஆலயம். சிதம்பரம் கோயில் ஐந்து சுற்று பிராகாரங்களைக் கொண்டது. இக்கோயிலில் மூலவர் இருக்கும் கருவறை நேர் எதிரே அமையப்பெறாமல் சிறிது இடப்புறம் தள்ளி அமைந்துள்ளது. இது மனித உடலில் இதயம் இடப்புறம்  அமைந்துள்ளதை ஒத்து இருக்கிறது என்கிறது தலபுராணம். மனித உடலை ஒத்து அமைந்துள்ளதாகக் கூறப்படும் இக்கோயிலின் கூரை, மனிதன் நாள் ஒன்றுக்கு மூச்சுவிடும் எண்ணிக்கையான 21,000 முறையைக் கணக்கில் கொண்டு அதே அளவு ஓடுகளால் வேயப்பட்டுள்ளன. மனித உடலில் ஓடும் நாடிகள் 72,000. இதே எண்ணிக்கையில் ஓடுகளைப் பதியச் செய்ய ஆணிகள்  அடிக்கப்பட்டுள்ளன. திருமஞ்சனம் என்றால் மகா அபிஷேகம் என்று பொருள். ஆடலரசரான நடராஜருக்கு ஆண்டுக்கு 6 முறை மகா அபிஷேகம் செய்யப்படுகிறது. இதில் சிறப்பு  வாய்ந்தது ஆனி உத்திரத்தில் நடைபெறும் திருமஞ்சனமும், மார்கழி திருவாதிரையில் நடைபெறும் திருமஞ்சனமும் ஆகும். இவ்விரு நாட்களில் மட்டுமே அதிகாலையில் அபிஷேகம் நடக்கும். பிற திருமஞ்சன நாட்களான சித்திரை திருவோணம், ஆவணி சதுர்த்தசி, புரட்டாசி சதுர்த்தசி, மாசி சதுர்த்தசி ஆகிய நாட்களில் மாலைநேரத்தில் அபிஷேகம்  நடத்தப்படும்.
  • 32
Added a post 
இறைவன் நிலம், நீர், காற்று, நெருப்பு, ஆகாயம் என்னும் பஞ்ச பூதங்களின் வடிவில் நிறைந்திருக்கிறார். இவற்றுள் நெருப்பு என்னும் ஒளி வடிவமே அக மற்றும் புற இருளை நீக்கி ஞானத்தை வழங்கக் கூடியது. ஞானத்தை வழங்கும் வடிவமான இறைவனை விளக்கு என்னும் தீபத்தினை ஏற்றி நாம் வழிபாடு செய்வது சாலச் சிறந்தது ஆகும். இதனையே புராணங்களும் இதிகாசங்களும் வலியுறுத்துகின்றன. தீபத்தின் ஒளியில் கலைமகளான சரஸ்வதி தேவியும், சுடரில் திருமகளான இலட்சுமியும், வெப்பத்தில் மலைமகளாகிய உமையம்மையும் இருப்பதாகக்  கருதப்படுகிறது. எனவே தான் கோவில்களில் கோடி தீபம், லட்ச தீபம் ஆகியவை ஏற்றப்படுகின்றன.தீபமானது வீட்டில் பூஜை அறை, சமையலறை, துளசி மாடம், முற்றம் போன்றவற்றிலும், கோவில்கள், தொழில் நிறுவனங்கள், கல்விகூடங்கள் என எல்லா இடங்களிலும் ஏற்றப்படுகிறது. வீடுகளில் தீபத்தை பிரம்ம முகூர்த்தம் எனப்படும் அதிகாலை 4.30 மணி முதல் 6 மணிக்குள் ஏற்றுவது நல்லது. அதே போல் மாலையில் பிரதோச வேளையான 4.30 மணி முதல் 6 மணிக்குள் ஏற்றுவதும் சிறந்த பலன்களைக் கொடுக்கும். கோவில்களில் எந்த நேரமும் தீபம் ஏற்றி வழிபாடு மேற்கொள்ளலாம். 
  • 32
Added a news 
இலங்கையில் கொரோனா தொற்றினால் மேலும் 57 பேர் கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டு உயிரிழந்துள்ளதாக சுகாதார அமைச்சின் தேசிய தொற்று நோயியல் பிரிவு நேற்று (திங்கட்கிழமை) தெரிவித்துள்ளது.மரணித்தவர்களில் 32 ஆண்களும் 25 பெண்களும் உள்ளடங்குகின்றனர்.இந்நிலையில், இலங்கையில் கொரோனா தொற்றினால் ஏற்பட்ட மொத்த உயிரிழப்பு இரண்டாயிரத்து 260ஆக அதிகரித்துள்ளதாக தொற்று நோயியல் பிரிவு குறிப்பிட்டுள்ளது.
  • 87
Added a news 
இலங்கையில் முதலீடு செய்வதற்கான சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி இரு நாடுகளினதும் ´பகிரப்பட்ட செழுமையை´ அடைந்து கொள்வதற்காக இலங்கையுடன் இணைந்து கொள்ளுமாறு பிராந்திய ஒத்துழைப்புக்கான இராஜாங்க அமைச்சர் தாரக்க பாலசூரிய இந்திய முதலீட்டாளர்களுக்கு அழைப்பு விடுத்துள்ளார்.கொழும்பில் உள்ள ஷங்க்ரி-லா ஹோட்டலில் இருந்து டிஜிட்டல் முறையில் ஒளிபரப்பப்பட்ட முதலீட்டு இலங்கை மன்றத்தின் இந்தியா சார்ந்த அமர்வில் அமைச்சர் இந்தக் கருத்துக்களைத் தெரிவித்தார்.ரப்பர், ஆடை மற்றும் தகவல் தொழில்நுட்பத் தொழில் துறைகளில் கவனம் செலுத்தி, சாத்தியமான முதலீட்டாளர்களுக்கு ஆர்வமுள்ள 6 முக்கிய துறைகளை தனது உரையின் போது இராஜாங்க அமைச்சர் எடுத்துரைத்தார்.விஷேட பொருளாதார வலயங்கள் மூலமாக, குறிப்பாக சமீபத்தில் நிறுவப்பட்ட கொழும்புத் துறைமுக நகரத்தின் ஊடாக விஷேட நிதிச் சலுகைகளைப் பயன்படுத்திக் கொள்ளுமாறு முதலீட்டாளர்களை அவர் ஊக்குவித்தார்.
  • 90
உண்மை தானே?
  • 91
காலை வணக்கம்...
  • 91
Good Morning....
  • 91
Added article 
கொரோனா பரவல் காரணமாக சில நாடுகள் இந்தியாவிலிருந்து வரும் விமானங்களை அனுமதிக்க மறுத்தன. தற்போது அமெரிக்காவில் மருத்துவ சிகிச்சைக்காக ரஜினிகாந்த் செல்லவுள்ள நிலையில் அதற்காக மத்திய அரசிடம் அனுமதி கோரப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அதன்படி நடிகர் ரஜினிகாந்த் மருத்துவ பரிசோதனைக்காக விரைவில் அமெரிக்கா செல்ல உள்ளார். அங்கு மருத்துவ பரிசோதனை முடிந்த பின், சிறிது காலம் ஓய்வு எடுக்கவும் திட்டமிட்டுள்ளாராம். கொரோனா அச்சுறுத்தல் காரணமாக சிறப்பு தனி விமானத்தில் அமெரிக்கா செல்ல உள்ளாராம் நடிகர் ரஜினிகாந்த். மேலும் அவருடன் சேர்ந்து குடும்பத்தினரும் உடன் செல்ல உள்ளார்களாம். இந்நிலையில் இதற்காக மத்திய அரசுடன் பேசி நடிகர் ரஜினி, சிறப்பு அனுமதியும் பெற்றுள்ளதாக கூறப்படுகிறது. ரஜினி வைத்த கோரிக்கையை மத்திய அமைச்சர்கள் ஏற்ற நிலையில் அவருக்கு அமெரிக்காவுக்கு தனி விமானத்தில் செல்ல மத்திய அரசு அனுமதி வழங்கியதாக கூறப்படுகிறது.
  • 131
Added article 
ஆண்ட்ரியா  தமிழில் பச்சைக்கிளி முத்துச்சரம் படம் மூலம் அறிமுகமானவர். தொடர்ந்து தனது கதாபாத்திரத்திற்கு முக்கியத்துவம் உள்ள படத்தில் மட்டுமே நடித்து வருகிறார். இவரது நடிப்பில் வெளிவந்த வட சென்னை, தரமணி, ஆயிரத்தில் ஒருவன் உள்ளிட்ட படங்கள் ரசிகர்களோடேயே நல்ல வரவேற்பை பெற்றதுடன் திறமையான நடிகையாக பார்க்கப்பட்டார். இதற்கிடையில் அவ்வப்போது ஆல்பம் சாங் , மேடை கச்சேரி உள்ளிட்ட இடங்களில் பாடல் பாடி அசத்தி வருகிறார்.தற்போது எப்போதும் இல்லாத அளவிற்கு மாடர்ன் உடையில் ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு கிளாமர் போஸ் கொடுத்து ரசிகர்களை கிறுகிறுக்க வைத்துவிட்டார். இந்த கவர்ச்சியில் இது நம்ம ஆண்ட்ரியாவே இல்ல என ரசிகர்கள் கமெண்ட் அடித்து வருகின்றனர்.
  • 133
Added a news 
கொரோனா தொற்று பரவல் தடுப்பு நடவடிக்கைகளை தொடர்பாக அனைத்து மாவட்ட ஆட்சியர்களுடன் முதலமைச்சர் ஸ்டாலின் நாளை ஆலோசனை நடத்திகிறார்.தமிழகத்தில் கொரோனா தொற்று பரவல் நாளொன்று சுமார் 15 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பாதிப்புகள் பதிவாகி வருகின்றன. இதனிடையே, கொரோனா பரவலை தடுக்க ஊரடங்கு 21ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.இந்த நிலையில், கொரோனா தடுப்பு பணிகள் மற்றும் மாவட்ட வளர்ச்சி பணிகள் குறித்து அனைத்து மாவட்ட ஆட்சியர்களுடன் முதலமைச்சர் ஸ்டாலின் நாளை ஆலோசனை நடத்துகிறார். காணொளி காட்சி மூலம் நடக்கும் இந்த ஆலோசனைக் கூட்டம் நாளை காலை 10 மணிக்கு நடக்கிறது.பொதுப் போக்குவரத்து இன்னும் தொடங்கப்படாத நிலையில், அதனை தொடங்குவதற்கான சாத்தியக்கூறுகள் இருக்கின்றனவா..? என்பது குறித்தும் மாவட்ட ஆட்சியர்களிடம் அவர் கேட்டறிய உள்ளார்.
  • 135
Added a news 
தமிழகத்தில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 13,000க்கு கீழ் குறைந்துள்ளது.கொரோனாவின் 2வது அலை பரவத் தொடங்கியதால் பாதிப்பு எண்ணிக்கை கடந்த சில நாட்களாக அதிகரித்து வந்தது. ஆனால், கடந்த 24 தினங்களாக குறைந்து வருகிறது. இந்த நிலையில், இன்று 13ஆயிரத்திற்கும் மேற்பட்ட பாதிப்புகள் 2வது நாளாக பதிவாகியுள்ளது. அதாவது,12,772 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம், தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 23,66,493ஆக அதிகரித்துள்ளது.அதிகபட்சமாக, கோவையில் இன்று 1,728 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். சென்னையில் 828 பேருக்கும், திருப்பூரில் 781 பேருக்கும், ஈரோட்டில் 1,295 பேருக்கும், சேலத்தில் 796 பேருக்கும் உறுதியாகியுள்ளது.தமிழகத்தில் இன்று 254 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால், கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 29,801ஆக உயர்ந்துள்ளது. இன்று ஒரே நாளில் 25,561 பேர் டிஸ்சார்ஜ் ஆகியுள்ளனர். இதுவரையில் குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 21 லட்சத்து 99 ஆயிரத்து 808 ஆக அதிகரித்துள்ளது.
  • 134
Added a news 
பந்தப்பட்ட உற்பத்தி நிறுவனங்களுக்கும் மத்திய சுற்றாடல் அதிகார சபைக்கும் அறிவித்துள்ளார். மாற்று பொதியிடலுக்கான செலவு மற்றும் ஆயுள் காலம் தொடர்பில் கவனம் செலுத்தும் போது பிளாஸ்டிக் போத்தல்களைத் தடை செய்வது என்பது நடைமுறைக்கு சாத்தியமற்றது என்று மத்திய சுற்றாடல் அதிகார சபை சுட்டிக்காட்டியுள்ளது.750 மில்லி லீட்டர் போத்தலை வாங்கும் அந்த போத்தலின மீள்சுழற்சிக்காக ஒரு தொகை பணம் வைப்பீடு ரீதியில் வைத்துக்கொள்ள ஆலோசனை தெரிவிக்கப்பட்டுள்ளது.வெற்று போத்தலை மீள ஒப்படைப்பதன் மூலம் வைப்புத் தொகையை திருப்பிப்பெற முடியும் என்றும், வெற்று போத்தலை அப்புறப்படுத்தினாலும், மற்றொரு நபர் அத்தகைய போத்தல்களை சேகரித்து ஒப்படைப்பதன் மூலம் கூடுதல் வருமானத்தை ஈட்ட முடியும் என்றும் சுற்றுச்சூழல் அமைச்சகம் சுட்டிக்காட்டியுள்ளது..அது தொடர்பில் தற்போது முன்மொழியப்பட்டுள்ள வைப்புத்தொகை ரூ .10.00 தொடர்பான ஆலோசனைக்கு நிறுவனங்களும் இணக்கம் தெரிவித்துள்ளன.
  • 134
Added a news 
 கொரோனா வைரஸ் தொற்றால் ஏற்படும் மரணங்களை அதே நாளில் வெளியிடுவதற்கு நடவடிக்கை எடுத்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் வைத்திய நிபுணர் அசேல குணவர்தன தெரிவித்துள்ளார்.அதன்படி, 48 அல்லது 24 மணித்தியாலங்களுக்குள் இடம்பெறும் அனைத்து கொரோனா மரணங்கள் தொடர்பான விபரங்களை அதே நாளில் வெளியிடுவதற்கு நடவடிக்கை எடுத்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.எனவே இனிவரும் காலங்களில் முந்தைய நாட்களில் ஏற்பட்ட மரணங்கள் தொடர்பான தகவல்கள் காலம் தாழ்த்தி வெளியிடப்படமாட்டாது என அவர் மேலும் தெரிவித்தார்.
  • 134
Added a news 
நாட்டில் இன்று இரண்டாயிரத்து 284 பேருக்குக் கொரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சின் தேசிய தொற்று நோயியல் பிரிவு தெரிவித்துள்ளது. இவர்களில் 25 பேர் வெளிநாடுகளில் இருந்து நாடு திரும்பியவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.இதன்படி, இலங்கையில் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை இரண்டு இலட்சத்து 25 ஆயிரத்து 922ஆக அதிகரித்துள்ளது.இதேவேளை, கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்த ஆயிரத்து 917 பேர் இன்று வைத்தியசாலைகளில் இருந்து வெளியேறிய நிலையில், மொத்தமாக ஒரு இலட்சத்து 90 ஆயிரத்து 464பேர் தொற்றிலிருந்து மீண்டுள்ளனர்.அத்துடன், கொரோனா தொற்றினால் மரணித்தவர்களின் மொத்த எண்ணிக்கை இரண்டாயிரத்து 203ஆகப் பதிவாகியுள்ளது. இந்நிலையில், 33ஆயிரத்து 255 கொரோனா தொற்றாளர்கள் தொடர்ந்து வைத்தியசாலைகளில் சிகிச்சைபெற்று வருகின்றனர்.இதேவேளை, கொரோனா தடுப்பூசியின் முதலாவது டோஸ் இதுவரை 22இலட்சத்து 85 ஆயிரத்து 572 பேருக்குச் செலுத்தப்பட்டுள்ள நிலையில் இரண்டாவது டோஸ் இதுவரை ஐந்து இலட்சத்து 44ஆயிரத்து 898 பேருக்குச் செலுத்தப்பட்டுள்ளது.
  • 136
Added a news 
கனடாவில் கொரோனா பெருந் தொற்றினால், கடந்த 24 மணித்தியாலத்தில் ஆயிரத்து 122பேர் பாதிக்கப்பட்டதோடு 17பேர் உயிரிழந்துள்ளனர். கனடாவில் இதுவரை மொத்தமாக 14இலட்சத்து இரண்டாயிரத்து 128பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும், 25ஆயிரத்து 931பேர் உயிரிழந்துள்ளனர்.தற்போதுவரை வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ள 16ஆயிரத்து 957பேர் அங்குள்ள மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் 725பேரின் நிலை கவலைக்கிடமாக உள்ளது. இதுவரை கொரோனா தொற்றிலிருந்து 13இலட்சத்து 59ஆயிரத்து 240பேர் பூரண குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். 
  • 135
Added a news 
கடந்த 24 மணித்தியாலத்தில் மாத்திரம் தனிமைப்படுத்தல் சட்டத்தை மீறிய 1,198 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.சரியான முறையில் முகக்கவசம் அணியாமை, மாகாண எல்லைகளை கடந்தமை தொடர்பான குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.மேலும் பயணக் கட்டுப்பாடுகள் அமுலில் இருக்கும் காலப் பகுதியில் கட்டுப்பாட்டு விதிமுறைகளை மீறுபவர்களுக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாக அவர் தெரிவித்தார்.
  • 189
Added a news 
மீன்பிடித் துறைசார் உபகரணங்களுக்கு நியாயமான விலை நிர்ணயம் செய்வது தொடர்பாக கவனம் செலுத்தப்படும் என்று அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா உறுதியளித்துள்ளார்.நீர்கொழும்பு மாநகர சபை மண்டப கேட்போர் கூடத்தில் நேற்று (12) இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே கடற்றொழில் அமைச்சரினால் மேற்கண்டவாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பல் விபத்துக் காரணமாக ஏற்பட்ட பாதிப்புக்கள் தொடர்பாக கலந்துரையாடப்பட்ட குறித்த சந்திப்பின் போது, கடற்றொழிலாளர்கள் எதிர்கொள்ளும் பொதுவான பிரச்சினைகள் தொடர்பாகவும் நீர்கொழும்பு கடற்றொழிலாளர் சங்கப் பிரதிநிதிகளினால் எடுத்துக்கூறப்பட்டது.குறிப்பாக, தரமற்ற வலைகளே சந்தைக்கு வருவதாகவும் குறித்த வலைகளை ஆறு மாதங்கள் வரையிலேயே பயன்படுத்தக் கூடியதாக இருப்பதனால் செலவீனங்கள் அதிகரிப்பதாகவும் தெரிவித்தனர்.அதேபோன்று, கடற்றொழில்சார் உபகரணங்களுக்கு நிர்ணய விலை இன்மையினால் வியாபாரிகளின் விருப்பத்திற்கு ஏற்ப விலைகள் நிர்ணயிக்கப்படுவதாகவும் சுட்டிக்காட்டினர்.கடற்றொழிலாளர்களின் ஆதங்கங்களைப் புரிந்து கொண்ட அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, தரமான கடற்றொழில் சார் உபகரணங்கள் நியாயமான விலையில் சந்தையில் கிடைப்பதற்கு தேவையான நடவடிக்கைகள் தொடர்பாக கடற்றொழில் அமைச்சு அவதானம் செலுத்தும் என்று உறுதியளித்தார்.
  • 187
Added a post 
ஒரு ஊரில் ஒரு திருடன் இருந்தான். அவன் தினமும் திருடப் போவதற்கு முன்னர், ஒரு கோவிலுக்குள் நுழைந்து “சாமி, இன்னிக்கு எனக்கு நல்ல வரும்படி கிடைக்க வேண்டும்” என்று வேண்டிக்கொண்டு புறப்படுவான். அந்தக் கோவில் மண்டபத்தில் தினமும் ஒரு சாமியார் உபந்யாசம்/ சொற்பொழிவு ஆற்றிவந்தார். சில நேரங்களில் அங்கிருக்கும் கூட்டம் சிரிப்பதைக் கேட்டு நாமும் சாமியார் சொல்லும் ‘ஜோக்’கைக் கேட்போமே என்று போவான். நல்ல குட்டிக் கதைகள் சொன்னால் அதையும் கேட்டுவிட்டு திருடப் போவான்.ஒரு நாள் அவனுக்கு பூர்வ ஜன்ம வாசனையால் ஞானோதயம் ஏற்பட்டது. பகற்பொழுதில் அந்த சாமியார் இருக்கும் குடிலுக்குச் சென்று, “குருவே! வணக்கம் பல! எனக்கு ஒரு மந்திரம் சொல்லித் தாருங்களேன்” என்றான். அவரும் , “மகனே! நீ யார்?” என்று கேட்டார். அவன் கூசாமல் உண்மையைச் சொன்னான்: “நான் ஒரு பக்காத்திருடன்! பத்து வயது முதல் திருட்டுத் தொழில்தான் செய்து வருகிறேன்”சாமியார் : அடக் கடவுளே! வேறு எதுவும் நல்ல தொழில் செய்யக்கூடாதா?திருடன்: இப்போதைக்கு எனக்குத் தெரிந்த தொழில் அது ஒன்றுதான். மனைவி மைந்தர்களைக் காப்பாற்ற 30 ஆண்டுகளாகச் செய்யும் தொழில் இது.சாமியார்: சரி, போ. நீ உண்மை பேசுவதால் உனது உள்ளத்தில் ஏதோ சில நல்ல அம்சங்களிருப்பதை உணர்கிறேன். இன்று, வேதத்திலுள்ள, எல்லோருக்கும் சொல்லித் தரும் முதலாவது மந்திரத்தை உனக்கும் போதிக்கிறேன். அதைப் பின்பற்றினால் அந்த மந்திரம் பலித்து சில அற்புதங்களைச் செய்யும்.திருடன்: சரிங்க சாமி! அப்படியே செய்வேன்.சாமியார்: முதல் மந்திரம்: ‘சத்தியம் வத’ – அதாவது, ‘உண்மையே பேசு”திருடன்: சாமி, இது ரொம்ப எளிதான மந்திரம். பின்பற்றுவதும் எளிது. கைகள் தானே திருட்டுத் தொழில் செய்யும்; வாய், உண்மையைப் பேசுவது ஒன்றும் கடினமில்லையே’ என்றான்.சாமியார் புன்னகை பூத்தார்; அவனும் விடை பெற்றுச் சென்றான்.மனைவியிடம் போய் நடந்ததைச் சொன்னான். அவளுக்கு ஒரே சிரிப்பு. இது என்னங்க? நெசவாளி குரங்கு வளர்த்த கதையாய் இருக்கு’ என்றாள்.அது என்னடி கதை? என்றான்.ஒரு நெசவாளி குரங்கு வளர்க்க ஆசைப்பட்டு குரங்கை வாங்கினான். அது அவன் செய்த ஒவ்வொரு துணியையும், நூலாக இருக்கையிலேயே பிய்த்துப் போட்டது. அது போல நீர் உண்மை பேசினால் திருடும் முன்னரே அகப்பட்டுக் கொள்வீர்” என்றாள்.“கண்மணி! கவலைப்படாதே, குருவருள் கிட்டும்” என்று சொல்லிவிட்டுப் புறப்பட்டான்.இரவு நெருங்கியதும், கன்னக் கோல், நூலேணி, சுத்தியல், கடப்பாரை, அளவுபார்க்கும் நூல் எல்லாவறையும் எடுத்துக்கொண்டு போனான்.இன்று மந்திர உபதேசம் இருப்பதால், பெரிய இடத்தில் கைவைத்து பெரிய சாதனை புரியவேண்டுமென்றெண்ணி, அரண்மனையில் திருடப் போனான். நள்ளிரவுக்குப் பின், கும்மிருட்டு. அரண்மனை மதிலைச் சுற்றி வருகையில், அந்நாட்டு மன்னரும் கையில் விளக்குடன் மாறு வேடத்தில் வந்தார். இந்து சமய ராஜாக்கள் நாட்டு மக்களின் நாடி பிடித்துப் பார்க்க இப்படி நள்ளிரவில் மாறுவேடத்தில் நகர் வலம் வருவதுண்டு.ராஜா: நில், யார் அங்கே?திருடன்: ஐயா, நான் பக்காத் திருடன்.ராஜா: அட நான் பாக்தாத் திருடன். அசலூரிலிருந்து வந்திருக்கிறேன். எனக்கும் பணம் வேண்டும். உன்னுடன் வரட்டுமா? பங்கில் பாதி கொடுத்தால் போதும்திருடன்: மிக நல்லது. வா போவோம் என்றான்.ராஜாவுக்கு அவரது அரண்மனை வழியெல்லாம் அத்துபடி என்பதால் திருடனை நேரே கஜானாவுக்கு அழைத்துச் சென்றார்.இருவரும் ஒரு பெரிய பெட்டியைத் திறந்தனர். அதில் மூன்று விலையுயர்ந்த பெரிய மாணிக்கக் கற்கள் இருந்தன.திருடன்: இன்று நமக்கு அதிர்ஷ்ட நாள். உனக்கு ஒன்று , எனக்கு ஒன்று. மூன்றாவது ரத்தினக் கல்லை அதன் சொந்தக் காரனுக்கு இந்தப் பெட்டியிலேயே வைத்துவிடுவோம்.ராஜா: அட உனக்கு என்ன பைத்தியமா? நாமோ திருடர்கள் இதில், சொந்தக்காரனுக்கு ஒரு பங்கா?திருடன்: நண்பா! நான் உனக்கு பாதி தருவதாக ஒப்புக் கொண்டேன். இப்பொழுது இந்த மூன்றாவது ரத்தினக் கல்லை நான் எடுத்தாலும், நீ எடுத்தாலும், 50-50 வராது ஒருவருக்குக் கூடுதலாகிவிடும். அதுமட்டுமல்ல. இதை இவ்வளவு காலம் கஜானாவில் வைத்திருக்கும் மன்னன் , ஒரு கல்லாவது திருடுபோகாமல் இருந்ததே என்று சந்தோஷப் படுவானில்லையா?ராஜாவும் அவன் சொன்ன வாதத்தில் பசையிருப்பதை ஒப்புக் கொண்டு வீடு திரும்பலாம் என்றார். அந்தத் திருடன் விடைபெற்றுச் சென்றபோதும், அவனுக்குத் தெரியாமல் அவனைப் பின் தொடர்ந்து சென்று அவன் எங்கே வசிக்கிறான் என்பதை குறித்துக்கொண்டார்.மறு நாள் அரசவை கூடியது.ராஜா: ஒரு முக்கிய அறிவிப்பு! நமது அரண்மனை கஜானாவில் திருடு நடந்திருப்பதாக் நமது உளவாளிகள் எனக்குத் தகவல் தந்துள்ளனர்.நிதி அமைச்சர்: மன்னர் மன்னவா! சிறிது நேரத்துக்கு முன் நாங்கள் மந்திரிசபை கூட்டம் நடத்தினோம். அதில் கூட யாரும் இதுபற்றிச் சொல்லவில்லை. இதோ, உடனே சென்று பார்த்து அறிக்கை சமர்ப்பிபேன்.அவர் கஜானாவுக்குச் சென்று பார்த்ததில் திருடன் ஒரு மாணிக்கக் கல்லை மட்டும் விட்டுச் சென்றிருப்பதைக் கண்டார். திடீரென அவருக்குப் பேராசை வரவே அதை இடுப்பில் வேட்டியில் முடிந்து வைத்துக் கொண்டார்.அரசவைக்கு ஓடோடி வந்தார்.நிதியமைச்சர்: மன்னரே, நமது உளவாளிகள் மிகவும் திறமைசாலிகள், ராஜ விசுவாசிகள். அவர்கள் சொன்னது சரியே. கஜானாவில் உள்ள ஒரு பெட்டி உடைக்கப்பட்டு, மூன்று மாணிக்கக் கற்கள் திருடப்பட்டிருக்கின்றன.ராஜா: அப்படியா? ஒரு கல்லைக் கூட அவர்கள் விட்டுச் செல்லவில்லையா?நிதியமைச்சர்: மன்னவா, திருடர்கள் என்ன முட்டாள்களா? ஒரு கல்லை நமக்கு விட்டுச் செல்ல. இருப்பதையெலாம் சுருட்டுவதுதானே அவர்கள் தொழில்ராஜா: போகட்டும் எனக்கு இன்னும் ஒரு உளவுத் தகவலும் வந்துள்ளது. யார் அங்கே? காவலர்கள் எங்கே?அவர்கள் ஓடி வந்து, மன்னவன் முன் நிற்க, இதோ இந்த முகவரியிலுள்ள திருடனை உடனே பிடித்து வாருங்கள். ஆனால் அவனை ஒன்றும் செய்துவிடாதீர்கள்.குதிரை மீது விரைந்து சென்ற காவலர், அந்தத் திருடனைப் பிடித்துவந்து, அரசன் முன்னர் நிறுத்தினர்.திருடன்: ராஜா, வணக்கமுங்க (நடுங்கிக் கொண்டே)ராஜா: நேற்று இரவு என்ன நடந்தது? சொல்.திருடன்: நானும் இன்னொருவனும் உங்கள் அரண்மனை கஜானாவுக்குள் நுழைந்து பெட்டியை உடைத்தோம். அதில் மூன்று மாணிக்கக் கற்கள் இருந்தன. நான் ஒன்றை எடுத்துக்கொண்டு, என்னுடன் வந்த மற்றொருவனுக்கு ஒன்றைக் கொடுத்தேன். மூன்றாவது ரத்தினக் கல்லை உங்களுக்கே இருக்கட்டும் என்று வைத்துவிட்டேன். இதோ நான் எடுத்த மாணிக்கம். (அதை அரசர் முன் பயபக்தியுடன் சமர்ப்பிக்கிறான்)ராஜா: உன்னுடன் வந்தவன் திருடனில்லை. நான்தான் மாறுவேடத்தில் வந்து உன்னுடன் கஜானாவில் நுழைந்தேன். இதோ நீ என் பங்காகக் கொடுத்த மாணிக்கக் கல் (அரசனும் அதை முதல் கல்லுடன் வைக்கிறார்.)நிதி அமைச்சரே, மூன்றாவது கல்லை வையுங்கள்.நிதியமைச்சர்: மன்னர் மன்னவா! என்ன அபவாதம் இது? மூன்று தலைமுறைகளாக எங்கள் குடும்பம் உங்களுக்குச் சேவை செய்துவருகிறது. ஒரு நிமிடத்தில் எனக்குத் திருட்டுப் பட்டம் கட்டிவிட்டீர்களே. அந்தக் கல்லையும் இந்தத் திருடன்தான் எடுத்திருப்பான்; திருடர்களுக்குக் கண்கட்டு வித்தை தெரியும்ராஜா: நிதியமைச்சரே! இன்னும் ஒரு நிமிடத்தில் அந்த ரத்தினக் கல்லை சமர்ப்பிக்கவில்லையானால், உமது வேட்டியை உருவி சோதனை செய்ய உத்தரவிடுவேன். உமது வீடு முழுவதையும் சோதனையிட உத்தரவிடுவேன்.நிதியமைச்சர் (நடுங்கிக் கொண்டே): மன்னவா! என்னை மன்னித்துவிடுங்கள்; அரை நிமிட காலத்தில் பேராசை என் கண்களை மறைத்துவிட்டது. நான்தான் திருடினேன்; இதோ அந்தக் கல் என்று வேட்டியின் முடிச்சிலிருந்து எடுத்து வைத்தார்.ராஜா: யார் அங்கே? (காவலர்கள் ஓடி வருகின்றனர்); இந்த நிதியமைச்சரை சிறையில் தள்ளுங்கள்.முக்கிய அறிவிப்பு: (அனைவரும் கவனத்துடன் கேட்கின்றனர்); இன்று முதல் நமது நாட்டின் நிதியமைச்சராக இந்தத் திருடனை நியமிக்கிறேன். உங்கள் அனைவரையும் விட உண்மையுடனும் ராஜ விசுவாசத்துடனும் இருந்தமைக்காக அவரே இப்பகுதிக்குத் தகுதியுடையவர்.அனைவரும்: புதிய நிதி அமைச்சர் வாழ்க! வாழ்க, வாழ்க; மன்னர் மன்னவர் வாழ்க, வாழ்க!!புதிய நிதியமைச்சர் (பழைய திருடன்), மறு நாளைக்குச் சாமியாரைச் சந்தித்து உண்மை விளம்பியதால் ஏற்பட்ட நன்மைகளைக் குருநாதரிடம் ஒப்புவித்தார்.சாமியார்: சத்தியம் வத (உண்மையே பேசு) என்பதுதான் வேதத்தின் முக்கியக் கட்டளை. நீ அதைக் கடைபிடித்தால் வேறு எதுவும் தேவையில்லை. “எனைத்தானும் நல்லவை கேட்க”- என்று வள்ளுவன் சொன்னான். நீயும் அப்படிச் சிறிது உபதேசம் கேட்டு இந்நிலைக்கு உயர்ந்தாய்.பொய்யாமை பொய்யாமை ஆற்றின் அறம் பிறசெய்யாமை செய்யாமை நன்று (குறள் 297)என்று வள்ளுவனும் செப்பினான். அடுத்த முறை சந்திக்கும்போது உனக்கு வேறு ஒரு மந்திரம் உபதேசம் செய்கிறேன் இன்னும் உயர்வாய்- என்றார்
  • 187
Good Morning...
  • 189
Good morning....
  • 187
Added a news 
அரசாங்கம் மேற்கொண்ட தீர்மானம் ஒன்றை பிரகடனப்படுத்தியதையே தான் மேற்கொண்டதாக வலுசக்தி அமைச்சர் உதய கம்மன்பில தெரிவித்தார்.எரிபொருள் விலையை அதிகரிக்க மேற்கொண்ட தீர்மானம் தொடர்பில் தன் மீது முன்வைக்கப்படும் குற்றச்சாட்டுகள் தொடர்பில் விளக்கமளிக்க அமைச்சர் இன்று விசேட ஊடக சந்திப்பு ஒன்றை ஏற்பாடு செய்திருந்தார்.இதன்போது ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச் செயலாளர் சாகர காரியவசம் தெரிவித்திருந்த கருத்துக்கு பதில் அளித்து அமைச்சர் இவ்வாறு கருத்து தெரிவித்துள்ளார். சாகர காரியவசம் தாக்குவது தன்னை அல்ல எனவும், ஶ்ரீ லங்கா பொதுஜன பெரமுன உருவாக்கிய முதலாவது ஜனாதிபதிக்கும் மற்றும் பிரதமரின் தலைப்புடன் கூடிய கடிதத்தை பயன்படுத்தி பிரதமருக்குமாகும் என அவர் இதன் போது தெரிவித்தார்.
  • 227
Added article 
ஜகமே தந்திரம் படம் வரும் 18ஆம் தேதி நெற்ஃபிளிக்சு வெளிவர உள்ளது. தனுஷ், ஐஸ்வர்யா லட்சுமி, ஜேம்ஸ் காஸ்மோ போன்ற பிரபலங்கள் நடிப்பில் உருவாக்கியுள்ளது.கார்த்திக் சுப்பராஜ் 5 கோடி, சந்தோஷ் நாராயணன் 75 லட்சமும் சம்பளமாக கொடுக்கப்பட்டுள்ளது. இந்த படத்தின் மொத்த பட்ஜெட் கிட்டத்தட்ட 55 கோடி.தனுஷ் இந்த படத்திற்காக கிட்டத்தட்ட 15 கோடி வரை சம்பளம் வாங்கி உள்ளார். கிட்டத்தட்ட 65 கோடி பட்ஜெட்டில் இந்த படம் உருவாகியுள்ளது.தனுஷ் மிகவும் எதிர்பார்ப்பு இந்த படம் தியேட்டரில் வெளிவர வேண்டும் என்பது தான். ஆனால் தயாரிப்பாளரின் நெருக்கடியால் இந்த படம் ஓடிடி தளத்தில் வெளியிடப்பட உள்ளது.
  • 226