Covid-19
Corona Virus and people
- · 6 friends
- · 6 followers
ரஷ்யாவில் கடந்த 24 மணி நேரத்தில் மேலும் 19,290 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம் ரஷ்யாவில் வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை தற்போது 37,38,690 ஆக உயர்ந்துள்ளது. கொரோனா தொற்றுக்கு மேலும் 456 பேர் உயிரிழந்ததால், அங்கு பலியானோர் எண்ணிக்கை 69 ஆயிரத்து 918 ஆக உயர்ந்துள்ளது.
ரஷ்யாவில் இதுவரை கொரோனா தொற்றில் இருந்து 31,50,763 பேர் சிகிச்சை பெற்று குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். தற்போது 5,18,009 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். பாதிக்கப்பட்ட நாடுகளின் வரிசையில் தற்போது ரஷ்யா 4-வது இடத்தில் உள்ளது.
உலக அளவில் கொரோனா வைரஸ் தொற்று பாதிப்பில் முதலிடத்தில் அமெரிக்காவும், இரண்டாம் இடத்தில் இந்தியாவும், மூன்றாவது இடத்தில் பிரேசிலும் உள்ளன. இதுவரை 9.98 கோடிக்கும் அதிகமானோர் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டுள்ளனர். வைரஸ் தொற்றுக்கு இதுவரை 21.40 லட்சத்துக்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர்.
சொத்துகுவிப்பு வழக்கில் சிறையில் உள்ள சசிகலா வரும் 27 ஆம் தேதி விடுதலையாக இருந்த நிலையில் உடல்நல குறைவால் பாதிக்கப்பட்டார்.
இதனைத்தொடர்ந்து பெங்களூருவில் உள்ள விக்டோரியா மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு கொரோனா இருப்பது கண்டறியப்பட்டது. இதை தொடர்ந்து சசிகலாவுக்கு ஐசியூவில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதை தொடர்ந்து சசிகலா உடல்நிலை குறித்து மருத்துவமனை நிர்வாகம் தொடர்ந்து அவ்வ போது தகவல் தெரிவித்து வருகிறது.
இந்நிலையில்,விக்டோரியா மருத்துவமனை நிர்வாகம் ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளது.
அதில், சசிகலாவுக்கு கொரோனா அறிகுறிகள் முற்றிலுமாக இல்லை. இருப்பினும் அவர் தொடர்ந்து மருத்துவர்களின் கண்காணிப்பில் உள்ளார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சிகலாவுக்கு கொரோனா அறிகுறிகள் முற்றிலுமாக இல்லை எனமருத்துவமனையின் அறிவிப்பால் சசிகலா ஆதரவாளர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
இதனிடையே சசிகலா, பிப்ரவரி முதல் வாரத்தில் சென்னை திரும்புவார் என்று தகவல் வெளியாகியுள்ளது. பிப்ரவரி 3-ஆம் தேதி அண்ணா நினைவு நாளன்று சென்னை திரும்பும் சசிகலா சென்னை வந்ததும் மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா நினைவிடத்துக்கு சென்று மரியாதை செலுத்த உள்ளதாகவும் அதனைத்தொடர்ந்து, தஞ்சாவூரில் உள்ள எம்.நடராஜன் நினைவிடத்திற்கு செல்ல திட்டமிட்டு இருப்பதாக கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
தமிழகத்தில் கொரோனா பாதிப்பு குறித்து சுகாதாரத்துறை இன்று வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:-
தமிழகத்தில் 537, வெளிமாநிலத்தில் இருந்து வந்த 3 பேர் என மொத்தம் 540 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. சென்னையில் மேலும் 157 பேருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. சென்னையில் 99-வது நாளாக ஆயிரத்திற்கும் கீழ் கொரோனா பாதிப்பு பதிவாகி உள்ளது.
தமிழகத்தில் கொரோனாவுக்கு 4,813 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். தமிழகத்தில் கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டோர் எண்ணிக்கை 8,34,740 லிருந்து 8,35,280 ஆக உயர்ந்துள்ளது.
தமிழகத்தில் 5,04,844 ஆண்கள், 3,30,402 பெண்கள் மூன்றாம் பாலினத்தவர் 34 பேருக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
தமிழகத்தில் மேலும் 55,710 பேருக்கும், இதுவரை 1,53,86,025 பேருக்கும் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் மேலும் 55,919 மாதிரிகளும், இதுவரை 1,56,96,304 மாதிரிகளும் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.
தமிழகத்தில் கொரோனாவில் இருந்து குணமடைந்த மேலும் 627 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். இதுவரை குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிககை 8 லட்சத்து 18ஆயிரத்து 147ஆக அதிகரித்துள்ளது.
தமிழகத்தில் இன்று மட்டும் கொரோனாவிற்கு மேலும் 4 பேர் உயிரிழந்துள்ளனர். 2பேர் தனியார் மருத்துவமனையிலும், 2பேர் அரசு மருத்துவமனையிலும் உயிரிழந்துள்ளனர். இதன்மூலம் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 12,320 ஆக அதிகரித்துள்ளது.
இலங்கையில் கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்தோரின் மொத்த எண்ணிக்கை 50 ஆயிரத்தை கடந்துள்ளது. கடந்த 24 மணிநேரத்தில் மட்டும் மேலும் 621 பேர் குணமடைந்துள்ள நிலையில் 50 ஆயிரத்து 337 பேர் குணமடைந்துள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்றுநோயியல் பிரிவு அறிவித்துள்ளது.
நாட்டில் இதுவரை கொரோனா தொற்று உறுதியானோரின் மொத்த எண்ணிக்கை 58 ஆயிரத்து 430 ஆக உயர்ந்துள்ளது.இதில் 7 ஆயிரத்து 810 பேர் தொடர்ந்தும் சிகிச்சை பெற்றுவரும் அதேவேளை 783 பேர் கொரோனா தொற்று சந்தேகத்தில் மருத்துவ கண்காணிப்பில் உள்ளனர்.மேலும், இலங்கையில் கொரோனா தொற்றினால் இதுவரை 283 பேர் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
வாழைத்தோட்டம் பிரதேசத்தில் மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் முக்கச்சக்கர வண்டியொன்றில் பயணித்தவர்கள் மீது துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டுள்ளனர்.
துப்பாக்கிச் சூட்டில் படுகாயமடைந்த முச்சக்கரவண்டியில் பயணித்த நபரொருவர் பாணந்துறை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார்.
சம்பவம் தொடர்பில் பாணந்துறை வடக்கு காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
மேலும், துப்பாக்கி பிரயோகம் நடாத்தப்பட்ட இடத்தில் விசேட அதிரடிப்படையினர் பாதுகாப்பு கடமைகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
ஐக்கியநாடுகள் மனித உரிமை பேரவையின் எதிர்ப்பை குறைப்பதற்காக அரசியல் கைதிகள் விவகாரத்தை பயன்படுத்துவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
நீண்டகாலமாக தடுத்து வைக்கப்பட்டுள்ள அரசியல் கைதிகள் குறித்து அரசாங்கம் உடனடியாக ஆராயவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதுகுறித்து ஆராய்ந்து பரிந்துரைகளை முன்வைக்குமாறு சட்டமாஅதிபர் திணைக்களம் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளதாக தெரியவருகின்றது.
ஏனைய பல நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன என வெளிவிவகார அமைச்சர் வாரஇதழ் ஒன்றிற்கு தெரிவித்துள்ளார் எனினும் மேலதிக விபரங்களை அவர் வெளியிடவில்லை.
அரசின் நில ஆக்கிரமிப்பிற்கு எதிராக வேலணை பிரதேச செயலகத்தின் முன்பாக இன்று(25) ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இந்த ஆர்ப்பாட்டத்தில் பாராளுமன்ற உறுப்பினர்களான கஜேந்திரகுமார் பொன்னம்பலம், செல்வராசா கஜேந்திரன் மற்றும் பொதுமக்கள், மக்கள் பிரதிநிதிகள் என பலரும் கலந்து கொண்டுள்ளனர்.
அடுத்த சில வாரங்களில் இலங்கைக்கு கொரோனா வைரஸ் தடுப்பு மருந்து கிடைக்கலாம் என தெரிவிக்கப்படுவதை நிராகரித்துள்ள முன்னாள் சுகாதார அமைச்சர் ராஜித சேனாரட்ண மார்ச் மாதமளவிலேயே இலங்கைக்கு கொரோனா வைரஸ் தடுப்பு மருந்து கிடைக்கலாம் என தெரிவித்துள்ளார்.
சனத்தொகையில் 15 சதவீதமானவர்களிற்கே மருந்து கிடைக்கும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
ஒருவருக்கு இரண்டு டோஸ்களை வழங்கவேண்டும் என்பதால் 600,000 மருந்துகள் மூன்று இலட்சம் பேருக்கு போதுமானதாகயிருக்கும் என தெரிவித்துள்ள அவர் உலக சுகாதார ஸ்தாபனத்திடமிருந்து கிடைக்கும் மருந்துகளை சனத்தொகையின் 20 வீதமான மக்களிற்கே வழங்க முடிடியும். ஒருவருக்கு இரண்டு டோஸ்கள் வழங்கப்படவேண்டும் என்பதால் மார்ச்சில் 15வீதமானவர்களிற்கே மருந்து கிடைக்கும் எனவும் தெரிவித்துள்ளார்.
இலங்கை மக்கள் அனைவருக்கும் கொரோனா வைரஸ் மருந்து கிடைப்பதற்கு இன்னமும் இரண்டரை வருடங்களாகும் எனவும் தெரிவித்துள்ளார்.
இலங்கை ஏனைய நாடுகளை போல முன்கூட்டியே மருந்துகளிற்கு வேண்டுகோள் விடுக்க தவறியதன் காரணமாகவே இந்த நிலை ஏற்பட்டுள்ளது என ராஜித சேனாரட்ண தெரிவித்துள்ளார்.
322 பில்லியன் சனத்தொகையை கொண்ட அமெரிக்கா ஏற்கனவே மருந்துகளிற்கு முன்பதிவு செய்துள்ளது,37 பில்லியன் சனத்தொகையை கொண்ட கனடா 38 மில்லியன் மருந்திற்கு பதிவு செய்துள்ளது,இந்தியா 1800 மில்லியன் மருந்தினை பெறுவதற்கு முன்பதிவு செய்துள்ளது என தெரிவித்துள்ள முன்னாள் அமைச்சர் இலங்கை முன்கூட்டியே பதிவு செய்ய தவறியுள்ளதால் மிகக்குறைந்த அளவிலான மருந்துகளே கிடைக்கவுள்ளன என தெரிவித்துள்ளார்.
கொரோனா வைரஸ் மருந்துகளிற்கு முன்பதிவு செய்யாத அரசாங்கம் உள்ளுர் மருந்துகளை ஊக்குவிக்கும் நடவடிக்கைகளில் இறங்கியது,ஆற்றில் பானைகளை வீசுவதிலும் பாணிகளை குடிப்பதிலும் ஈடுபட்ட அமைச்சர் கொரோனா நோயாளியாகியுள்ளார் என தெரிவித்துள்ள அமைச்சர் இலங்கையில் பழங்குடி இனத்தவர்களின் மனோநிலையுடனான மக்கள் வாழ்கின்றனர் என்ற தோற்றப்பாடு உருவாக்கப்பட்டுள்ளது எனவும் தெரிவிததுள்ளார்.
மன்னார் சாவல்காட்டு கிராமத்துக்கும், பனங்கட்டி கொட்டு கிராமத்திற்குமான மோதல் உச்சமடைந்து, சாவல்காட்டு கிராம மக்கள் அடைக்கலம் தேடி, நீதிபதியின் வீட்டுக்கு முன்பாக ஓடிச்சென்றனர்.
நேற்று (24) இந்த பயங்கர சம்பவம் நடந்தது.
பனங்கட்டி கொட்டு கிராமத்திற்கும், சாவல்காட்டு கிராமத்திற்குமிடையில் அண்மையில் மோதல் இடம்பெற்று வருகிறது. பனங்கட்டி கொட்டு கிராமத்தை சேர்ந்த இளைஞர் ஒருவர் மீது சாவல்காட்டு இளைஞர்கள் அண்மையில் கொலைவெறித் தாக்குதல் நடத்தியுள்ளனர். இதில் படுகாயமடைந்த இளைஞன், யாழ் போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
இதையடுத்து இரண்டு பகுதி இளைஞர்களும் அடிக்கடி மோதிக் கொண்டிருக்கிறார்கள். பொலிசார் மோதலில் ஈடுபடுபவர்கள் பலரை கைது செய்த போதும், மோதல் நின்றபாடாக தெரியவில்லை.
இந்த நிலையில், நேற்று இரவு பனங்கட்டிக் கொட்டு இளைஞர்கள், சாவல்காட்டிற்குள் அதிரடியாக நுழைந்து தாக்குதல் நடத்தியுள்ளனர். சுமார் 10 மோட்டார் சைக்கிள்களில் வந்த இளைஞர்கள், சாவல்காட்டு பிரதேசத்திலுள்ள சில வீடுகளிற்குள் புகுந்து தாக்குதல் நடத்தியுள்ளனர்.
பெண் உள்ளிட்ட இருவர் காயமடைந்து மன்னார் பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
தாக்குதலினால் பீதியடைந்த மக்கள் அலறியடித்தபடி ஓடிச்சென்று, மன்னார் நீதிவானின் உத்தியோகபூர்வ வாசஸ்தலத்திற்கு முன்பாக ஒன்றுகூடினர்.
நடுவீதியில் மக்கள் அமர்ந்ததால், சம்பவ இடத்திற்கு வந்த பொலிசார் அவர்களை அப்புறப்படுத்தி, பொலிஸ் நிலையத்திற்கு சென்று முறைப்பாடு பதிவு செய்யுமாறு அறிவுறுத்தினர்.
பின்னர் சாவல்காட்டு மக்கள், பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்தனர். இதையடுத்து தாக்குதல் குழுவை சேர்ந்த சிலரை பொலிசார் கைது செய்துள்ளனர்.
வவுனியா நகரப் பகுதியில் தொற்றாளர்கள் அதிகரித்துவந்த நிலையில், பிரதான நகரம் உட்பட்ட 19 கிராம சேவையாளர்கள் பிரிவுகளில் தனிமைப்படுத்தல் ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்பட்டு முடக்கப்பட்டது. பின்னர் கடந்த 18 ஆம் திகதி வவுனியா நகர மத்தி தவிர்ந்த ஏனைய பகுதிகள் விடுவிக்கப்பட்டிருந்தன. இந்நிலையில், இன்றைய தினம் மில் வீதி தவிர்ந்த ஏனைய பகுதிகள் முற்றாக விடுவிக்கப்பட்டுள்ளன. இதேவேளை தனிமைப்படுத்தப்பட்ட வியாபார நிலையங்களும் மூடப்பட்டுள்ளதுடன் வவுனியா மொத்த வியாபார நிலையம் மூடப்பட்டுள்ளது.
கட்டுநாயக்க விமான நிலையத்தில் பணியாற்றும் பாதுகாப்பு அதிகாரிகள் 11 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளதாக விமான நிலைய மற்றும் விமான சேவை தலைவர் ஜீ.ஏ.சந்திரசிறி தெரிவித்துள்ளார். அவர்கள் தங்கள் பிரதேசத்திலேயே கொரோனா தொற்றுக்குள்ளாகியுள்ளனர். இந்த பாதுகாப்பு அதிகாரிகள் தங்கள் வீடுகளில் பாதுகாப்பு அதிகாரிகளின் கண்கானிப்பின் கீழ் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
தென்னிலங்கையில் 3 நாட்களில் 3 இடங்களில் திருமண நிகழ்வு நடத்திய புதுமண தம்பதிக்கு கொரோனா தொற்று. இந்த திருமண நிகழ்வுகள் பாதுக்க, வட்டரெக்க பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளன. இதன் காரணமாக 3 நிகழ்விலும் கலந்து கொண்ட நூற்றுக்கும் மேற்பட்டோர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக சுகாதார பிரவு தெரிவித்துள்ளது.
கட்டுநாயக்க விமான நிலையத்தை திறந்த பின்னர் இலங்கை வருவதற்காக 198 வெளிநாட்டவர்கள் விண்ணப்பித்துள்ளதாக குடிவரவு குடியகல்வு திணைக்களத்தின் பேச்சாளர் கயான மிலிந்த தெரிவித்துள்ளார். விசா விண்ணப்பித்த நபர்களின் தரவுகள் ஏற்கனவே சேரித்து வைக்கப்பட்டுள்ளன. எனினும் பாதுகாப்பு காரணத்திற்கமைய இலங்கைக்கு அழைக்க முடியாத நபர்களை தவிர்த்து ஏனைய அனைவரும் விசா வழங்கப்படும்.
ஜனவரி மாதம் 21ஆம் திகதிக்கு முன்னர் ஒன்லைன் மூலம் விசா விண்ணப்பிக்கும் செயற்பாடு நிறுத்தப்பட்டுள்ளது. எனினும் அந்த செயற்பாட்டை மீள ஆரம்பிக்குமாறு வெளிநாட்டவர்கள் கோரிக்கை விடுத்துள்ளது. கட்டுநாயக்க விமான நிலையம் திறக்கப்பட்டதனை தொடர்ந்து நாட்டிற்கு வரும் வெளிநாட்டவர்களுக்கு மத்தியில் தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தலான நபர்கள் உள்ளார்களா என ஆராயவதற்கு புலனாய்வு பிரிவினரால் விசேட பிரிவு நியமிக்கப்பட்டுள்ளது.
தங்கைக்கு திருமணம் முடிந்து பல வருடங்களுக்கு பிறகு, நடிகை காஜல் அகர்வால், தான் விரும்பியவரை இந்த கொரோனா ஊரடங்கு காலத்தில் கரம் பிடித்து இருக்கின்றார். நடிகை காஜல் அகர்வால் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களுடன் நடித்து பிரபலமானவர். தமிழ், தெலுங்கு, ஹிந்தி என்று அனைத்து மொழிகளிலும் தனது தடத்தை பதித்திருக்கிறார். "கணவரை உசுப்பேற்றும் காஜலின், ரொமான்டிக் லுக்.! பரிதவித்து போகும் ரசிகர்கள்.இதை தொடர்ந்து, தற்போது தமிழ் சினிமாவின் உலகநாயகன் கமல் ஹாசன் நடிப்பில் உருவாகிவரும் இந்தியன் 2 எனும் படத்தில் நடித்து வந்தார். கொரோனா காரணமாக படப்பிடிப்பு அனைத்தும் தேங்கி நிற்கின்றது, நடிகை காஜல் அகர்வாலுக்கு மும்பையில் கவுதம் என்பவருடன் திருமணம் நடைப்பெற்றது.
இந்த நிலையில், நடிகை காஜல் அகர்வால் தனது சமூக வலைதள பக்கத்தில் அவர் வெளியிட்டுள்ள புகைப்படம் தற்போது கடும் விமர்சனங்களை பெற்று வருகிறது. பாத்ரூமில் உறங்குவது போல அவர் வெளியிட்டிருக்கும் இந்த புகைப்படத்தை கண்ட நெட்டிசன்கள் உங்களுக்கு தூங்குவதற்கு வேறு இடமே கிடைக்கவில்லையா? இப்போ தான் கல்யாணம் ஆச்சு அதுக்குள்ள கணவர் கொடுமையா என்று கிண்டல் செய்து வருகின்றனர்.
இத்தாலியில் உள்ள சிசிலி தீவு பர்போலா பகுதியைச் சேர்ந்த 10 வயது சிறுமி, தனது குடும்பத்தாருடன் வசித்து வந்துள்ளார். இந்நிலையில், கடந்த புதன்கிழமை அன்று குளியறையில் மர்மமான முறையில் இறந்து கிடந்துள்ளார். அக்கா குளிக்க சென்று நீண்ட நேரமாகியும் வரவில்லை என்று, சிறுமியின் தங்கை சென்று பார்க்கையில், அவர் தரையில் விழுந்து கிடந்துள்ளார். இதனையடுத்து பெற்றோர்களுக்கு தகவல் தெரிவிக்கவே, உடனடியாக சிறுமியை மீட்டு அங்குள்ள மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். ஆனால், சிகிச்சை பலனின்றி சிறுமி பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இந்த விஷயம் தொடர்பாக காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்ட நிலையில், பத்து வயதுடைய சிறுமி டிக் டாக் செயலியில் பிளாக்அவுட் சேலஞ்ச் (Blackout Challange) என்ற விளையாட்டை விளையாடி வந்தது தெரியவந்துள்ளது.
மேலும், இந்த சவாலில் ஈடுபடுவோர் கைபேசி முன் நின்று தங்களின் கழுத்தை பெல்டால் இறுக்கி கட்டிக்கொள்ள வேண்டும். பின்னர், அந்த நபருக்கு மயக்கம் தெளியும் வரை, அந்த பெல்ட் கழுத்திலேயே இருக்க வேண்டும். இவை அனைத்தும் தங்கள் கைபேசியில் உள்ள டிக் டாக் செயலியில் வீடியோவாக பதிவு செய்ய வேண்டும் என்ற நிபந்தனை இருந்துள்ளது. இந்த ஆபத்தான சவாலை ஏற்ற சிறுமி மூச்சுத்திணறல் ஏற்பட்டு, மயக்கமடைந்து உயிரிழந்தது தெரியவந்துள்ளது. இந்த துயரத்தை தொடர்ந்து இத்தாலியில் டிக் டாக் செயலிக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளதாக தகவல் தெரியவருகிறது.
###நெல்லியடி நகரில் பழைய கட்டடத்தில் இயக்கிக் கொண்டிருந்த தரன் நகையகம் இன்று காலை பத்து மணிக்கு புதிய கட்டடத்தில் புதிய தோற்றத்துடன் திறந்து வைக்கப்பட்டது.###
##கடல் மீது வீழ்ந்தோர்கள் நீந்துங்கள் நல்ல கனி மீது வீழ்ந்தோர்கள் உண்ணுங்கள்..வழிச்சாலை செல்வோர்கள் செல்லுங்கள்..போக வழியின்றி நிற்பவர்கள் நில்லுங்கள்..கல்போட்டு கால் தடுக்கி வீழுகின்ற மனிதா...காலமிட்ட கட்டளையை மாற்றுவது எளிதா..?##
***** கவிஞர் கண்ணதாசன் எழுதிய அற்புதமான வரிகள்*****
பருத்தித்துறை நகரப் பகுதியில் வசித்து வந்த மூதாட்டி ஒருவர் காணாமல் போயிருந்த நிலையில் இன்று முற்பகல் பருத்தித்துறை துறைமுக கடலில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
சம்பவம் குறித்து தெரிய வருகையில், பருத்தித்துறை நகரப் பகுதியில் துறைமுகத்திற்கு அண்மையில் வசித்து வந்த சிவபிரகாசம்-புனிதவதி (வயது-80) என்ற மூதாட்டி அதிகாலை முதல் காணமல் போயிருந்தார்.
வீட்டில் குறித்த மூதாட்டி இல்லாத நிலையில் அயல் பகுதியெங்கும் குடும்பத்தினர் தேடிவந்த போது பருத்தித்துறை துறைமுக பகுதி கடலில் சடலமொன்று காணப்படுவதை அவதானித்துள்ளனர்.
இதையடுத்து பருத்தித்துறை பொலிஸாருக்கு தகவல் வழங்கியதன் அடிப்படையில் கடலில் காணப்பட்ட குறித்த சடலம் மீட்கப்பட்டு கரைக்கு கொண்டுவரப்பட்டுள்ளது.
இவ்வாறு மீட்கப்பட்ட சடலம் காணாமல் போயிருந்த மூதாட்டியுடையது என குடும்பத்தவர்கள் உறுதிப்படுத்தியிருந்தனர்.
பின்னர் பருத்தித்துறை நீதவான் நீதிமன்ற பதில் நீதவான் நடராசா-ரஜீவன் முன்னிலையில் சடலம் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டு சம்பவம் தொடர்பில் விசாரணை முன்னெடுக்கப்பட்டுள்ளது.
அதன் பின்னர், பதில் நீதவான் பணிப்பின் பிரகாரம் பிரேத பரிசோதனைக்காக சடலம் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.
இலங்கையில் கடந்த 24 மணித்தியாலயங்களுக்குள் தனிமைப்படுத்தல் சட்டத்தை மீறிய 09 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
முகக்கவசம் அணியாமை, சமூக இடைவௌியை கடைபிடிக்கமை தொடர்பில் குறித்த நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.
கடந்த வருடம் ஒக்டோபர் மாதம் 30 ஆம் திகதி முதல் இதுவரையில் 2734 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இலங்கையில் மேலும் 492 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
இவர்கள் அனைவரும் ஏற்கனவே கொரோனா தொற்றுக்கு உள்ளானவர்களுடன் தொடர்பில் இருந்தவர்கள் என இராணுவ தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.
அதனடிப்படையில் இன்றைய தினம் இதுவரையில் 841 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
ஆந்திர மாநிலம் திருப்பதி திருமலையில் அமைந்துள்ள ஏழுமலையான் கோயிலுக்கு நாள்தோறும் ஏராளமானோர் நன்கொடை அளித்து வருகின்றனர். தரிசனத்திற்கு வரும் பக்தர்கள் மட்டுமின்றி பல்வேறு தனியார் நிறுவனங்களும், அறக்கட்டளைகள், தொண்டு நிறுவனங்கள், பிரபலங்கள் வாரி வாரி நன்கொடை வழங்குகின்றனர். அந்த வகையில் சாந்தா பயோடெக்னிக்ஸ் நிறுவனத்தின் தலைவர் கே.எல். வரபிரசாத் ரெட்டி தனது மனைவியுடன் திருப்பதிக்கு சென்று ஒரு கோடி ரூபாய்க்கான காசோலையை வழங்கியுள்ளனர்.மூன்று, நான்கு மாதங்களில் SVBC ட்ரஸ்டிற்கு 14.5 கோடி ரூபாய் பணம் நன்கொடையாக கிடைத்துள்ளது.