Added a news
இத்தாலியின் ரோம் நகரில் உள்ள டெஸ்லா டீலர்ஷிப் விற்பனையகத்தில் நேற்றைய தினம் ஏற்பட்ட தீ விபத்தில் 17 டெஸ்லா கார்கள் தீக்கிரையாகியுள்ளன.
இத் தீ விபத்து ஏற்பட்டபோது விற்பனையகத்தில் யாரும் இல்லை எனக் கூறப்படுகின்றது. மேலும் இத் தீ விபத்துக்கான காரணம் இது வரை வௌிவராத நிலையில், பொலிஸார் இது குறித்த தீவிர விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
இதனிடையே, டெஸ்லா கார் விற்பனையகத்தில் ஏற்பட்ட தீவிபத்து பயங்கரவாத தாக்குதல் என உலகின் மிகப் பெரும் செல்வந்தரும், டெஸ்லா நிறுவனத்தின் உரிமையாளருமான எலான் மஸ்க் குற்றம்சாட்டியுள்ளார்.
எலான் மஸ்க்கின் அரசியல் விமர்சனங்கள் காரணமாக ஐரோப்பாவில் டெஸ்லா கார்களின் வீழ்சியை சந்தித்து வருவதோடு இத்தாலி முழுவதும் டெஸ்லா வாகனங்கள் சேதப்படுத்தப்படும் சம்பவங்களும் இடம்பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது
- 446