Added a post
- அகவழிபாடு (தன்நலம் சார்ந்தது) விஷ்ணு லட்சுமி தரிசனம் பூர்த்தி கொடுக்கும்,
- புறவழிபாடு (பிறர்நலம் சார்ந்தது) சிவதரிசனம் அதை கொடுக்கும்,
- பற்றுள்ள லோக சந்தோஷ வாழ்க்கை லட்சுமி பூஜை கொடுக்கும் தேவையை பூர்த்தி செய்யும் .
- பற்றற்ற பந்தம் அருளுக்கும் மோட்ச வாழ்க்கையை சிவ வழிபாடு கொடுக்கும் .
- வாழ்பவரை கேட்டால் குறிப்பாக இளைய வயதினர் (45 வயதிற்குள் என வைத்துக் கொள்ளலாம்) வாழ்க்கை வாழ்வதற்கே என கூறுவர்,
- வாழ்ந்து முடித்தவர் மோட்ச வாழ்வையே விரும்புவர்,
- மனம் சலித்து போனவர். வாழ்வை வெறுத்தவர்கள், வேதனை அடைந்து சோர்ந்து போனவர்கள் பித்து பிடித்து உணவு உடை வெறுத்து இந்த உலகமே மாய லோகம் இங்கு மீண்டும் பிறந்து விடக்கூடாது என வேதனைபடும் நிராசையாளர்கள் சிவ வழிபாட்டில் நிறையபேர் இருப்பார்கள் .
- இதில் எந்த வயதினரும் அடங்குவர் .
- சிவ வழிபட்டாளர்கள் பொதுவாக சந்தோஷங்களை குறைத்து
- கொள்பவர்களாகவோ தர்ம ஈடுபாடு அதிகம் உள்ளவர்களாகவோ. வேதாந்தம் பேசுபவர்களாகவும். இளமை போராட்டத்தை பக்தி நெறியில் தனித்து கொள்பவர்களாகவும் இருப்பார்கள்.
- சிவதத்துவம் மோட்சத்திற்குரியது, எனவே தனித்த அலங்காரமற்ற சிவலிங்கத்தை கண்டு வணங்குபவர்கள் நிச்சயம்
- உலகியல் வாழ்வியல் இருந்து சந்தோஷங்களை நிராகரிப்பதோ அல்லது பெற தவறும் நிலையோ உண்டாகும் .
- எனவே சிவ ப்ரியர்களில் நன்கு சந்தோஷமாக வாழவேண்டும் என்று நினைப்பவர்கள் சிவசக்தி சேர்ந்த ஆலயத்தில் அலங்காரம் நிறைந்த லிங்க தரிசனத்தை கண்டு வழிபடவேண்டும் .
- அலங்காரம் இல்லையென்றாலும் அலங்கரிக்கும் வரை நீங்கள் காத்திருந்தே வழிபட வேண்டும், அல்லது அலங்கரிக்கும் சூழல் அவ்வாலயத்தில் இல்லையெனில் நீங்கள் மாலை மற்றும் பூஜை பொருட்கள் வாங்கிச் சென்று அலங்கரித்தாவது வழிபடவேண்டும்,
- அப்போது தான் நன்மை, இல்லையெனில் மோட்ச வரம்
- கிட்டும் (துன்பப்பட்டு. எல்லா அனுபவங்களையும் கண்டு மோட்சம் பெறுவது),
- அலங்கார சிவதரிசனம் கண்டால் வாழும் வரம் கிட்டும், (தேவைகள் பூர்த்தி அடைந்து சந்தோஷ வாழ்வு கிட்டும்) லட்சுமி கடாட்சரமாக வாழலாம் .
- பாவிகளுக்கு சிவாலயத்தில் எந்நேரமும் இடமில்லை ,மீறினால் துன்ப வாழ்வே உண்டாகும் .
- பாவிகளுக்கு சிவராத்திரியும். பிரதோஷ வேளையிலும்,ஜென்ம நட்சத்திர வேளையும். தமிழ் மாத முதல் நாளும். கிரஹண வேளையில் மட்டுமே அனுமதி,
- அவ்வேளையில் சிவதரிசனம் கண்டால் அவர்கள் பாவம் களைய வழி கிடைக்கும்,
- பாவிகள் சிவாலயத்தில் வேண்டுதல் வைக்க கூடாது .
- குறிப்பாக பிரதோஷ வேளையில் அவ்வாறு வேண்டுதல் வைப்பது முறையல்ல,
- (தான் பாவியா இல்லையா என்பதை அவரவர் அனுபவ வாழ்க்கையை வைத்து முடிவு செய்யப்பட வேண்டும்)
- தர்மவான்கள். புண்ணியர்கள். அன்பை வளர்க்க கூடியவர்கள். கள்ள கபடு அற்றவர்கள். சுத்த சைவர்கள். பிறநலம் கொண்டவர்கள் அனைவரும் எப்பொழுதும் எவ்வேளையும் சிவசக்தி தரிசனம் செய்யலாம்
- சொர்ண சக்தி. சுபிக்ஷ சக்தி பெறலாம் . சிவ தரிசனம் புண்ணிய தரிசனம் . இதை பெற புண்ணியம் நாமும் செய்ய வேண்டும், அப்போதுதான் சிவபலன் கிட்டும்,
- இந்த தகுதி இருந்தால்தான் வாழும் வரம் பெற்று சம்சாரியாய் ஆவோம், இல்லையேல் சன்யாசம் கலந்த சம்சார வாழ்க்கையே ஏற்படும் .
- லட்சுமிபதி கடாட்சம் தர்மத்திலும். ஆலய தரிசனத்திலும் தாண்டவமாடும், ஆனால் வீட்டில் ஆடாது, நித்திரை லட்சுமியே தாண்டவமாடுவாள்.
- எனவே சிவ தரிசனம் கண்டு பலன் பெற துடிப்பவர்கள் புண்ணிய தர்மங்களை செய்து செல்லுங்கள் செல்வ சந்தோஷத்தை ஆளுங்கள் .
- உயிரே சிவம். உடலே விஷ்ணு. உயிருக்கு தேவை மோட்சம்.
- உடலுக்கு தேவை சந்தோஷம்,
- யாருக்கு எது தேவையோ அதை பரிபூரணமாய் நாடுங்கள், இரண்டும் தேவையெனில் ஒவ்வொரு காலகட்டத்தில் அதை வரமாக பெறுங்கள்,
- வரம் பெற ஏதுவாக ஆரம்பத்தில் இருந்தே தர்மம் செய்யுங்கள், அப்போதுதான் மோட்ச லட்சுமியும் கிடைப்பாள், கூடவே சுபிக்ஷ லட்சுமியும் கிடைப்பாள்,
- மனம் செம்மையானால் அங்கு ஐஸ்வர்ய லட்சுமி குடி கொள்வாள் .
- 538