Feed Item
Added a news 

அரச மற்றும் அரச அனுமதியின் கீழ் இயங்கும் தனியார் பாடசாலைகளின் 2025 ஆம் ஆண்டிற்கான முதலாம் தவணையின் இரண்டாம் கட்டம் இன்று ஆரம்பமாகின்றது.  

முன்பதாக முதலாம் தவணையின் முதல் கட்டம் மார்ச் மாதம் 14 ஆம் திகதி நிறைவடைந்தது.

மார்ச் மாதம் 17 ஆம் திகதி ஆரம்பமான கல்வி பொதுத்தராதர சாதாரண தரப்பரீட்சை காரணமாக இந்த விடுமுறை வழங்கப்பட்டது.

இதேவேளை, நாட்டில் உள்ள சகல முஸ்லிம் பாடசாலைகளுக்கும் இன்றையதினம் விடுமுறை வழங்கப்பட்டுள்ளது.  நோன்பு பண்டிகையை முன்னிட்டு இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டது.

இன்றையநாளுக்கான கற்றல் செயற்பாடுகள் இடம்பெறும் திகதி பின்னர் அறிவிக்கப்படும் எனக் கல்வி அமைச்சு முன்னதாக அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

000

  • 524