தமிழ்பூங்காவில் சேர்ந்து உங்கள் பதிவுகளை பதிவிடுங்கள். ஒவ்வொரு பதிவிற்கும் புள்ளிகள் கிடைக்கும். உங்கள் புள்ளிகளைப் பயன்படுத்தி பரிசுகளைப் பெறுங்கள்.
Added a news
புதிய மின் கட்டண சீராக்கம் தொடர்பான யோசனையை, இலங்கை மின்சார சபை இம்மாதம் 15ம் திகதி இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவிற்கு வழங்கவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. இந்த ஆண்டின் இரண்டாவது மின் கட்டண சீராக்கம் தொடர்பான யோசனையாக இது அமையவுள்ளது. இதன்படி புதிய மின்சார கட்டண சீராக்கம் எதிர்வரும் ஜூன் அல்லது ஜூலை மாதங்களில் அமுலாகும் என்று இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தகவல்கள் தெரிவிக்கின்றன. மின்சார கட்டணமானது அதன் செலவுகளைப் பிரதிபலிக்கும் வகையில் அமைய வேண்டும் என்று, சர்வதேச நாணய நிதியம் அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.000
Added a news
நடைபெற்று முடிந்த உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் புத்தளம் மாவட்டத்தின் வன்னாத்தவில்லு பிரதேச சபைக்கு வேட்பாளர் ஒருவர் நாணய சுழற்சியில் உறுப்பினராக தெரிவு செய்யப்பட்டுள்ளார். ஐக்கிய மக்கள் சக்தியின் சார்பில் வன்னாத்தவில்லு வட்டாரத்தில் போட்டியிட்ட வேட்பாளர் ஒருவரே இவ்வாறு நாணய சுழற்சியில் உறுப்பினராக தெரிவு செய்யப்பட்டுள்ளார். புத்தளம் மாவட்டத்தின் வன்னாத்தவில்லு பிரதேச சபைக்கு வன்னாத்தவில்லு வட்டாரத்தில் போட்டியிட்ட தேசிய மக்கள் சக்தி மற்றும் ஐக்கிய மக்கள் சக்தி ஆகிய கட்சிகளின் இரண்டு வேட்பாளர்களும் தலா 320 வாக்குகளைப் பெற்றுக்கொண்டனர். இதனையடுத்து, இரண்டு வேட்பாளர்களின் சம்மதத்துடன் அங்கு நாணய சுழற்சி இடம்பெற்றது. குறித்த நாணய சுழற்சியில் ஐக்கிய மக்கள் சக்தியின் வேட்பாளர் வெற்றி பெற்றதுடன், உறுப்பினராகவும் தெரிவு செய்யப்பட்டுள்ளார். இதேவேளை உள்ளூராட்சி மன்ற தேர்தலில் ஒரே குடும்பத்தை சேர்ந்த இரு சகோதரர்கள் ஐக்கிய மக்கள் சக்தி சார்பில் போட்டியிட்டு வெற்றியீட்டியுள்ளார்கள். கிண்ணியா நகர சபைக்கான உள்ளூராட்சி மன்றத்தில் றஹ்மானியா வட்டாரத்தில் எம்.எம்.மஹ்தி மற்றும் மாஞ்சோலை வட்டாரத்தில் ரசாட் முஹம்மட் ஆகியோர்களுமே வெற்றி பெற்றுள்ளனர்.000
Added a news
2025 உள்ளூராட்சி தேர்தல்களில் போட்டியிட்ட அனைத்து வேட்பாளர்களும் மே 28 ஆம் திகதி அல்லது அதற்கு முன்னர் தங்கள் பிரச்சார வருமானம் மற்றும் செலவு அறிக்கைகளை சமர்ப்பிக்க வேண்டும் என்று தேர்தல் ஆணைக்குழு அறிவித்துள்ளது.இந்த அறிக்கைகள் அந்தந்த தேர்தல் மாவட்டங்களின் தேர்தல் அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட வேண்டும்.தேர்தல் செயல்பாட்டில் வெளிப்படைத்தன்மை மற்றும் பொறுப்புக்கூறலை உறுதி செய்வதற்கான ஆணையத்தின் முயற்சிகளின் ஒரு பகுதியாக இந்த செயல்முறை இருப்பதாக தேர்தல் ஆணையர் தெரிவித்தார்.இருப்பினும், அறிக்கையிடல் தேவைகளைப் பூர்த்தி செய்யத் தவறும் வேட்பாளர்களுக்கு எதிராக அபராதங்களைச் செயல்படுத்துவதில் குறிப்பிடத்தக்க இடைவெளி இருப்பதாக ஜனநாயக சீர்திருத்தங்கள் மற்றும் தேர்தல் கண்காணிப்பு நிறுவனத்தின் (IRES) நிர்வாக பணிப்பாளர் மஞ்சுள கஜநாயக்க சுட்டிக்காட்டினார்.தேர்தல் செயல்முறையின் நேர்மையை நிலைநிறுத்த, இணங்காத வேட்பாளர்கள் மீது நடவடிக்கை எடுக்க தெளிவான சட்ட விதிகள் மற்றும் வழிமுறைகள் தேவை என்பதை கஜநாயக்க வலியுறுத்தினார்000
Added a news
தேர்தல் ஆணையகம் இலங்கை உள்ளுரதிகார சபைத் தேர்தல்களை வெற்றிகரமாக நடத்தி முடித்த நிலையில், தாமதமின்றி சட்டப்பூர்வமாக பெண்களுக்கு கிடைக்கக் கூடிய உறுப்பினர்களுக்கான 25 சத விகித சட்டபூர்வ ஒதுக்கீட்டை பூர்த்தி செய்யும் செயல்முறையை தொடங்க வேண்டும் என நாட்டிலுள்ள 34 தன்னார்வ அமைப்புகள் கூட்டாக வேண்டுகோள் விடுத்துள்ளன.இது தொடர்பாக தேர்தல் ஆணையத் தலைவருக்கும் ஆணைக்குழுவின் மற்ற உறுப்பினர்களுக்கும் தன்னார்வ அமைப்புக்கள் கையெழுத்திட்டு கூட்டாக அனுப்பி வைத்துள்ளனர்.குறித்த வேண்டுகோளில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,இம்முறை இடம்பெற்ற உள்ளூர் அதிகார சபை தேர்தலில் குறைந்த வாக்காளர் எண்ணிக்கை இருந்தபோதிலும், பிரசாரம் செய்தல், வாக்களித்தல், போட்டியிடுதல் இருப்புப் அனைத்து அம்சங்களிலும் - பெண்கள் வெளிப்படையாகவே தீவிரமாக இருந்தனர்.முந்தைய உள்ளாட்சி மன்றங்களைச் சேர்ந்த பல அனுபவம் வாய்ந்த பெண்கள், கட்சி ஒப்புதல் மூலமாக மறுக்கப்பட்டபோது இம்முறை அவர்கள் சுயாதீனமாக போட்டியிட்டனர்.இந்தத் தேர்தல் பெண்கள் வாக்குகளைப் பெறுவதிலும், உள்ளூர் அரசியலில் மீண்டும் நுழைவதிலும் நம்பிக்கைக்குரிய அதிகரிப்பைக் குறிக்கிறது.இருப்பினும், பல கட்சிகள் ஒன்று அல்லது இரண்டு இடங்களை மட்டுமே பெற்றுள்ளதால், “ஒவ்வொரு மூன்று இடங்களுக்கும் ஒரு பெண்” எனும் தேவையை நிறைவேற்றுவதை மிகவும் சிக்கலாக்கியுள்ளது.கடந்த கால போக்குகள், வரம்பு பூர்த்தி செய்யப்பட்டாலும் கூட, பெண்களை பரிந்துரைக்கும் கட்சிகள் தயக்கம் காட்டுகின்றன.மேலும் முந்தைய தேர்தல்களில், சில உள்ளூர் அதிகாரிகள் 25 சதவீத ஒதுக்கீட்டை முழுவதுமாக வழங்கத் தவறிவிட்டனர்.உள்ளூர் அதிகாரசபை தேர்தல்கள் சட்டத்தின் 2017 திருத்தத்தின்படி, தேர்தல் ஆணையம், 25 சதவீத பெண்களுக்கான ஒதுக்கீடு நிறைவேற்றப்படுவதை உறுதி செய்ய வேண்டும் சட்டப்பூர்வமாகக் கடமைப்பட்டுள்ளது.இதில், முதல் – பின் - பதிவு முறை மூலம் தேர்ந்தெடுக்கப்படாத பெண்களுக்கு ஈடுசெய்ய விகிதாசார பிரதிநிதித்துவப் பட்டியலைப் பயன்படுத்துவதும் அடங்கும்.ஒவ்வொரு உள்ளூர் சபையிலும் இளம் பெண்கள் உட்பட குறைந்தது 25 சதவீதம் பெண்கள் இருப்பதை உறுதிசெய்வது எனும் இணக்கப்பாட்டை கண்டிப்பாக அமுல்படுத்த வேண்டும் வேண்டும்.ஒரு கட்சி இரண்டு இடங்களைப் பெறும் போது, குறைந்தபட்சம் ஒரு பெண்ணுக்கு பிரதிநிதித்துவம் ஒதுக்கப்பட வேண்டும் என்ற தேர்தல் ஆணையம் வலியுறுத்த முடியும், வலியுறுத்த வேண்டும்.ஒதுக்கீட்டை நிறைவேற்றத் தவறும் அரசியல் கட்சிகள் பகிரங்கமாகப் பொறுப்பேற்கப்பட வேண்டும்.பெண்களுக்கான 25 சதவீத ஒதுக்கீட்டை அமுல்படுத்துவது, உள்ளூர் நிர்வாகத்தில் பாலின பிரதிநிதித்துவத்தை நிலைநிறுத்துவதும் தேர்தல் ஆணையத்தின் சட்டபூர்வ நெறிமுறைக் கடமையாகும் என்பதை வலியுறுத்த விரும்புகிறோம்.” என அதில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.இந்நிலையில் கடந்த உள்ளூராட்சி மன்றத் தேர்தல்களில் பெண்களுக்கான இட ஒதுக்கீடு 21.80 சதவீதமாக அமுல்படுத்தப்பட்டது என்றும் அது பெண்களுக்கான இட ஒதுக்கீடு ஒதுக்கீட்டை வழங்கும் 25 சதவீதம் எந்த நடைமுறையை முழுமையாக அமுலாக்கவில்லை என்பதையும் கவனத்திற் கொண்டு இம்முறையும் அவ்வாறே புறக்கணிக்கப்படுமாயின், இது விடயமாக அடிப்படை உரிமைகளை வலியுறுத்தி உயர்நீதிமன்றம் செல்ல தயார் செய்வதாக பெண்கள் செயல்பாட்டு வலையமைப்பின் ஸ்தாபகரும் மனித உரிமைகள் செயற்பாட்டாளருமான ஷிரீன் ஷரூர் தெரிவித்துள்ளார்.00
Added a news
கார்டினல் ரொபர்ட் பிரீவோஸ்ட் அடுத்த போப்பாக தேர்ந்தெடுக்கப்பட்டார். அமெரிக்காவிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் போப்பாண்டவர் இவர் ஆவார். அவர் போப் லியோ XIV என்ற பெயரைத் தேர்ந்தெடுத்தார்.அமெரிக்க கார்டினல் ரொபர்ட் பிரீவோஸ்ட் போப் லியோ XIV ஆக நியமிக்கப்பட்டுள்ளார் என்ற அறிவிப்பு உலகம் முழுவதும் நம்பிக்கையுடன் கூடிய உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.ஏராளமான நாடுகளின் தலைவர்கள் தங்கள் வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளனர். 69 வயதான ரொபர்ட் பிரீவோஸ்ட், செயிண்ட் பீட்டர் சிம்மாசனத்தின் 267 ஆவது தலைவராக இருப்பார். போப் பதவியை வகிக்கும் முதல் அமெரிக்கர் இவர்தான்.எனினும், அவர் பெருவில் ஒரு மிஷனரியாக பல ஆண்டுகள் கழித்ததன் காரணமாக, அங்கு பிஷப்பாக மாறுவதற்கு முன்பு லத்தீன் அமெரிக்காவிலிருந்து ஒரு கார்டினலாகக் கருதப்படுகிறார்.ஸ்பானிஷ் மற்றும் பிராங்கோ-இத்தாலிய வம்சாவளியைச் சேர்ந்த பெற்றோருக்கு 1955 இல் சிகாகோவில் பிறந்த பிரீவோஸ்ட், பலிபீடப் பையனாகப் பணியாற்றினார். 1982 இல் பாதிரியாராக நியமிக்கப்பட்டார்.மூன்று ஆண்டுகளுக்குப் பின்னர் அவர் பெருவுக்குச் சென்றாலும், அவர் தனது சொந்த நகரத்தில் ஒரு போதகராகவும், ஒரு முன்னோடியாகவும் பணியாற்ற அமெரிக்காவிற்குத் தொடர்ந்து திரும்பி வந்தார்.அவர் பெருவியன் குடியுரிமை பெற்றவர், மேலும் ஓரங்கட்டப்பட்ட சமூகங்களுடன் பணியாற்றிய மற்றும் தொடர்புகளை பேண உதவிய ஒரு நபராக அன்புடன் நினைவுகூரப்படுகிறார்.அவர் உள்ளூர் திருச்சபை போதகராகவும், வடமேற்கு பெருவில் உள்ள ட்ருஜிலோவில் உள்ள ஒரு செமினரியில் ஆசிரியராகவும் 10 ஆண்டுகள் பணியாற்றினார்.லத்தீன் அமெரிக்காவில் உள்ள ஆயர்களுக்கான டிகாஸ்டரியின் தலைமைப் பொறுப்பாளராக அவர் வகித்த உயர் பதவி காரணமாக அவர் கார்டினல்களுக்கு நன்கு அறியப்பட்டவர்.இந்த அமைப்பு ஆயர்களைத் தேர்ந்தெடுத்து மேற்பார்வையிடும் முக்கியமான பணியைக் கொண்டுள்ளது.2023 ஜனவரியில் அதே நேரத்தில் அவர் பேராயரானார். மேலும் சில மாதங்களுக்குள் பிரான்சிஸ் அவரை ஒரு கார்டினலாக ஆக்கினார்.தன்னை கத்தோலிக்க திருச் சபையின் தலைவராக தேர்ந்தெடுத்ததற்காக சக கார்டினல்களுக்கு நன்றி தெரிவித்த அவர், இத்தாலியன், ஸ்பானிஷ் மற்றும் லத்தீன் மொழிகளில் பேசினார்.மறைந்த போப் பிரான்சிஸைப் பற்றியும் அவர் அன்புடன் பேசினார், மேலும் கூட்டத்தை ஜெபத்தில் வழிநடத்தி முடித்தார்.சிஸ்டைன் தேவாலயத்தின் மேல் உள்ள புகைபோக்கியில் இருந்து வெள்ளை புகை வெளியேறிய பின்னர் புனித பீட்டர்ஸ் பசிலிக்காவின் பால்கனியில் தோன்றினார். இது உள்ளே இருந்த 133 கார்டினல்கள் ஒரு புதிய போப்பைத் தேர்ந்தெடுத்ததைக் குறிக்கிறது.000
Added a news
இலங்கை விமானப்படைக்கு சொந்தமான பெல் 212 உலங்குவானூர்தி ஒன்று இன்று காலை விபத்துக்குள்ளானது. ஹிங்குரக்கொட முகாமில் இருந்து பயிற்சிக்காக புறப்பட்ட குறித்த உலங்குவானூர்தி மாதுரு ஓயாவில் விபத்துக்குள்ளானதாக விமானப்படை பேச்சாளர் விங் கமாண்டர் எரந்த கீகனகே தெரிவித்துள்ளார். உலங்குவானூர்தியின் விமானிகள் இருவரும் பாதுகாப்பாக இருப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார் இந்த உலங்குவானூர்தியில் விமான கட்டுப்பாட்டாளர்கள் இருவர் உட்பட 11 பேர் பயணித்துள்ளனர். அவர்களில் 9 பேர் பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளதாக விமானப்படை பேச்சாளர் தெரிவித்துள்ளார்000
Added article
கோரஸ் பாடகியாக இருந்த ஆண்ட்ரியா, பச்சைக்கிளி முத்துச்சரம் படம் மூலம் அறிமுகமானவர். தொடர்ந்து தனது கதாபாத்திரத்திற்கு முக்கியத்துவம் உள்ள படங்களில் நடித்து வருகிறார். மேலும் ஒரு திறமையான பாடகி. பல்வேறு திரைப்பட பாடல்களையும் பாடியிருக்கிறார்.நடிப்புக்கு முக்கியத்துவம் உள்ள கதாபாத்திரங்களில் நடித்து தீவிர சினிமா ரசிகர்கள் மத்தியில் இடம்பிடித்துள்ள ஆண்ட்ரியா, சமூகவலைதளங்களில் வெளியிடும் புகைப்படங்கள் லட்சக்கணக்கில் ரசிகர்களைக் கவர்ந்து வருகின்றன. இந்நிலையில் தற்போது அவர் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.
Added article
நடிகர் சந்தானம் காமெடியனாக இருந்து கதாநாயகனாக முன்னேறி ஓரளவுக்கு தடம் பதித்து வருகிறார். அதில் ஒரு படம் ஹிட்டானால், நான்கு படங்கள் ப்ளாப் ஆகிறது. அதனால் சந்தானம் ஹீரோவாக நடித்து சம்பாதித்ததை விட இழந்ததுதான் அதிகம் என சொல்லப்படுகிறது. ஏனென்றால் அவர் ஹீரோவாக நடித்த படங்கள் நடித்த பெருவாரியானப் படங்களை அவரே தயாரித்திருந்தார். அவர் நடித்து வரும் ‘தில்லுக்கு துட்டு’ வகைப் படங்கள் தொடர்ச்சியாக வெற்றி பெற்று வருகின்றன. தற்போது சந்தானம் டி டி நெக்ஸ்ட் லெவல் படத்தினல் நடித்துள்ளார். இந்த படம் மே 16 ஆம் தேதி ரிலீஸாகவுள்ளது. இந்த படத்தில் சந்தானத்துடன் யாஷிகா ஆனந்த், கஸ்தூரி மற்றும் கௌதம் மேனன் ஆகியோர் நடித்துள்ளனர். பிரேம் ஆனந்த் இயக்கியுள்ளனர்.இந்த படத்தை அவரின் நெருங்கிய நண்பர் ஆர்யா தயாரித்துள்ளார். சமீபத்தில் வெளியான டிரைலர் இணையத்தில் கவனம் பெற்றது. இந்த படம் சென்சார் செய்யப்பட்ட நிலையில் படத்துக்கு UA சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது.
Added article
'லியோ', 'விக்ரம்', 'கைதி' ஆகிய படங்களை இயக்கிய லோகேஷ் கனகராஜ் கூலி படத்தை இயக்குகிறார். ரஜினியுடன் பல்வேறு மொழிகளில் இருந்தும் நட்சத்திரங்கள் நடிக்கின்றனர். இப்போது படத்தில் நடிக்கும் நடிகர்களின் சம்பளம் குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளன. சன் பிக்சர்ஸ் சார்பில் கலாநிதி மாறன் இந்தப் படத்தைத் தயாரிக்கிறார். ரஜினிகாந்துக்கு கிடைக்கும் சம்பளம் அதிர்ச்சியளிக்கிறது. அதன்படி, படத்தின் பட்ஜெட் ரூ.400 கோடி. பட்ஜெட்டில் பாதிக்கும் மேல் ரஜினியின் சம்பளம். ரூ.260-280 கோடி வரை ரஜினி சம்பளமாகப் பெறுவதாகத் தகவல். லோகேஷ் கனகராஜுக்கும் அதிக சம்பளம். படத்தை இயக்குவதற்கு லோகேஷுக்கு ரூ.60 கோடி சம்பளம் வழங்கப்பட்டு உள்ளதாம். சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் 'ஜெயிலர்' படத்தின் மிகப்பெரிய வெற்றிக்குப் பிறகு ரஜினி நடிக்கும் படம் 'கூலி'. தமிழ் சினிமாவின் எல்லாக் காலத்திலும் மிகப்பெரிய வெற்றிப் படங்களில் ஒன்றாக 'ஜெயிலர்' இருந்தது. உலகளவில் ரூ.600 கோடிக்கும் மேல் வசூலித்தது. 'கூலி'யைப் பொறுத்தவரை, பாக்ஸ் ஆபிஸ் வசூலைத் தவிர மற்ற வருவாய் வழிகளும் சன் பிக்சர்ஸுக்குப் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளன. 'ஜெயிலர்' படத்தை விட அதிக OTT ஒப்பந்தத்தை 'கூலி' பெற்றுள்ளதாக ஏற்கனவே தகவல்கள் வெளியாகியிருந்தன.
Added a news
கனடாவின், யுகான் மாகாண முதல்வர் ரஞ்ச் பிள்ளை நேற்று அவரது பதவியிலிருந்து விலகுவதாகவும், மீண்டும் தேர்தலில் போட்டியிடமாட்டார் என்வும் அறிவித்துள்ளார்.இந்த முடிவை எடுக்குமுன் அவர் தனது மகனுடன் யுகான் ஆற்றின் கரையில் முக்கிய உரையாடல் நடத்தியதாக கூறியுள்ளார்.“எங்களைப் போன்றவர்கள் இந்த பணியை செய்யக்கூடியவர்கள் என்பதை மக்கள் புரிந்துகொள்ள வேண்டுமென்று என் மகன் என்னிடம் கூறினார்,” என பிள்ளை கூறியுள்ளார்.ரஞ்ச் பிள்ளையின் தந்தை இந்தியாவைச் சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. முதல்வர் பதவி என்பது தனது வாழ்நாளிலேயே மிகப் பெரிய பெருமை என பிள்ளை குறிப்பிட்டார்.
Added a news
டொரண்டோவின் எடோபிகோ பகுதியில் காரும், மோட்டார்சைக்கிளும் நேருக்கு நேர் மோதி ஏற்பட்ட விபத்தில், ஒரு பெண் மோட்டார் சைக்கிள் ஓட்டுநர் படுகாயமடைந்துள்ளார்.இந்த விபத்து புதன்கிழமை பிற்பகல் 4:45 மணியளவில், கிப்லிங் அவென்யூ மற்றும் எக்லிங்டன் அவென்யூ மேற்கு சந்திப்பில் இடம்பெற்றதாக டொரண்டோ காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.விபத்தில் பெண் மோட்டார் சைக்கிள் ஓட்டுநர் ஒருவர் பலத்த காயங்களுடன், தீவிர சிகிச்சை மையத்துக்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளார் என்று காவல்துறையினர் கூறியுள்ளனர்.விபத்தில் ஈடுபட்ட மற்ற வாகனத்தின் ஓட்டுநர் சம்பவ இடத்திலேயே தங்கியிருந்தார் என்றும் காவல்துறையினர் உறுதிப்படுத்தியுள்ளனர். தற்போது இந்த விபத்துக்கான காரணம் வெளியிடப்படவில்லை. மேலதிக விசாரணைகள் நடைபெற்று வருகின்றன.
Added a news
பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தில் விமானநிலையம் அருகே டிரோன் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக பாகிஸ்தான் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்நிலையில் அடுத்தடுத்த டிரோன் தாக்குதலால் மக்கள் அச்சமடைத்துள்ளதாக கூறப்படுகின்றது.இந்த தாக்குதலை மேற்கொண்டது யார் என்ற தகவல் வெளியாகவில்லை. சம்பவத்தை அடுத்து லாகூர் விமான நிலயத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. மேலும் இந்த தாக்குதலில் சேத விபரங்கள் வெளியாகவில்லை.
Added a post
சேகர் கிராமத்திலிருந்து சென்னைக்கு படிக்க வந்தான்.. வந்தவன் சென்னையிலேயே தங்கியதால் நாகரீகம் ரெம்ப முற்றி அல்ட்ரா மாடனாக வாழ்ந்து வந்தான்.ஒருநாள் திடீரென்று அவனுடையஅம்மா கிராமத்திலிருந்து அவன் தங்கும் ப்ளாட்டிற்கு வந்துவிட்டார்.வந்தவர் சேகரும் ஒரு அழகான இளம் பெண்ணும் உட்கார்ந்துசாப்பிட்டுக் கொண்டிருப்பதைகண்டார்.அம்மா கேட்டார்.."யார் இது"?சேகர் சொன்னான்..."என் ரூம் மேட்மா"அம்மா.."அப்படின்னா"??"ரூம் மேட்னா கூட வசிக்கிற பொண்ணு.. நீ சந்தேகப்படுற மாதிரி வேற ஒன்னும் இல்லைமா.. வீட்டை மட்டும்தான் ஷேர் பண்றோம்.. அவ தனி பெட்ரூம் நான் தனிபெட்ரூம்."அம்மா மறுநாள் கிளம்பி கிராமத்திற்கு போய்விட்டார்..இரண்டு நாட்கள் கழித்து அவன் ரூம்மேட் சொன்னாள்; "உங்கம்மா வந்து போனதிலிருந்து தோசை கரண்டியை காணல, ஒரு வேளை உங்கம்மா எடுத்துபோயிருப்பாங்களோ?"சேகர் சொன்னான்.. "தெரியல எங்ககிராமத்து வீட்ல போன் இல்லை நான் எதுக்கும் லெட்டர் போட்டுகேக்குறேன்"அம்மாவுக்கு கடிதம் எழுதினான்.."அன்புள்ள அம்மா, நான் நீங்க இங்கே இருந்த தோசைக் கரண்டியை எடுத்தீங்கனும் சொல்லல்ல.. எடுக்கலைனும் சொல்லல்ல.. ஆனா ஒன்னுமட்டும் உண்மை.. என் வீட்டிலிருந்து நீங்க போனதற்கப்புறம் தோசைகரண்டியை காணவில்லை.."சில நாட்கள் கழித்து அம்மாவிடம் இருந்து பதில் கடிதம் வந்தது..அதை சேகர் பிரித்து படித்தான்.."அன்புள்ள மகனுக்கு.. நான் உன் கூட வசிக்கிற பொண்ணோடு தப்பா இருக்கிறேன்னும் சொல்லல்ல.. இல்லைன்னும் சொல்லல்ல.. ஆனா ஒன்று மட்டும் உண்மை.. அவ அவ பெட்ரூமில் தூங்கியிருந்தா இந்நேரம் அந்த தோசை கரண்டியை கண்டுபிடிச்சிருப்பா.."செத்தாண்டா சேகரு....!