Cinema
Latest Cinema
  •  · 
  •  ·  sivam
பாரதிராஜா இயக்கிய கண்களால் கைது செய் படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானவர் பிரியாமணி. ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்திருந்த அந்தப் படம் தோல்வி அடைந்தாலும் பிரியாமணிக்கு நல்ல அறிமுகமும், பெயரும் கிடைத்தன.நடிகை பிரியாமணி கோலிவுட் மற்றும் டோலிவுட்டில் பிஸியான நடிகையாக வலம் வந்தவர். தேசிய விருது வென்ற நடிகையான அவர் திருமணத்துக்கு பின்பு சில காலம் நடிக்காமல் இருந்தார். அதனையடுத்து தொடர்ந்து நடிக்க ஆரம்பித்த அவர் கடைசியாக மலையாளத்தில் வெளியான ஆஃபிஸர் ஆன் ட்யூட்டி படத்தில் நடித்திருந்தர். அடுத்ததாக ஜன நாயகன் படத்தில் நடித்திருந்தார். இந்தச் சூழலில் பிரியாமணி பேசியிருக்கும் விஷயம் ட்ரெண்டாகியுள்ளது.இப்படிப்பட்ட சூழலில் அமீர் இயக்கத்தில் உருவான பருத்திவீரன் படத்தில் நடித்தார். முத்தழகு என்ற கதாபாத்திரத்தில்
  •  · 
  •  ·  sivam
ரஜினி,அஜித், விஜய் இவர்களை எல்லாம் ஓரம் கட்டும் அளவுக்கு தனுஷை உயர்த்திப் பேசி இருக்கிறார் சீமான்.இந்த தலைமுறைக்கு தனுஷ் தனது நடிப்புத் திறமையை வெளிப்படுத்தி இருப்பது மிகப்பெரிய விஷயம். ஒரு தனி மனிதனாய் சினிமாவில் இருந்து கதை எழுதுவது, இயக்குவது, பாடுவது, நடிப்பது என எல்லா திறமையும் கொண்டவர் தனுஷ் தான், இதை நினைத்தால் ரொம்ப பெருமையா இருக்கு என்று சீமான் பேசி உள்ளார்.
  •  · 
  •  ·  sivam
எழுபதுகளில் ஜெயலலிதா, ' ஆனந்த விகடனில்' ஒரு கட்டுரை எழுதினார். அதில் தனக்கு நிகழ்ந்த ஒரு சுவாரஸ்யமான சம்பவத்தை பகிர்ந்து இருந்தார். ஒரு ரசிகர் தொடர்ந்து ஜெயலலிதாவுக்கு கடிதமாக எழுதிக் கொண்டிருந்திருக்கிறார்.ஒரு கடிதத்தில், “உங்களை திருமணம் செய்து கொள்ள விருப்பம்... இந்த தேதிக்குள் சம்மதிக்கா விட்டால் தற்கொலை செய்து கொள்வேன்...” என்று ஒரு தேதியை குறிப்பிட்டு எழுதி இருக்கிறார். ஜெயலலிதாவும் இதை பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை. இதுபோல நிறைய கடிதம் வருகிறது. அதில் இதுவும் ஒன்று என்று கண்டு கொள்ளாமல் விட்டுவிட்டார். சில நாட்கள் கழித்து மீண்டும், அதே நபரிடமிருந்து கடிதம்... மீண்டும் அதே புராணம்... “உங்களை திருமணம் செய்து கொள்ள விருப்பம்... இந்த தேதிக்குள் சம்மதிக்காவிட்டால், தற்கொலை செய்து கொள்வேன்.
  •  · 
  •  ·  sivam
ரஜினி ஓயாமல் உழைத்துக்கொண்டிருந்த நேரம். காலையில் ஒரு படம். மாலையில் ஒரு படம். இரவு வேறொரு படம். ரஜினியின் கால்ஷீட் கிடைக்காதா என தவமிருந்தவர்கள் பலர்.ஆனாலும் ரஜினிக்கு மக்கள் கொடுத்த ஆதரவை சக போட்டியாளர்களால் தடுக்க முடியவில்லை. சிலர் அப்போதைய பெரிய தலைவரோடு சிண்டு முடிந்து மோதல் வரவழைக்கப்பார்த்தனர். அப்படி மறைமுக மோதல் அந்த தலைவருக்கும் ரஜினிக்கும் ஏற்பட்டதென்றே சொல்லலாம்.அவர் நினைத்தால் எதுவும் செய்யலாம்...அப்படி ஒரு நேரத்தில் ரஜினி டென்ஷனுக்கு ஆளானார். இது வரை கஷ்டப்பட்டு எல்லாம் வீணாகிப்போகுமோ என்கிற கலக்கம் ஏற்பட்டது..ரஜினி அப்போது கண்ணதாசன் என்கிற தத்துவஞானியிடம் செல்கிறார்.கண்ணதாசன் ஒரு சிறந்த அறிவுரையை வழங்குகிறார். மௌண்ட் ரோடில் ஓடு என்று கூட சொன்னார் என சொல்வதுண்டு. இதன் மூலம் அந
  •  · 
  •  ·  sivam
தமிழ், தெலுங்கு கன்னடம் ஆகிய மொழிகளில் பல படங்களில் நடித்து பிரபலமானவர் தான் நடிகை ரெஜினா கஸாண்ட்ரா. டோலிவுட் திரையுலகில் இவர் முன்னணி நடிகையாக இருந்தாலும், திரையுலகில் இவர் அறிமுகமானது தமிழ் படங்கள் மூலம் தான். அந்த வகையில் 'கண்ட நாள் முதல்' படத்தின் மூலம் 2005-ஆம் ஆண்டு நடிகையாக தன்னுடைய கேரியரை துவங்கினார்.பிரசன்னா மற்றும் கார்த்தி குமார் ஹீரோவாக நடித்திருந்த இந்த படத்தில் லைலா கதாநாயகியாக நடித்திருந்தார். இந்த படத்தை தொடர்ந்து, அழகிய அரசுரா படத்தில் நடித்தார். இந்த படமும் இவருக்கு கை கொடுக்காத நிலையில், தெலுங்கு மற்றும் கன்னட மொழிகளில் கவனம் செலுத்த துவங்கினார். ஆனால் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக இவர் நடித்த, 'கேடி பில்லா கில்லாடி ரங்கா' படம் இவருக்கு வெற்றிப்படமாக அமைந்த போதும்... தமிழி
  •  · 
  •  ·  sivam
மோகன்லாலின் மகள் நாயகியாக அறிமுகமாகிறார். ஆசிர்வாத் சினிமாஸ் பேனரில் ஆண்டனி பெரும்பாவூர் தயாரிக்கும் படத்தின் மூலம் விஸ்மயா மலையாள திரையுலகில் ஹீரோயினாக காலடி எடுத்து வைக்கிறார். இது ஆசிர்வாத் சினிமாஸின் 37வது படமாகும். சினிமா வெளிச்சத்தில் இருந்து எப்போதும் விலகியே இருந்த விஸ்மயா, திரைத்துறையில் பின்னணி பணிகளை மேற்கொண்டு உள்ளார். எழுத்தும் ஓவியமும் விஸ்மயாவின் பேவரைட்டாக இருந்து வந்தது.'கிரெய்ன்ஸ் ஆஃப் ஸ்டார்டஸ்ட்' என்ற பெயரில் விஸ்மயா எழுதிய புத்தகத்தை பென்குயின் புக்ஸ் 2021 இல் வெளியிட்டது. கவிதைகள் மற்றும் கலைகள் நிறைந்த புத்தகம் இது. அமேசானின் 'பெஸ்ட் செல்லர்' பிரிவிலும் இந்தப் புத்தகம் இடம்பிடித்தது. தற்காப்புக் கலையிலும் ஆர்வமுள்ளவர் விஸ்மயா. மொய் தாய் என்ற தாய் தற்காப்புக் கலையைப் பய
  •  · 
  •  ·  sivam
மக்கள் கவிஞர் பட்டுக்கோட்டையாரின் மனைவி கௌரவதம்மாள், அவர் பட்டுக்கோட்டையாரோடு வாழ்ந்தது இரண்டே ஆண்டுகள். எனினும் அந்த நினைவுகளைப் பொக்கிஷமாகப் பாதுகாத்து வருகிறார்.“எனக்கு பட்டுக்கோட்டை பக்கத்துல ஆத்திக்கோட்டைதான் சொந்த ஊர். எங்க அண்ணன் சின்னையனும் ‘அவுக’ளோட அண்ணனும் சிங்கப்பூர்ல வேலை பார்க்கும்போது சிநேகிதமானவங்க. ‘எனக்கு ஒரு தங்கச்சி இருக்கா. அவளுக்கு கல்யாணம் பண்ணணும்னு எங்க அண்ணன்தான் சொல்லிருக்காக. அப்ப அவுக அண்ணன் ஒண்ணும் சொல்லலையாம். சிங்கப்பூர்லேர்ந்து லீவுல ஊருக்கு வரும்போது, தம்பியைக் கூட்டிட்டு என்னைப் பொண்ணு பார்க்க வந்துட்டார்.அப்ப அவுக, ’அண்ணனுக்குதான் பொண்ணு பார்க்கப் போறோம்’னு நினைச்சுக்கிட்டு வந்தாகளாம். பொண்ணு பார்த்துட்டு ஊருக்குத் திரும்பும்போது, ‘பொண்ணு எப்படிடா இருக்கு’
  •  · 
  •  ·  sivam
பிரேமம் படம் மூலமாக அறிமுகமான சாய் பல்லவி தமிழ், தெலுங்கு, ஹிந்தி, மலையாளம் ஆகிய மொழிகளில் ஏராளமான படங்களில் நடித்துள்ளார். தமிழில் மாரி 2 நல்ல வரவேற்பு கொடுத்த போதிலும் அமரன் படம் அவரை புகழின் உச்சத்திற்கு கொண்டு சென்றது. தற்போது பான் இந்தியா நடிகையாக வலம் வரும் சாய் பல்லவிவியின் இயற்கை பேரழகிற்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர்.என்னதான நட்சத்திர நடிகையாக இருந்தாலும் சாய் பல்லவி, கல்வியை பாதியில் விடவில்லை. அவர் எம்பிபிஎஸ் படித்துள்ளார். நடிகையாக இருந்தாலும் கல்வியை முடித்திருப்பதைப் பார்த்தால், அவருக்கு கல்வியுடன், ஆர்வத்தைப் பின்பற்றுவதும் பிடிக்கும் என்பது தெரிகிறது.சாய் பல்லவி பெரிய நட்சத்திரமாக இருந்தாலும், அவர் வந்த பாதையை, தனது சிறிய கிராமத்தை எதையும் மறக்கவில்லை. தனது பணி நெறிமுறைகள் மற்ற
  •  · 
  •  ·  sivam
சின்னத்திரையில் பிரபலமான குக் வித் கோமாளி பாலா இப்போது ஹீரோவாக அறிமுகமாகிறார். குக் வித் கோமாளி மற்றும் கலக்கப்போவது யாரு ஆகிய நிகழ்ச்சிகளின் மூலமாக பிரபலமானார். இந்நிகழ்ச்சின் மூலமாக பிரபலமானதைத் தொடர்ந்து சமூக சேவையிலும் ஈடுபட்டு வந்தார். கெட்டப் சேஞ்ச் செய்தார். பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கினார். குறுகிய காலத்திலே சினிமாவில் தன்னை ஒரு அங்கமாக மாற்றிக் கொண்டார். ஒரு சில படங்களிலும் நடிக்கவும் செய்துள்ளார்.பாலா நடிக்கும் புதிய படத்தின் டைட்டில் லுக் போஸ்டர் வெளியாகி பாலாவின் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. இயக்குநர் ஷெரிப் இயக்கத்தில் உருவாகி வரும் புதிய படத்தில் தான் பாலா ஹீரோவக நடிக்கிறார். இந்தப் படத்தில் நமீதா, அர்ச்சனா, பாலாஜி சக்திவேல் ஆகியோர் முக்கிய ரோலில் நடிக்கின்றன
  •  · 
  •  ·  sivam
யார் அந்த நடிகை தெரியுமா? பாலிவுட்டின் மூத்த அழகி சுஷ்மிதா சென் தான் அவர். சுஷ்மிதா சென் ஹைதராபாத்தில் 1975ல் பிறந்தார். மிக இளம் வயதிலேயே மாடலாக தனது வாழ்க்கையை தொடங்கினார். 1994 இல் மிஸ் யுனிவர்ஸ் பட்டத்தை வென்றார். 1996 இல் 'தஸ்தக்' படத்தின் மூலம் பாலிவுட்டில் அறிமுகமானார்.பாலிவுட் படங்களில் தொடர்ந்து நடித்து வந்த இவர், தனது வாழ்க்கையில் பல ஏற்ற தாழ்வுகளை கண்டார். 50 வயது நெருங்கிய போதிலும் இதுவரையில் திருமணம் செய்து கொள்ளவில்லை. ஆனால், கிட்டத்தட்ட 12 நடிகர்களுடன் டேட்டிங் செய்ததாக செய்திகள் பரவி வருகின்றன. அதில் ரகுமான் சால், ரன்தீப் ஹூடா, விக்ரம் பட் போன்ற பெயர்கள் அடிபடுகின்றன. லலித் மோடியுடன் சுற்றித் திரிந்த அவர், பின்னர் பிரிந்து விட்டார்.சுஷ்மிதா சென் சுதந்திர சிந்தனையுள்ள நடிகை.
  •  · 
  •  ·  sivam
தமிழ்நாட்டில் முன்னணி தொழிலதிபர்களுள் ஒருவரான லெஜண்ட் சரவணன், பிசினஸில் கொடிகட்டிப் பறந்தாலும் அவருக்கு சினிமாவில் நடிக்க வேண்டும் என்கிற நீண்ட நாள் கனவாக இருந்தது. அந்த கனவை கடந்த 2022-ம் ஆண்டு நனவாக்கினார் சரவணன் அருள். அவர் ஹீரோவாக நடித்த ‘தி லெஜண்ட்’ என்கிற திரைப்படம் 2022-ம் ஆண்டு ரிலீஸ் ஆனது. முதல் படமே பான் இந்தியா அளவில் பிரம்மாண்டமாக ரிலீஸ் செய்து மாஸ் காட்டினார் சரவணன்.இதையடுத்து தன்னுடைய அடுத்த படத்திற்காக இயக்குனர் துரை செந்தில்குமார் உடன் கூட்டணி அமைத்த லெஜண்ட் சரவணன், தற்போது அப்படத்தில் நடித்து வருகிறார். அதன் படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தை எட்டி உள்ளது. இந்த நிலையில் அண்மையில் திருமண விழா ஒன்றில் கலந்துகொண்ட லெஜண்ட் சரவணனிடம் இரண்டாவது பட ரிலீஸ் பற்றி கேள்வி எழுப்பப்பட்டது. அதற
  •  · 
  •  ·  sivam
நடிகை இலியானா தான் மீண்டும் தாயாகி உள்ளதாக அறிவித்துள்ளார்.. குழந்தை பிறந்து 9 நாட்களுக்குப் பிறகு, இந்தச் செய்தியை அவர் தனது சமூக வலைதள பக்கமான இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளார். 2025-ம் ஆண்டு ஜூன் 19ஆம் தேதி அன்று தனக்கு குழந்தை பிறந்ததாக அவரது பதிவில் குறிப்பிடப்பட்டுள்ளது. 'நண்பன்' படத்தில் நடித்த இவர், தனது இரண்டாவது மகனுக்கு கீனு ரஃபே டோலன் என்று பெயரிட்டுள்ளார். இதற்கு திரையுலக நண்பர்கள் மற்றும் ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
  •  · 
  •  ·  sivam
நடிகை அனுஷ்கா விஜய், சூர்யா உள்ளிட்ட பல முன்னணி ஹீரோக்களுடன் ஜோடி சேர்ந்து நடித்த இவருக்கு, சில வருடங்களுக்கு முன்பிருந்து பட வாய்ப்புகள் குறைய தொடங்கின. இதையடுத்து இவர் தற்போது ஒரு படத்தில் நடிக்க சுமார் ரூ.5-7 கோடி சம்பளமாக பெற்று வருவதாக கூறப்படுகிறது. ரெட்ரோ பட நாயகி பூஜா ஹெக்டே, தமிழில் கனிசமான படங்களில் மட்டுமே நடித்திருக்கிறார். அடுத்து கூலி படத்திலும் ஒரு பாடலுக்கு நடனம் ஆடுகிறார். இவர், ஒரு படத்திற்கு ரூ.2.5-7 கோடி வரை சம்பளமாக பெற்று வருவதாக கூறப்படுகிறது.  நடிகை சமந்தா. இப்போது தயாரிப்பாளராகவும் அவதாரம் எடுத்துள்ளார். இவர், ஒரு படத்திற்கு ரூ.3-8 கோடி வரை சார்ஜ் செய்வதாக கூறப்படுகிறது. நடிகை த்ரிஷா தற்போது தமிழ், தெலுங்கு, மலையாளம் என மாறி மாறி வெவ்வேறு மொழிகளில் தற்போது நடித்து வர
  •  · 
  •  ·  sivam
1999ல் அஜித்குமார் நடிப்பில் வெளியான ‘வாலி’படம் மூலம் தமிழ் திரையுலகில் இயக்குனராக கால் பதித்தார் எஸ்.ஜே.சூர்யா. இந்த படத்தின் வெற்றியை தொடர்ந்து, விஜய்யை வைத்து 'குஷி' படத்தை இயக்கினார். அடுத்தடுத்த படங்களின் வெற்றி மூலம் தன்னை தவிர்க்க முடியாக இயக்குநராக நிலைநிறுத்திக்கொண்ட எஸ்.ஜே.சூர்யா, அதனைத்தொடர்ந்து ‘நியூ', ‘அன்பே ஆருயிரே' போன்ற படங்களை இயக்கி தானே கதாநாயகனாகவும் களம் இறங்கினார். எஸ்.ஜே.சூர்யா இயக்கத்தில் கடைசியாக 2015-ம் ஆண்டு வெளியான படம் ‘இசை’. இந்தப்திரைப்படம் எதிர்பார்த்த வரவேற்பைப் பெறாததால், அதன்பிறகு தொடர்ந்து படங்கள் இயக்குவதை தவிர்த்துவிட்ட அவர், முழுநேர நடிகராகவே மாறிவிட்டார். அடுத்தடுத்து பல படங்களில் வில்லனாக நடித்து தனது தனித்துவமான நடிப்பில் ரசிகர்களை கவர்ந்துவிட்டார்.
  •  · 
  •  ·  sivam
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினி நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘கூலி’. இப்படத்துக்கு இந்தியை தவிர இதர மொழிகளில் ‘கூலி’ என்றே அழைக்கப்பட்டது. இந்தியில் மட்டும் ‘மஜதூர்’ என்று தலைப்பை இறுதி செய்தது படக்குழு. இந்த தலைப்புக்கு இணையத்தில் பலரும் மிகவும் சாதாரணமாக இருப்பதாக விமர்சனம் செய்தனர்.இதனை பலரும் இணையத்தில் தெரிவிக்கவே, உடனடியாக சன் பிக்சர்ஸ் நிறுவனம் இந்தி தலைப்பை மாற்றிவிட்டது. இந்திப் பதிப்புக்கு ‘கூலி - தி பவர் ஹவுஸ்’ என்று தலைப்பிட்டுள்ளது படக்குழு. இது இணையவாசிகளை பெரும் உற்சாகத்தில் ஆழ்த்தி இருக்கிறது. இந்த பெயர் மாற்றத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தங்களுடைய எக்ஸ் தள பதிவில் உறுதிப்படுத்தி இருக்கிறார்கள்.ஆகஸ்ட் 14-ஆம் தேதி வெளியாகவுள்ள படம் ‘கூலி’. இதில் நாகார்ஜுனா, சவுபின் சாகீர், உபேந்
  •  · 
  •  ·  sivam
அந்த நடிகருக்கு அப்படி ஒரு ரோல் யாரும் தந்ததில்லை. எத்தனை பெரிய மனது அந்த தயாரிப்பாளருக்கு.அதுவும் ஒரு நீதிபதியின்வேடத்துக்கு.தன் மெலிந்த உடலை வைத்து காமெடி காட்சிகள் தான் எடுப்பார்கள் என அவருக்குத் தெரியும். அவரை நிற்க வைத்து டேபிள் ஃபேனை திருப்பி விட்டு காற்றில் பறந்து விடுவது போலக்கூட காட்சி வைத்திருக்கிறார்கள். எத்தனை பெரிய மனது அந்த தயாரிப்பாளருக்கு நீதிபதி வேடத்தை தர...ஓமக்குச்சி நரசிம்மன் சினிமாவுக்கு வரும் முன் நாடகத்தில் நடித்தார். 'நாரதரும் நான்கு திருடர்களும்' என்கிற நாடகத்தில் ஒரு கராத்தே மாஸ்டர் வேடம் அவருக்கு. ஜப்பானிய கராத்தே வீரர் யாமக்குச்சியின் பெயரை வைத்து எழுத நரசிம்மனோ அதை 'ஓமக்குச்சி' ஆக்கி விட்டார்.குடும்பம் ஒரு கதம்பம் படத்தில் ஓமக்குச்சி விசுவை பார்த்து சாப்பிட்டாச்ச
  •  · 
  •  ·  sivam
விஜய்காந்திடம் சேர்ந்து நடித்த ஒரு சமயத்தில் அருண்பாண்டியன் தனக்கு சினிமா இயக்கும் ஆசை இருப்பதை சொல்லி இருக்கிறார்."நிச்சயம் செய் அருண். நான் நடித்துக்கொடுக்கிறேன்" என அப்போது சொல்லி இருக்கிறார். சில வருடங்கள் கழித்து அருண்பாண்டியன் தனது நூறாவது படத்தை தானே தயாரித்து, நடித்து, இயக்கப்போவதாக சொல்ல தான் கொடுத்த வாக்குப்படி போலீஸ் ஆபிசராக கெஸ்ட் ரோலில் நடித்துக்கொடுக்கிறார் விஜயகாந்த். அந்தப்படம் தான் 'தேவன்.சினிமாவில் நடித்துக்கொண்டிருந்த வடிவுக்கரசி தான் சொந்தப்படத்தை தயாரிக்க விரும்புவதாகவும் விஜய்காந்த் நடிக்க வேண்டும் எனவும் கேட்கிறார். அது 'நூறாவது நாள்' படப்பிடிப்பு தளம். அங்கு மோகனும் இருந்திருக்கிறார். விஜய்காந்தோ வடிவுக்கரசியிடம் "மோகன் தான் இப்போ பீக்ல இருக்கார். அவர்க்கிட்ட கால்ஷீட்
  •  · 
  •  ·  sivam
கவிஞர் எழுதிய பாடல்களின் வரிகளில் பல காலம் கடந்தும் பொருந்திப்போவதுண்டு.Adidasனு ஒரு ஷூ Brand உங்களுக்கு தெரிந்திருக்கும். உலக ஷூ விற்பனையில் இரண்டாம் இடம். Nike முதல் இடம். ஜெர்மனியில் 19924ல் Adolf dasler, Rudolf daslerனு சகோதரர்கள் தன் அம்மாவோட லாண்டரி ரூம்ல ஒரு ஷூ தயாரிப்பு கம்பெனி தொடங்குகிறார்கள். டஸ்லர் பிரதர்ஸ் ஷூ கம்பெனி என்கிற பெயரில் தொடங்கப்பட்ட கம்பெனி ரன்னிங் செல்லப்பயன்படும் ஸ்போர்ட்ஸ் ஷூ தான் தயாரித்தார்கள். வியாபாரம் செமயா பிச்சுக்கிட்டு போகிறது. அதற்குப்பின்னால் அவர்களின் உழைப்பு சாதாரணம் கிடையாது. பவர் இல்லாத சமயத்தில் சைக்கிள் பெடலை சுற்றி அந்தப்பவரை வைத்தெல்லாம் செய்திருக்கிறார்கள். 1936 ஒலிம்பிக் போட்டிக்கு ஷூசப்ளை செய்யும் அளவுக்கு வளர்கிறார்கள்.ஹிட்லரின் நாஜி படைகளில்
  •  · 
  •  ·  sivam
இது ஒரு நடிகையைப் பற்றிய செய்தி என்றாலும் நாம் அனைவரும் கற்றுக் கொள்ள வேண்டிய நல்லதொரு பண்பு அது !13 வயதிலேயே நடிக்க வந்து விட்டாராம் கே. ஆர். விஜயா.1963 இல் வெளிவந்த முதல் படம் 'கற்பகம்' சூப்பர் ஹிட். தொடர்ந்து வரிசையாக பல படங்கள்.பலப்பல சோதனைகள் அவமானங்கள் அத்தனையையும் தன் வாழ்க்கையில் பார்த்து விட்டார். இரண்டு மூன்று முறை சினிமாவே வேண்டாம் என்று ஒதுங்கிப் போனாலும், யாராவது ஒருவர் மீண்டும் சினிமாவிற்குள் அழைத்து வந்து நடிக்க வைத்து விடுவார்கள்.பழைய அவமானங்களை மறந்துவிட்டு மீண்டும் சினிமாவில் நடித்து சூப்பர் ஹிட் வெற்றிப் படங்களைக் கொடுப்பார் கே ஆர் விஜயா. ஆனால் எதிர்பாராமல் ஒரு சில படங்கள் தோல்வி அடைவது உண்டு.கே. ஆர்.விஜயாவை ஹீரோயினாக நடிக்க வைத்து, இயக்குநர் மாதவன் 'முகூர்த்தநாள்' (1967)
  •  · 
  •  ·  sivam
தமிழ் திரையுலகில் வளர்ந்து வரும் நடிகராக இருப்பவர் விக்ரம் பிரபு. இவர் சிவாஜி கணேசனின் பேரன் மற்றும் நடிகர் பிரபுவின் மகனும் ஆவார். 2012 ஆம் ஆண்டு வெளியான ‘கும்கி’ திரைப்படத்தின் மூலமாக தமிழ் திரையுலகில் அறிமுகமானார். இந்த திரைப்படம் இவருக்கு திருப்புமுனையை ஏற்படுத்திக் கொடுத்தது. விமர்சன ரீதியாகவும், வணிக ரீதியாகவும் மிகப் பெரிய வெற்றியைப் பெற்ற ‘கும்கி’ அந்த ஆண்டின் மிகப்பெரிய வெற்றி பெற்ற படங்களில் ஒன்றாகவும் மாறியது. தொடர்ந்து 2013 ஆம் ஆண்டு வெளியான ‘இவன் வேற மாதிரி’ திரைப்படமும் விக்ரம் பிரபுவுக்கு புகழைப் பெற்றுக் கொடுத்தது.'லவ் மேரேஜ்' படத்தின் டிரெய்லரை நடிகர் தனுஷ் தனது எக்ஸ் பக்கத்தின் மூலம் வெளியிட்டுள்ளார்.‍https://youtu.be/_7a6elPVHK0‍டிரெய்லரைப் பார்க்கும் பொழுது 30 வயதை கடந்த
  •  · 
  •  ·  sivam
‘தக் லைஃப்’ படத்தில் சிலம்பரசன், திரிஷா, ஐஸ்வர்யா லட்சுமி, அபிராமி, நாசர், ஜோஜு ஜார்ஜ் உள்ளிட்ட பல முன்னணி நடிகர்கள் நடித்தனர். ஏ.ஆர் ரகுமான் படத்திற்கு இசையமைத்திருந்தார். ஆரம்பத்தில் இந்த படத்தில் துல்கர் சல்மான், பகத் ஃபாசில் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க இருப்பதாக கூறப்பட்டது. ஆனால் இருவரும் படத்திலிருந்து விலகியது பெரும் பின்னடைவாக பார்க்கப்பட்டது. மேலும் இந்த படம் கேங்ஸ்டர் படம் என கூறப்பட்டது. ஆனால் படம் வெளியான பின்னர் கேங்ஸ்டர் கதையம்சத்திற்கான திரைக்கதை அமைக்கப்படவில்லை. இது ரசிகர்களை பெரும் ஏமாற்றத்திற்கு உள்ளாக்கியது. கதையின் மையமக்கரு தெளிவாக காட்டப்படாதது, தலைமை கதாபாத்திரத்தில் லட்சியம் என்ன என்பது தெளிவாக வலியுறுத்தப்படாதது படத்தின் ஆகியவை பெரும் பின்னடைவாக கருதப்பட
அனுபமா பரமேஸ்வரன் "எனக்கு நடிக்கத் தெரியாது
  •  · 
  •  ·  Senthuran
சமீபத்தில் நடந்த திரைப்பட விழா ஒன்றில் பேசிய நடிகை அனுபமா பரமேஸ்வரன் "எனக்கு நடிக்கத் தெரியாது என்று பலர் விமர்சனம் செய்கிறார்கள். என்னைக் கொஞ்சம் கொஞ்சமாக ஓரம் கட்ட ஆரம்பத்துவிட்டார்கள். என்னை விமர்சனம் செய்யுங்கள், அதில் தவறில்லை. ஆனால், அந்த விமர்சனம் என் வாழ்வையே மொத்தமாக அழித்துவிடக்கூடாது" என்று வருத்தமாகப் பேசினார்.அனுபமாவிற்கு ஆதரவாகப் பேசிய நடிகை சுரேஷ் கோபி, "இது மலையாள சினிமாவில் இருக்கும் பெரிய பிரச்னை. நடிகை சிம்ரன் இங்கு வந்தபோது இதேபோலத்தான் இங்கு அவரைக் குறைத்து மதிப்பிட்டார்கள்.அசின், நயன்தாரா என இன்று உச்சத்தில் இருக்கும் பிரபல நடிகைகளுக்கும் அவர்களது ஆரம்ப காலத்தில் இதேபோலத்தான் பிரச்னைகள் வந்தது. நீங்கள் பெரிய நடிகையாக வலம் வருவீர்கள்''' என்று கூறினார்.
பிரேம் நஸீரின் பெருமைக்குரிய குணம்
  •  · 
  •  ·  sivam
ஒரு நாளில் 16 மணிநேரம், மூன்று ஷிப்டுகளிலாக நஸீர் நடித்துக்கொண்டிருந்த காலம். நஸீர் பணத்திற்காக அப்படி நடிக்கவில்லை. அவர்தான் உச்ச நட்சத்திரம். ஆனால் ஒரு படம் ஓடவில்லை என்றால் தயாரிப்பாளருக்கு அடுத்த படம் இலவசம். படம் ஓடும் வரை இலவசம். நண்பர்களுக்கு இலவசமாக நடித்துக்கொடுத்தார். நஸீரால் ஒரு காலத்தில் மலையாள சினிமாவுலகமே வாழ்ந்தது.ஒரு காலையில் படப்பிடிப்பு. மதியம் 12.30க்கு நஸீர் அடுத்த படப்பிடிப்புக்குச் செல்லவேண்டும். நஸீரை கைதுசெய்து விசாரிக்கும் காட்சி. கைவிலங்கு போட்டு நஸீர் சம்பந்தமான காட்சிகளை எடுக்கிறார்கள். அன்றுமின்றும் கைவிலங்கில் டம்மி என்பதே இல்லை. அசல் விலங்குதான். அதை பூட்டினால் சாவி இருந்தால் மட்டுமே திறக்க முடியும். உடைக்கவே முடியாது. வெல்டிங் ராடால்கூட உருக்க முடியாது.படப்பிட
சிவாஜி பற்றி சோ கூறியவை
  •  · 
  •  ·  sivam
ஒரு படபடிப்பில் சிவாஜி நடித்த ஒரு காட்சி படமாக்கப்பட்டது.காட்சி முடித்ததும் உடன் நடித்த நடிகர்களெல்லாம் சிவாஜியின் நடிப்பை புகழ்ந்து தள்ளினார்கள்.ஆனால் சோ மட்டும் அமைதியாக வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தார்.அனைவரும் கலைந்து சென்ற பின்பு சிவாஜி சோவை பார்த்து கேட்டார். ஏண்டா நீ மட்டும் எதுவும் சொல்லாம அமைதியா இருக்கே என்றார்.சோ சொன்னார்...உண்மையை சொல்லட்டுமா சார்...நீங்க இன்று நடித்த நடிப்பு ரொம்ப ஓவர் ஆக்டிங். அவங்கெல்லாம் உங்க கிட்டே நல்ல பேர் வாங்குறதுக்காக புகழ்றாங்க....என்றார்.சிவாஜி எந்த சலனமும் இல்லாமல் கேட்டு, இப்ப கவனி.நான் நடிச்சு காட்டுறேன் என்று எழுந்து நின்று நடித்தார்.மெல்லிய குரலில், உடலில் அதீதமான அசைவுகளின்றி எளிமையான ஆனால் ஆழமான முகபாவங்களில் நடித்து காட்டினார்.சோவால் நம்ப மு
Latest Cinema (Gallery View)
25-48