Feed Item
Added a news 

பிரதமரின் புதிய செயலாளர் டீ.எம்.அனுர திசாநாயக்க  இன்று (20) கொழும்பு 07 சேர் ஏர்னஸ்ட் டி சில்வா மாவத்தை, இலக்கம் 58 இல் அமைந்துள்ள பிரதமர் அலுவலகத்தில் வைத்து கடமைகளைப் பொறுப்பேற்றார்.

பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அவர்களை சந்தித்து நியமனக் கடிதத்தைப் பெற்றுக்கொண்டதன் பின்னர் பிரதமரின் புதிய செயலாளராக தனது கடமைகளைப் பொறுப்பேற்றுக் கொண்டார்.

இதன்போது மஹாசங்கத்தினர் பிரித் பாராயணம் செய்து பிரதமரின் புதிய செயலாளர் டீ.எம்.அனுர திசாநாயக்க அவர்களை ஆசீர்வதித்தனர்.

  • 441