இன்றைய ராசி பலன் – மே 23, 2023
தமிழ் வருடம் சோபகிருது, வைகாசி மாதம் 9ஆம் திகதி | ||
|
| |
மேஷம் Aries | நன்மை நிறைந்த நாள் இன்று. உடன்பிறந்தவர்களை பற்றிய எண்ணங்கள் மேம்படும். வெளியூர் பயணங்கள் சாதகமாக அமையும். உடனிருப்பவர்களின் ஆதரவால் தடைபட்ட பணிகளை செய்து முடிப்பீர்கள். சில பிரச்சனைகளுக்கு தெளிவான முடிவுகளை எடுப்பீர்கள். கமிஷன் சார்ந்த பணிகளில் மேன்மை ஏற்படும். உயர் அதிகாரிகளின் ஒத்துழைப்பு கிடைக்கும்..
அதிர்ஷ்ட எண் : 4 அதிர்ஷ்ட நிறம் : நீலம் | |
ரிஷபம் Taurus | அக்கறையுடன் இருக்க வேண்டிய நாள் இன்று. பணவரவு அதிகரிக்கும். சேமிப்பும் அதிகரிக்கும். உடன்பிறந்தவர்களின் மூலம் ஒத்துழைப்பான சூழல் அமையும். சமூகப் பணிகளில் புதுவிதமான அனுபவம் உண்டாகும். குடும்ப உறுப்பினர்களின் ஆதரவு கிடைக்கும். வாக்கு சாதுரியத்தின் மூலம் ஆதாயமடைவீர்கள். உத்தியோகத்தில் எச்சரிக்கையாக இருப்பது நல்லது.
அதிர்ஷ்ட எண் :2 அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை | |
மிதுனம் Gemini | கவலை குறையும் நாள் இன்று. உங்களின் பலம் மற்றும் பலவீனங்களை புரிந்து கொள்வீர்கள். உணர்ச்சி வேகமின்றி பொறுமையுடன் செயல்படவும். கற்றல் பணிகளில் இருந்துவந்த குழப்பம் குறையும். மனதில் இருக்கும் ரகசியங்களை மற்றவர்களிடம் பகிர்வதை தவிர்க்கவும். வியாபாரம் தொடர்பான செயல்பாடுகளில் சிந்தித்து செயல்படவும். வெளியூர் பணி சார்ந்த சிந்தனைகள் மேம்படும்.
அதிர்ஷ்ட எண் : 6 அதிர்ஷ்ட நிறம் : பச்சை | |
கடகம் Cancer | தடைகள் விலகும் நாள் இன்று. மற்றவர்களின் தேவைகளை அறிந்து நிறைவேற்றி வைப்பீர்கள். வாக்கு சாதுரியத்தின் மூலம் தடைபட்ட சில காரியங்களைச் செய்து முடிப்பீர்கள். வெளியில் இருநுது உணவுகளை வாங்கி உண்பதை தவிர்க்கவும். உலகியல் வாழ்க்கை பற்றிய புதுவிதமான கண்ணோட்டம் ஏற்படும். எதிர்பாராத சில பயணங்களின் மூலம் மாற்றம் உண்டாகும். பணி மாற்றம் சார்ந்த சிந்தனைகள் மேம்படும்.
அதிர்ஷ்ட எண் : 9 அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் | |
சிம்மம் Leo | தன்னம்பிக்கையுடன் இருக்க வேண்டிய நாள் இன்று. வாழ்க்கைத் துணை வழியில் மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். மனதில் இருந்துவந்த குழப்பங்கள் நீங்கி அமைதி ஏற்படும். விலை உயர்ந்த பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். தடைபட்ட சில பணிகளை மாறுபட்ட முறையில் செய்து முடிப்பீர்கள். துறை சார்ந்த சில நுட்பங்களை புரிந்து கொள்வீர்கள். இணையம் சார்ந்த துறைகளில் புதிய வாய்ப்புகள் கிடைக்கும்.
அதிர்ஷ்ட எண் :6 அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை | |
கன்னி Virgo | பிரச்சனைகள் குறையும் நாள் இன்று. உடனிருப்பவர்களை பற்றிய புரிதல் உண்டாகும். குடும்பத்தில் பொறுப்புகள் அதிகரிக்கும். கௌரவ பதவிகளின் மூலம் செல்வாக்கு மேம்படும். மருத்துவத்துறைகளில் முன்னேற்றமான வாய்ப்புகள் கிடைக்கும். வியாபாரம் தொடர்பான கடன் உதவி கிடைக்கும். பணிபுரியும் இடத்தில் உயர் அதிகாரிகளின் மூலம் ஆதரவான சூழ்நிலை உண்டாகும்.
அதிர்ஷ்ட எண் : 7 அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை | |
துலாம் Libra | சிரமம் குறையும் நாள் இன்று. சமூகப் பணிகளில் செல்வாக்கு மேம்படும். எதிர்பாராத சில அதிர்ஷ்டகரமான வாய்ப்புகள் உண்டாகும். உயர்கல்வியில் இருந்துவந்த குழப்பம் குறையும். தனித்திறமைகளை வளர்த்து கொள்வதற்கான வாய்ப்புகள் உண்டாகும். திருப்பணி சார்ந்த செயல்பாடுகளில் ஈடுபாடு ஏற்படும். வேலையாட்களின் ஒத்துழைப்பு மனதிற்கு திருப்தியை ஏற்படுத்தும்.
அதிர்ஷ்ட எண் : 3 அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் | |
விருச்சிகம் Scorpio | நிதானத்தை கடைப்பிடிக்க வேண்டிய நாள் இன்று. கல்வி சார்ந்த செயல்பாடுகளில் ஆர்வமின்மை உண்டாகும். வாகன பயணத்தில் எச்சரிக்கையாக இருக்கவும். எதிர்பாராத சில உதவிகள் கிடைக்கும். மற்றவர்களை பற்றிய கருத்துகளை தவிர்க்கவும். பத்திரம் தொடர்பான துறைகளில் விழிப்புணர்வு வேண்டும். உத்தியோக பணிகளில் சில மாற்றமான சூழல் ஏற்படும்.
அதிர்ஷ்ட எண் : 1 அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு | |
தனுசு Sagittarius | நல்லவர்களின் அறிமுகம் கிடைக்கும் நாள் இன்று. மனதில் நினைத்த காரியங்களை எண்ணிய விதத்தில் செய்து முடிப்பீர்கள். புதிய நபர்களின் அறிமுகம் ஏற்படும். வெளிவட்டார தொடர்புகள் விரிவடையும். கணவன், மனைவிக்கிடையே நெருக்கம் அதிகரிக்கும். தொலைந்துப் போனது என்று நினைத்த சில பொருட்கள் மீண்டும் கிடைக்கும். மனதளவில் தன்னம்பிக்கையுடன் எதையும் செய்ய முயல்வீர்கள். உத்யோகத்தில் மேலதிகாரியிடம் நல்ல பெயர் கிடைக்கும்.
அதிர்ஷ்ட எண் : 4 அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் | |
மகரம் Capricorn | பாராட்டுகள் கிடைக்கும் நாள் இன்று. உடன்பிறந்தவர்கள் ஆதரவாக செயல்படுவார்கள். பணவரவு இருந்தாலும் அதற்கேற்ற செலவுகளும் ஏற்படும். மனதில் நினைத்த காரியங்கள் நிறைவேறும். கால்நடைகள் மீதான ஆர்வம் அதிகரிக்கும். வழக்கு சார்ந்த செயல்பாடுகளில் எதிர்பார்ப்புகள் நிறைவேறும். மாணவர்களுக்கு கல்வியில் மாற்றமான வாய்ப்புகள் ஏற்படும். வெளியூர் பயணங்களால் தொழிலில் முன்னேற்றம் ஏற்படும்.
அதிர்ஷ்ட எண் : 5 அதிர்ஷ்ட நிறம் : நீலம் | |
கும்பம் Aquarius | மகிழ்ச்சி நிறைந்த நாள் இன்று. நண்பர்கள் வழியில் அனுகூலம் உண்டாகும். சிக்கலான செயல்களையும் சாதாரணமாக செய்து முடிப்பீர்கள். மனதில் இருந்துவந்த கவலைகள் குறையும். கலகலப்பான பேச்சுக்களின் மூலம் பலரின் அறிமுகம் கிடைக்கப் பெறுவீர்கள். கலை சார்ந்த துறைகளில் இருப்பவர்களுக்கு முன்னேற்றம் ஏற்படும். வேலையாட்கள் பொறுப்பறிந்து நடந்து கொள்வார்கள். தொழில் சம்பந்தமான புதிய கருவிகள் வாங்கும் முயற்சிகள் வெற்றியை தரும்.
அதிர்ஷ்ட எண் : 9 அதிர்ஷ்ட நிறம் : சிகப்பு | |
மீனம் Pisces | தாமதம் குறையும் நாள் இன்று. குடும்ப உறுப்பினரிடம் இருந்துவந்த கருத்து வேறுபாடுகள் குறையும். உறவினர்களின் வருகையால் மகிழ்ச்சி அடைவீர்கள். வாகன பயணங்களால் எதிர்பார்ப்புகள் நிறைவேறும். பாதியில் நின்ற பணிகளை செய்து முடிப்பீர்கள். உத்தியோக பணிகளில் மேன்மையான சூழ்நிலைகள் ஏற்படும். தொழில் தொடர்பான சிந்தனைகளில் புதிய அனுபவம் கிடைக்கும்.
அதிர்ஷ்ட எண் : 4 அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் |
இன்றைய நாள் இனிய நாளாக அமைந்திட வாழ்த்துகள்.
- 97