Feed Item
Added a post 

🌹 வளர்பிறை சதுர்த்தியில் பிள்ளையாரை  வழிபடுவோம்.   🌹

🌹 வளர்பிறை சதுர்த்தியில்  விநாயகர்  தனது   பக்தர்களுக்கு  செல்வச் செழிப்பு,  தொழில் வளம், மக்கள் பேறு,  காரிய வெற்றி, புத்திக்கூர்மை,  நல்ல வாய்ப்புகள் ஏற்படுத்தி  தருவார்.

🌹 தேய்பிறையான  சங்கடஹர  சதுர்த்தியில்  விநாயகர்  தனது   பக்தர்களின் அனைத்து  செயல்களிலும் உள்ள   காரிய தடைகளையும் ,  சங்கடங்களையும்  அறுத்து,  அழித்து  பக்தர்களுக்கு  புத்திக்கூர்மை,  நல்ல வாய்ப்புகள் ஏற்படுத்தி  தருவார்.

🌹 வளர்பிறை சதுர்த்தியில் பிள்ளையார் பெருமானுக்கு  அப்பம், கொழுக்கட்டை, மோதகம், அவல், பொரி, சர்க்கரைப் பொங்கல், சுண்டல், கொய்யாப்பழம், விளாம்பழம் போன்றவற்றை விநாயகருக்கு படைத்து வழிபட்டு அக்கம்பக்கத்தாருக்கு வழங்குங்கள். நம் விக்னங்களையெல்லாம் தீர்த்து வைத்து அருளுவார்.

 

🌹அவருக்கு பிடித்த இலை அருகம்புல், வன்னி இலை, வில்வ இலை. அவருக்குப் பிடித்த மலர் தும்பைப்பூ, மல்லிகைப்பூ, செண்பகப்பூ, செம்பருத்திப்பூ, எருக்கம்பூ ஆகியவையாகும்.

🌹  ஏழரைச் சனி, அஷ்டமத்துச் சனி, அர்த்தாஷ்டமச் சனி ஆகிய வற்றின் பிடியில் சிக்கியவர் களுக்கு அருள்கொடுப்பவர் ஆனைமுகன். சனி அவரைப் பிடிக்கும் பொழுது, ‘இன்று போய் நாளை வா” என்று எழுதி வைக்கச் சொல்லி தந்திரத்தைக் கையாண்டவர் விநாயகப் பெருமான். விநாயகருக்கு எள் உருண்டை நிவேதனம் செய்தால் சனி பகவானின் பாதிப்பில் இருந்து விடுபட இயலும்.

🌹  ஜாதகத்தில் கேதுவின் ஆதிக்க திசை, புத்தி நடக்கும்போது விநாயகரை வழிபட்டால் காரிய தடைகள் நீங்கும். தக்க விதத்தில் வாழ்க்கையமையும். தடுமாற்றங்கள் அகலும் .

  🌹சதுர்த்தி விரதமிருந்து விநாயகரை வழிபட்டால் செல்வச் செழிப்பு மேலோங்கும். தொழில் வளம் பெருகும். மக்கள் பேறு கிட்டும். காரிய வெற்றி, புத்திக்கூர்மை ஏற்படும். நல்ல வாய்ப்புகள் வந்து சேரும்.

அனைவருக்கும் சதுர்த்தி நல்வாழ்த்துக்களுடன் அன்பான ஞாயிறு காலை வணக்கங்கள் 🌹🌹🌹

ஓம் விக்ன விநாயகா போற்றி போற்றி 🙏

  • 414