Feed Item
Added a news 

முல்லைத்தீவு துணுக்காய் பிரதேச செயலர் பிரிவில் வீட்டுத்தோட்டத்தில் ஆர்வமுள்ள மற்றும் வீட்டுத்தோட்டத்தில் ஈடுபடுகின்ற 50 பயனாளிகளுக்கு விதை தானியங்கள், மரக்கன்றுகள், நாற்றுக்கள் மற்றும் உபகரணங்கள் வழங்கப்பட்டதுடன் நவீனத்துவமான பயிர்ச்செய்கை தொடர்பான பயிற்சி நெறியும் வழங்கப்பட்டுள்ளது.

ஆர்வம் நிறுவனத்தின் வேண்டுகோளின் பிரகாரம், SJC87.INITIATIVES நிறுவனத்தின் ஒழுங்குபடுத்தலில், IMHO நிறுவனத்தினரின் நிதியுதவியுடன் குறித்த செயற்றிட்டம் முன்னெடுக்கப்பட்டது.

இந் நிகழ்வில் பிரதேச செயலாளர் ஆ.லதுமீரா, மற்றும் துறைசார் உத்தியோகத்தர்கள் பலரும் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.இதன்போது குறித்த பெறுமதியான திட்டத்தை வழங்கிய SJC87INITIATIVES நிறுவனத்தினருக்கும், நிதியுதவியினை வழங்கிய IMHO CANADA நிறுவனத்தினருக்கும் பிரதேச செயலகம் சார்பில் நன்றி தெரிவிக்கப்பட்டது.

  • 351