கஷ்டப் படுவதற்கு என்ன காரணம்,
நல்ல வாழ்க்கையில் ஒரு சில கட்டங்களில், உண்மையை தெரிந்து கொண்டால், நிச்சயமாக வியப்பில் மூழ்கி விடுவீர்கள்!
எவர் ஒருவர் தங்களுடைய சொந்த பந்தங்களை மதிக்காமல் அலட்சியமாக மரியாதை குறைவாக நடத்துகிறார்களோ ,அவர்களுக்கு நவகிரகத்தின் ஆசீர்வாதமும், அனுக்கிரஹமும் கட்டாயம் கிடைக்கவே கிடைக்காது.
உங்களுடைய அப்பாவை நீங்கள் மரியாதையாக நடத்தவில்லை என்றால்,அப்பாவிற்கு கொடுக்க வேண்டிய ஸ்தானத்தை அவருக்கு நீங்கள் கொடுக்கவில்லை என்றால்,
உங்களுக்கு திருமணம் தள்ளிப்போகும்.வேலைவாய்ப்பில் பிரச்சனை ஏற்படும். சொந்த தொழில் முன்னேற்றம் ஏற்படாது.
ஏனென்றால், அப்பா ஸ்தானத்தை குறிப்பது "சூரியன்"!
உங்களுடைய அம்மாவை நீங்கள் மதிக்கவில்லை
என்றால்,அவர்களை மரியாதை குறைவாக நடத்தினால்,அவர்களை அவமானப்படுத்தி பேசினால் கட்டாயம் உங்களின் அழகு குறைய ஆரம்பிக்கும்.அறிவாற்றல் மங்கிப் போகும்.குழப்பமான வாழ்க்கை வாழத் தொடங்குவீர்கள்.
மனநிம்மதியே இருக்காது. ஏனென்றால், அம்மா ஸ்தானத்தை குறிப்பது "சந்திரபகவான்"!
நீங்கள் கணவனாக இருந்தால்,உங்கள் வீட்டில் இருக்கும் மனைவியை மரியாதையோடுதான் நடத்த வேண்டும்.
மனைவிக்கு மரியாதை இல்லை என்றால்,
உங்கள் வீட்டில் மகாலட்சுமி இல்லை.
வீடு, மனை, வாகனம், சொத்துபத்து சந்தோஷமான வாழ்க்கை, எல்லாவற்றையும் நீங்கள் பெற வேண்டுமென்றால், மனைவிக்கு மரியாதை கொடுக்கவேண்டும்.
மனைவி இடத்தை குறிப்பது "சுக்கிரன்"!
நீங்கள் மனைவியாக இருந்தால் உங்களுடைய கணவருக்கு கட்டாயம் மரியாதை கொடுக்கவேண்டும். உங்கள் கணவர் இடத்தை குறிப்பது "குரு".
உங்கள் வீட்டில் நிம்மதியான சூழ்நிலை நிலவ, சந்தோஷம் நிலைத்திருக்க கட்டாயம் மனைவிமார்கள், கணவனை மதிக்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.
தாய்மாமன் ஸ்தானத்தை குறிப்பவர் புதன்! தாய்மாமன் மட்டுமல்ல, அத்தை ஸ்தானத்தையும் குறிப்பதும் புதன் பகவான்.
உங்களது குழந்தைகள் வாழ்க்கையில் முன்னேற்றம் அடைய வேண்டும் என்றால், தாய்மாமன்,
அத்தை போன்ற சொந்த பந்தங்களை மதிப்போடு நடத்த வேண்டும்.
சகோதர சகோதரிகளை இழிவாகப் பேசினால், செவ்வாய் பகவானின் அனுக்கிரகம் கிடைக்காது
உங்களால் ஆடம்பர பொருட்களை வாங்கி, நிலம் வீடு போன்ற சொத்துக்களை வாங்கி, கட்டாயம் சேர்க்க முடியாத. வாழ்க்கையில் முன்னேற்றம் தடைபடும். இது உங்களுடைய சகோதர சகோதரிகளுக்கும் பொருந்தும்.
கணவனாக இருந்தால், மனைவியின் சகோதரர் சகோதரிகளையும் மதிக்கவேண்டும்.
மனைவியாக இருந்தால் கணவரின் சகோதர சகோதரியையும் மதிக்க வேண்டும் என்பதை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்.
அடுத்ததாக பாட்டிமார்களும் தாத்தாக்களும்.
இவர்கள் இல்லை என்றால் நம்முடைய வாழ்க்கையில் நல்லது கெட்டது சொல்வதற்கு ஆளே கிடையாது. அதாவது, ராகு கேதுவிற்கு உரியவர்கள் இவர்கள்.
ஆகவே, இவர்களை மிகவும் மரியாதையோடு நடத்த வேண்டும்.
முதியவர்களை கஷ்டப்படுத்தினால்நாமும் வாழ்க்கையில் கஷ்டப்பட வேண்டியதுதான்.
தொழிலில் முன்னேற்றம் அடைய சிறந்த வேலையாட்கள் அமைய சனி பகவானின் துணை எப்போதும் வேண்டும். இதற்கு சிறந்த பரிகாரம் நம்மோடு வேலை பார்ப்பவர்களையும் நமக்கு கீழே வேலை செய்யும் வேலை ஆட்களையும் மதிப்புடனும், மரியாதையுடனும் நடத்த வேண்டும். அப்போதுதான் சனிபகவானின் ஆசி கிடைக்கும்.
ஆக மொத்தம் உறவினர்களுக்குள் ஆயிரம் பிரச்சினைகள் இருந்தாலும்
சண்டை போட்டாலும் ஓருவருக்கொருவர்
பார்க்காமல் பேசாமல் இருப்பதை தவிர்த்து அவர்களுடன் அன்புடன்பழகி அவர்களையும் சந்தோஷப்படுத்தி
அதன்மூலம் நாமும் சந்தோஷமாய்_வாழ்வோம்....
இவ்வாறாக நம்ம குடும்பத்தில் ஈன்றெடுத்த தாய் தந்தையரை திருமணத்தில் பாத பூஜையில் நிறுத்துகிறோம்....
தாய்மாமனை மணமேடையில் மணமக்களுக்கு முதல்முறையாக மாமன் மாலையை போடச் சொல்கிறோம். ...
உடன்பிறந்த சகோதரன் அல்லது சகோதரியை சீர்கூடையை தூக்கி வரச் சொல்கிறோம்...
சித்தப்பா, பெரியப்பா, பங்கு பங்காளிகள், மற்றும் இரத்த உறவுகள் நிச்சயதார்த்த பொது சபையில் வெற்றிலை பாக்கு தட்டுக்கள், பூ வைத்து பரிமாறப்படும் சுபவேளையில் நம்குல பெரியவர்களை முன்னிலை படுத்துகிறோம். ...
சொர்க்கத்தில் நிச்சயிக்கப்படும் திருமணங்களில்
நவகிரகங்களும் சந்தோஷப்பட்டு,
முப்பத்திமூனாயிரம் தேவர்களும், ரிஷிகளும் நம் தோஷங்களை களைந்து நமக்கு சந்தோஷத்தைக் கொடுப்பார்கள்....
- · Yathusan
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·