-
R
- 4 friends
அதிகாரிகளாலும் அரசினாலும் தனித்து விடப்பட்டிருக்கின்ற பகுதியில் அன்றாடம் பருகும் குடிநீர் பெற்றுக்கொள்வது முதல் போக்குவரத்து வரை தினமும் சிரமங்களை எதிர்நோக்கும் புதுமாத்தளன் பிரதேச கிராமங்களைச் சேர்ந்த மக்கள்
முல்லைத்தீவு மாவட்டத்தில் அதிகாரிகளாலும் அரசினாலும் தனித்து விடப்பட்டிருக்கின்ற எமது பகுதியில் அன்றாடம் பருகும் குடிநீர் பெற்றுக்கொள்வது முதல் போக்குவரத்து வரை தினமும் சிரமங்களை எதிர்நோக்கி வருவதாக முல்லைத்தீவு மாவட்டத்தின் புதுமாத்தளன் பிரதேசத்தில் இருக்கின்ற 15 வரையான கிராமங்களைச் சேர்ந்த மக்களும் தெரிவித்துள்ளனர்.முல்லைத்தீவு மாவட்டத்தின் பெருங்கடல் ஓரமாக அமைந்துள்ள அம்பலவன்பொக்கணை கிராம அலுவலர் பிரிவு பிற்பட்ட 12க்கும் மேற்பட்ட கிராமங்களும் அதேபோல முள்ளிவாய்க்கால் தெற்குப்பகுதியில் பகுதியைச் சேர்ந்த மூன்று கிராமங்களிலும் வாழ்ந்து வருகின்ற இரண்டாயிரத்துக்கு மேற்பட்ட மக்கள் அன்றாடம் பெரும் துன்பங்களை எதிர்கொள்வதாக தெரிவித்துள்ளனர்.
கடந்த 2009ஆம் ஆண்டு இதே காலப்பகுதியில் இலங்கையின் உள்நாட்டு ப் போர் எங்கும் பெற்றதன் காரணமாக வடபகுதியில் பகுதியில் இருந்து முழுமையாக இடம் பெயர்ந்த மக்களும் இந்த பிரதேசத்திலேயே தங்கியிருந்து பெரும் துன்பங்கள் துயரங்களை அனுபவித்த ஒரு பகுதி என்பதும் குறிப்பிடத்தக்கது.முல்லைத்தீவு மாவட்டத்தின் கரைதுறைப்பற்று பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட அதிகவான பெருங் கடல் பகுதியை பகுதியை ஒரு புறமாகவும் சிறுகடல் பகுதியை மறு புறமுமாகவும் கொண்ட ஒரு பிரதேசமாக அமைந்துள்ள அம்பலவன்பொக்கணை புதுமாத்தளன் பழைய மாத்தளன் பேய் பாறைப்பட்டி வலஞ்சன் கரியல் வயல் தெற்கு பட்டிக்கரை நெல்லி மோட்டை காயா மோட்டை சாலை உள்ளிட்ட 12 கிராமங்களும் அதேபோல முள்ளிவாய்க்கால் மேற்கு கிராம அலுவலர் பிரிவிற்குட்பட்ட சாளம்பன் வலைஞர்மடம் உள்ளிட்ட மூன்று கிராமங்களும் உள்ளடங்கலாக சுமார் 15க்கும் மேற்பட்ட கிராமங்கள் இந்த பிரதேசத்திலேயே அமைந்துள்ளன.
இந்த 15 கிராமங்களுக்கும் ஒரே ஒரு பிரதான போக்குவரத்து பாதையாக ஏ 35 வீதியின் இரட்டைவாய்க்கால் சந்தையிலிருந்து சாலை வரைக்குமான சுமார் 13 கிலோ மீட்டர் வீதி பிரதானமான ஒரு பாதையாக காணப்படுகின்றது.இந்தப் பாதையூடாக பயணம் செய்வது என்பது மிகவும் கடினமானது அதாவது எந்த விதமான புனரமைப்புக்களுமின்றி பாரிய குண்டும் குழியுமாக மழைக்காலங்களில் வெள்ளநீர் தேங்கி போக்குவரத்து செய்ய முடியாத கைவிடப்பட்ட பாதையாகவே காட்சி தருகின்றது.போக்கு வரத்து என்பது அறவே இல்லை இங்குள்ளவர்கள் பாடசாலைக் கல்வி உள்ளிட்ட அடிப்படை தேவை மற்றும் மருத்துவ வசதி என எதற்கும் புதுக்குடியிருப்பு அல்லது முல்லைத்தீவுக்கு 12 அல்லது 15 கிலோ மீட்டர் தூரம் செல்ல வேண்டிய அவலம் அதற்கும் போக்குவரத்து வசதிகள் இல்லை இதை விட எல்லாவற்றுக்கும் மேலாக குடிநீர் வசதி என்பது பெரும் பிரச்சினையாகவே இருக்கிறது
இந்த பிரதேசத்தில் இருக்கின்ற மக்கள் தாங்கள் ஆரம்ப காலம் தொட்டு இன்று வரைக்கும் குடிநீருக்கான நெருக்கடியைத் தொடர்ந்து எதிர் கொண்டு வருவதாகவும் இது ஒரு பழக்கப்பட்ட ஒரு விடயமாகவே காணப்படுகிறது ஆனால் மீள்குடியேற்றத்தின் பின்னர் தமது பிரதேசத்திற்கு குடிநீர் விநியோகம் மேற்கொள்வதாக பல்வேறு திட்டங்களை நடைமுறைப்படுத்தினாலும் இந்தத் திட்டம் எதுவும் இப்போது நடைமுறையில் இல்லை அவை அனைத்தும் செயலிழந்து போயுள்ளன.கடற்றொழில் என்ற ஒன்றை மட்டுமே நம்பி வாழும் தங்களுக்கு இப்போது அது கூட பிரச்சனை என்பது என்று குறிப்பிட்டார்கள் அதாவது எரிபொருள் விலையேற்றம் வெளிமாவட்ட மீனவர்களின் அனுமதியற்ற மீன்பிடி இந்திய இழுவை மடி தொழில் என எல்லாமே எங்களை கீழ் நிலைக்கு தள்ளிவிட்டது.
செல்வச் செழிப்போடும் வசதிகளுடன் நாங்கள் வாழ்ந்து கொடிகட்டிப் பறந்தவர்கள் இப்போது போதைப்பொருள் பாவனை கொள்ளை என நாங்கள் விரும்பாத செயற்பாடுகள் தலைவிரித்தாடுகின்றன.இவையெல்லாம் எங்கள் மீது திட்டமிட்டு திணிக்கப்பட்டிருக்கும் என்ற கேள்வி கூட எங்களுக்கு எழுந்துள்ளது.எங்கள் கிராமங்கள் பற்றி உலக நாடுகள் கூட ஆய்வுகள் செய்தன உலக நாடுகளிலும் பேசப்பட்டன ஆனால் இன்று எங்களுடைய பிரதேசம் எவரது செவிகளுக்கும் கேட்காத ஒன்றாக மாறிவிட்டது.
எல்லாவற்றாலும் கைவிடப்பட்ட நாங்கள் துன்பத்தை சுமக்கின்ற ஒரு அவல நிலையிலேயே காணப்படுகின்றது.எங்களுடைய நிலையை அறிந்து இந்த பிரதேசத்திற்கான பிரதான வீதியாக காணப்படுகின்ற மேற்படி 13 கிலோமீட்டர் நீளமான வீதியை புனரமைத்து தருமாறு கடந்த 11 ஆண்டுகளாக நாங்கள் தொடர்ச்சியான கோரிக்கைகளை முன்வைத்து வருகின்ற போதும் இதுவரை ஒரு சாண் கூட புனரமைக்க படாத காணப்படுகின்றது.இறுதி யுத்தம் நடைபெற்ற பிரதேசம் என்பதற்காக இவ்வாறு இழுத்தடிக்கப்பட்டு வருகின்றதா? என்ற கேள்வி கூட எங்களுக்கு இருக்கிறது.
ஏனெனில் நாங்கள் அன்று இந்த பிரதேசத்தில் பெரும் மனிதப் பேரவலங்கள் சந்தித்து பெரும் அழிவுகளையும் சந்தித்து இருந்தோம் ஆனால தொடர்ந்தும் அவல வாழ்க்கை வாழும் ஒரு நிலையே காணப்படுவதாகவும் இந்த மக்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
(சு. பாஸ்கரன்)- · Yathusan
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·