-
R
- 4 friends
சட்டரீதியற்ற மணல் அகழ்வு என்பது சூழல் பாதிப்புக்களை ஏற்படுத்தி எதிர்காலத்தை பற்றி உணராதவர்களாக இன்றும் நாம் வாழ்கின்றோம்.
கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்ஙகளில் சட்டரீதியற்ற மணல் அகழ்வு என்பது பாரிய அளவில் சூழல் பாதிப்புக்களை ஏற்படுத்துகின்றது என்பதுடன் சமூக மட்டத்திலும் பல்வேறுபட்ட பாதிப்புக்களை ஏற்படுத்தி வருகின்றது என்பதை உணராதவர்களாக இன்றும் நாம் வாழ்கின்றோம்.சட்டவிரோதமான மணல் அகழ்வுகள் காடழிப்புக்கள் போன்ற செயற்பாடுகள் தொடர்ந்த வண்ணமுள்ளன இவ்வாறான செயற்பாடுகள் பல்வேறு வகையான பாதிப்புகளை ஏற்படுத்தி வருகின்றன.குறிப்பாக எமது பிரதேசங்களில் காணப்படுகின்ற பழமையான காடுகள் மரங்கள் கனிய வளங்கள் அழிக்கப்படுகின்றன. இவ்வாறு அழிக்கப்படும் வளங்கள் மீள் உருவாக்கம் பெற நூற்றாண்டுகள் எடுக்கும் என்பது யாவருமே அறிந்த விடயமாகும்.
இப்போது எதிர்காலத்தைப் பற்றி சிந்திக்காது அல்லது எதிர்காலத்தில் ஏற்படுகின்ற பாதிப்புகள் பற்றி உணராது இவ்வாறான செயற்பாடுகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.கிளிநொச்சி முல்லைத்தீவு மாவட்டங்களில் பெரும்பாலான விவசாய நிலங்களிலும் கரையோரப் பகுதிகளிலும் பாதுகாக்கப்பட வேண்டிய பிரதேசங்களில் நாளாந்தம் சட்டரீதியற்ற மணல் அகழ்வுகள் மேற்கொள்ளப்படுகின்றன.இதனால் பெரும்பாலான விவசாய நிலங்கள் பாதிக்கப்படுகின்றன கடந்த சில வாரங்களுக்கு முன்னர் கூட கால போக நெற் செய்கை மேற்கொள்ளப்பட்டு அறுவடைக்கு தயாராக இருந்த நெற் பயிர்களை அழித்து அந்த பகுதியிலே மணல் அகழ்வு மேற்கொள்ளப்பட்டிருக்கின்றது. இது தொடர்பில் கிளிநொச்சி பொலிஸ் நிலையத்தில் பாதிக்கப்பட்ட விவசாயினால் முறைப்படு செய்யப்பட்டதுடன் உயரதிகாரிகளின் கவனத்திற்கு கூட கொண்டு செல்லப்பட்ட போதும் விமோசனம் எதுவும் இல்லையென பாதிக்கப்பட்டவரால் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக கரையோரப் பகுதிகளில் மிகவும் தாழ்நிலப் பகுதிகளில் மணல் அகழ்வில் மேற்கொள்ளப்படுகின்றன இதன் காரணமாக விவசாய நிலங்கள் பாதிக்கப்படுகின்றன.ஏன்பதுடன் கரையோரப் பகுதிகளில் இந்த மணல் அகழ்வுகள் மேற்கொள்ளப்படுவதால்; கடல்நீர் உட்புகுந்து எதிர் காலத்தில் உவர் நிலங்களாக மாறுவதற்கான வாய்ப்புகள் அதிகளவில் காணப்படுவதாக சூழலியலாளர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.
இவ்வாறான செயற்பாடுகள் அதிக அளவில் நமது சுற்றுச்சூழலில் பாரியளவில் பாதிப்புகளை ஏற்படுத்துகின்றன கடந்த 10 வருடங்களுக்கு முன்னர் எந்த விதமான குடிநீர பற்றாக்குறையும் இல்லாத பிரதேசங்களில் இன்று குடிநீர் பற்றாக்குறை நிலவுகின்றது. குடிநீர் கிணறுகளும் உவர் நீராக மாறியிருக்கின்றன.மனிதன் இயற்கை மீது செலுத்துகின்ற ஆதிக்கத்தின் ஒரு விளைவாகவே இது அமைகின்றது.வட மாகாணத்தில் பாரிய நீர்ப்பாசன குளமாக இருக்கும் இரணைமடு குளத்தின் கீழ் உள்ள பகுதிகளில் மேற்கொள்ளப்படுகின்ற மணல் அகழ்வுகளால் எதிர்காலத்தில் பாரிய ஆபத்தை எதிர் நோக்கலாம் என்ற கருத்தை கிளிநொச்சிக்கு விஜயம் செய்திருந்த நீதி அமைச்சருக்கு தெரியப்படுத்தபட்டதுடன் அமைச்சர் மட்டத்தில் நடைபெற்ற கலந்துரையாடலிலும் சுட்டிக்காட்டப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
குறிப்பாக சட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டியவர்கள் சட்டம் சார்ந்து செயல்படுவதில்லை என்றும் தொடர்ச்சியாக பொது அமைப்புக்கள் மற்றும் பொதுமக்களால் கருத்துக்கள் முன்வைக்கப்படுகின்றன.
எல்லாவற்றுக்கும் மேலாக இவ்வாறான இயற்கையின் மீதான பாதிப்புக்கள் மிக மோசமாக ஏற்படுத்தப்படுகின்ற இந்த நிலைமையில் சமுகத்தின் மீதும் பல்வேறு பாதிப்புகளை ஏற்படுத்துகின்றது.
இந்த சட்டவிரோத மணல் அகழ்வில் ஈடுபடுபவர்கள் மணல் கொண்டு செல்லப்படுகின்ற வாகனங்களை செலுத்துவதில் யாரும் வயது முதிர்ந்தவர்கள்; அல்ல மாறாக சிறுவர்கள் இளைஞர்கள்; ஈடுபட்டு வருகின்றதையே காண முடிகின்றது.
இது சிறுவர்களையும் இளம் சமூகத்தையும் சீரழிக்கின்ற ஒரு சட்ட விரோத தொழில்களாகவே இவை காணப்படுகின்றன. குறிப்பாக பாடசாலையை விட்டு இடைவிலகிய அல்லது பாடசாலைகளுக்குச் செல்லாத கிராமப்புறங்களில் இருக்கின்ற சிறுவர்கள் சட்டவிரோத மணல் அகழ்வுகளில்; ஈடுபடுவதுடன் வாகனங்களைச் செலுத்திச் செல்கின்றனர்.உதாரணமாக கடந்த டிசம்பர் மாதம்; ஆறாம் திகதி இரவு புளியம்பொக்கணைப் பகுதியில் இருந்து ஒரு யுவதியைக் கடத்திய சம்பவத்தில் இந்த சட்டவிரோத மணல் அகழ்வில் ஈடுபடுகின்ற டிப்பர் வாகனமும் அதன் சாரதியும் அகப்பட்டு அதிலே சாரதியாக சென்ற 17 வயது சிறுவன் உயிரிழந்த சம்பவம் பதிவாகி இருக்கிறது.இதைவிட பல்வேறு வாள் வெட்டுச் சம்பவங்கள் மற்றும் கொலைச் சம்பவங்கள் வன்முறைகளின் பின்புலங்களில் சட்டவிரோத மணல் அகழ்வுகளும் அவற்றில் ஈடுபடுபவர்களும் காணப்படுகின்றனர்.
இயற்கை மீது மனிதன் ஏற்படுத்துகின்ற இவ்வாறான பாதிப்புகள் எதிர்காலத்தில் இயற்கைச் சூழலை மட்டும் பாதிக்கப்போவதில்லை ஒரு சமுதாயத்தை சீர் குலைக்கின்ற சமூகத்தையும் உருவாக்கி விடுவதாகவே அமைந்து விடும் என்பதற்கு இவ்வாறான செயற்பாடுகள் சான்றாகின்றன.(சு. பாஸ்கரன்)
- · Yathusan
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·