-
- 3 friends

இன்றைய ராசி பலன்கள் - 23.4.2025
இன்றைய நாள் இனிய நாளாக அமைந்திட வாழ்த்துகள்.
மேஷம்
மனதில் நினைத்த காரியம் கைகூடும். உடன்பிறந்தவர்கள் ஆதரவாக இருப்பார்கள். நீண்ட நாள் நண்பர்களின் சந்திப்பு ஏற்படும். உத்தியோகத்தில் புதிய வாய்ப்புகள் கிடைக்கும். பிரச்சனைகளுக்கு தெளிவான முடிவுகளை எடுப்பீர்கள். வியாபாரத்தை பெருக்குவதற்கான சூழல் உண்டாகும். வெளிவட்டாரத்தில் கௌரவம் உயரும். வரவு நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள்
ரிஷபம்
மனதளவில் புதுவிதமான சிந்தனைகள் உண்டாகும். கல்வியில் இருந்துவந்த குழப்பங்கள் விலகும். தோற்றப்பொலிவு மேம்படும். பயணங்களின் மூலம் ஆதாயம் அடைவீர்கள். உறவுகளின் வழியில் மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். புதிய நபர்களின் அறிமுகத்தால் நட்பு விரிவடையும். கணவன், மனைவிக்கிடையே நெருக்கம் மேம்படும். கவனம் வேண்டிய நாள்.
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : அடர்பச்சை
மிதுனம்
மனதளவில் புதிய தெளிவு உண்டாகும். குடும்பத்தில் அனுசரித்து செல்லவும். தடைப்பட்ட சில பணிகளை செய்து முடிப்பீர்கள். விலகி சென்றவர்கள் விரும்பி வருவார்கள். பணி இடத்தில் சக ஊழியர்கள் ஆதரவாக இருப்பார்கள். சேமிப்புகளின் மூலம் ஆதாயமான சூழல் அமையும். வியாபாரத்தில் திடீர் திருப்பம் ஏற்படும். லாபம் நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : இளஞ்சிவப்பு
கடகம்
வாழ்க்கைத்துணையால் வீண்செலவுகள் ஏற்படும். எதிர்பார்த்த செய்தி கிடைப்பதில் தாமதம் உண்டாகும். வியாபாரத்தில் சில சூட்சமயங்களை அறிவீர்கள். பொழுதுபோக்கு செயல்களில் கவனம் வேண்டும். நண்பர்களின் அறிமுகத்தால் மாற்றம் உண்டாகும். கொடுக்கல், வாங்கலில் எச்சரிக்கையாக இருக்கவும். சமூகம் சார்ந்த பணிகளில் மதிப்பு உயரும். நிதானம் வேண்டிய நாள்.
அதிர்ஷ்ட எண் : 4
அதிர்ஷ்ட நிறம் : பழுப்பு
சிம்மம்
எதிலும் உற்சாகத்தோடு செயல்படுவீர்கள். விலை உயர்ந்த பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். வெளியூர் பயணங்களால் ஆதாயம் உண்டாகும். ஒப்பந்தம் சார்ந்த பணிகளில் இருந்துவந்த தாமதங்கள் விலகும். உயர் அதிகாரிகளின் இடத்தில் மதிப்பு உயரும். மனதளவில் புதிய தன்னம்பிக்கை பிறக்கும். செலவு நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : வெளிர்நீலம்
கன்னி
வியாபாரம் ரீதியான நெருக்கடிகள் குறையும். உடன் இருப்பவர்கள் சாதகமாக செயல்படுவார்கள். ஆன்மிகப் பணிகளில் ஈடுபாடு ஏற்படும். உடல் ஆரோக்கியம் சீராகும். மறைமுகமான திறமைகள் வெளிப்படும். பிள்ளைகள் எண்ணம் அறிந்து செயல்படுவார்கள். மனதளவில் இருந்துவந்த குழப்பங்கள் நீங்கி தெளிவு பிறக்கும். திறமைகள் வெளிப்படும் நாள்.
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : சந்தனவெள்ளை
துலாம்
குடும்பத்தில் மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். பொழுதுபோக்கு செயல்களில் ஆர்வம் ஏற்படும். பெரிய மனிதர்களின் உதவி கிடைக்கும். கொடுத்த வாக்கை காப்பாற்றுவீர்கள். கலைத்துறையில் செல்வாக்கு மேம்படும். பூர்வீக சொத்துகளில் ஏற்பட்ட சிக்கல்களைத் தீர்ப்பீர்கள். சமூகம் சார்ந்த பணிகளில் சில மாற்றமான சூழல் ஏற்படும். அமைதி வேண்டிய நாள்.
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : இளஞ்சிவப்பு
விருச்சிகம்
சக ஊழியர்களிடத்தில் அனுசரித்து செல்லவும். வாகனங்களால் சில விரயங்கள் ஏற்படும். உறவுகளிடத்தில் விட்டுக் கொடுத்து செல்லவும். வரவுகளை மேம்படுத்துவது தொடர்பான சிந்தனைகள் பிறக்கும். கல்விப் பணிகளில் பொறுமை வேண்டும். உடல் ஆரோக்கியம் மேம்படும். கால்நடை விஷயங்களால் ஆதாயம் உண்டாகும். குழப்பம் நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : பச்சை
தனுசு
சுபநிகழ்ச்சிகளில் கலந்து கொள்வீர்கள். உயர் அதிகாரிகளின் நட்பு கிடைக்கும். வியாபாரத்தில் முதலீடுகள் அதிகரிக்கும். எதிர்பார்த்த மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். மாறுபட்ட அணுகுமுறையால் மாற்றத்தை ஏற்படுத்துவீர்கள். மனதளவில் புதிய தன்னம்பிக்கை பிறக்கும். அசதி நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : சாம்பல்
மகரம்
நண்பர்களுக்குள் இருந்துவந்த மனக்கசப்புகள் விலகும். தோற்றப்பொலிவு மேம்படும். பழைய பிரச்சனைகளுக்கு முடிவு கிடைக்கும். மனதில் நேர்மறையான சிந்தனைகள் பிறக்கும். புதிய நபர்களின் அறிமுகத்தால் மாற்றம் ஏற்படும். வியாபாரத்தில் அனுகூலமான சூழல் உண்டாகும். அலுவலகத்தில் மதிப்பு உயரும். வெற்றி நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : வெண்மை
கும்பம்
சந்தேக உணர்வுகளை குறைத்துக் கொள்ளவும். சாலைப் பயணங்களில் கவனம் வேண்டும். எதிலும் முன் கோபமின்றி செயல்படவும். வியாபாரம் தொடர்பான செயல்களில் சிந்தித்து செயல்படவும். உத்தியோகத்தில் பொறுப்புகள் அதிகரிக்கும். பொருளாதாரத்தில் ஏற்ற, இறக்கமான சூழல் உண்டாகும். குடும்பத்தில் அனுசரித்து நடந்து கொள்ளவும். பாராட்டு நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண் : 8
அதிர்ஷ்ட நிறம் : நீலம்
மீனம்
விடாப்பிடியாக செயல்பட்டு சில வேலைகளை செய்து முடிப்பீர்கள். குழந்தைகளின் வழியில் அலைச்சல்கள் ஏற்படும். ஆடம்பரம் சார்ந்த செலவுகளால் சேமிப்புகள் குறையும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் வேண்டும். மறைமுகமான தடைகள் படிப்படியாக குறையும். வியாபாரம் சார்ந்த பணிகளில் பொறுமை வேண்டும். நன்மை நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள்

- · GomathiSiva
- ·

- · Yathusan
- ·



- · GomathiSiva
- ·

- · GomathiSiva
- ·

- · GomathiSiva
- ·

- · GomathiSiva
- ·

- · GomathiSiva
- ·

- · GomathiSiva
- ·

- · GomathiSiva
- ·

- · GomathiSiva
- ·

- · GomathiSiva
- ·

- · GomathiSiva
- ·

- · GomathiSiva
- ·