- · 5 friends
-
I

முன்னாள் குடியரசு தலைவர் அப்துல் கலாம் மாணவிக்கு செய்த மாபெரும் உதவி
நமது முன்னாள் குடியரசு தலைவர் மறைந்த திரு கலாம் ஐயா அவர்கள் குடியரசு தலைவராக இருந்த போது, ஒரு நாள் திருச்சியில் அப்போது SP(superintendent of police ) யாக பணிபுரிந்து கொண்டு இருந்த திரு கலியமூர்த்தி அவர்களுக்கு போன் செய்து..........
துறையூரில் ஒரு பெண்ணுக்கு கட்டாய திருமணம் செய்து வைக்கிறார்கள்.. அந்த திருமணத்தில் அப்பெண்ணுக்கு உடன்பாடு இல்லை.. தயவு செய்து அப்பெண்ணை காப்பாற்றுங்கள் என்று சொன்னாராம்…கலியமூர்த்தி ஐயா அவர்களும் விரைந்து சென்று அப்பெண்ணுக்கு நடக்க விருந்த கல்யாணத்தை தடுத்து நிறுத்தினார்களாம்…
அதன் பிறகு அப்பெண்ணிடம் விசாரிக்கும்போது உனக்கு எப்படி அம்மா கலாம் ஐயாவை தெரியும்…?என்று கேட்டதற்கு..
ஒரு முறை கலாம் ஐயா எங்க பள்ளிக்கு வந்த போது மாணவர்களிடம் கேள்விகளை கேட்க சொன்னார்.. ? சிறந்த கேள்விகளை கேட்டோம் என்றால் அவர் பரிசு தருவார்.. அப்போது நானும் கேட்டேன்.
கடைசியா அவர் எனக்கு பரிசு தரும் போது அவருடைய தொலைபேசி எண் மற்றும் மின்னஞ்சனல் முகவரியை எனக்கு தந்தார்…உனக்கு படிப்புக்கு மற்றும் ஆபத்து நேரத்தில் உதவி தேவைப்படும்போது இதை பயன்படுத்த வேண்டும் என்று அறிவுரையும் கூறினார்.
அதனால தான் சார் நான் அவருக்கு போன் செய்தேன் என்று கூறினால் அந்த பெண்..
அந்த சம்பவத்துக்கு பிறகு கலியமூர்த்தி ஐயா ஓய்வுபெற்று , பள்ளி, கல்லூரி போன்ற இடங்களுக்கு தன்னநம்பிக்கை ஊட்டும் நிகழ்ச்சிக்கு அல்லது சொற்பொழிவு போன்ற நிகழ்ச்சிக்கு செல்வது வழக்கம்.. அது போல ஒரு நாள் அமெரிக்காக்கு சென்று உரை நிகழ்த்தி கிழே இறங்கும் போது ஒரு பெண் ஓடி வந்து அவர் காலில் விழுந்து வணங்கினார்.. இவருக்கு ஒரே ஆச்சரியம்.. யார் இந்த பெண்? ஏன் நம் காலில் விழுகிறார் என்று..? அவருக்கு அந்த பெண்ணை எங்கேயோ பார்த்த மாதிரி என்று ஒரு உணர்வு இருந்ததாம்..
அப்பெண்ணிடம் நீ யார் அம்மா..? என்று கேட்க..
சார் உங்களுக்கு நியாபகம் இருக்கா சார் ஒரு 7 வருஷத்துக்கு முன்னாடி துறையூர்ல ஒரு பொண்ணுக்கு நடக்க இருந்த காட்டாய கல்யாணத்தை நிறுத்தினீங்களே..?
அந்த பொண்ணு தான் சார் நான் சரஸ்வதி…!என்னோட வாழ்க்கையை எனக்கு திரும்ப கொடுத்தது நீங்களும் ,கலாம் ஐயாவும் தான் சார் என்று சொல்லி கண்ணீர் விட்டு அழுதாரம் அப்பெண்.. அன்னைக்கு மனநிலையில் எனக்கு நன்றி சொல்ல கூட தோணல சார்…உங்களை திரும்ப பார்க்கும்போது கண்டிப்பா நன்றி சொல்லனும்னு நினைத்து இருந்தேன் சார் என்று கூறினாராம்..
அந்த பெண் சொல்வதை கேட்டு மனம் நெகிழ்ந்து போனாராம் கலியமூர்த்தி ஐயா..
அப்பெண் அதன் பிறகு 12 வகுப்பு முடித்து கல்லூரியில் படித்து ,வேலை செய்து அதன் பிறகு அமெரிக்காவில் வேலை கிடைத்து.. இங்கு வந்து தமிழ் வம்சாவளியை சேர்ந்த பையனை திருமணம் செய்து கொண்டாராம் என்பது குறிப்பிடத்தக்கது..

- · GomathiSiva
- ·

- · Yathusan
- ·



- · GomathiSiva
- ·

- · GomathiSiva
- ·

- · GomathiSiva
- ·

- · GomathiSiva
- ·

- · GomathiSiva
- ·

- · GomathiSiva
- ·

- · GomathiSiva
- ·

- · GomathiSiva
- ·

- · GomathiSiva
- ·

- · GomathiSiva
- ·

- · GomathiSiva
- ·