- · 5 friends
-
I

இரயில் தண்டவாளத்தில் சரளைக்கற்கள் போட்டு வைத்திருப்பதன் காரணம்
ரயில் தண்டவாளத்தை உடைத்த சிறு கற்களால் நிரப்பவதை Track ballast என்று ஆங்கிலத்தில் அழைக்கிறார்கள். நீங்கள் விரும்பிய கற்களையெல்லாம் இங்கு போட்டு நிரப்ப முடியாது. கூர் முனைகள் இல்லாத உருண்டைக் கற்களே தேவைப்படுகின்றன. தண்டவாளங்களுக்கு உதவும் பணியை பிழையான கற்கள் கெடுத்து விடும்.
ரயில்வே தண்டவாளங்களின் உள்ளேயும் தண்டவாளத்தைச் சுற்றியும் போடப்பட்டிருக்கும் சரளைக் கற்களின் பெயர், ‘பல்லாஸ்ட்’ (Ballast).. ‘ஒரு பாரத்தைச் சமப்படுத்தப் பயன்படுத்தப்படும் பாரம்’ என்று இதற்கு அர்த்தம். ‘பர்மனென்ட் வே’ என்று அழைக்கப்படும் நிரந்தரமான ரயில் பாதை என்பது, இரு இரும்புத் தண்டவாளங்கள், அவற்றின் இடையே இடவெளி விட்டுப் போடப்பட்ட ஸ்லீப்பர் கட்டைகள் மற்றும் சரளைக்கற்கள் அடங்கிய ஒரு சாலைப் படுகை. தண்டவாளங்களின் மேல் ரயில் செல்லும்போது, அதன் சக்கரங்களில் இருந்து வெளிப்படும் விசை அல்லது அழுத்தம் தண்டவாளங்கள், ஸ்லீப்பர் கட்டைகள், சரளைக்கற்களின் படுகைக்கு மாற்றப்படும் போது, அந்த விசை கொஞ்சம் கொஞ்சமாகக் குறைந்துவிடும். இந்த சரளைப் படுகைக்கு, குறிப்பிட்ட அளவில் உடைக்கப்பட்ட கற்கள் பயன்படுத்தப்படும்.
இந்த கல் படுகை அமைக்கப்படும் கனத்தைப் பொறுத்தே, அந்த ரயில் பாதையின் உறுதி அமையும். பொதுவாக, அகல ரயில் பாதைகளுக்கு 25 செ.மீ. உயரத்திலும், மீட்டர் ரயில் பாதைகளுக்கு 20 செ.மீ. உயரத்திலும் சரளைக் கல் படுகை அமைக்கப்படும். கன மழையைச் சமாளிக்கும் விதமாக, 60 முதல் 72 செ.மீ. உயரம்கூடப் போடப்படுகின்றன. இந்தப் படுகைகள், ரயில்வே துறையால் அவ்வப்போது சோதனை செய்யப்படும். இந்த நவீன யுகத்தில், கல் படுகைகளை ஒழுங்குபடுத்த நவீனத் தொழில்நுட்ப இயந்திரங்களும் வந்துவிட்டன.
தண்டவாளத்தில் எடை அதிகமான ரயில்கள் செல்வதற்கான ஆதரவை இந்தக் கற்கள் தருவதோடு, வேறு நன்மைகளும் கற்களால் கிடைக்கின்றன..
தாவரங்கள் புதிதாக முளைப்பதை இந்தக் கற்கள் தடுக்கின்றன. தாவரங்கள் வளர்ந்து வேர்களை பரப்பினால், தண்டவாளத்தின் உறுதி குறையும். களைகளின் வளர்ச்சி மற்றும் இதர தாவரங்களின் வளர்ச்சியினால் தண்டவாளங்களில் ரயில் செல்வதில் இடையூறு ஏற்படாமல் தடுக்கவே ஜல்லிக் கற்கள் போடப்பட்டுள்ளன.
மழை நீர் தேங்காதிருப்பதையும் இந்தக் கற்கள் தடுக்கின்றன. கற்கள் வழியாக நீர் கசிந்து ஓடிவிடுகின்றது.

- · GomathiSiva
- ·

- · Yathusan
- ·



- · GomathiSiva
- ·

- · GomathiSiva
- ·

- · GomathiSiva
- ·

- · GomathiSiva
- ·

- · GomathiSiva
- ·

- · GomathiSiva
- ·

- · GomathiSiva
- ·

- · GomathiSiva
- ·

- · GomathiSiva
- ·

- · GomathiSiva
- ·

- · GomathiSiva
- ·