Support Ads
Main Menu
 ·   · 74 posts
  •  · 6 friends
  • S

    N

    R

    7 followers

காசிக்கு செல்லும் தமிழர்களா நீங்கள் ?

காசிக்குச் செல்பவர்கள் சந்திக்கும் முக்கியமான பிரச்சினைகள் இரண்டு. 


ஒன்று எங்கே தங்குவது? இரண்டு நம் தமிழ்நாட்டுப் பாரம்பரிய உணவிற்கு என்ன செய்வது?


இரண்டு பிரச்சினைகளுக்கும் ஒரே பதில்:- காசி நகரத்தார் விடுதிக்குச் செல்லுங்கள்!


அதன் முகவரி மற்றும் தொலைப்பேசி எண் என்ன?

கீழே கொடுத்துள்ளேன்.

அனைவரும் தங்கலாமா?

இனம், ஜாதி வித்தியாசம் இன்றி அனைவரும் தங்கலாம்.

சிபாரிசுக் கடிதம் வேண்டுமா?


அதெல்லாம் ஒன்றும் கிடையாது. தமிழில் பேசினாலே போதும். அனுமதித்துவிடுவார்கள். புறப்படும்போது தொலைபேசியில் தகவல் சொல்வது நல்லது.


முகவரி மற்றும் தொலைபேசி எண்கள்:-

Sri Kasi Nattukkottai Nagara Satram

Godowlia,
Varanasi - 221 001 (U.P) 
Telephone Nos: 0542 - 2451804,
Fax No: 0542 - 2452404
(ஆட்டோக்காரர்களுக்கு நாட்கோட் சத்திரம், கோடொவ்லியா, சுசீல் சினிமா தியேட்டருக்குப் பின்புறம் என்று சொல்ல வேண்டும்)

Naat Koat Satram

Location Godowlia, Tanga Stanad
Behind Sushil Cinema
Varanasi


கட்டணம் உண்டா?


உண்டு! தனி நபருக்கு நாளொன்றுக்கு இருபது ரூபாய். அதற்கு மகமை என்று பெயர். உள்ளே உள்ள அரங்கங்கள் மற்றும் மண்டபங்களில் தங்கினால், அதற்கு வாடகை கிடையாது. 


உங்கள் உடமைகளை வைத்துக்கொள்ள லாக்கர்களைத் தருவார்கள். ஒரு லாக்கருக்கு ஒரு நாள் வாடகை பத்து ரூபாய் மட்டுமே! குழுவாகச் சென்றால், மண்டபங்கள் அரங்குகள் உள்ளன. அதுதான் வசதி. 20 பேர்கள், 30 பேர்கள், 50 பேர்கள் என்று வருபவர்களுக்கு, அவர்களின் அளவிற்கு ஏற்றபடி தங்கும் அரங்குகள், மண்டபங்கள் உள்ளன. பாய்கள், ஜமுக்காளங்கள், தலையணைகள் எல்லாம் அங்கேயே கிடைக்கும். அதற்குச் செலவில்லை.


ப்ரைவேசி வேண்டும் என்றால் தனி அறைகள் நிறைய உள்ளன. மூன்று விதமான அறைகள் உள்ளன. முன் காலத்தில் கட்டப்பெற்ற அறைகள்
அடுத்த காலகட்டத்தில் கட்டப்பெற்ற Attached Bath Room and Flush Outஉடன் கூடிய அறைகள். மற்றும் டீலக்ஸ் அறைகள். சுமார் 60 அறைகள் உள்ளன. சுமார் 500 பேர்கள் வரை தங்கும் வசதி உள்ளது.


மகா சிவராத்திரி, தீபாவளி, தை அமாவாசை, ஆடி அமாவாசை போன்ற விழாக்காலங்களில் கூட்டம் அதிகமாக இருக்கும். மற்ற சமயங்களில் இருக்காது. தற்போது சராசரியாக நாளொன்றுக்கு 150 பேர்கள்வரை வந்து செல்கிறார்கள். அவர்களில் நகரத்தார்களின் பங்களிப்பு 5 சதவிகிதத்திற்கும் குறைவானதே. விழாக்காலங்களில் நகரத்தார்கள் 200 பேர்களுக்கு மேல் வந்து செல்வார்கள்.


எத்தனை பேர்கள் வந்தாலும் தாங்கும். உள்ளே குளியலறை, மற்றும் கழிப்பறை வசதிகள் தங்கும் அனைவருக்கும் சிறப்பாக உண்டு. அவற்றைச் சுத்தம் செய்வதற்குத் தனியாகப் பணியாளர்கள் உள்ளார்கள். விடுதிக்கு 4 காவற்காரர்கள் உள்ளார்கள். 


இரண்டு படுக்கைகள் கொண்ட அறைக்கு நாளொன்றுக்கு நூறு ரூபாய் கட்டணம் கழிப்பறை குளியலறை இணைப்புடன் கூடிய அறைகளுக்கு (2/3 பேர்கள் தங்கலாம்) நாளொன்றுக்கு இருநூறு ரூபாய் கட்டணம். டீலக்ஸ் அறைகளில் 4 பேர்கள் தங்கலாம். அதற்கு நாளொன்றுக்கு முந்நூறு ரூபாய் கட்டணம்


குளியல் அறைகளில் Water Heater உண்டு  குடிப்பதற்கு Purified Water உண்டு....மின்தடை இருக்காது Full Gen Set வசதி உண்டு


சரி உணவு?


விடுதியில் மிகப் பெரிய சமையல் அறையும், பரிமாறும் கூடங்களும் உள்ளன. இரண்டு செட்டி நாட்டு சமையல்காரர்களும், ஆறு பணியாளர்களும் உள்ளனர். சைவ உணவுகள் மட்டுமே. நம்பிச் சாப்பிடலாம். ருசியாக இருக்கும்.


1

காலைச் சிற்றுண்டி:- நேரம் 8 மணி முதல் 10 மணி வரை.
இட்லி, பொங்கல் சாம்பார், சட்னி - அளவில்லை. விரும்புகின்ற அளவு சாப்பிடலாம். டீ உண்டு.
கட்டணம் ரூ.35:00 மட்டுமே


2. 

மதிய உணவு: -  நேரம் 12:30 மணி 2:30 மணி வரை
சாம்பார், ரசம், கூட்டு, பொரியல், தயிர். அளவில்லை. விரும்புகின்ற அளவு சாப்பிடலாம். 90% கட்டணம் இருக்காது. அன்னதானக் கணக்கில் சாப்பாடு இலவசம். சில நாட்களில் கட்டளைதாரர்கள் இல்லை என்றால் அப்போது மட்டும் தலைக்கு ரூ.40.00 கட்டணம்


ரூ.4,000.00 அன்னதானக் கணக்கில் செலுத்திய கட்டளைதாரர்கள் நிறைய உள்ளார்கள். அவர்கள் விரும்பிய தினத்தில் அவர்கள் பெயரில் அன்னதானம் நடைபெறும்.


3. மாலை 4 மணி டீ உண்டு


4. இரவு 7:30 முதல் 9 மணிவரை

இட்லி, தோசை, சப்பாத்தி, உப்புமா, சாம்பார், சட்னி, குருமா என்று உள்ளன. அவற்றில் ஏதாவது இரண்டைச் செய்து பரிமாறுவார்கள்
கட்டணம் ரூ.35:00 மட்டுமே


உணவிற்குக் காலை 8 மணிக்கும் கூப்பன்களை வாங்கிவிட வேண்டும். அவர்கள் ஆட்களை எண்ணி அதற்குத் தகுந்தாற்போல சமைப்பதற்காக அந்த ஏற்பாடு. 


💓0 😆0 😲0 😥0 😠0 0
  • 608
  • More
Info
Category:
Created:
Updated:
Comments (0)
    Ads
    Featured Posts
    S என்ற எழுத்தில் உங்கள் பெயர் ஆரம்பிக்கின்றதா?
    குறிப்பிட்ட சில ஆங்கில எழுத்துகளை வைத்து ஒருவரது வாழ்க்கையையே தீர்மானித்து விடலாம். அதிலும், A, S, J போன்ற எழுத்துகள் மிகவும் சக்தி வாய்ந்த எழுத்துகளா
    கிழவி தோற்றமா? தேவதை தோற்றமா? (குட்டிக்கதை)
    இரண்டு மன்னர்களுக்குள் சண்டை. தோற்றவனிடம் வென்றவன் சொன்னான்.”நான் கேட்கும் கேள்விக்கு சரியான பதிலைச் சொன்னால் உன் நாடு உனக்கே”.கேள்வி : ஒரு பெண் தன் ஆ
    உப்புமாவை நேசிக்கும் அன்பர்களுக்கு (நகைச்சுவை)
    சிவன்: நக்கீரரே! எமது பாட்டில் எங்கு குற்றம் கண்டீர்? சொற்சுவையிலா? அல்லது பொருட்சுவையிலா?.நக்கீரர்: சொல்லில் குற்றமில்லை. இருந்தாலும் அது மன்னிக்கப்ப
    சுவையான சம்பவம்...
    கம்பன் ஒரு சமயம் கையில் காசில்லாமல் காய்ந்து போய் கிடந்தான்.அப்போது ஒரு தாசி வீட்டு வேலைக்காரன் அவள் கம்பனை சந்திக்க விரும்புவதாக கூறினான்.அவள் பெயர்
    வைத்தியரின் தேடுதல்   (குட்டிக்கதை)
    ஒரு வைத்தியரும் அவருடைய மனைவியும் காட்டில் நீண்ட நாட்களாக எதையோ தேடிக்கொண்டிருந்தனர்.கணவர் என்ன தேடுகிறார் என்று மனைவிக்கு தெரியாது!  வைத்தியரும் சொன்
    சின்னப் பையன்     (குட்டிக்கதை)
    இங்கிலாந்தின் பிரபல கம்பெனி ஒன்றிற்கு, பெரியதோர் இயந்திரம் ஜப்பானில் இருந்து வரவழைக்கப் பட்டது. கோடிக்கணக்கில் விலை. அந்த இயந்திரத்தை இன்ஸ்டால் செய்ய
    வெற்றிக்கான சூத்திரம்
    தன்னம்பிக்கை பயிற்சி வகுப்பில்வெற்றியாளர் ஒருவரை முறைத்து முறைத்துப் பார்த்துக் கொண்டிருந்தார் ஒருவர். முறைத்தவர் முகத்தில் எப்போதும் இறுக்கம். சிரிப்
    பொன்னாங்கண்ணி கீரை சாப்பிடுவதால் கிடைக்கும் பயன்கள்
    பொன்னாங்கண்ணி கீரையில் சாப்பிட்டால் ஆண்களுக்கு தேவையான சக்தி கிடைக்கும். குறிப்பாக, பாலுணர்வை அதிகரிக்கும் ஊட்டச்சத்துக்கள் இதில் நிறைந்துள்ளன. அதேபோல
    தூக்கமின்மைக்கான காரணங்கள்
    நாம் தூங்கும் பொழுது என்ன நடக்கின்றது என்பதனை நாம் அறிவதில்லை. தூக்கத்தில் நாம் என்னவெல்லாம் செய்கின்றோம் என்பதும் நமக்குத் தெரியாது. யாராவது நம்மைப்
    வயதானாலும் நினைவாற்றல் இழப்பை தடுக்கலாம்
    வயதானவர்களுக்கு ஏற்படும் நினைவாற்றல் இழப்பு அறிகுறிகளைக் குறைக்க உதவும் 6 சூப்பர்ஃபுட்களை உங்கள் அன்றாட உணவில் சேர்க்கலாம். முதுமையை நம்மால் தடுக்க மு
    ஏசியை பயன்படுத்துவோர் கட்டாயம் கவனிக்கவேண்டியது
    பல மென்பொருள் நிறுவனங்கள் தங்களது ஊழியர்களின் புத்துணர்ச்சி சூழலுக்கும், அவர்களின் செயல்பாடுகளை வெளிப்படுத்தும் கணினியின் பயன்பாட்டிற்கும் நாளொன்றுக்க
    நீங்கள் புத்திசாலியா என அறிய அறிவியல் ரீதியான அறிகுறி
    ஒருவரை என்ன சொன்னாலும் பொறுத்துக் கொள்வார்கள். ஆனால் முட்டாள் என்று சொன்னால் மட்டும் பயங்கரமாக கோபப்பட்டு விடுவார்கள். அப்படி யாரும் சொல்லிவிடாமல் புத
    முகப்பொலிவினை இரண்டே நிமிடத்தில் பெற சூப்பரான ஐடியா
    விசேஷத்திற்கு செல்ல வேண்டும் என்றால், ஐந்து நிமிடத்தில் முகம் பொலிவு பெற வேண்டும் என்றால், சமையலறையில் இருக்கும் பொருட்களை வைத்து ஐந்தே நிமிடத்தில் உங
    அன்பை விதைப்போம்  (குட்டிக்கதை)
    ஒரு இளைஞர் தினமும் ஒரு பாட்டியிடம் ஆரஞ்சு பழங்களை வாங்குவார்.பழங்களை எடை போட்டு வாங்கி பணம் கொடுத்த பின்..... அந்த பழங்களில் இருந்து ஒன்றை எடுத்து பிய
    இளநரையை போக்கும் செம்பருத்தி இலை ஹேர் பேக் தயார் செய்யும் முறை
    எந்த வயதில் இளநரை வந்தாலும் சரி, நீங்கள் இந்த குறிப்பை பின்பற்றலாம். இளநரை மறைவதோடு சேர்த்து, உங்களுடைய தலைமுடி உதிர்வும் நிற்கும். தலைமுடியும் அடர்த்
    Ads
    Latest Posts
    மழை
    மழை பெய்வதை யார் யார் எப்படி சொல்வார்கள் என்று பார்ப்போம்:  இரும்பு வியாபாரி - கனமா பெய்யுது கரும்பு வியாபாரி - சக்கைப் போடு போடுது.... சலவைக்காரர் -
    வெற்றியின்  இலக்கு  (குட்டிக்கதை)
    ஒரு ஊரில் தர்மன் என்ற ஒரு தொழில் அதிபர் இருந்தார். அவருக்கு ஒரு மகன் இருந்தான்.அவன் ஒரு நாள் தன் தந்தையிடம் எளிதில் வெற்றி பெற என்ன செய்ய வேண்டும் என்
    இன்றைய ராசி பலன் –  டிசம்பர் 2, 2023
    இன்றைய ராசி பலன் –  டிசம்பர் 2, 2023 தமிழ் வருடம் சோபகிருது, கார்த்திகை மாதம் 16 ஆம் திகதி மேஷம்Aries உயர் அதிகாரிகளால் ஆதாயம் அடைவீர்கள். நண்பர்களின்
    இன்றைய நாள் எப்படி?
    சோபகிருது வருடம் கார்த்திகை மாதம் 16 ஆம் தேதி சனிக்கிழமை 2.12.2023. சந்திர பகவான் இன்று கடக ராசியில் பயணம் செய்கிறார். இன்று மாலை 06.17 வரை பஞ்சமி. பி
    இறந்தவர் என்னுடைய குரு  - ரமணர்
    திருவண்ணாமலையில் வாழ்ந்த ஒரு முரடர் இறந்துவிட்டார். அங்கிருந்த ஜனங்களுக்கு எல்லாம் ஒரே சந்தோசம். இத்தனை மக்களை மிரட்டி, பொருள் பறித்து வாழ்ந்த தீயவன்
    "அய்யா"வுக்கும் "ஐயா"வுக்கும் உள்ள வேறுபாடு
    "அய்யா"வுக்கும் "ஐயா"வுக்கும் வேறுபாடு என்ன தெரியுமா?தமிழில் எழுதும் போது 'ஐயா', 'அய்யா' எது சரி?சிலர், "ஐயா"என்று எழுதுகின்றனர்.ஆனால், சிலர் "அய்யா"
    இன்றைய ராசி பலன் –  டிசம்பர் 1, 2023
    இன்றைய ராசி பலன் –  டிசம்பர் 1, 2023 தமிழ் வருடம் சோபகிருது, கார்த்திகை மாதம் 15 ஆம் திகதி மேஷம்Aries உடலில் சிறு சிறு உபாதைகள் தோன்றி மறையும். குடும்
    சனி பெயர்ச்சி பலன் 2023 -  இந்த 5 ராசிக்காரர்களுக்கு திடீர் திருப்பம் அமையும்
    சனி பகவான் கும்ப ராசியில் ஆட்சி பெற்ற நிலையில் பயணம் செய்கிறார். திருநள்ளாறு சனி பகவான் ஆலயத்தில் டிசம்பர் 20ஆம் தேதி சனி பெயர்ச்சி விழா நிகழ உள்ளது.
    இன்றைய நாள் எப்படி?
    சோபகிருது வருடம் கார்த்திகை மாதம் 15 ஆம் தேதி வெள்ளிக்கிழமை 1.12.2023 சந்திர பகவான் இன்று கடக ராசியில் பயணம் செய்கிறார். இன்று மாலை 04.40 வரை சதுர்த்த
    சில நேரத்தில் மௌனமே சிறந்தது (குட்டிக்கதை)
    மூன்று நபர்களுக்கு மரண தண்டனை நிர்ணயிக்கப்பட்டது . மூவரும் தூக்கு மேடைக்கு வரவழைக்கப்பட்டனர்._(1)- மதத்தலைவர்(2)- வழக்கறிஞர்(3)- இயற்பியலாளர்முதலில் ம
    அதிர்ஷ்டத்தை அதிகரிக்க என்ன செய்யலாம்?
    அனைவரும் ஏதாவது அதிர்ஷ்ட வாய்ப்புக்கள் கிடைக்கும் என்ற நம்பிக்கையில் பயணித்து வருவது இயல்பு. ஒவ்வொரு கிரகமும் சில பொருட்களில்  தன்னுடைய ஆதிக்கத்தை செல
    இன்றைய ராசி பலன் –  நவம்பர் 30, 2023
    இன்றைய ராசி பலன் –  நவம்பர் 30, 2023 தமிழ் வருடம் சோபகிருது, கார்த்திகை மாதம் 14 ஆம் திகதி மேஷம்Aries மனதில் தன்னம்பிக்கையும், தைரியமும் அதிகரிக்கும்.
    இன்றைய நாள் எப்படி?
    சோபகிருது வருடம் கார்த்திகை மாதம் 14 ஆம் தேதி வியாழக்கிழமை 30.11.2023.  சந்திர பகவான் இன்று மிதுன ராசியில் பயணம் செய்கிறார்.  இன்று மாலை 03.31வரை திரு
    இன்றைய ராசி பலன் –  நவம்பர் 29, 2023
    இன்றைய ராசி பலன் –  நவம்பர் 29, 2023 தமிழ் வருடம் சோபகிருது, கார்த்திகை மாதம் 13 ஆம் திகதி மேஷம்Aries மனதை உறுத்திய பிரச்சனைகளுக்கு தீர்வு கிடைக்கும்.
    இன்றைய நாள் எப்படி?
    சோபகிருது வருடம் கார்த்திகை மாதம் 13 ஆம் தேதி புதன்கிழமை 29.11.2023. சந்திர பகவான் இன்று மிதுன ராசியில் பயணம் செய்கிறார். இன்று பிற்பகல் 02.51 வரை துவ
    Ads