- · 5 friends
-
I

உலகின் கொடூரமான சடங்குகள்
பிரேசில் நாட்டின் அமேசான் மலைக்காடுகளில் வாழும் 'சதேரே-மாவே' பழங்குடியின மக்கள் தங்கள் இனத்தின் பதின்ம வயது சிறுவர்களை வீரர்களாக உருவாக்கும் நிகழ்ச்சியாக இந்த 'Bullet Ant Glove' என்கிற சடங்கை ஏற்பாடு செய்கிறார்கள். 'புல்லட் எறும்புகள்' என்று அழைக்கப்படும் கொடூர எறும்புகளை இயற்கையான முறையில் மயக்கமடையச் செய்து அவற்றை ஒரு பெரிய கையுறையின் மேற்பகுதியில் நூற்றுக்கணக்கில் விட்டு அந்தப் பகுதியை அடைத்து விடுகின்றனர்.
அந்த கையுறையின் மேற்பகுதிக்கும் உள்பக்கத்திற்கும் இடையில் ஒரு மெல்லிய சணல் துணியைக் கொண்டு தடுப்பு அமைக்கப்படுகிறது. அதாவது அந்தக் கையுறையின் உள்பக்கத்திற்குள் எவரேனும் கையை நுழைத்தால், அந்தக் கையுறையின் மேற்பகுதியில் உள்ள அந்த எறும்புகளால் சணல் துணியின் தடுப்பு மூலமாகக் கொட்ட மட்டுமே முடியும், கொட்டி சதையைப் பிய்த்து இழுக்க முடியாது (பாதுகாப்பு கொடுக்கிறார்களாம்).
புதிய வீரர்களை உருவாக்கும் நிகழ்ச்சியாக இந்தத் துன்பத்தைத் தாங்கும் சடங்கினை பின்பற்றுகின்றனர். எறும்புகள் மயக்கம் நீங்கி மீண்டும் விழித்தெழுந்த பிறகு, சிறுவன் தன் கையைக் கையுறையில் நுழைக்க வேண்டும். இந்தச் சடங்கின் நோக்கம் 10 நிமிடங்கள் முழுவதும் கையுறையை அணிந்து எறும்புகளின் கொட்டுகளைத் தாங்குவதாகும். நிகழ்ச்சி முடிந்ததும், எறும்புகளின் விஷத்தால் பாதிக்கப்பட்ட அந்தச் சிறுவனின் கையின் இயக்கம் தற்காலிகமாக நின்று விடும். ஒரு குறிப்பிட்ட காலகட்டத்திற்குள் அந்தச் சிறுவர்கள் 20 முறை இந்தச் சடங்குக்கு உட்படுத்தப்பட்டு அந்த வலியை தாங்க வேண்டும்.
Bullet Ant Glove சடங்கின் போது எறும்பின் கொட்டின் வலியானது ஒரு துப்பாக்கி குண்டு பட்டதைப் போல உணர வைக்குமாம், மேலும் 24 மணி நேரம் வரை இந்த வலி நீடிக்கும் என்று பாதிக்கப்பட்டவர்கள் கூறுகிறார்கள். ஒரு சிலருக்கு கடுமையான ஒவ்வாமையின் (allergy) விளைவால் மூச்சு திணறலும் ஏற்படுமாம்.

- · GomathiSiva
- ·

- · Yathusan
- ·



- · GomathiSiva
- ·

- · GomathiSiva
- ·

- · GomathiSiva
- ·

- · GomathiSiva
- ·

- · GomathiSiva
- ·

- · GomathiSiva
- ·

- · GomathiSiva
- ·

- · GomathiSiva
- ·

- · GomathiSiva
- ·

- · GomathiSiva
- ·

- · GomathiSiva
- ·