Support Ads
 ·   ·  73 posts
  •  ·  6 friends
  • S

    N

    R

    7 followers

வீர வாஞ்சிநாதன்

பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் அவர்கள் #சென்னை க்கு ஒருமுறை வந்த போது தனது உதவியாளரிடம் இரண்டு நல்ல ரக புடவைகள் வாங்கி வரச் சொல்லி உத்தரவிட்டார் தேவர்.

உதவியாளருக்கு குழப்பம். 

தேவர் பிரம்மச்சாரி. அவர் எதற்கு புடவை வாங்க - அதுவும் சென்னையில்.

குழப்பத்தோடு புடவை வாங்கி வர கூடவே கொஞ்சம் பழங்கள்.

 தேவர் உதவியாளரோடு காரில் ஏறி சென்னை ிலாப்பூரில் ஒரு சந்துக்கு முன் காரை நிறுத்தச் சொல்லி - உதவியாளர் புடவை மற்றும் பழ தட்டுடன் பின் தொடர சந்தில் இருக்கும் ஒரு வீட்டுக்குள் நொடிப் பொழுதில் நுழைகிறார்.

அங்கே அமர்ந்திருந்த பெண்மணியின் #காலில் தேவர் நெஞ்சாண் கிடையாக விழுந்து வணங்குகிறார்.

உதவியாளரிடமிருந்து புடவை/ பழ தட்டை வாங்கி தன் பையிலிருந்து ரூபாய் நோட்டுக்களை புடவையின் ஊடே நுழைத்து அந்த பெண்மணியின் முன்னே சமர்பித்து சற்று தள்ளி அமர்ந்து நலம் விசாரித்து

 - எந்த உதவி எப்போது தேவை பட்டாலும் தன்னை அணுகலாம் என தேவர் சொல்ல

 - அந்த மாதரசி ,'செய்திருக்கும் உதவிகளே போதுமானது - அதிகமும்' என சொல்கிறார்.

சில நிமிடங்கள் கழிய - தேவர் மீண்டும் எழுந்து பெண்மணியின் கால்களில் விழுந்து வணங்கி விடை பெறுகிறார்.

தேவரின் உதவியாளர் மண்டையே வெடித்து விடும் நிலை!

ஓரிரு நிமிட மெளனமான வாகனப் பயணம்.

ஐய்யா, அந்த பெண்மணி யார்?
"என்தாய் "- தேவர்

பார்த்தால் ஐய்யர் பெண்மணியாக - உதவியாளர்

"ஆம். என் தாய். வீர வாஞ்சிநாதன் மனைவி" - என்று தேவர் உணர்ச்சியுடன் கண்கலங்கி சுதந்திர போராட்ட சிந்தனைக்குள் மூழ்கினார்...

தேசியமும் தெய்வீகமும் எனது இரு கண்கள் என வெறும் வார்த்தைகளால் கூறாமல் அதன்படி வாழ்ந்து காட்டியவர் தேவர் அவர்கள்.,

.தென்னகத்து_பகத்சிங் என்று போற்றப்பட்ட  வீர வாஞ்சிநாதன் மனைவிக்கு சுதந்திரத்துக்குப்பின் நேரு அரசால் குறைந்த பட்ச கெளரவம் கூட கிடைக்கவில்லை.
 அங்கீகரிக்கப்பட்ட போது அது இனி தேவையில்லை என ஏற்க மறுத்தவர் திருமதி வாஞ்சி.

தமிழகத்தில் பிராமண எதிர்ப்பு அப்போதே திராவிட இயக்கங்களால் நன்கு விதைக்கப்பட்டு இருந்தது.அதனால் தமிழகத்திலும் அவர்களின் தியாகம் மறைக்கப்பட்டது..

லண்டனில் இந்தியா ஹவுஸ் மாளிகையில்  வீரசாவர்கரின் ஆயுதப் போராளி இயக்கத்தில்"(free india society) தளபதியாக விளங்கிய  வவேசு_ஐயர் பாண்டிச்சேரியில் சுதந்திரப் போராளிகளுக்கு ஆயுதப் பயிற்சி அளித்தார்.

(இந்தியாவில் ஆங்கிலேயருக்கு எதிராகச் செயல்படும் தீவிரவாதிகளுக்கு பிரெஞ்சு ஆதிக்கத்திலிருந்த புதுச்சேரியில் உதவிகள் கிடைத்தன)

அவரிடம் ஆயுதப்பயிற்சி பெற்றவரே வீர வாஞ்சிநாதன்.B.A அவர்கள்.

கப்பலோட்டிய தமிழன் வஉசியை செக்கிழுக்க வைத்த திருநெல்வேலி கலெக்டர்  ஆஷ் என்பவனை  மணியாச்சி ரயில் நிலையத்தில் 1911 ஜூன் 17 காலை 6:30 மணிக்கு சுட்டுக் கொன்றுவிட்டு ,தன் இயக்கத்தினரை பாதுகாக்க தானும் தன் வாய்க்குள் துப்பாக்கியை செலுத்தி சுட்டு வீரமரணம் அடைந்தார்.

அவரது உடலில் சட்டைப்பையில் ஒரு  கடிதம் அவரால் எழுதி வைக்கப்பட்டிருந்தது.அக்கடிதத்தை கீழே படித்துப்பாருங்கள்......

"ஆங்கில சத்துருக்கள் நமது தேசத்தைப் பிடுங்கிக் கொண்டு, அழியாத ஸனாதன தர்மத்தைக் காலால் மிதித்துத் துவம்சம் செய்து வருகிறார்கள்.

 ஒவ்வொரு இந்தியனும் தற்காலத்தில் தேசச் சத்துருவாகிய ஆங்கிலேயனைத் துரத்தி, தர்மத்தையும், சுதந்திரத்தையும் நிலை நாட்ட முயற்சி செய்து வருகிறான். 

எங்கள் ராமன், சிவாஜி, கிருஷ்ணன், குரு கோவிந்தர், அர்ஜுனன் முதலியவர் இருந்து தர்மம் செழிக்க அரசாட்சி செய்து வந்த தேசத்தில்,

 கேவலம் ஒரு அன்னியனாகிய ஐந்தாம்_ஜார்ஜ், (George V) முடி சூட்ட உத்தேசம் செய்து கொண்டு, பெருமுயற்சி நடந்து வருகிறது. 

அவன் (George) எங்கள் தேசத்தில் காலை வைத்த உடனேயே அவனைக் கொல்லும் பொருட்டு 3000 மதராசிகள் பிரதிக்கினை செய்து கொண்டிருக்கிறோம்.

 அதைத் தெரிவிக்கும் பொருட்டு அவர்களில் கடையேனாகிய நான் இன்று இச்செய்கை செய்தேன்.

 இதுதான் இந்துஸ்தானத்தில் ஒவ்வொருவனும் செய்ய வேண்டிய கடமை."  - இப்படிக்கு, R. வாஞ்சி அய்யர்..

வீர வாஞ்சிநாதன் உயிர்தியாகம் செய்த நாள்  (1886 - ஜூன் 17,) 
  • 764
  • More
Info
Category:
Created:
Updated:
Comments (0)
Login or Join to comment.
Ads
Featured Posts
தமிழ் குழந்தைகளின் பெயர்கள்
  •  ·  Yathusan
  •  · 
1 = அகரன் > முதன்மையானவன்2 = அகவி > அகம் செம்மையானவள் / அகத்தூய்மையள்3 = அகன் > ஆழ்ந்த உளத்தவன்4 = அகன் > ஆழ்ந்த உள்ளம் உடையவன்5 = அகிலன்
S என்ற எழுத்தில் உங்கள் பெயர் ஆரம்பிக்கின்றதா?
குறிப்பிட்ட சில ஆங்கில எழுத்துகளை வைத்து ஒருவரது வாழ்க்கையையே தீர்மானித்து விடலாம். அதிலும், A, S, J போன்ற எழுத்துகள் மிகவும் சக்தி வாய்ந்த எழுத்துகளா
கிழவி தோற்றமா? தேவதை தோற்றமா? (குட்டிக்கதை)
இரண்டு மன்னர்களுக்குள் சண்டை. தோற்றவனிடம் வென்றவன் சொன்னான்.”நான் கேட்கும் கேள்விக்கு சரியான பதிலைச் சொன்னால் உன் நாடு உனக்கே”.கேள்வி : ஒரு பெண் தன் ஆ
உப்புமாவை நேசிக்கும் அன்பர்களுக்கு (நகைச்சுவை)
சிவன்: நக்கீரரே! எமது பாட்டில் எங்கு குற்றம் கண்டீர்? சொற்சுவையிலா? அல்லது பொருட்சுவையிலா?.நக்கீரர்: சொல்லில் குற்றமில்லை. இருந்தாலும் அது மன்னிக்கப்ப
சுவையான சம்பவம்...
கம்பன் ஒரு சமயம் கையில் காசில்லாமல் காய்ந்து போய் கிடந்தான்.அப்போது ஒரு தாசி வீட்டு வேலைக்காரன் அவள் கம்பனை சந்திக்க விரும்புவதாக கூறினான்.அவள் பெயர்
வைத்தியரின் தேடுதல்   (குட்டிக்கதை)
ஒரு வைத்தியரும் அவருடைய மனைவியும் காட்டில் நீண்ட நாட்களாக எதையோ தேடிக்கொண்டிருந்தனர்.கணவர் என்ன தேடுகிறார் என்று மனைவிக்கு தெரியாது!  வைத்தியரும் சொன்
சின்னப் பையன்     (குட்டிக்கதை)
இங்கிலாந்தின் பிரபல கம்பெனி ஒன்றிற்கு, பெரியதோர் இயந்திரம் ஜப்பானில் இருந்து வரவழைக்கப் பட்டது. கோடிக்கணக்கில் விலை. அந்த இயந்திரத்தை இன்ஸ்டால் செய்ய
வெற்றிக்கான சூத்திரம்
தன்னம்பிக்கை பயிற்சி வகுப்பில்வெற்றியாளர் ஒருவரை முறைத்து முறைத்துப் பார்த்துக் கொண்டிருந்தார் ஒருவர். முறைத்தவர் முகத்தில் எப்போதும் இறுக்கம். சிரிப்
பொன்னாங்கண்ணி கீரை சாப்பிடுவதால் கிடைக்கும் பயன்கள்
பொன்னாங்கண்ணி கீரையில் சாப்பிட்டால் ஆண்களுக்கு தேவையான சக்தி கிடைக்கும். குறிப்பாக, பாலுணர்வை அதிகரிக்கும் ஊட்டச்சத்துக்கள் இதில் நிறைந்துள்ளன. அதேபோல
தூக்கமின்மைக்கான காரணங்கள்
நாம் தூங்கும் பொழுது என்ன நடக்கின்றது என்பதனை நாம் அறிவதில்லை. தூக்கத்தில் நாம் என்னவெல்லாம் செய்கின்றோம் என்பதும் நமக்குத் தெரியாது. யாராவது நம்மைப்
வயதானாலும் நினைவாற்றல் இழப்பை தடுக்கலாம்
வயதானவர்களுக்கு ஏற்படும் நினைவாற்றல் இழப்பு அறிகுறிகளைக் குறைக்க உதவும் 6 சூப்பர்ஃபுட்களை உங்கள் அன்றாட உணவில் சேர்க்கலாம். முதுமையை நம்மால் தடுக்க மு
ஏசியை பயன்படுத்துவோர் கட்டாயம் கவனிக்கவேண்டியது
பல மென்பொருள் நிறுவனங்கள் தங்களது ஊழியர்களின் புத்துணர்ச்சி சூழலுக்கும், அவர்களின் செயல்பாடுகளை வெளிப்படுத்தும் கணினியின் பயன்பாட்டிற்கும் நாளொன்றுக்க
நீங்கள் புத்திசாலியா என அறிய அறிவியல் ரீதியான அறிகுறி
ஒருவரை என்ன சொன்னாலும் பொறுத்துக் கொள்வார்கள். ஆனால் முட்டாள் என்று சொன்னால் மட்டும் பயங்கரமாக கோபப்பட்டு விடுவார்கள். அப்படி யாரும் சொல்லிவிடாமல் புத
முகப்பொலிவினை இரண்டே நிமிடத்தில் பெற சூப்பரான ஐடியா
விசேஷத்திற்கு செல்ல வேண்டும் என்றால், ஐந்து நிமிடத்தில் முகம் பொலிவு பெற வேண்டும் என்றால், சமையலறையில் இருக்கும் பொருட்களை வைத்து ஐந்தே நிமிடத்தில் உங
அன்பை விதைப்போம்  (குட்டிக்கதை)
ஒரு இளைஞர் தினமும் ஒரு பாட்டியிடம் ஆரஞ்சு பழங்களை வாங்குவார்.பழங்களை எடை போட்டு வாங்கி பணம் கொடுத்த பின்..... அந்த பழங்களில் இருந்து ஒன்றை எடுத்து பிய