- · 5 friends
-
I
மனதை வருந்த வைத்த கொடுமையான சம்பவம்
இணையத்தில் வைரலாகி வரும் இந்த வீடியோவை ஒரு இளைஞர் எடுத்திருக்கிறார்.
அந்த வீடியோவில் போக்குவரத்து நெரிசல் மிகுந்த சாலையின் ஓரமாக, குழந்தை ஒன்று சில்வர் பெயிண்ட் அடித்துக்கொண்டு அமர்ந்திருக்கிறது. அந்த குழந்தையின் அருகில் இரும்பு பாத்திரம் ஒன்று வைக்கப்பட்டுள்ளது. அது அந்த குழந்தை பிச்சை எடுக்க வைக்கப்பட்டுள்ள பாத்திரம்.
சாலையின் ஓரம் பெயிண்ட் பூசிக்கொண்டு அமர்ந்திருக்கும் அந்த குழந்தையின் வயது தோராயமாக ஒன்று முதல் இரண்டு வரை இருக்கும். பிச்சை எடுப்பதற்காக சாலையின் ஓரம் அமரவைக்கப்பட்ட அந்த குழந்தை தூங்கி வழிகிறது. இவை அனைத்தும் அந்த வீடியோ காட்சியில் பதிவாகியுள்ளது.
இந்த குழந்தை சாலையின் ஓரம் அமர்ந்துக்கொண்டு பிச்சை எடுப்பதை அந்த வழியாக சென்ற பொதுமக்கள் பலர் கவனித்துள்ளனர். ஆனால் பெரும்பாலானோர் அதை கண்டும் காணாமல் சென்றுள்ளனர்.
அப்படி, அந்த வழியாக சென்ற இளைஞர் ஒருவர் அந்த குழந்தையை வீடியோ பதிவு செய்து ஆந்திர மாநில அமைச்சரை டேக் செய்து தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில், ஆந்திர மாநிலம் கர்னூல் பகுதியில் இந்த குழந்தை பிச்சை எடுக்கப்பட வைக்கப்பட்டுள்ளது.
இந்த குழந்தை கடந்த சில நாட்களாக தண்ணீர், உணவு எதுவிமின்றி அடித்து கொடுமை படுத்தப்பட்டுள்ளது என்றும் தனது பதிவில் அந்த இளைஞர் குறிப்பிட்டுள்ளார்.
சிரித்து விளையாடவேண்டிய குழந்தையை இவ்வாறு கொடுமை படுத்தி பிச்சை எடுக்க வைப்பது மனிதாபிமானம் இன்மையின் உச்சி என்று ஒருவர் பதிவிட்டுள்ளார். இந்த குழந்தையை இத்தகைய சூழலுக்கு தள்ளியவர்களுக்கு கடுமையான தண்டனை வழங்க வேண்டும் என்று மற்றொருவர் பதிவிட்டுள்ளார். மேலும், குழந்தைகளை பாதுகாக்க வேண்டும் என்றும், அவர்களின் கல்வியை உறுதி செய்ய வேண்டும் என்றும் பலரும் தங்களது கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.
சில திரைப்படங்கள் பிச்சை எடுப்பவர்களின் வாழ்வியலை சொல்வது போல படங்கள் வந்திருக்கிறது. குறிப்பாக நான் கடவுள் படத்தில் ஓரளவு காட்டி இருப்பர்.
சிறு குழந்தைகளை கடத்தி, அவர்களை ஊனமுற்றவர்களாக ஆக்கி, இப்படி பிச்சை எடுக்கவிட்டு வாழும் ஜென்மங்கள் மனித ஜென்மங்களே அல்ல. இவைகளுக்கு பின்னே ஒரு பெரிய மாபியா கும்பலே உள்ளது.
6 மாத குழந்தைக்கு போதை மருந்து கொடுத்து மயக்க நிலையில் வைத்து, பெண்கள் குழந்தையை காட்டி பிச்சை எடுப்பதையும் செய்தியில் பார்த்தேன்.
ஏன் அரசு தடுக்கவில்லை. அரசு நினைத்தால் இதை தடுக்க முடியும் அல்லவா? எத்தனை குழந்தைகள் கடத்தப்பட்டு இப்படி பிச்சை எடுக்க வைக்கிறார்கள். குழந்தை இழந்த பெற்றவர்களின் மனம் என்ன பாடுபடும். அரசு என்று கண் விழித்து இதோபோன்ற கொடுமைகளை தடுத்து நிறுத்துமோ….
குழந்தையும் தெய்வமும் ஒன்று என்கிறார்கள். அந்த தெய்வம் தான் தடுத்து நிறுத்த வேண்டும் இப்படியான கொடுமைகளை.
- · Yathusan
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·