- · 5 friends
-
I
நாளை அன்னாபிஷேகத்தை தரிசனம் செய்தால் வீட்டில் உணவு பஞ்சமே ஏற்படாது
ஐப்பசி பௌர்ணமியில் எல்லா சிவ ஆலயங்களிலும் அன்னாபிஷேகம் சிறப்பாக நடைபெறும். இந்த அன்னாபிஷேகத்திற்கு சென்று சிவபெருமானை எவர் ஒருவர் கண்குளிர தரிசனம் செய்கிறார்களோ, அவர்களுடைய வம்சத்திற்கு சாப்பாட்டிற்கு பஞ்சம் இருக்காது,
நாளைய தினம் உங்கள் வீட்டு பக்கத்தில் சிவன் கோவில் இருந்தால், அங்கு எப்போது அன்னாபிஷேகம் செய்யப்படுகிறது என்று நேரத்தை தெரிந்து வைத்துக் கொண்டு, கட்டாயம் ஈசனை சென்று தரிசனம் செய்யுங்கள்.
சிவன் மேல் போட்ட சாதத்தை எடுத்து கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு பிரசாதமாக கொடுப்பார்கள். கூட்டத்தில் நெரிசலில் சிக்காமல் நின்று நிதானமாக அந்த பிரசாதத்தை வாங்கி கோவிலிலேயே அமர்ந்து நிம்மதியாக சாப்பிட்டு வருவது உங்களுக்கு கோடான கோடி புண்ணியத்தை கொடுக்கும்.
நாளைய தினத்திற்கு இன்னொரு சிறப்பும் இருக்கிறது. அஸ்வினி, பரணி, கிருத்திகை இந்த 3 நட்சத்திரங்களும் சேரக்கூடிய நாள். இந்த நாளில் நாம் செய்யக்கூடிய பிராத்தனை நம்முடைய கடன் சுமையை குறைக்கும். அதுவும் முருகப்பெருமானை நினைத்து இந்த வழிபாடை செய்ய வேண்டும்.
பரணி, நட்சத்திரமும் கிருத்திகையும் முருகப்பெருமானுக்கு உகந்தது. அந்த நட்சத்திரத்தில் முருகப்பெருமானை வேண்டி இந்த விளக்கை வீட்டில் ஏற்றினால் உங்கள் ஒட்டுமொத்த கடன் பிரச்சனையும் தீரும். நாளைய தினம் வெள்ளிக்கிழமை காலை 11 மணியிலிருந்து 12, மாலை 6 மணியிலிருந்து 7 மணி இந்த இரண்டு மணி நேரமும் செவ்வாய் ஹோரை.
இந்த நேரத்தில் உங்களுடைய வீட்டு பூஜை அறையில் ஒரு மண் அகல் விளக்கில் கொஞ்சம் நெய் அல்லது நல்லெண்ணெய் ஊற்றி திரி போட்டு தீபம் ஏற்றி வைத்து, அந்த தீபத்திற்கு முன்பாக சிறிது நேரம் அமர்ந்து முருகப்பெருமானை மனதார நினைத்து, உங்கள் கடன் சுமை குறைய வேண்டும் என்று பிரார்த்தனை செய்து கொள்ளுங்கள்.
வீட்டில் விளக்கு ஏற்ற இதில் ஏதாவது ஒரு நேரத்தை தேர்ந்தெடுத்துக் கொள்ளுங்கள். பெரும்பாலும் நாளைய தினம் வெள்ளிக்கிழமை பௌர்ணமி எல்லாம் சேர்ந்து இருக்கிறது. வீட்டில் சுத்தபத்தமாக மகாலட்சுமிக்கு பூஜை செய்தீர்கள். முருகப்பெருமானுக்கு ஒரு சின்ன மண் அகல் விளக்கு ஏத்தணும்.
செவ்வாய் ஹோரையில் தான் தீபம் ஏற்ற வேண்டும். வெள்ளிக்கிழமை 2 மணி நேரம் செவ்வாய் ஹோரை வந்திருக்கிறது. உங்களுக்கு எந்த நேரம் சௌகரியமோ அதை தேர்ந்தெடுத்து ஏற்றலாம். அந்த ஒரு மணி நேரமும் வீட்டில் விளக்கு எறிய வேண்டும். அந்த ஈசனின் அருளாலும், மகாலட்சுமியின் அருளாலும், முருகப்பெருமானின் அருளாலும், உங்களுடைய கஷ்டங்கள் ஒரு முடிவுக்கு வரும்.
- · Yathusan
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·