- · 5 friends
-
I
முதுகுவலியா?
உடம்பில் ஒரு நோய் என்றாலும், வாழ்க்கையில் ஒரு பிரச்சனை என்றாலும், அவைகளை அருகில் உள்ள நண்பர்களிடம், பிற மனிதர்களிடம், சொல்வதை விட.. அதை முதலில் நாம்சொல்ல வேண்டிய இடங்கள்.. நமது மூளை+நமது ஆத்மா இங்குதான் அவசியம் நாம் சொல்ல வேண்டும்! அவைகளால் நிச்சயமாக100% தீர்வு உண்டு! அதை எப்படி சொல்வது..?
சில நிமிடங்கள் நாம் தனிமையில் இருந்து அவைகளைப் பற்றி ஆழ்ந்து சிந்தித்து.. சிறிது நேரம் உள்முகப் பயணமாக சென்றால் போதும்! நமக்கு தேவையான அத்தனை கேள்விகளுக்கும் பதில் அங்கே நிச்சயம் இருக்கிறது. கடவுளை நாம் நம்புகிறோம் என்பதை விட மிக முக்கியமாக நாம் நம்ப வேண்டிய விஷயம் இதுதான் என்பது என் கருத்து! என்னமோ ஏதோ உளறுகிறேன் என்று தயவு செய்து எண்ண வேண்டாம். நீங்களே பரீட்சித்துப் பார்த்து கொள்ளலாம்.
இரண்டு தினங்களுக்கு முன்பாக அழகர் ஆற்றில் இறங்குகிற வைபவத்துக்கு சென்று இருந்தேன். கட்டுக்கடங்காத கூட்ட நெரிசலில் சிக்கிக் கொண்டு அவரின் தரிசனத்திற்காக பல மணி நேரம் காத்திருக்க வேண்டி வந்தது. மயக்கம், கிரக்கம், எல்லாம் கடந்து ஒரு வழியாக சாமியை பார்த்துவிட்டு வீட்டுக்கு வந்துட்டேன். உணவு இடைவேளை முடித்துவிட்டு உறங்கத்திற்க்கு முன் மனசுக்குள் நானாகவே நினைத்துக் கொண்டேன்; அப்பா நாராயணா உன்னை பார்க்க வேண்டும் என்று ஆசை ஆசையாக வந்தேன். நீயோ அடுத்த வருஷம் இதே மாதிரி என்னை வந்து சந்திக்க உனக்கு தைரியம் இருக்கிறதா என்பதைப்போல..? படாத பாடு படுத்தி இப்படி உடம்பெல்லாம் புண்ணாக்கி விட்டாயே..? என்று மனசுக்குள்.. நினைக்கிறேன். அதாவது இந்த பிரச்சனையை என் அறிவுக்கும் ஆத்மாவுக்கும் தெரிவிப்பதை போல!
தூங்கி எழுந்தேன். இப்போது மாலை 6:00 மணி ஆகியிருந்தது. என் உடம்பில் இருந்த அத்தனை வலிகளும் நீங்கி.. குற்றால அருவியில் 2 மணி நேரம் நன்றாக நனைந்து குளித்தது போல.. உடம்பில் துளி அளவு கூட வலி இல்லாமல்.. மிகவும் 'ப்ரஸாக' இருந்தேன். தனி புத்துணர்வு கூட தோன்றி இருந்தது! இதை இறைவனின் சங்கல்பம் (ஒரு வகையில் அதுவும் உண்மைதான்) என்று எண்ணுவதை விட.. என் ஆத்மாவும் அறிவும் இணைந்து என் உடம்பிற்குள் புது சக்தியை உருவாக்கியது (ஆண்டிபயாட்டிக் என்பதைப் போல) என்பதே உண்மை!
உடம்பில் முதுமை வந்ததனால்..வலி வந்திருக்கிறது (அது உண்மைதான் என்றாலும்)என்பது போன்ற எதிர்மறை எண்ணங்கள் வேண்டாம். அதே சமயத்தில் தினசரி உங்கள் உடம்பில் புதியதாகஉற்பத்தி ஆகக்கூடிய ரத்தஅணுக்களின் அளவை வாரம் ஒரு முறை எளிய முறையில் நாம் கண்காணித்துக் கொண்டாலே போதும்! வெளியில் எங்கும் செல்லாமலே நமக்கு நாமே கூட அதை புரிந்து கொள்ள முடியும்! எப்படி? படுக்கையில் இருந்து எழுந்ததும் சில நிமிடங்கள் கண்களை மூடி அமர்ந்திருந்து விட்டு நிற்க பழக வேண்டும். எதையாவது சாப்பிட வேண்டும் போல் ஆசை எழும்போது அவைகளை சாப்பிட வேண்டும். அவ்வளவே! பொதுவாக இறைவனிடம் பிரார்த்தனை என்கிற பெயரில் நாம் நினைத்துக் கொள்ளும் விஷயங்கள் எல்லாம் இப்படித்தான் நம் மனதையும் அறிவையும் சென்று பலன்களை செய்கிறது!
- · Yathusan
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·