- · 5 friends
-
I
அற்புத மனிதப் பிறவிகள்
உலகப் புகழ்பெற்ற, அமெரிக்க நகைச்சுவை நாவலாசிரியரான மார்க் ட்வைன் ஒரு முறை கூறினார். ''19-ம் நூற்றாண்டின் இரு அற்புத மனிதப் பிறவிகள், மாவீரன் நெப்போலியனும், விசித்திர மங்கை ஹெலன் கெல்லரும்'' என்று.
அப்போது ஹெலன் கெல்லருக்கு வயது 15-தான். அவர் சொல்லிப் பல ஆண்டுகள் கழிந்துவிட்டன. ஆயினும், இன்னும் நமக்கு ஹெலன் கெல்லர் 'விசித்திர மங்கை'யாகத்தான் விளங்குகிறார்.
ஹெலன் கெல்லரின் கண்களுக்குப் பார்க்கும் சக்தி கிடையாது. ஆனாலும், அவர் நம்மைவிட அதிக அளவு புத்தகங்கள் படித்திருக்கிறார். அது மட்டுமா, அவரே ஏழு புத்தகங்கள் எழுதியிருக்கிறார். தனது சோகம் கலந்த வாழ்க்கையைத் திரைப்படமாக்கித் தானே நடித் திருக்கிறார். ஒன்பது ஆண்டுகள் பேசும் சக்தியை இழந்துவிட்ட அவர், அமெரிக்க ஐக்கிய நாடுகள் முழுவதும் சுற்றி எண்ணற்ற சொற் பொழிவுகள் ஆற்றியிருக்கிறார்.
உண்மையிலேயே, ஹெலன் கெல்லரின் வாழ்க்கை விசித்திர மானதுதான். இந்த உலகில் பிறக்கும் போது நம்மைப் போலத்தான் பிறந்தார். பின்னர் முதல் 18 மாதங்கள் வரை ஹெலன் கெல்லர் மற்ற குழந் தைகளைப் போல் பார்த்தார்; சிரித்தார்; தவழ்ந்து விளையாடினார். பிறகு, அவர் திடீரென வியாதியில் படுத்த படுக்கையானார். அவ்வியாதி பார்க்கும் சக்தி, கேட்கும் சக்தி, பேசும் சக்தி ஆகிய மூன்று இன்றியமையாத சக்திகளையும் அவரிடமிருந்து பறித்துக்கொண்டு போய்விட்டது.
அன்றிலிருந்து ஹெலன் கெல்லர் எதற்கெடுத்தாலும் முரண்டு பிடிப்பது, கையில் அகப்பட்ட சாமான் களை எல்லாம் போட்டு உடைப்பது போன்ற துஷ்டத்தனங்களைச் செய்ய ஆரம்பித்தார். சுருக்கமாகச் சொன்னால், குழந்தையாக வளராமல் 'குட்டிப்பிசாசு' போல வளர்ந்து வந்தார். அவரது பெற்றோர் அவரை பாஸ்டன் நகரில் உள்ள பொக் கின்ஸ் பார்வையற்றோர் நிலையத்திற்கு அனுப்பினார்கள். அங்கே 20 வயதே நிறைந்த அன்னி மேன் ஃபீல்ட் ஸல்லிவான் என்ற ஆசிரியை காது கேட்காத, பேசத் தெரியாத, பார்க்கமுடியாத ஹெலன் கெல்லருக்குப் பாடம் சொல்லிக் கொடுக்கும் பணியில் ஈடுபட்டார்.
ஹெலன் கெல்லர் தனது 20-ம் வயதில் மேற்படிப்பிற்காக ரேட் கிளிஃப் கல்லூரிக்கு ஆசிரியையுடன் சென்றார். இப்போது அவருக்கு எழுதப் படிக்க மட்டுமின்றி, பேசவும் தெரிந்திருந்தது. அவர் பேசிய முதல் வார்த்தை, ''நான் இப்போது ஊமையல்ல!'' என்பதுதான்.
விதி, தனக்குச் செய்த கொடுமைகளைப் பற்றி ஹெலன் கெல்லர் கவலைப்படுவதே இல்லை. ''என்னைப் போல உள்ள இன்னொரு மனிதப் பிறவியின் ஒலியைக் கேட்க முடியாமல் போயிற்றே'' என்பதுதான் அவரது வருத்தம்
- விகடன்
- · Yathusan
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·