Support Ads
 ·   ·  1461 posts
  •  ·  5 friends
  • I

    9 followers

படித்தேன்..பகிர்கிறேன்....

தினமும் வீட்டுல கொண்டாந்து கீரை விற்கும் அந்த அம்மா போன வாரம் சாயங்காலமா வீட்டுக்கு வந்து அவங்க மகனுக்கு கல்யாணம்னு பத்திரிக்கை குடுத்துட்டு போச்சு.

தினம் காலையில கூடையில கீரக்கட்டு, முருங்கக்கா, வாழக்கா மாத்திரம் கொண்டாரும்.

கீரக்கட்டு ரூ 15. முருங்கக்கா கட்டு ரூ 20.

வாழக்கா 3 பீஸ்கள் ரூ 15 என்று குடுக்கும்.

பழைய சேலை கட்டிருக்கும். அள்ளி முடிஞ்ச தலை. எண்ணெய் பாக்காத முடின்னு பாக்கவே கஷ்டமாக இருக்கும்.

கீரக்கட்டோட பத்திரிக்கை குடுக்கக் கூடாதுன்னு தனியா வந்து குடுத்துட்டு போச்சு. இது மாதிரி பத்திரிக்கைகளைக் கண்டுக்கிறது இல்ல. அதுனால வாங்கி வைச்சதோட சரி மறந்தாச்சு. ஆனா கல்யாணத்திற்கு மூணு நாளைக்கி முன்னாடி வந்து அம்மா அஞ்சு நாளைக்கி நான் வரமாட்டேன்

கல்யாண வேலை இருக்குன்னு சொல்லிட்டு போச்சு.

நான் சொன்னேன் ஏதாவது பணத்த கவர்ல போட்டுக் குடுத்து அனுப்பு. இதுக்கெல்லாம் போக முடியாது.

அன்னிக்கி எங்க ஆபீசுல என்னோட பாஸ் மகளுக்குக் கல்யாணம். அங்க போகனும் அவர் கண்டிப்பா வரனும்ன்னு சொல்லிருக்காருன்னு சொன்னேன்.

அதுக்கு என்னோட சம்சாரம் கேட்டா நீங்க மொதநா ரிசப்சன் தான் போவீங்க.

மறுநாள் ஞாயத்துக்கெழமதான் பக்கத்துக் கிராமத்துல அவங்க வீட்டுலதான் கல்யாணம்.

போய்த் தலையை காட்டிட்டு வரலாம்ன்னு சொன்னா.

அதுக்கு அவ சொன்ன காரணம் அந்தம்மா கிட்டத்தட்ட பத்து வருசமா கீரை குடுக்குது, நல்ல பழக்கம்ன்னா.

மேலிடத்தின் பேச்சை மீற முடியுமோ.?..

சரின்னு ஒத்துக்கிட்டேன். வழக்கம் போல ஆபீஸ்ல வேலை செய்யிற வங்களோட ஒன்னா வேன் புடிச்சி போனோம்.

பாஸ் வீட்டுக் கலியாணத்துக்கு. அங்க சரியான கூட்டம். பாஸ் மாப்பிள்ள வீட்டு ஆளுகளை கவனிக்கிறதுல பிசியா இருந்தாரு.

வரிசையில நின்னுட்டு இருக்கும் போதே குறுக்க குறுக்க மாப்பிள்ள வீட்டு ஆளுகன்னு கும்பல் கும்பலா போய்ட்டு இருந்ததால லேட்டாகி ஒரு வழியா கை குடுக்க போனோம். அந்த சமயத்தில் யாரோ வர எங்களை அம்போன்னு விட்டுட்டு பாஸ் அவர்கிட்ட ஓடினாரு.

நாங்க ஃபார்மாலிட்டிக்கு நின்னு போட்டோ எடுத்துட்டு சாப்பிட போய் அங்க எடம் புடிச்சி சாப்பிட்டு வீடு வாரதுக்குள்ள போதும் போதுமுன்னு ஆயிடுச்சு.

மறுநாள் காலையிலதான் கீரக்காரம்மா வீட்டுக் கல்யாணம். சம்சாரம் பட்டு சேலை ரெண்டு இஞ்ச் பாடர் போட்டது கட்டிக்கிட்டு கொஞ்சமா நகை போட்டுக்கிட்டுக் கெளம்புனா.

கார் எடுத்துக்கலாமான்னு கேட்டப்ப வேணாம், நாம ரொம்ப பகட்டா அங்க போகப்புடாது. அவங்களே சுமாராத்தான் இருப்பாங்க. அளவோட இருக்குறது தான் நல்லது. நம்மமேல கண்ணு பட்டுடும்ன்னு சொன்னா.

அப்பீல் கெடையாது . நானும் பைக் எடுத்துட்டு கெளம்புனேன்.

கவருல ரூ 201 போட்டு சீல் பண்ணி எடுத்துட்டு போதும் அவங்களுக்கு இதுவே பெருசுன்ற எண்ணத்துல போனோம்.

அந்த ஊரு மெயின் ரோட்டுல இருந்து உள்ளாற மூணு நாலு கிலொ மீட்டர் இருக்கும்.

மெயின் ரோட்டில இருந்து தோரணம் கட்டிருந்துச்சு. வேற எதுவும் விஷேசம் போலன்னு நெனச்சிக்கிட்டேன்.

போகப்போகத் தெரிஞ்சது, அது கீரக்காரம்மா வீட்டுக் கல்யாணத்துக்கானதுன்னு.

ஊரு பூராம் வாழ்த்துப் போஸ்ட்டர் அடிச்சி ஒட்டிருந்துச்சு. போகப்போக வரிசையா விலை உயர்ந்த காருக நின்னுச்சு.

எல்லாம் கல்யாணத்திற்கு வந்தது போல.

கல்யாணம் நடக்குற வீடு சொன்னா அடிச்சிப்புடுவாங்க, அவ்வளவு பெரிய பங்களா. தெருவே அடைச்சிப் பந்தல் எக்கசக்கக் கூட்டம். ஒரே பட்டுச்சேலை பெண்கள்.

அவங்களோட கம்பேர் பண்ணிப் பாத்தா நாங்க ரொம்ப சுமார். உள்ளாற விடுவாங்களோன்ற மாதிரி. எங்களுக்கு ரொம்பவும் கூச்சமாப் போச்சு.

வெளிய தயக்கத்தோட நின்னப்ப கீரக்காரம்மா தற்செயலா வெளிய வந்துச்சு. எங்களைப் பார்ப்பத்துட்டு நேர இவங்க கிட்ட வந்து வாங்கய்யா அப்படின்னு கூப்புட்டுட்டுப்போச்சு.

எனக்கு அடையாளமே தெரியல. அரையடி பாடர் பட்டுச்சேலை கழுத்துபூராம் நகைகள் பெரிய ஜமீன் தாரம்மா மாதிரி ஜொலிச்சிச்சி.

உள்ளார கூட்டிட்டுப்போய எல்லா பட்டுச் சேலைகளைகாரங்களையும் ஒதுக்கி விட்டுட்டு மணமக்களை கூப்புட்டு கால்ல விழுகச்சொல்லிச்சி.

அய்யா ஒங்களைபோல படிச்ச பெரியவுக ஆசீர்வாதம் பண்ணனும்ன்னு சொல்லிச்சி. நாங்க ஆசீர்வாதம் பண்ணுனோம். கொண்டுபோயிருந்த 200 ரூவா கவர் கூசிச்சி. எப்புடிக் குடுக்குறதுன்னு யோசனை வந்துச்சு.

வேற வழியில்லாம குடுத்துட்டு திரும்புன எங்களை வாங்கய்யான்னு கூட்டிட்டுப் போய் தனியா டேபிள் ஒதுக்கி பக்கத்துல நின்னு சாப்பாடு பரிமாறி சாப்புட வைச்சி கெளம்பும் போது தாம்பூலப் பைன்னு ஒண்ணு குடுத்துச்சு.

ரொம்ப சந்தோசமுய்யா. நீங்க வந்துதுலன்னு மனம் சந்தோசத்தோட வழி அனுப்புச்சுச்சு....

வீட்டுல வந்து தாம்பூலப்பையை பிரிச்சா அதுக்குள்ள வெள்ளில சிமிழ்கள் ரெண்டு இருந்துச்சு. எனக்கு ஒருமாதிரி ஆகிப்போச்சு. இது புரியவே இல்ல.

அப்பத்தான் அவங்க குடுத்த கலியாணப் பத்திரிக்கைய பிரிச்சி படிச்சு, அதிர்ந்து போனேன். அந்த ஊருல பெரிய வெவசாயக் குடும்பம் அது.

மகன் பேருக்கு நேர M.Sc (Agriculture) ன்னும் பொண்ணு பேருக்கு நேரயும் M.Sc (Agriculture) ன்னும் போட்டிருந்துச்சு.

சொந்தக்காரங்க எல்லாம் பெரிய படிப்பு பதவில இருக்குறதும் தெரிஞ்சது.

அடுத்த வாரம் ஞாயத்துக்கெழம அதே கீரக்காரம்மா பழையபடி கீரைக்கூடையோட வந்துச்சு.

என்னால ஆவல அடக்கமுடியல இத விசாரிக்கனும்ன்னு தோணிச்சு.

அவங்களை வீட்டுக்குள்ள கூப்புட்டு ஒக்காரவைச்சி மரியாதையோட விசாரிச்சப்ப அந்த அம்மா சொல்லிச்சி,

உங்களுக்கு சந்தேகம் வந்தது ஞாயம்தான். நாங்க அந்த ஊருல வெவசாயக் குடும்பம். அஞ்சு ஏக்கரு கீரை பயிரிட்டு இருக்குறோம்.

மகன் தான் படிச்சிட்டு வெவசாய்த்துக்கு ஒதவி பண்ணுறான். அந்த விவசாயக்கல்லூரிலதான் வேலை பாக்குறான்.

பொண்ணும் அதே கல்லூரிதான். அவளுக்கும் வெவசாய்த்துல ஆர்வம். அதுனாலதான் காதல் கல்யாணம்தான்.

முறையா வெவசாயம் செஞ்சி தரகர் இல்லாம நாங்களே வியாபாரமும் பண்ணுரோம். காலையில வேன்ல கொண்டாந்து எறக்கி தனித்தனியா கூடையில சொமந்து விக்கிறோம்.

நான் ஆர்வத்தோட நடந்து விக்கிறதால ஒடம்பும் நல்லாருக்கு. லாபமும் கெடைக்கிதுன்னு சொல்லிச்சி.

தோற்றத்தப் பத்தி அந்த அம்மா கிட்ட கேட்டேன். ஏன் அங்க ராணி மாதிரி இருந்த நீங்க இங்க கீரவிக்கிறப்ப இப்புடின்னு.?!!!

அதுக்கு சிரிச்சிக்கிட்டே சொல்லிச்சி கீரவிக்கிறப்ப பட்டுச்சேலையும், நகை நட்டோட வந்தா நல்லாருக்குமா?...

ஆராவது வாங்குவாகளான்னு?

சும்மா 40 ஆயிரம் மாசச்சம்பளம் வாங்குற நாம என்னா அலட்டு அலட்டுறோம்?, அப்படின்னு நெனைக்கிறப்ப வெக்கமா இருந்துச்சு.

அந்த விவசாயத் தாயை கையெடுத்துக கும்புடத்தோணிச்சி.

"உழுதுண்டு வாழ்வாரே வாழ்வார் மற்றெல்லாம் தொழுதுண்டு பின்செல்பவர்" என்ற நம்ம திருக்குறள் நெனவுக்கு வந்துச்சு.

  • 1087
  • More
Info
Category:
Created:
Updated:
Comments (0)
Login or Join to comment.
Ads
Featured Posts
தமிழ் குழந்தைகளின் பெயர்கள்
  •  ·  Yathusan
  •  · 
1 = அகரன் > முதன்மையானவன்2 = அகவி > அகம் செம்மையானவள் / அகத்தூய்மையள்3 = அகன் > ஆழ்ந்த உளத்தவன்4 = அகன் > ஆழ்ந்த உள்ளம் உடையவன்5 = அகிலன்
S என்ற எழுத்தில் உங்கள் பெயர் ஆரம்பிக்கின்றதா?
குறிப்பிட்ட சில ஆங்கில எழுத்துகளை வைத்து ஒருவரது வாழ்க்கையையே தீர்மானித்து விடலாம். அதிலும், A, S, J போன்ற எழுத்துகள் மிகவும் சக்தி வாய்ந்த எழுத்துகளா
கிழவி தோற்றமா? தேவதை தோற்றமா? (குட்டிக்கதை)
இரண்டு மன்னர்களுக்குள் சண்டை. தோற்றவனிடம் வென்றவன் சொன்னான்.”நான் கேட்கும் கேள்விக்கு சரியான பதிலைச் சொன்னால் உன் நாடு உனக்கே”.கேள்வி : ஒரு பெண் தன் ஆ
உப்புமாவை நேசிக்கும் அன்பர்களுக்கு (நகைச்சுவை)
சிவன்: நக்கீரரே! எமது பாட்டில் எங்கு குற்றம் கண்டீர்? சொற்சுவையிலா? அல்லது பொருட்சுவையிலா?.நக்கீரர்: சொல்லில் குற்றமில்லை. இருந்தாலும் அது மன்னிக்கப்ப
சுவையான சம்பவம்...
கம்பன் ஒரு சமயம் கையில் காசில்லாமல் காய்ந்து போய் கிடந்தான்.அப்போது ஒரு தாசி வீட்டு வேலைக்காரன் அவள் கம்பனை சந்திக்க விரும்புவதாக கூறினான்.அவள் பெயர்
வைத்தியரின் தேடுதல்   (குட்டிக்கதை)
ஒரு வைத்தியரும் அவருடைய மனைவியும் காட்டில் நீண்ட நாட்களாக எதையோ தேடிக்கொண்டிருந்தனர்.கணவர் என்ன தேடுகிறார் என்று மனைவிக்கு தெரியாது!  வைத்தியரும் சொன்
சின்னப் பையன்     (குட்டிக்கதை)
இங்கிலாந்தின் பிரபல கம்பெனி ஒன்றிற்கு, பெரியதோர் இயந்திரம் ஜப்பானில் இருந்து வரவழைக்கப் பட்டது. கோடிக்கணக்கில் விலை. அந்த இயந்திரத்தை இன்ஸ்டால் செய்ய
வெற்றிக்கான சூத்திரம்
தன்னம்பிக்கை பயிற்சி வகுப்பில்வெற்றியாளர் ஒருவரை முறைத்து முறைத்துப் பார்த்துக் கொண்டிருந்தார் ஒருவர். முறைத்தவர் முகத்தில் எப்போதும் இறுக்கம். சிரிப்
பொன்னாங்கண்ணி கீரை சாப்பிடுவதால் கிடைக்கும் பயன்கள்
பொன்னாங்கண்ணி கீரையில் சாப்பிட்டால் ஆண்களுக்கு தேவையான சக்தி கிடைக்கும். குறிப்பாக, பாலுணர்வை அதிகரிக்கும் ஊட்டச்சத்துக்கள் இதில் நிறைந்துள்ளன. அதேபோல
தூக்கமின்மைக்கான காரணங்கள்
நாம் தூங்கும் பொழுது என்ன நடக்கின்றது என்பதனை நாம் அறிவதில்லை. தூக்கத்தில் நாம் என்னவெல்லாம் செய்கின்றோம் என்பதும் நமக்குத் தெரியாது. யாராவது நம்மைப்
வயதானாலும் நினைவாற்றல் இழப்பை தடுக்கலாம்
வயதானவர்களுக்கு ஏற்படும் நினைவாற்றல் இழப்பு அறிகுறிகளைக் குறைக்க உதவும் 6 சூப்பர்ஃபுட்களை உங்கள் அன்றாட உணவில் சேர்க்கலாம். முதுமையை நம்மால் தடுக்க மு
ஏசியை பயன்படுத்துவோர் கட்டாயம் கவனிக்கவேண்டியது
பல மென்பொருள் நிறுவனங்கள் தங்களது ஊழியர்களின் புத்துணர்ச்சி சூழலுக்கும், அவர்களின் செயல்பாடுகளை வெளிப்படுத்தும் கணினியின் பயன்பாட்டிற்கும் நாளொன்றுக்க
நீங்கள் புத்திசாலியா என அறிய அறிவியல் ரீதியான அறிகுறி
ஒருவரை என்ன சொன்னாலும் பொறுத்துக் கொள்வார்கள். ஆனால் முட்டாள் என்று சொன்னால் மட்டும் பயங்கரமாக கோபப்பட்டு விடுவார்கள். அப்படி யாரும் சொல்லிவிடாமல் புத
முகப்பொலிவினை இரண்டே நிமிடத்தில் பெற சூப்பரான ஐடியா
விசேஷத்திற்கு செல்ல வேண்டும் என்றால், ஐந்து நிமிடத்தில் முகம் பொலிவு பெற வேண்டும் என்றால், சமையலறையில் இருக்கும் பொருட்களை வைத்து ஐந்தே நிமிடத்தில் உங
அன்பை விதைப்போம்  (குட்டிக்கதை)
ஒரு இளைஞர் தினமும் ஒரு பாட்டியிடம் ஆரஞ்சு பழங்களை வாங்குவார்.பழங்களை எடை போட்டு வாங்கி பணம் கொடுத்த பின்..... அந்த பழங்களில் இருந்து ஒன்றை எடுத்து பிய