- · 5 friends
-
I
தன்னடக்கம் (ஒரே தலைப்பில் இரு குட்டிக்கதை)
ஒருநாள் ஒட்டக்கூத்தரும், கம்பரும் ஆற்றங்கரை ஒன்றின் படித்துறையில் அருகருகே கொஞ்சம் தள்ளி நின்று முகம்,கை,கால் கழுவிக்கொண்டிருந்தனர்.
அப்போது தண்ணீர் ஒட்டக்கூத்தர் நின்று கொண்டிருந்த இடத்திலிருந்து கம்பர் நின்று கொண்டிருந்த இடம் நோக்கி ஓடிக்கொண்டிருந்தது.
இதைக்கண்ட ஒட்டக்கூத்தர் சற்றுக்குறும்பாக ‘கம்பரே நான் கழுவிய கழுநீர் தான் உமக்கு வருகிறது பார்த்தீரா? என்று நகைத்துக்கொண்டேக் கேட்டாராம். அதைக்கேட்ட கம்பர் ’’அட !! நீரே வந்து என் காலில் விழுந்தால் நான் என்ன செய்வது , இதுதான் விதிப்பயன் என்று சிலேடையாகச் சொல்லி நகைப்பூட்டினாராம்.
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
பட்டினத்தார் அரசருக்கு ஈடாகப்பெருஞ்செல்வம் படைத்தவராய் விளங்கினார். பிறகு அவ்வாழ்க்கையில் சலிப்புற்ற அவர் அனைத்தையும் துறந்து விட்டு துறவியாகிவிட்டார்.துறவறம் பூண்ட பட்டினத்தாரைக்காண அரசர் ஒருவர் படைசூழ வந்திருந்தார். அந்த அரசன் துறவுக்கோலத்தில் இருந்த பட்டினத்தாரை வணங்கிவிட்டுப் பிறகு , ’’ எமக்கு இணையாக செல்வம் படைத்திருந்த நீங்கள் இந்த துறவரத்தால் கண்ட பயன் என்ன ?’’ என்று கேட்டார்
அதற்குப் பட்டினத்தார் , நீர் நிற்க நான் இருக்க” இந்தச்சிறப்பு ஒன்று போதாதா என்று பதிலளித்தார். எவ்வளவு பெரிய உயர்ந்த இடத்தில் இருப்பினும் நாம் தன்னடக்கத்துடன் வாழப் பழகிக்கொள்ளவேண்டும் , என்பதேயே இவை நமக்கு உணர்த்துகின்றன.
- · Yathusan
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·