-
- 3 friends
இன்றைய ராசி பலன் – ஜூலை மாதம் 22, 2024
தமிழ் வருடம் ஸ்ரீ குரோதி, ஆடி மாதம் 6 ஆம் தேதி
மேஷம் -ராசி:
குடும்பத்தினரை அனுசரித்துச் செல்லவும். பணவரவு திருப்திகரமாக இருக்கும். குழந்தைகளுக்கு படிப்பு சார்ந்த அலைச்சல் உண்டாகும். கலை பொருட்களால் சில விரயங்கள் ஏற்படும். கல்வியில் இருந்துவந்த குழப்பம் குறையும். உடல் ஆரோக்கியம் மேம்படும். உற்பத்தி சார்ந்த தொழிலில் மேன்மை உண்டாகும். அரசாங்கத்தால் அனுகூலம் ஏற்படும். அனுகூலம் நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை
ரிஷபம் ராசி:
தன்னம்பிக்கையுடன் செயல்பட்டு எண்ணியதை முடிப்பீர்கள். புதிய துறை சார்ந்த தேடல் அதிகரிக்கும். வாக்குறுதி அளிப்பதில் கவனம் வேண்டும். சமூகப் பணிகளில் மாறுபட்ட அனுபவம் கிடைக்கும். உத்தியோகஸ்தர்களின் திறமைகள் வெளிப்படும். கூட்டாளிகளுடன் இருந்துவந்த கருத்து வேறுபாடுகள் விலகும். மனதளவில் இருந்துவந்த கவலைகள் நீங்கும். வெற்றி நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண் : 2
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை
மிதுனம் -ராசி:
எதிர்காலம் தொடர்பான சிந்தனைகள் மேம்படும். பேச்சுக்களில் கனிவு வேண்டும். குடும்பத்தாரின் எண்ணங்களை புரிந்து கொள்வீர்கள். வெளி உணவுகளை குறைத்துக் கொள்ளவும். உங்கள் மீதான நம்பிக்கையில் சில மாற்றங்கள் ஏற்படும். நெருக்கமானவர்களின் வழியில் விட்டுக் கொடுத்துச் செல்லவும். உயர் அதிகாரிகளிடம் கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டு நீங்கும். தாமதம் நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : சந்தன வெள்ளை
கடகம் -ராசி:
எதிர்பார்த்த சில உதவிகள் கிடைக்கும். கடன் பிரச்சனைகள் குறையும். விலகி இருந்தவர்கள் விரும்பி வருவார்கள். உத்தியோகத்தில் ஆதரவான சூழல் நிலவும். சிந்தனைகளில் இருந்துவந்த குழப்பம் நீங்கும். துணைவர் வழியில் ஆதரவு கிடைக்கும். செயல்பாடுகளில் இருந்துவந்த சோர்வு மறையும். சுப காரிய முயற்சிகளில் எதிர்பார்ப்புகள் நிறைவேறும். புகழ் நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள்
சிம்மம் -ராசி:
சஞ்சலமான சிந்தனைகளால் வீண் விரயங்கள் ஏற்படும். நெருக்கடியான சில பிரச்சனைகளுக்கு தெளிவு கிடைக்கும். பணிபுரியும் இடத்தில் சாதகமான சூழல் ஏற்படும். நண்பர்களின் வழியில் விட்டுக்கொடுத்துச் செல்லவும். திடீர் பயணங்களின் மூலம் அலைச்சல் ஏற்படும். வியாபார பணிகளில் பொறுப்புடன் செயல்படவும். மகிழ்ச்சி நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள்
கன்னி -ராசி:
குடும்ப பிரச்சனைகள் அகலும். விலகிச் சென்றவர்கள் விரும்பி வருவார்கள். உயர் அதிகாரிகளின் ஒத்துழைப்பு கிடைக்கும். ஆன்மிக பணிகளில் ஆர்வம் ஏற்படும். மனதில் சேமிப்பு சார்ந்த சிந்தனைகள் மேம்படும். வருமானத்தை அதிகப்படுத்துவதற்கான எண்ணங்கள் உண்டாகும். நிகழ்கால தேவைகள் பூர்த்தியாகும். பாராட்டு நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : இளஞ்சிவப்பு
துலாம் -ராசி:
பொருளாதார ரீதியாக இருந்துவந்த பிரச்சனைகள் விலகும். வெளியூர் பயண வாய்ப்புகள் கைகூடும். சுப காரிய பேச்சு வார்த்தைகளில் நிதானம் வேண்டும். உயர் அதிகாரிகளின் சந்திப்பு மாற்றத்தை ஏற்படுத்தும். பொதுவாழ்வில் செல்வாக்கு மேம்படும். கொடுத்த வாக்கை காப்பாற்றுவீர்கள். வியாபார கூட்டாளிகளிடத்தில் அனுசரித்துச் செல்லவும். மேன்மை நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : ஊதா
விருச்சிகம்- ராசி:
பொருளாதாரம் தொடர்பான நெருக்கடிகள் குறையும். மனதளவில் புதிய நம்பிக்கை ஏற்படும். ஆரோக்கிய பிரச்சனைகள் விலகும். உடன்பிறந்தவர்கள் ஒத்துழைப்பாக இருப்பார்கள். எதிலும் படபடப்பு இன்றி செயல்படவும். நண்பர்களிடத்தில் அனுசரித்துச் செல்லவும். இறை வழிபாட்டில் ஈடுபாடு அதிகரிக்கும். கடன் சார்ந்த சில உதவிகள் கிடைக்கும். ஆர்வம் நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண் : 1
அதிர்ஷ்ட நிறம் : அடர்சிவப்பு
தனுசு -ராசி:
குடும்ப உறுப்பினர்களின் தேவைகளை நிறைவேற்றி வைப்பீர்கள். கணவன், மனைவிக்கிடையே ஒற்றுமை அதிகரிக்கும். உயர் அதிகாரிகளிடம் அனுசரித்து நடந்து கொள்ளவும். பழகும் விதத்தில் மாற்றங்கள் ஏற்படும். வியாபாரத்தில் சில மாற்றங்கள் மூலம் லாபம் அதிகரிக்கும். வெளியூர் தொடர்பான பயணங்களில் விவேகம் வேண்டும். இன்பம் நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை
மகரம் -ராசி:
உடனிருப்பவர்களின் எண்ணங்களை புரிந்து கொள்வீர்கள். சிந்தித்து செயல்படுவதன் மூலம் தேவையற்ற பகைமையை தவிர்க்க முடியும். வீண் விவாதங்களை தவிர்ப்பது மன அமைதியை ஏற்படுத்தும். உத்தியோகப் பணி மாற்றம் தொடர்பான எண்ணங்கள் அதிகரிக்கும். வியாபார பணிகளில் முன்னேற்றமான சூழ்நிலை ஏற்படும். தேர்ச்சி நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண் : 2
அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள்
கும்பம் –ராசி:
எதிர்பாராத சில செலவுகளால் நெருக்கடிகள் ஏற்படும். வியாபாரத்தில் அலைச்சல்களுக்கு ஏற்ப அனுகூலம் உண்டாகும். பொழுதுபோக்கு விஷயங்களில் தனிப்பட்ட ஆர்வம் ஏற்படும். உயர் கல்வியில் கவனம் வேண்டும். கலை சார்ந்த துறைகளில் புதிய அனுபவம் ஏற்படும். ஆரோக்கியம் சார்ந்த விஷயங்களில் விழிப்புணர்வு வேண்டும். உத்தியோகத்தில் அனுசரித்து நடந்து கொள்ளவும். நன்மை நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : பிங்க்
மீனம் -ராசி:
எதிலும் துடிப்புடன் செயல்படுவீர்கள். கணவன், மனைவிக்குள் அன்யோன்யம் ஏற்படும். இலக்கிய பணிகளில் புதிய வாய்ப்புகள் கிடைக்கும். சமூகப் பணிகளில் இருப்பவர்களுக்கு செல்வாக்கு மேம்படும். தனவரவுகள் திருப்தியை தரும். விருந்தினர்களின் வருகையால் மகிழ்ச்சியான தருணம் ஏற்படும். உடன் பிறந்தவர்கள் ஆதரவாக இருப்பார்கள். முயற்சி மேம்படும் நாள்.
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு
இன்றைய நாள் இனிய நாளாக அமைந்திட வாழ்த்துகள்.
- · Yathusan
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·