- · 5 friends
-
I
ஓய்வு- Retirement
ஒரு தொழிலிலிருந்தோ, ஒரு வேலையிலிருந்தோ ஓய்வு பெறுவது என்பது நமக்கு ஆண்டவனால் ஆசீர்திக்கப்பட்டு தரப்படும் நேரம்.
நான் நிறைய பார்த்திருக்கிறேன், ஓய்வு பெற்றவுடன், பெரியவர்கள், சீவாத தலை, கிழிந்த பனியன், அழுக்கு வேட்டி என்று மாறிவிடுவார்கள். ஷூ போடுவதை நிறுத்திவிடுவார்கள்..
நாம் வேலையை எப்படி காதலித்தோமோ, அப்படி நமக்கான நேரத்தை காதலித்து செலவு செய்ய வேண்டும் இல்லையா? பிடித்ததுபோல் அழகாய் உடை அணியுங்கள்.
எனக்கு தெரிந்த நண்பர்கள், உடம்பில் சக்தி இருக்கும்வரை வேலைக்கு போகலாம் என்று காசிருந்தும் மீண்டும் வேலையை எங்கோ தொடர்வதை மட்டும் எனக்கு புரிவதே இல்லை. யாருக்காக பணத்தை துரத்துகிறீர்கள்? மூப்பிலும் தினம் உழைத்தால்தான் சோறு என்ற வாழ்க்கை.. சிலருக்கு மட்டும் சபிக்கப்பட்ட, அல்லது சிறு வயதில் தவறு எங்கோ நடந்துவிட்டதின் தொடர்ச்சியாக வேண்டுமானால் இருக்கலாம்.
உங்களுக்கு பிடித்த, வேலை சமயத்தில் செய்ய முடியாததை செய்யுங்கள். எனக்கு குருவிகளுக்கு கூடு கட்டுதலோ, மரம் நடுதலோ ஆசையாக இருக்கலாம்.. உங்களுக்கு கதை கட்டுரை ஆன்மீகம் இப்படி எதையாவது செய்யலாம்.
ஓடியநாட்களில் பார்க்கமுடியாத இடங்களை பாருங்கள். காலை உணவை நிதானமாய் ரசித்து உண்ணுங்கள். மதியம் இரவு நேரத்துக்கு சாப்பிடுங்கள். கொஞ்சம் உறவுகளுடன் பேசுங்கள், நிறைய சிரியுங்கள். உங்கள் ஒத்த நண்பர்களோ, பிடித்த கூட வேலை செய்தவர்களோடு மாதம் ஒரு முறையாவது பேசுங்கள் அல்லது சந்தியுங்கள்.
மிக நம்பிக்கையானவர்களிடம் மட்டும் உங்கள் சுகத்தையும் துக்கங்களையும் பகிருங்கள். நம் துக்கம் ஒன்றுமில்லை என்று தெரியும் நமக்கு..
மெடிகல் செக் அப்புகளை விடாதீர்கள், நேரத்துக்கு மருந்தை உட்கொள்ளுங்கள். நண்பர்கள், உறவினர்கள் இறப்பார்கள். அடுத்து நாம் தான் என்று பயப்படாதீர்கள். அந்த லிஸ்ட் கடவுளிடம் மட்டுமே இருக்கிறது. டாய்லெட் கதவுகளை பூட்டிக்கொள்ளாதீர்கள், தலையணைக்கு அருகில் மொபைல், டார்ச், சாவி வைத்துக்கொள்ளுங்கள்.
தெரியாதவர்களுக்கு கதவைத்திறக்காதீர்கள்.
சேர்த்துவைத்த பணத்திற்காகவோ, பென்ஷன் பணத்திற்காகவோ, ஒன்று விட்ட, இரண்டு விட்ட உறவினர்கள் சொந்தம் கொண்டாடினால், காபி கொடுத்து அனுப்பிவிடுங்கள். இருக்கும் பணத்தை சாமர்த்தியமாய் போட்டு வருமானத்திற்கு வழி செய்து கொள்ளுங்கள்.
பேரக்குழந்தைகளுடன் விளையாடுங்கள். உங்களை அவர்களுக்குள் பார்க்கலாம்.
வேலையை விட்டுத்தானே ஓய்வு பெற்றோம்? இறந்தா போய்விட்டோம்?
இவை அனைத்தும் ஓய்வு பெற்ற பெரியவர்களுக்கு மட்டும் அல்ல... அவர்கள் பெற்ற பிள்ளைகளுக்கும் சேர்த்து தான்..!
ஓய்வு பெற்ற தங்களது பெற்றோர்களுக்கு அவர்களுக்கு உரிய மரியாதையையும், சுதந்திரத்தையும்... அவர்களின் ஓய்வில் எவ்வித மன உளைச்சலும் ஏற்படுத்ததாத வகையில்.., பெற்றோர்களின் உடல் மன நலன் கருதி பிள்ளைகளும் நடந்து கொள்வது அவர்களின் வாழ்க்கையில் ஈடற்ற மகிழ்வையும், ஆரோக்யத்தையும் அளிக்கும்.
வாழ்வியல் போராட்டத்திற்காக ஓடிய ஓட்டத்தில்... பணி ஓய்வு என்பது அடிபணிந்து, சகித்து, பொறுமை காத்து, அவமானப்பட்டு, குடும்பத்திற்காக ஒரு சுமை தாங்கியாக தங்களது வாழ்வை அர்ப்பணித்த ஒவ்வொருவருக்கும் மிச்சமிருக்கும் வாழ்க்கையை ரசிக்க இந்த சமூகம் நமக்களித்த வரம் இது... இதையும் எக்காரணம் கொண்டும் மற்றவர்களின் சுய நலத்திற்காக இழக்காதீர்கள்.
- · Yathusan
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·