-
- 3 friends
இன்றைய ராசி பலன் – ஜூலை மாதம் 20, 2024
தமிழ் வருடம் ஸ்ரீ குரோதி, ஆடி மாதம் 4 ஆம் தேதி
மேஷம் -ராசி:
உணவுப் பழக்க வழக்கங்களில் கவனம் வேண்டும். வாக்குறுதிகளால் சில நெருக்கடிகள் உண்டாகும். உங்கள் மீதான நம்பிக்கையில் மாற்றம் ஏற்படும். நேர்மைக்கு உண்டான மதிப்பு கிடைக்கும். கால்நடை பணிகளில் புதிய அனுபவம் ஏற்படும். வெளிநாடு தொடர்பான பயணங்கள் சாதகமாக அமையும். வீடு, வாகனங்களை சீர் செய்வீர்கள். உயர்வு நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : இளம்பச்சை
ரிஷபம் ராசி:
குடும்ப உறுப்பினர்களிடம் தேவையற்ற வாக்குவாதங்களை தவிர்க்கவும். குணநலன்களில் சில மாற்றங்கள் ஏற்படும். சமூகப் பணிகளில் பலதரப்பட்ட அனுபவம் கிடைக்கும். நினைத்த சில பணிகளில் விவேகத்துடன் செயல்படவும். எதிர்பார்த்த சில உதவிகள் கிடைப்பதில் தாமதம் உண்டாகும். சாலை பயணங்களில் கவனம் வேண்டும். கனிவு வேண்டிய நாள்.
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : வெளிர்மஞ்சள்
மிதுனம் -ராசி:
நண்பர்கள் ஆதரவாக இருப்பார்கள். உத்தியோகத்தில் மறைமுக எதிர்ப்புகள் நீங்கும். தவறிப்போன சில வாய்ப்புகள் மீண்டும் கிடைக்கும். மருத்துவத் துறைகளில் முன்னேற்றமான வாய்ப்புகள் அமையும். திருப்பணி சார்ந்த செயல்பாடுகளில் ஈடுபாடு ஏற்படும். தந்தை வழி சொத்துக்கள் மூலம் ஆதாயம் உண்டாகும். மேன்மை நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : சாம்பல்
கடகம் -ராசி:
மூத்த சகோதரர்களின் வழியில் விரயங்கள் ஏற்படும். கட்டிட பணியாளர்களுக்கு புதிய வாய்ப்புகள் கிடைக்கும். பணி மாற்றம் சார்ந்த எண்ணம் மேம்படும். கடன் செயல்களில் ஆலோசனை பெற்று முடிவெடுக்கவும். உறவினர்களால் நன்மை உண்டாகும். உயர் அதிகாரிகளிடத்தில் கவனம் வேண்டும். சிந்தனைகளில் இருந்துவந்த சஞ்சலம் விலகும். பக்தி நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : அடர்பச்சை
சிம்மம் -ராசி:
விருப்பமான பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். உயர்கல்வி குறித்த சிந்தனைகளில் தெளிவு பிறக்கும். மின்சார தொழிலில் சில நுட்பங்களை புரிந்து கொள்வீர்கள். விவேகமான முடிவுகள் நல்ல மாற்றத்தை உண்டாக்கும். மறதி பிரச்சனைகளால் செயல்களில் தாமதம் ஏற்படும். வெளியூர் பயணங்களில் கவனம் வேண்டும். சோதனை நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : பொன்னிறம்
கன்னி -ராசி:
மேல்நிலைக் கல்வியில் புதிய வாய்ப்புகள் கிடைக்கும். வாகன பிரச்சனைகள் குறையும். தந்தைவழி சொத்துக்களில் நிதானத்துடன் செயல்படவும். வாசனை திரவியங்கள் மீதான ஆர்வம் அதிகரிக்கும். மனதிற்கு மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். வெளி வட்டாரத்தில் நற்பெயர்கள் அதிகரிக்கும். முயற்சிக்கு உண்டான காரிய அனுகூலம் ஏற்படும். அன்பு நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண் : 1
அதிர்ஷ்ட நிறம் : ரோஸ்
துலாம் -ராசி:
சகோதரர்களின் வழியில் அலைச்சல் உண்டாகும். வேகத்தை விட விவேகம் நன்மை தரும். வாகன மாற்ற எண்ணங்கள் உண்டாகும். வெளி வட்டாரங்களில் மதிப்பு மேம்படும். சமூக நிகழ்வுகளால் மனதில் மாற்றம் ஏற்படும். வியாபாரத்தில் சிறு சிறு ஏற்ற, இறக்கங்கள் உண்டாகும். வெளியூர் பயணங்களில் உடல் அசதிகள் ஏற்படும். ஆர்வம் நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : சாம்பல்
விருச்சிகம்- ராசி:
கணவன், மனைவிக்கிடையே ஒற்றுமை அதிகரிக்கும். வழக்கு செயல்களில் பொறுமை வேண்டும். தோற்றப் பொலிவு மேம்படும். நவீன கருவிகள் மீது ஆர்வம் அதிகரிக்கும். பொருளாதார சிக்கல்கள் குறையும். வேலையாட்களிடம் அனுசரித்துச் செல்லவும். உத்தியோகப் பணிகளில் துரிதம் ஏற்படும். ஆக்கப்பூர்வமான நாள்.
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : வெண்மை
தனுசு -ராசி:
அலுவலக பணிகளில் ஆர்வமின்மையான சூழல் அமையும். கடன் விஷயங்களில் அலைச்சல் ஏற்படும். சேமிப்பு தொடர்பான எண்ணங்கள் மேம்படும். எதிர்காலம் தொடர்பான சில முடிவுகளை எடுப்பீர்கள். இழுபறியாக இருந்த பணிகள் பற்றிய எண்ணங்கள் அதிகரிக்கும். விலை உயர்ந்த பொருட்கள் மீது ஈடுபாடு ஏற்படும். விவேகம் வேண்டிய நாள்.
அதிர்ஷ்ட எண் : 7
அதிர்ஷ்ட நிறம் : வெளிர்மஞ்சள்
மகரம் -ராசி:
பூர்வீக சொத்துக்களால் அலைச்சல் ஏற்படும். உயர் கல்வி முடிவுகளில் ஆலோசனை வேண்டும். சிந்தனைப் போக்கில் கவனம் வேண்டும். பொது இடங்களில் பொறுமையை கையாளவும். வியாபார பணிகளில் அலைச்சல் அதிகரிக்கும். தம்பதிகளுக்குள் அனுசரித்துச் செல்லவும். பங்கு வர்த்தகத்தில் விழிப்புணர்வுடன் இருக்கவும். பொறுமை வேண்டிய நாள்.
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : பச்சை
கும்பம் –ராசி:
எதிர்பாராத சில உதவிகள் மூலம் முன்னேற்றம் உண்டாகும். உயர்நிலைக் கல்வியில் சாதகமான சூழல் அமையும். பெற்றோர் வழியில் ஒத்துழைப்பு கிடைக்கும். திடீர் உதவிகள் மூலம் சில பிரச்சனைகள் குறையும். உடன்பிறந்தவர்கள் ஆதரவாக செயல்படுவார்கள். உத்தியோகப் பணிகளில் எதிர்பார்த்த பொறுப்புகள் கிடைக்கும். தடைகள் மறையும் நாள்.
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : சில்வர்
மீனம் -ராசி:
மனதளவில் புதுவிதமான தன்னம்பிக்கை உண்டாகும். உறவினர்களின் வழியில் மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். அரசு தொடர்பான காரியங்களில் இருந்துவந்த இழுபறி குறையும். எதிர்காலம் சார்ந்த புதிய இலக்குகள் பிறக்கும். பழைய நினைவுகள் மூலம் மாற்றமான சூழல் உண்டாகும். வேளாண்மை சார்ந்த ஆலோசனைகள் மூலம் தெளிவு ஏற்படும். சாந்தம் நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு
இன்றைய நாள் இனிய நாளாக அமைந்திட வாழ்த்துகள்.
- · Yathusan
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·