-
- 3 friends
இன்றைய ராசி பலன் – ஜூலை மாதம் 19, 2024
தமிழ் வருடம் ஸ்ரீ குரோதி, ஆடி மாதம் 3 ஆம் தேதி
மேஷம் -ராசி:
தடையாக இருந்தவர்கள் விலகிச் செல்வார்கள். மனதில் இருந்துவந்த கவலைகள் நீங்கி தெளிவு பிறக்கும். வேலையில் பணியாட்கள் ஒத்துழைப்புடன் செயல்படுவார்கள். சொத்து சம்பந்தமான வழக்குகளில் பொறுமை வேண்டும். வங்கி சார்ந்த சில உதவிகள் கிடைக்கும். தொழில் சம்பந்தமான அலைச்சல் ஏற்படும். தெளிவு பிறக்கும் நாள்.
அதிர்ஷ்ட எண் : 8
அதிர்ஷ்ட நிறம் : மயில்நீலம்
ரிஷபம் ராசி:
எதிர்பாராத சில செலவுகள் மூலம் நெருக்கடிகள் உண்டாகும். பயணங்களின் மூலம் புதுமையான சூழல் ஏற்படும். வியாபார முதலீடுகளில் கவனம் வேண்டும். கணவன், மனைவிக்கிடையே சிறு சிறு விவாதங்கள் தோன்றி மறையும். பொழுதுபோக்கு செயல்களால் விரயம் உண்டாகும். வித்தியாசமான கற்பனைகள் மனதில் மேம்படும். விவேகம் வேண்டிய நாள.
அதிர்ஷ்ட எண் : 4
அதிர்ஷ்ட நிறம் : சாம்பல்
மிதுனம் -ராசி:
வேலையில் நல்ல மாற்றம் உண்டாகும். உறவுகளின் வழியில் இருந்துவந்த கருத்து வேறுபாடுகள் மறையும். மனதிற்கு பிடித்த விதத்தில் வீட்டினை மாற்றி அமைப்பீர்கள். எதிர்பார்த்த உதவிகள் கிடைப்பதற்கான சூழல் உண்டாகும். ஆரோக்கிய பிரச்சனைகள் குறையும். சிந்தனைகளில் தெளிவு உண்டாகும். ஆக்கப்பூர்வமான நாள்.
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : பச்சை
கடகம் -ராசி:
எதிலும் சுறுசுறுப்புடன் செயல்படுவீர்கள். கடினமான காரியத்தை கூட எளிதில் செய்து முடிப்பீர்கள். வியாபாரத்தில் லாபம் மேம்படும். குடும்பத்துடன் தூர பயணம் செல்லும் வாய்ப்பு அமையும். அணுகுமுறைகளில் சில மாற்றங்கள் ஏற்படும். உத்தியோகஸ்தர்களுக்கு பொறுப்புகள் குறையும். கவனம் வேண்டிய நாள்.
அதிர்ஷ்ட எண் : 7
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை
சிம்மம் -ராசி:
மனதளவில் உற்சாகமான சிந்தனைகள் ஏற்படும். சிற்றின்ப செயல்களில் ஆர்வம் உண்டாகும். போட்டி பந்தயங்களில் கவனத்துடன் செயல்படவும். நிதி தொடர்பான நெருக்கடிகள் குறையும். துணைவர் வழியில் ஒத்துழைப்பு மேம்படும். பிரபலமானவர்களின் அறிமுகம் ஏற்படும். அரசு காரியங்களில் பொறுமை வேண்டும். ஆர்வம் நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : சந்தனம்
கன்னி -ராசி:
வீடு மாற்றம் தொடர்பான சிந்தனைகள் உண்டாகும். துணைவர் வழியில் ஆதாயம் ஏற்படும். பயணங்களின் மூலம் மாறுபட்ட அனுபவம் கிடைக்கும். ஆரோக்கியம் சார்ந்த சிந்தனைகள் மேம்படும். வியாபார பணிகளில் சில நுணுக்கங்களை அறிந்து கொள்வீர்கள். பொருளாதார விஷயங்களில் சிந்தித்து முடிவெடுக்கவும். உற்பத்தி சார்ந்த பணிகளில் கவனம் வேண்டும். சிரமம் குறையும் நாள்.
அதிர்ஷ்ட எண் : 4
அதிர்ஷ்ட நிறம் : இளநீலம்
துலாம் -ராசி:
உடன் பிறந்தவர்களால் அலைச்சல் ஏற்படும். மனதளவில் புதிய நம்பிக்கை பிறக்கும். விளையாட்டு துறைகளில் புதிய அனுபவம் ஏற்படும். தெய்வீக காரியங்களில் ஈடுபடுவதற்கான வாய்ப்புகள் அமையும். உடல் ஆரோக்கியம் மேம்படும். நவீன பொருட்கள் வாங்கும் யோகம் உண்டாகும். ஊக்கம் நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண் : 8
அதிர்ஷ்ட நிறம் : நீலம்
விருச்சிகம்- ராசி:
மனதில் நினைத்த காரியம் எண்ணிய விதத்தில் நிறைவேறும். வரவுகளில் இருந்துவந்த இழுபறிகள் மறையும். உயர் கல்வியில் சாதகமான வாய்ப்புகள் கிடைக்கும். உறவினர்கள் ஆதரவாக இருப்பார்கள். பேச்சுக்களில் அனுபவம் வெளிப்படும். உயர் அதிகாரிகளின் நட்பு மனதிற்கு நம்பிக்கையை கொடுக்கும். நலம் நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : இளஞ்சிவப்பு
தனுசு -ராசி:
தொழில் சார்ந்த எண்ணங்கள் மேம்படும். உயர் அதிகாரிகளிடத்தில் அனுசரித்துச் செல்லவும். உடனிருப்பவர்களால் மனதளவில் மாற்றம் ஏற்படும். எதிலும் பொறுமையை கடைபிடிப்பது உயர்வை தரும். சமூக நிகழ்வுகளால் மனதளவில் மாற்றம் உண்டாகும்.அரசு காரியங்களில் பொறுமை வேண்டும். சுபம் நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண் : 4
அதிர்ஷ்ட நிறம் : பிரவுன்
மகரம் -ராசி:
காப்பக பணிகளில் முன்னேற்றம் ஏற்படும். வெளியூர் பயண வாய்ப்புகள் சாதகமாக அமையும். தான தர்ம செயல்களில் ஈடுபாடுகள் உண்டாகும். சுப செலவுகளால் கையிருப்பு குறையும். தொழிலில் சிறு சிறு மாற்றங்கள் செய்வதன் மூலம் லாபத்தை மேம்படுத்த முடியும். ஆடம்பரமான பொருட்கள் மீது ஈர்ப்புகள் உண்டாகும். கனிவு வேண்டிய நாள்.
அதிர்ஷ்ட எண் : 7
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை
கும்பம் –ராசி:
வருமான வாய்ப்புகள் மேம்படும். அயல் நாட்டு பயணங்கள் கைகூடும். பொன், பொருள் சேர்க்கை ஏற்படும். கொடுக்கல், வாங்கலில் ஆதாயம் அடைவீர்கள். கடினமான விஷயங்களையும் எளிதாக முடிப்பீர்கள். இழுபறியான வழக்குகள் சாதகமாக முடியும். முதலாளி வகையில் ஒத்துழைப்பு கிடைக்கும். ஜெயம் நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண் : 4
அதிர்ஷ்ட நிறம் : பச்சை
மீனம் -ராசி:
சமூகப் பணிகளில் செல்வாக்கு அதிகரிக்கும். வியாபார பணிகளில் லாபம் உண்டாகும். உலகியல் நடவடிக்கைகளின் மூலம் மனதில் சில மாற்றங்கள் ஏற்படும். வாகன பழுதுகளை சீர் செய்வீர்கள். உடல் ஆரோக்கியத்தில் இருந்துவந்த இன்னல்கள் குறையும். பணிகளில் தகுந்த ஆலோசனைகள் மூலம் தெளிவு பிறக்கும். புகழ் நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : சாம்பல்
இன்றைய நாள் இனிய நாளாக அமைந்திட வாழ்த்துகள்.
- · Yathusan
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·