- · 5 friends
-
I
வளர்பிறை அஷ்டமி
முன்னோர்கள் வழிபாட்டினை தேய்பிறை திதிகளில் ஆரம்பம் செய்து வளர்பிறை திதிகளில் முடிப்பார்கள். இதுவே வழிபாட்டின் ரகசியம் ஆகும்.
தேய்பிறை திதிகளில் கர்ம வினைகள் அனைத்தும் அழிய தொடங்கும் என்றும், வளர்பிறை திதிகளில் தேவைகள் கிடைக்க ஆரம்பிக்கும் என்பதும் ஐதீகம்.
பைரவரிடம் தேய்பிறை அஷ்டமியில் கடன் தீர வேண்டும் என்று எந்த அளவிற்கு வழிபாடு செய்கின்றோமோ, அதே அளவு நம்பிக்கையோடு வளர்பிறை அஷ்டமியில் வருமானம் பெருக வேண்டும், செல்வ வளம் பெருக வேண்டும், வாழ்நாள் முழுவதும் குடும்பத்திற்கு பஞ்சம் வரக்கூடாது என்று வாழ்க்கையின் முன்னேற்றத்திற்கு தேவையான வேண்டுதலை வைக்க, வளர்பிறை நிலவு போல நம் வாழ்வும் முன்னேற்ற பாதையில் செல்லும் என்பது நம்பிக்கை.
அஷ்டமி புராணக்கதை :
கோகுல அஷ்டமி திதியில் ஸ்ரீ கிருஷ்ணர் அவதரித்தது அனைவருக்கும் தெரிந்த விஷயம் ஆகும். அவர் அந்த திதியில் பிறந்த காரணத்தால் அவர் எண்ணற்ற கஷ்டங்களை அனுபவித்தார். ஸ்ரீ கிருஷ்ணன் அவதார புருஷன் என்பதால் அவற்றை சமாளித்தார். இறுதியில் வெற்றி பெற்றார். எனவேதான் அஷ்டமி திதிகளில் சுப காரியங்களான திருமணம், கிரஹப் பிரவேசம், சொத்து வாங்குதல் போன்றவற்றை தவிர்க்க வேண்டும்.
ஆனால் இந்நாள் தெய்வீக காரியங்களுக்கு தீட்சை பெறுவது, மந்திரங்கள் ஜெபிப்பது, ஹோமங்கள் உள்ளிட்டவைகளை மேற்கொள்ள உகந்த நாளாகும்.
குறிப்பாக செங்கல் சூளைக்கு நெருப்பு மூட்ட, எதிரிகள் மீது வழக்கு தொடுக்க, ஆயுதங்கள் பிரயோகிக்க, எதிரி நாட்டின் மீது போர் தொடுப்பது போன்ற செயல்களுக்கு அஷ்டமி திதி ஏற்றவையாகும்.
- · Yathusan
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·