Support Ads
 ·   ·  142 posts
  • 2 members
  • 2 friends

சாது ஸ்ரீ கிருஷ்ணவேணி அம்மா

பக்தர்களால் "வனதேவதை" என்று அன்புடன் அழைக்கப்பட்டகிருஷ்ணவேணி அம்மா திருநெல்வேலி மாவட்டம், பாபநாசம் மலைக் குகைகளில் வாழ்ந்த பெண் துறவி. பொதிகை மலையில் 75 வருடங்களுக்கு மேலாக தன்னந்தனியாக வசித்து வந்தார். பலமுறை ஸ்ரீ அகத்திய முனிவர் உள்ளிட்ட சித்தர்கள் கிருஷ்ணவேணி அம்மாளுக்கு காட்சி கொடுத்துள்ளனர்.120 ஆவது வயதில் சித்ரா பௌர்ணமி அன்று இந்த ஸ்தூல தேகத்தை துறந்தார். இறைவனுடன் இரண்டறக் கலந்தார்.

இறைவன் கருணைக் கடல் - அனைவருக்கும் பொதுவானவர். அவரை உள்ளுணர்ந்து அனுபவிப்பவர்களுக்கே சாகரத்தின் தன்மை புலப்படும். வெளியே இருந்து பார்ப்பவர்களுக்கு இறை அனுபவம் ஒரு பிரமிப்பான விஷயம் மட்டுமே. இறைநிலையை ஒரு சிலருக்கு சிறு வயதிலேயே அடையும் பாக்கியம் ஏற்படுகிறது. சிலருக்கோ மத்திம வயதை தாண்டி, அடைய முடிகிறது.

இன்று நான் உங்களுக்கு சாது ஸ்ரீ கிருஷ்ணவேணி அம்மாளைப் பற்றிய அபூர்வ செய்திகளை சித்தர்களின் குரல் வாயிலாக சொல்ல போகிறேன்....

கருணை பொங்கும் முகத்தோடு தன்னை நாடி வரும் அன்பர்களின் தேவையை அறிந்து அருள் செய்தவர். கடலூர் முதுநகரை சேர்ந்த லட்சுமி அம்மாள்- அரங்கசுவாமி என்பவருக்கு மகளாகப் பிறந்தவர் கிருஷ்ணவேணி. சிறுவயதிலேயே உறவினருக்கு திருமணம் செய்து வைக்கப்பட்டார். கணவரின் வேலை நிமித்தமாக வட இந்தியாவிற்கு பயணமான கிருஷ்ணவேணி அம்மாள், பாட்னா, ஹரித்வார் போன்ற இடங்களுக்கு சென்றுள்ளார். அதுவே அவரின் ஆன்மீக தேடலுக்கு ஆரம்ப புள்ளி. வாழ்க்கைப் பயணம் சுமூகமாக சென்று கொண்டிருக்கும்போது திடீரென அவரின் கணவர் இறந்துவிட, அவரின் துறவற வாழ்க்கை ஆரம்பமானது. அவரின் பழக்கவழக்கங்கள் மற்றவர்களுக்கு பித்தர் போல் இருக்கவே அவர் வீட்டை விட்டு வெளியேறி விட்டார். திருச்செந்தூர் சென்ற கிருஷ்ணவேணி அம்மாள் ஒரு சித்தர் தன் பின்னே தொடர்ந்து வரும் படி ஆணையிட, அவரைத் தொடர்ந்து பாபநாசம் - பொதிகை மலைக்கு சென்றார். சித்தர் அங்கிருக்கும் ஒரு குகையை சுட்டிக்காட்டி அங்கு இருக்கும்படி கூறினார். அங்கு ஒரு சிவலிங்கமும் இருக்கின்றது. அதுவே கிருஷ்ணவேணி அம்மாளின் இருப்பிடமாக மாறியது. அக்குகையில் ஏறத்தாழ 40 ஆண்டுகளுக்கு மேல தவம் செய்திருக்கிறார். இந்த குகை புலஸ்தியர் தவம் செய்த இடம் என நம்பப்படுகிறது.

துறவரம் பூண்ட ஸ்ரீ கிருஷ்ணவேணி அம்மா பொதிகை மலையில் 75 வருடங்களுக்கு மேலாக தன்னந்தனியாக வசித்து வந்தார். பலமுறை ஸ்ரீ அகத்திய முனிவர் உள்ளிட்ட சித்தர்கள் கிருஷ்ணவேணி அம்மாளுக்கு காட்சி கொடுத்துள்ளனர். ஸ்ரீதுர்க்கை அடிக்கடி காட்சி கொடுத்து வழி நடத்தியதாக கிருஷ்ணவேணி அம்மாள் கூறியிருக்கிறார்.

பொதிகை மலையில் அகத்தியர் அருவிக்கு மேலே கல்யாண தீர்த்தத்திற்கு மிக அருகில் கிருஷ்ணவேணி அம்மாள் வசித்த இடம் இருக்கிறது. சிவன் - பார்வதி திருமண கோலத்தை காண உலகமே திரண்டிருந்த காலகட்டத்தில் வடதிசை மக்களின் சுமை தாங்காமல் தாழ்ந்த விட அதை சமன் செய்வதற்காக அகத்தியர் தென்திசைக்கு அனுப்பப்பட்டார். தென்னிந்தியாவில் திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள பொதிகை மலைக்கு வந்த ஸ்ரீ அகத்திய முனிவர் மலையில் தவம் மேற்கொண்டதற்கு புராண சான்று இருக்கின்றன . இங்கு அகத்தியருக்கு சிவன் - பார்வதி திருமண கோலத்தில் காட்சி கொடுத்த இடமே கல்யாண தீர்த்தம்.

தனி பெண்மணியாக யாருமே அதிகம் நடமாடாத இடத்தில் வசித்த கிருஷ்ணவேணி அம்மாளுக்கு பல நேரங்களில் குகைக்கு வெளியே கரடியும் உள்ளே பாம்பும் காவல் காத்து கொண்டிருந்தன. வனதேவதை போல் வாழ்ந்த கிருஷ்ணதேவி அம்மாளை சில சமயம் பார்க்க வரும் அன்பர்கள் பழம் உணவு கொடுத்துள்ளார்கள். அவ்வாறு கொடுத்தவர்களின் வாழ்வில் ஏற்றங்கள் வர ஆரம்பித்தது. அதிலிருந்து சாது கிருஷ்ணவேணி அம்மாள் புகழ் பரவ ஆரம்பித்தது. அவரைக் காண மக்கள் கூட்டம் வர ஆரம்பித்தது.

பக்தர்களின் நலன் பொருட்டு கிருஷ்ணவேணி அம்மாள் கீழிருந்து மேல் கல்யாண தீர்த்தம் வரை படிக்கட்டுகள் தானே அமைத்து வசதி செய்து கொடுத்தார். அங்கே ஒரு மடமும் அமைத்தார்.

கிருஷ்ணவேணி அம்மாளின் தவ ஆற்றல் அளப்பரியது. மிகவும் வறட்சியான காலத்தில் வருண ஜெபம் செய்து மழையை பொழியச் செய்துள்ளார். ஒரு சமயம் வெள்ளம் கரைபுரண்டு ஓடிக் கொண்டிருந்தது. வெள்ளக்காடாக காட்சி அமைத்த கல்யாண தீர்த்தம், அகத்தியர் அருவி எங்கேயும் கிருஷ்ணவேணி அம்மாவின் நடமாட்டம் தெரியவில்லை. என்ன ஆனாரோ அனைவரும் பயந்தனர். நான்கு நாட்கள் கழித்து குகையிலிருந்து எந்த பாதிப்பும் இல்லாமல், மிகவும் மலர்ச்சியாக வெளியே வந்தார் சாது கிருஷ்ணவேணி அம்மாள் .

அவர் காலத்தில் இருந்த சித்தர்களான மாயம்மா, பூண்டிசித்தர் போன்ற மகான்களால் பெரிதும் மதிக்கப்பட்டவர் கிருஷ்ணவேணி அம்மாள். 2011 ஆம் ஆண்டு, தன்னுடைய 120 ஆவது வயதில் சித்ரா பௌர்ணமி அன்று இந்த ஸ்தூல தேகத்தை துறந்தார். இறைவனுடன் இரண்டறக் கலந்தார். இன்றும் அவரின் அஸ்தி அவர் கட்டிய மடத்தில் வைத்து பூஜிக்கப்படுகிறது. அவரை எண்ணி வேண்டிய செயல்கள் யாவும் இன்றும் அவர்கள் பக்தர்களுக்கு நடந்தேறுகிறது.

அகத்தியரின் அருள் பெற்ற சித்திரை, அவிட்டம், மிருகசீரிஷம் அன்பர்கள் சாது கிருஷ்ணவேணி அம்மாளை வணங்கி வர அவர்களுக்கு மனோபலம் அதிகரிக்கும்.

மேலும் ஜாதகத்தில் குரு/சந்திரன்/ சனிக்கு 1,2,5,9ல் கேது இருக்கபெற்றவர்களுக்கு எளிதாக சித்தர்களின் தரிசனமும், அருளும், ஆசியும் கிடைக்கும். இவர்கள் கிருஷ்ணவேணி அம்மாளை தியானித்து வர நன்மை பயக்கும். இந்த அமைப்பு இல்லாமல் இருந்தாலும் மேற்கூறிய கிரகங்களுக்கு 1,2,5,9ல் கோட்சார கேது வரும் காலங்களிலும் சித்தர்களின் தரிசனம் கிடைக்கப் பெறும்.

சாது ஸ்ரீ கிருஷ்ணவேணி அம்மாள் மடம்:

திருநெல்வேலி மாவட்டம் பாபநாசத்தில் இருந்து 4 கிலோமீட்டர் தொலைவில் அகத்தியர் அருவிக்கு மேலே சாது கிருஷ்ணவேணி அம்மாள் மடம் உள்ளது.

திருநெல்வேலியில் இருந்து, 50 கி.மீ., தொலைவில் உள்ளது. பாபநாசம். இங்கிருந்து, 4 கி.மீ. துாரத்திலுள்ள அகத்தியர் அருவிக்கு ஆட்டோ, கார்களில் சென்று, படிக்கட்டுகளில் ஏறினால், கல்யாணி தீர்த்தத்தை தரிசிக்கலாம். இதன் அருகில்தான் கிருஷ்ணவேணி அம்மாவின் ஆசிரமம் அமைந்துள்ளது.

அவர் பக்தர்களால் "வனதேவதை" என்று அன்புடன் அழைக்கப்பட்டார் . சிறு வயதிலிருந்தே குகைகளில் தனிமையில் வாழ்ந்து வந்தார் அவர் யாருக்கும் பயப்படாதவள், தன்னை சித்தர்களின் குழந்தையாக கருதப்பட்டார் . பழங்கள், பால், பிஸ்கட் போன்ற எளிய உணவுகளை மட்டும் எடுத்துக்கொண்டு, தன் உணவில் ஒரு பகுதியை காகங்களுக்கும் நாய்களுக்கும் கொடுப்பார். பெரும்பாலும் அவள் ஆழ்ந்த தியானத்தில் அமர்ந்து, சிவபெருமானின் மந்திரங்களை உச்சரிப்பார். பெரிய துறவியை சந்தித்த பிறகு ஏராளமான பக்தர்கள் தங்கள் மகிழ்ச்சியான தருணங்களை பகிர்ந்து கொண்டனர்.

அவர் ஒரு உன்னதமான மற்றும் அன்பான இதயம் கொண்ட பெண்மணி, அவர் தனது பக்தர்களின் பிரச்சினைகளை உன்னிப்பாக தீர்க்கிறார் மற்றும் அமைதியான மற்றும் வளமான வாழ்க்கையை நடத்துவதற்கு அவர்களுக்கு நல்ல ஆலோசனைகளை வழங்கினார். பல்வேறு நோய்களால் பாதிக்கப்பட்ட பக்தர்களுக்கு மூலிகை மருந்துகளை அளித்து, அந்த மருந்துகளை உட்கொண்ட சில வாரங்களில் நோய்களிலிருந்து விடுபட்டார்.

அவர் 2011 ஆம் ஆண்டு ஸ்தூல தேகத்தை துறந்தார். இறைவனுடன் இரண்டறக் கலந்தார்

இவரது மடம் திருநெல்வேலி மாவட்டம் பாபநாசத்தில் உள்ளது, தினமும் ஏராளமான பக்தர்கள் புனித மடத்திற்கு சென்று பயனடைகின்றனர்.

தெய்வீக அன்னையை வணங்கி அருள் பெறுவோம்.

"ஓம் ஸ்ரீ கிருஷ்ணவேணி அம்மாவே நமஹ"

"ஓம் நம சிவாயா"

“ஓம் தேவி பரமேஸ்வரியே நமஹ”

  • 647
  • More
Info
Category:
Created:
Updated:
Comments (0)
Login or Join to comment.
Ads
Featured Posts
S என்ற எழுத்தில் உங்கள் பெயர் ஆரம்பிக்கின்றதா?
குறிப்பிட்ட சில ஆங்கில எழுத்துகளை வைத்து ஒருவரது வாழ்க்கையையே தீர்மானித்து விடலாம். அதிலும், A, S, J போன்ற எழுத்துகள் மிகவும் சக்தி வாய்ந்த எழுத்துகளா
கிழவி தோற்றமா? தேவதை தோற்றமா? (குட்டிக்கதை)
இரண்டு மன்னர்களுக்குள் சண்டை. தோற்றவனிடம் வென்றவன் சொன்னான்.”நான் கேட்கும் கேள்விக்கு சரியான பதிலைச் சொன்னால் உன் நாடு உனக்கே”.கேள்வி : ஒரு பெண் தன் ஆ
உப்புமாவை நேசிக்கும் அன்பர்களுக்கு (நகைச்சுவை)
சிவன்: நக்கீரரே! எமது பாட்டில் எங்கு குற்றம் கண்டீர்? சொற்சுவையிலா? அல்லது பொருட்சுவையிலா?.நக்கீரர்: சொல்லில் குற்றமில்லை. இருந்தாலும் அது மன்னிக்கப்ப
சுவையான சம்பவம்...
கம்பன் ஒரு சமயம் கையில் காசில்லாமல் காய்ந்து போய் கிடந்தான்.அப்போது ஒரு தாசி வீட்டு வேலைக்காரன் அவள் கம்பனை சந்திக்க விரும்புவதாக கூறினான்.அவள் பெயர்
வைத்தியரின் தேடுதல்   (குட்டிக்கதை)
ஒரு வைத்தியரும் அவருடைய மனைவியும் காட்டில் நீண்ட நாட்களாக எதையோ தேடிக்கொண்டிருந்தனர்.கணவர் என்ன தேடுகிறார் என்று மனைவிக்கு தெரியாது!  வைத்தியரும் சொன்
சின்னப் பையன்     (குட்டிக்கதை)
இங்கிலாந்தின் பிரபல கம்பெனி ஒன்றிற்கு, பெரியதோர் இயந்திரம் ஜப்பானில் இருந்து வரவழைக்கப் பட்டது. கோடிக்கணக்கில் விலை. அந்த இயந்திரத்தை இன்ஸ்டால் செய்ய
வெற்றிக்கான சூத்திரம்
தன்னம்பிக்கை பயிற்சி வகுப்பில்வெற்றியாளர் ஒருவரை முறைத்து முறைத்துப் பார்த்துக் கொண்டிருந்தார் ஒருவர். முறைத்தவர் முகத்தில் எப்போதும் இறுக்கம். சிரிப்
பொன்னாங்கண்ணி கீரை சாப்பிடுவதால் கிடைக்கும் பயன்கள்
பொன்னாங்கண்ணி கீரையில் சாப்பிட்டால் ஆண்களுக்கு தேவையான சக்தி கிடைக்கும். குறிப்பாக, பாலுணர்வை அதிகரிக்கும் ஊட்டச்சத்துக்கள் இதில் நிறைந்துள்ளன. அதேபோல
தூக்கமின்மைக்கான காரணங்கள்
நாம் தூங்கும் பொழுது என்ன நடக்கின்றது என்பதனை நாம் அறிவதில்லை. தூக்கத்தில் நாம் என்னவெல்லாம் செய்கின்றோம் என்பதும் நமக்குத் தெரியாது. யாராவது நம்மைப்
வயதானாலும் நினைவாற்றல் இழப்பை தடுக்கலாம்
வயதானவர்களுக்கு ஏற்படும் நினைவாற்றல் இழப்பு அறிகுறிகளைக் குறைக்க உதவும் 6 சூப்பர்ஃபுட்களை உங்கள் அன்றாட உணவில் சேர்க்கலாம். முதுமையை நம்மால் தடுக்க மு
ஏசியை பயன்படுத்துவோர் கட்டாயம் கவனிக்கவேண்டியது
பல மென்பொருள் நிறுவனங்கள் தங்களது ஊழியர்களின் புத்துணர்ச்சி சூழலுக்கும், அவர்களின் செயல்பாடுகளை வெளிப்படுத்தும் கணினியின் பயன்பாட்டிற்கும் நாளொன்றுக்க
நீங்கள் புத்திசாலியா என அறிய அறிவியல் ரீதியான அறிகுறி
ஒருவரை என்ன சொன்னாலும் பொறுத்துக் கொள்வார்கள். ஆனால் முட்டாள் என்று சொன்னால் மட்டும் பயங்கரமாக கோபப்பட்டு விடுவார்கள். அப்படி யாரும் சொல்லிவிடாமல் புத
முகப்பொலிவினை இரண்டே நிமிடத்தில் பெற சூப்பரான ஐடியா
விசேஷத்திற்கு செல்ல வேண்டும் என்றால், ஐந்து நிமிடத்தில் முகம் பொலிவு பெற வேண்டும் என்றால், சமையலறையில் இருக்கும் பொருட்களை வைத்து ஐந்தே நிமிடத்தில் உங
அன்பை விதைப்போம்  (குட்டிக்கதை)
ஒரு இளைஞர் தினமும் ஒரு பாட்டியிடம் ஆரஞ்சு பழங்களை வாங்குவார்.பழங்களை எடை போட்டு வாங்கி பணம் கொடுத்த பின்..... அந்த பழங்களில் இருந்து ஒன்றை எடுத்து பிய
இளநரையை போக்கும் செம்பருத்தி இலை ஹேர் பேக் தயார் செய்யும் முறை
எந்த வயதில் இளநரை வந்தாலும் சரி, நீங்கள் இந்த குறிப்பை பின்பற்றலாம். இளநரை மறைவதோடு சேர்த்து, உங்களுடைய தலைமுடி உதிர்வும் நிற்கும். தலைமுடியும் அடர்த்