-
- 3 friends
இன்றைய ராசி பலன் – மே மாதம் 21, 2024
தமிழ் வருடம் ஸ்ரீ குரோதி, வைகாசி மாதம் 8 ஆம் தேதி
மேஷம் -ராசி:
வாழ்க்கைத் துணையின் ஒத்துழைப்பு கிடைக்கும். வர்த்தகம் தொடர்பான சிந்தனைகள் மேம்படும். இழுபறியாக இருந்துவந்த பணியை செய்து முடிப்பீர்கள். வியாபாரத்தில் ஏற்பட்ட தடைகள் விலகும். பொருளாதாரம் தொடர்பான நெருக்கடி குறையும். விமர்சன பேச்சுக்கள் மறையும். நண்பர்களால் ஆதாயம் உண்டாகும். செலவு நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள்
ரிஷபம் ராசி:
சுறுசுறுப்பாக செயல்பட்டு வெற்றி காண்பீர்கள். உடல் ஆரோக்கியத்தில் கவனம் வேண்டும். வியாபாரத்தில் இருந்துவந்த தடைகள் விலகும். மனதில் இருந்துவந்த கவலைகள் மறையும். எதிராக செயல்பட்டவர்கள் விலகிச் செல்வார்கள். வேலையில் இருந்துவந்த நெருக்கடி நீங்கும். உத்தியோகப் பணிகளில் சாதகமான நிலை ஏற்படும். ஆதாயம் நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண் : 7
அதிர்ஷ்ட நிறம் : பிரவுன்
மிதுனம் -ராசி:
வருமான உயர்வு குறித்த எண்ணங்கள் அதிகரிக்கும். நண்பர்கள் ஒத்துழைப்பாக இருப்பார்கள். அக்கம்-பக்கம் இருப்பவர்களின் அறிமுகம் கிடைக்கும். எதிலும் சிக்கனமாக செயல்படுவீர்கள். புண்ணிய ஸ்தலங்கள் தொடர்பான பயணங்கள் சாதகமாக அமையும். சக ஊழியர்களிடத்தில் அனுசரித்துச் செல்லவும். புதுமையான விஷயங்களில் தனிப்பட்ட ஆர்வம் ஏற்படும். வரவு நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண் : 4
அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு
கடகம் -ராசி:
பழைய நினைவுகளின் மூலம் மகிழ்ச்சியான சூழல் உண்டாகும். தாய் வழி உறவுகளால் அலைச்சல் ஏற்படும். இழுபறியான சில வரவுகளை பேச்சுவார்த்தைகளுக்கு பின்பு பெறுவீர்கள். கலை சார்ந்த பொருட்களின் மீது ஆர்வம் அதிகரிக்கும். உத்தியோகப் பணிகளில் அமைதி உண்டாகும். விலகி நின்றவர்கள் விரும்பி வருவார்கள். வியாபாரத்தில் சில மாற்றங்களால் சாதகமான வாய்ப்புகள் உண்டாகும். தடங்கல் விலகும் நாள்.
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : பச்சை
சிம்மம் -ராசி:
மனதிற்கு பிடித்த பணிகளை செய்து முடிப்பீர்கள். அதிகார பதவியில் இருப்பவர்களால் ஆதாயம் உண்டாகும். எதிர்பாராத சில மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். வாகன வசதிகள் மேம்படும். கடன் பிரச்சனைகள் குறையும். அணுகுமுறைகளில் சில மாற்றங்கள் ஏற்படும். வியாபாரத்தில் செய்யும் முயற்சிகள் சாதகமாக அமையும். நன்மை நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண் : 8
அதிர்ஷ்ட நிறம் : இளம்பச்சை
கன்னி -ராசி:
மனதில் இருந்துவந்த குழப்பம் விலகும். பேச்சுக்களால் காரிய அனுகூலம் ஏற்படும். தடைபட்டு வந்த வருமானம் மீண்டும் கிடைக்கும். வியாபாரத்தில் லாபம் உண்டாகும். நீண்ட நாட்களாக எதிர்பார்த்த செய்திகள் கிடைக்கும். முதலீடுகள் தொடர்பான செயல்களில் ரகசியத்தை பகிர்வதை தவிர்க்கவும். புதிய நபர்களின் அறிமுகங்கள் ஏற்படும். சுகம் நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண் : 8
அதிர்ஷ்ட நிறம் : அடர்சிவப்பு
துலாம் -ராசி:
விமர்சன பேச்சுக்கள் ஏற்பட்டு நீங்கும். போட்டி சார்ந்த சிந்தனைகளால் குழப்பம் தோன்றி மறையும். குடும்பத்தாரிடம் அனுசரித்துச் செல்லவும். மாறுபட்ட அணுகுமுறைகளால் முயற்சிகளில் மாற்றம் பிறக்கும். உத்தியோகத்தில் எதிர்பாராத சில அனுபவங்கள் கிடைக்கும். வியாபார பணிகளில் நிதானம் வேண்டும். பெருமை நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : ஊதா
விருச்சிகம்- ராசி:
கணவன், மனைவிக்கிடையே அனுசரித்துச் செல்லவும். எதிர்பாராத செலவுகளால் நெருக்கடிகள் ஏற்படும். கனிவான பேச்சுக்களால் வியாபாரத்தில் நன்மை உண்டாகும். உலக நிகழ்வுகளால் மனதளவில் மாற்றம் ஏற்படும். நினைத்த பணிகளில் கவனத்தோடு செயல்படுவது நல்லது. சக ஊழியர்களிடத்தில் சிறு சிறு கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டு நீங்கும். நலம் நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு
தனுசு -ராசி:
நினைத்ததை நிறைவேற்றிக் கொள்வீர்கள். வெளி வட்டாரத்தில் செல்வாக்கு அதிகரிக்கும். அரசு காரியங்களில் ஆதாயம் அடைவீர்கள். வியாபாரத்தில் ஏற்பட்டு வந்த தடைகள் விலகும். செய்யும் முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். உயர் கல்வி தொடர்பான சிந்தனைகள் மேம்படும். இழுபறியாக இருந்துவந்த வரவுகள் கிடைக்கும். கீர்த்தி நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண் : 8
அதிர்ஷ்ட நிறம் : ஊதா
மகரம் -ராசி:
சமூகம் பற்றிய புதிய கண்ணோட்டம் பிறக்கும். சொந்த ஊர் தொடர்பான பயணங்கள் கைகூடும். பலம் மற்றும் பலவீனங்களை புரிந்து கொள்வீர்கள். விருந்தினர்களின் வருகை உண்டாகும். வீடு மற்றும் வாகனப் பழுதுகளை சரி செய்வீர்கள். நிர்வாக துறைகளில் திறமைகள் வெளிப்படும். உழைப்பு நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண் : 4
அதிர்ஷ்ட நிறம் : இளம்மஞ்சள்
கும்பம் –ராசி:
சகோதரர்களின் வழியில் ஒத்துழைப்பு கிடைக்கும். தடைபட்ட பணிகளை செய்து முடிப்பீர்கள். இறை சார்ந்த நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வீர்கள். எதிர்பாராத சில உதவிகள் கிடைக்கும். வியாபாரத்தில் சில மாற்றமான சூழல் அமையும். சக ஊழியர்களின் மறைமுகமான ஆதரவு கிடைக்கும். உதவி கிடைக்கும் நாள்.
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள்
மீனம் -ராசி:
பயனற்ற பேச்சுக்களை குறைத்துக் கொள்ளவும். குடும்பத்தில் அனுசரித்துச் செல்லவும். மனதில் ஒருவிதமான தாழ்வு மனப்பான்மை ஏற்பட்டு நீங்கும். உயர் அதிகாரிகளிடத்தில் அனுசரித்துச் செல்லவும். வியாபாரம் தொடர்பான செயல்களில் பொறுமையை கையாள்வது நல்லது. மறைமுகமான விமர்சனங்களால் சில மாற்றங்கள் ஏற்படும். அலைச்சல் நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை
இன்றைய நாள் இனிய நாளாக அமைந்திட வாழ்த்துகள்.
- · Yathusan
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·