- · 5 friends
-
I

டீக்கடையில ஒரு அண்டர்கிரவுண்டு முதலுதவி மையம் (படித்ததில் பிடித்தது)
ஒரு டீக்கடை வாசலில் நின்னுட்ருந்தேன். ரொம்ப்ப்ப்ப அரிதா டீ சாப்பிடும் பழக்கம் உண்டு...!
டீ சொல்லிட்டு மாஸ்ட்ரோட மீசையும், நெத்தி மேல ஒரு வரிசையில் மட்டும் 5,6 மிமி முடி வச்சு அதுல பாதிக்கு ப்ரவுன் கலர் அடிச்சிருந்த ரசனையின் பின்னணி என்னவா இருக்கும்ன்னு யோசிச்சிட்டிருந்தேன். 'சார் கொஞ்சம் ஜீனி கொடுங்கன்னு', என் பின்னாடி இருந்து ஒருத்தர் கை நீட்டினார்...
மாஸ்டர் கொடுக்கிறதுக்கு யோசிச்ச ஒரு வினாடியில் அவருக்கு பின்னாடி நின்னுட்டிருந்த ஒரு சீனியர் மாஸ்டர் படக்குன்னு டப்பாவுக்குள் கையை விட்டு ஜீனி அள்ளி கொடுத்தார். வாங்கினவர் வாயில் போட்டுட்டு போய்ட்டார். எனக்கு இந்த செயல் பார்க்க வித்தியாசமா இருந்தது. தண்ணி கேப்பாங்க, பீடி பத்த வைக்க நெருப்பு கேப்பாங்க. இதென்னடா ஜீனி கேக்குறாங்கன்னு யோசிச்சிட்டே சீனியர் மாஸ்டர் என்ன பேசுறார்ன்னு கவனிச்சேன்...
அடேய், யாராவது ஜீனி கேட்டா உடனே கொடுக்கணும்டா.., அது ரொம்ப முக்கியம்.
இல்லண்ணே... திடீர்ன்னு வந்து ஜீனி கொடுன்னு கேட்டாரு.. அதான் எதுக்குன்னு..
டேய், அவங்க கேக்க கூட மாட்டாங்க, கையை நீட்டினாலே நாம கொடுத்துறணும். அவங்க சுகர் பேஷண்ட்டா இருக்கலாம். மாத்திரை போட்டு சுகர் குறைந்திருக்கலாம். அவசர அவசரமா வந்து கேப்பாங்க. அவங்களால பேச முடியாது. நாம ஒரு நிமிஷம் தாமதிச்சாலும் மயக்கம் போட்டுருவாங்க டா..., அந்த பாவம் நமக்கு வேணாம். சட்டுன்னு குடுத்துறனும்.. என்னா.. !!
சரிணே, எனக்கு தெரியாதுணே.... இனிமே கொடுத்திடறேன்ணே.!!
இந்த உரையாடலை கேட்டு மெர்சலாகிட்டேன். டீக்கடையில ஒரு அண்டர்கிரவுண்டு முதலுதவி மையம் நடத்திட்டிருக்காங்க...!!
தமிழா உன்னை அடிச்சுக்க முடியாது... வாழ்க நின் கொற்றம்...

- · Yathusan
- ·



- · GomathiSiva
- ·

- · GomathiSiva
- ·

- · GomathiSiva
- ·

- · GomathiSiva
- ·

- · GomathiSiva
- ·

- · GomathiSiva
- ·

- · GomathiSiva
- ·

- · GomathiSiva
- ·

- · GomathiSiva
- ·

- · GomathiSiva
- ·

- · GomathiSiva
- ·

- · GomathiSiva
- ·