-
- 3 friends
இன்றைய ராசி பலன் – ஏப்ரல் மாதம் 11, 2024
தமிழ் வருடம் சோபகிருது, பங்குனி மாதம் 29 ஆம் தேதி
மேஷம் -ராசி:
கணவன், மனைவிக்கிடையே ஒற்றுமை அதிகரிக்கும். தடைபட்ட பணிகள் எளிதில் நிறைவேறும். எதிர்பார்த்த உதவிகள் சாதகமாகும். வியாபாரத்தில் விட்டுக்கொடுத்துச் செயல்படுவது நல்லது. அலுவலகத்தில் உழைப்புக்கு உண்டான மதிப்பு கிடைக்கும். சில அனுபவங்களால் புதிய அத்தியாயம் பிறக்கும். சுகம் நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண் : 2
அதிர்ஷ்ட நிறம் : அடர் பச்சை
ரிஷபம் ராசி:
மனதில் ஒருவிதமான தாழ்வு மனப்பான்மை தோன்றி மறையும். உத்தியோகத்தில் பொறுப்பு மேம்படும். எதிர்பார்த்த உதவிகள் கிடைப்பதில் தாமதம் உண்டாகும். வியாபாரத்தில் நிதானத்தை கையாளுவது நல்லது. உடன் இருப்பவர்களிடத்தில் சிறு சிறு கருத்து வேறுபாடுகள் உண்டாகும். நட்பு நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண் : 1
அதிர்ஷ்ட நிறம் : பொன்னிறம்
மிதுனம் -ராசி:
வாழ்க்கைத் துணைவரின் வழியில் அனுகூலம் உண்டாகும். வாகனப் பழுதுகளை சரிசெய்வீர்கள். நண்பர்களின் வட்டம் விரிவடையும். சகோதரர்களால் ஆதாயம் உண்டாகும். மனம் விரும்பிய பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். வியாபாரத்தில் மேன்மை ஏற்படும். சக ஊழியர்கள் ஆதரவாக இருப்பார்கள். எதிர்பாராத சில மகிழ்ச்சியான தருணங்கள் அமையும். தன்னம்பிக்கை வேண்டிய நாள்.
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : ஊதா
கடகம் -ராசி:
பொருளாதாரத்தில் இருந்துவந்த நெருக்கடிகள் குறையும். வெளியூர் பயணங்கள் சாதகமாக அமையும். வியாபாரத்தில் சில நுணுக்கங்களை புரிந்து கொள்வீர்கள். பணிபுரியும் இடத்தில் முக்கியத்துவம் ஏற்படும். கால்நடை சார்ந்த விஷயங்களில் ஆர்வம் உண்டாகும். பெரியோர்களின் ஆலோசனைகளால் மனதில் மாற்றம் ஏற்படும். ஆதரவு நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : இளஞ்சிவப்பு
சிம்மம் -ராசி:
குடும்பத்தின் தேவைகளை நிறைவேற்றுவீர்கள். அக்கம்-பக்கம் இருப்பவர்கள் ஆதரவாக இருப்பார்கள். உறவினர்களின் வழியில் ஒத்துழைப்பு கிடைக்கும். வியாபாரம் சார்ந்த விஷயங்களில் பொறுமை வேண்டும். பணிபுரியும் இடத்தில் அனுசரித்துச் செல்லவும். பொழுதுபோக்கு தொடர்பான விஷயங்களில் ஆர்வம் ஏற்படும். உயர்வு நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : அடர் சிவப்பு
கன்னி -ராசி:
எதிராக செயல்பட்டவர்கள் விலகிச் செல்வார்கள். கடன்களை அடைப்பதற்கான எண்ணங்கள் உண்டாகும். புதிய வேலை சார்ந்த முயற்சிகள் ஈடேறும். தாயிடத்தில் சிறு சிறு கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டு நீங்கும். பங்குதாரர்களிடம் அனுசரித்து நடந்து கொள்ளவும். உத்தியோகத்தில் எதிர்பார்த்த பொறுப்பு கிடைக்கும். போட்டி நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண் : 1
அதிர்ஷ்ட நிறம் : இளம் மஞ்சள்
துலாம் -ராசி:
பழைய பிரச்சனைகளுக்கு தெளிவான முடிவுகளை எடுப்பீர்கள். பிரபலமானவர்களின் நட்பு கிடைக்கும். வாகன பழுதுகளை சரிசெய்வீர்கள். உறவினர்களிடத்தில் மதிப்பு உயரும். வியாபாரத்தில் லாபம் மேம்படும். எதிலும் துணிச்சலோடு செயல்படுவீர்கள். திறமையை வெளிப்படுத்துவதற்கான வாய்ப்பு கிடைக்கும். விவேகம் வேண்டிய நாள்.
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : சாம்பல்
விருச்சிகம்- ராசி:
கணவன், மனைவிக்கிடையே நெருக்கம் ஏற்படும். தடைபட்ட பணிகளை செய்து முடிப்பீர்கள். உடல் தோற்றப்பொலிவு மேம்படும். விலை உயர்ந்த பொருட்களை வாங்குவீர்கள். பணி நிமிர்த்தமான சில முடிவுகளை எடுப்பீர்கள். வியாபாரத்தில் நுட்பங்களை புரிந்து கொள்வீர்கள். உத்தியோகத்தில் மதிப்பு மேம்படும். எதிர்பாராத சில திருப்பங்கள் உண்டாகும். செல்வாக்கு மேம்படும் நாள்.
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : பச்சை
தனுசு -ராசி:
எதிலும் தன்னம்பிக்கையோடு செயல்படுவீர்கள். பயனற்ற சிந்தனைகளை குறைத்துக் கொள்ளவும். வேலையாட்களிடம் அனுசரித்துச் செல்லவும். பணிபுரியும் இடத்தில் முன்கோபம் இன்றி செயல்படுவது நல்லது. திடீர் முடிவுகளை எடுப்பதை விட சூழ்நிலையறிந்து செயல்படவும். செலவு நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண் : 1
அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு
மகரம் -ராசி:
கணவன், மனைவிக்கிடையே விட்டுக்கொடுத்துச் செல்லவும். ஆடம்பர செலவுகளால் சேமிப்பு குறையும். உறவினர்களின் வழியில் ஒத்துழைப்பு ஏற்படும். வெளி உணவுகளை குறைத்துக் கொள்ளவும். வேலையாட்களால் புதிய அனுபவம் ஏற்படும். உத்தியோகத்தில் பொறுப்பு மேம்படும். அமைதி நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு
கும்பம் –ராசி:
மனதில் புதிய இலக்குகள் பிறக்கும். பயணங்களால் ஆதாயம் உண்டாகும். புதிய பொருட்களின் சேர்க்கை ஏற்படும். பெற்றோர்களின் ஒத்துழைப்பு மேம்படும். வீடு பராமரிப்பு தொடர்பான எண்ணங்கள் அதிகரிக்கும். வியாபாரத்தில் அபிவிருத்திக்கான சூழல் அமையும். உத்தியோகத்தில் திறமைகள் வெளிப்படும். அமைதி வேண்டிய நாள்.
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்
மீனம் -ராசி:
எதையும் சமாளிக்கும் திறமை மேம்படும். சக ஊழியர்கள் இடத்தில் பாராட்டுகள் கிடைக்கும். முயற்சிகளில் எதிர்பார்ப்பு நிறைவேறும். அரசு சார்ந்த உதவிகள் சாதகமாகும். சொந்த ஊர் தொடர்பான சிந்தனை மேம்படும். குழந்தைகளிடத்தில் சூழ்நிலைக்கு ஏற்ப அனுசரித்துச் செல்லவும். சுகம் நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள்
இன்றைய நாள் இனிய நாளாக அமைந்திட வாழ்த்துகள்.
- · Yathusan
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·