-
- 3 friends
இன்றைய ராசி பலன் – மார்ச் மாதம் 30, 2024
தமிழ் வருடம் சோபகிருது, பங்குனி மாதம் 17 ஆம் தேதி மேஷம் -ராசி: உடன்பிறந்தவர்கள் இடத்தில் அனுசரித்துச் செல்லவும். அலுவலகத்தில் மறைமுகமான விமர்சனங்கள் தோன்றி மறையும். சில செயல்பாடுகளில் அனுபவத்தை பயன்படுத்துவது நல்லது. வியாபாரம் சார்ந்த பணிகளில் பொறுமை வேண்டும். எதிலும் முன்கோபம் இன்றி செயல்படவும். எதிர்பாராத சில செலவுகளால் நெருக்கடிகள் உண்டாகும். அமைதி வேண்டிய நாள். அதிர்ஷ்ட எண் : 8 அதிர்ஷ்ட நிறம் : அடர்நீலம் ரிஷபம் ராசி: மனதளவில் புதிய தன்னம்பிக்கை பிறக்கும். சகோதரர்களின் வழியில் உதவி கிடைக்கும். சுபகாரிய பேச்சுவார்த்தைகள் சாதகமாகும். வாகன பழுதுகளை சரி செய்வீர்கள். வியாபாரத்தில் சில சூட்சுமங்களை புரிந்து கொள்வீர்கள். வழக்கு தொடர்பான விஷயங்களில் திடீர் திருப்பங்கள் உண்டாகும். உத்தியோகத்தில் சாதகமான வாய்ப்பு கிடைக்கும். போட்டிகள் நிறைந்த நாள். அதிர்ஷ்ட எண் : 7 அதிர்ஷ்ட நிறம் : இளஞ்சிவப்பு மிதுனம் -ராசி: எதிர்ப்புகளால் ஏற்பட்ட தடைகள் விலகும். கடன் சார்ந்த உதவி கிடைக்கும். மற்றவர்களின் தேவைகளை நிறைவேற்றி வைப்பீர்கள். நெருக்கமானவர்கள் பற்றிய புரிதல் ஏற்படும். பணிபுரியும் இடத்தில் மதிப்பு மேம்படும். நினைத்ததை செய்து முடிப்பதற்கான சூழல் அமையும். மனதளவில் இருந்துவந்த கவலைகள் குறையும். அசதி மறையும் நாள். அதிர்ஷ்ட எண் : 4 அதிர்ஷ்ட நிறம் : வெளீர்நீலம் கடகம் -ராசி: எதிர்காலம் சார்ந்து சில பணிகளை மேற்கொள்வீர்கள். உறவினர்களின் வழியில் ஆதரவு கிடைக்கும். பயனற்ற செலவுகளை குறைத்துக் கொள்வது நல்லது. பிறமொழி பேசும் மக்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். வியாபாரத்தில் சில தந்திரங்களை புரிந்து கொள்வீர்கள். பழைய பிரச்சனைகளால் பணியில் சில மாற்றங்கள் ஏற்படும். மனதில் புதுவிதமான கனவுகள் பிறக்கும். களிப்பு நிறைந்த நாள். அதிர்ஷ்ட எண் : 5 அதிர்ஷ்ட நிறம் : இளநீலம் சிம்மம் -ராசி: உறவினர்களின் வழியில் அலைச்சல் உண்டாகும். நண்பர்களின் ஆலோசனைகளால் சில மாற்றங்கள் ஏற்படும். ஆரோக்கியம் தொடர்பான சிந்தனை மேம்படும். நெருக்கடியான சூழல்களை சாமர்த்தியமாக சமாளிப்பீர்கள். வியாபாரம் சார்ந்த பணிகளில் சில மாற்றங்கள் பிறக்கும். உத்தியோகத்தில் அமைதியான சூழல் உண்டாகும். மனை மற்றும் வாகனம் வாங்குவது தொடர்பான விஷயங்களில் ஆர்வம் ஏற்படும். அனுபவம் மேம்படும் நாள். அதிர்ஷ்ட எண் : 8 அதிர்ஷ்ட நிறம் : இளம் பச்சை கன்னி -ராசி: பேச்சுக்களில் அனுபவ அறிவு வெளிப்படும். சவாலான பணிகளில் ஈடுபட்டு வெற்றி பெறுவீர்கள். எழுத்துத் துறைகளில் திறமைகளை வெளிப்படுத்துவீர்கள். வியாபாரம் சார்ந்த விஷயங்களில் ஆலோசனை பெற்று முடிவெடுக்கவும். அரசு தொடர்பான விஷயங்களில் பொறுமை வேண்டும். புதிய முயற்சிகளில் எதிர்பார்ப்புகள் நிறைவேறும். மனதளவில் புதிய தன்னம்பிக்கை பிறக்கும். சோர்வு நிறைந்த நாள். அதிர்ஷ்ட எண் : 7 அதிர்ஷ்ட நிறம் : வெளிர்நீலம் துலாம் -ராசி: குழந்தைகளின் புதிய முயற்சிகளை ஆதரிப்பீர்கள். வியாபாரத்தில் புதிய நபர்களின் அறிமுகம் ஏற்படும். வாகன பழுதுகளை சரி செய்வீர்கள். கடன் சார்ந்த உதவி கிடைக்கும். விலை உயர்ந்த பொருட்களின் மீது ஆர்வம் ஏற்படும். பயனற்ற செலவுகளை கட்டுப்படுத்துவீர்கள். மனதளவில் புதுவிதமான கற்பனை பிறக்கும். வரவு நிறைந்த நாள். அதிர்ஷ்ட எண் : 3 அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் விருச்சிகம்- ராசி: செயல்பாடுகளில் ஒருவிதமான படபடப்பு ஏற்பட்டு நீங்கும். உடன்பிறந்தவர்கள் ஆதரவாக இருப்பார்கள். எதிலும் தாழ்வு மனப்பான்மை இன்றி செயல்படவும். உத்தியோகப் பணிகளில் சில மாற்றமான சூழல் உண்டாகும். வியாபாரத்தில் லாபம் கிடைக்கும். சில அனுபவங்களின் மூலம் மனதளவில் புதிய பக்குவம் பிறக்கும். ஊக்கம் நிறைந்த நாள். அதிர்ஷ்ட எண் : 6 அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை தனுசு -ராசி: எளிதில் முடியும் என எதிர்பார்த்த சில காரியங்கள் இழுபறிக்கு பின் நிறைவேறும். எதிலும் தாழ்வு மனப்பான்மை இன்றி செயல்படவும். சகோதரர்களின் வழியில் அலைச்சல் உண்டாகும். வரவுக்கு மீறிய செலவுகளால் சேமிப்பு குறையும். வியாபாரத்தில் முதலீடு குறித்த முயற்சிகள் மேம்படும். உத்தியோகத்தில் ஆர்வமின்மையான சூழல் ஏற்படும். கவலைகள் விலகும் நாள். அதிர்ஷ்ட எண் : 7 அதிர்ஷ்ட நிறம் : வெளிர் பச்சை மகரம் -ராசி: மற்றவர்களின் எண்ணங்களை புரிந்து செயல்படுவீர்கள். உடன்பிறந்தவர்களின் வழியில் ஒத்துழைப்பு கிடைக்கும். வியாபாரத்தில் லாபகரமான சூழல் உண்டாகும். நினைத்த காரியங்களை எண்ணிய விதத்தில் செய்து முடிப்பீர்கள். உத்தியோகத்தில் முன்னேற்றம் ஏற்படும். எதையும் சமாளிக்கும் மனப்பக்குவம் உண்டாகும். விவேகம் வேண்டிய நாள். அதிர்ஷ்ட எண் : 8 அதிர்ஷ்ட நிறம் : அடர்நீலம் கும்பம் –ராசி: அணுகுமுறையில் சில மாற்றங்கள் உண்டாகும். சகோதரர்களிடத்தில் விட்டுக்கொடுத்துச் செல்லவும். வியாபாரத்தில் புதிய நபர்களின் தொடர்புகள் கிடைக்கும். உறவினர்களின் வழியில் மகிழ்ச்சியான சூழல் அமையும். உத்தியோகத்தில் நுட்பங்களை புரிந்து கொள்வீர்கள். கௌரவ பொறுப்புகளின் மூலம் மதிப்பு உயரும். நன்மை நிறைந்த நாள். அதிர்ஷ்ட எண் : 5 அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு மீனம் -ராசி: எதிர்பார்த்த சில உதவிகள் கிடைக்கும். மாறுபட்ட அணுகுமுறைகளால் பிரச்சனைகளுக்கு தீர்வு காண்பீர்கள். வியாபாரத்தில் முன்னேற்றம் குறித்த சிந்தனை மேம்படும். வெளிவட்டாரத்தில் புதிய அனுபவம் உண்டாகும். வெளியூர் சார்ந்த சிந்தனை அதிகரிக்கும். ஆன்மிகப் பணிகளில் ஆர்வம் உண்டாகும். புதிய முயற்சிகளில் சிந்தித்துச் செயல்படவும். பக்தி நிறைந்த நாள். அதிர்ஷ்ட எண் : 4 அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் இன்றைய நாள் இனிய நாளாக அமைந்திட வாழ்த்துகள்.
- · Yathusan
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·