- · 5 friends
-
I
வாழ்க்கையின் நிதர்சனம் (குட்டிக்கதை)
பிரசங்கத்தின் போது குரு ஒரு முப்பது வயது இளைஞனை எழுந்து நிற்கச் சொன்னார்.
“நீ மரீனா கடற்கரையில் நடந்து சென்று கொண்டிருக்கிறாய் என்று வைத்துக்கொள்வோம். அப்போது உன் எதிரே ஓர் அழகிய பெண் நடந்து வருகிறாள். அப்போது நீ என்ன செய்வாய்?”
“அவள் முகத்தை பார்த்து ரசிப்பேன். அவளது வளைவுகளைக் கண்களால் ஆராய்வேன்.”
“அவள் உன்னைக் கடந்து போய்விட்டால் திரும்பிப் பார்ப்பாயா?”
“மனைவி அருகில் இல்லையெனில் திரும்பிப் பார்ப்பேன்” (கூட்டத்தில் சிரிப்பு)
“அவளது அழகிய முகத்தை எவ்வளவு நேரம் நினைவில் வைத்திருப்பாய்?”
“ஒரு பத்துப் பதினைந்து நிமிஷம் - அடுத்த அழகிய பெண்ணைப் பார்க்கும் வரை நினைவில் வைத்திருப்பேன்”
“இப்படிக் கற்பனை செய்து பார் - நீ சென்னையிலிருந்து பெங்களூர் செல்கிறாய். நான் உன்னிடம் சில புத்தகங்கள் அடங்கிய பார்சலைக் கொடுத்து அதனை பெங்களூரில் வசிக்கும் ஒரு பெரிய மனிதரிடம் சேர்க்கச் சொல்கிறேன்.
நீ பெங்களூரில் புத்தகங்களைக் கொடுக்க அப்பெரிய மனிதனின் வீட்டிற்குச் செல்கிறாய்.
அந்த வீட்டைப் பார்க்கும்போது தான் உனக்கு அவர் எவ்வளவு பெரிய பணக்காரர் எனத் தெரிய வருகிறது.
வாசலில் 10 சொகுசுக் கார்கள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. 5 பேர் வாசலில் காவலுக்கு இருக்கிறார்கள்
நீ புத்தகப் பார்சலோடு வந்திருக்கும் தகவலை அவர்களிடம் சொல்லியனுப்புகிறாய்.
விஷயத்தைக் கேட்டதும் அப்பெரிய மனிதரே வெளியே வந்து முகமண் கூறி உன்னை வரவேற்கிறார்.
புத்தகப் பரிசை உன்னிடமிருந்து பெற்றுக் கொள்கிறார். நீ திரும்பிச் செல்ல எத்தனிக்கையில் பணிவோடு உன்னை வீடுக்குள் வரும்படி சொல்கிறார். உன்னோடு அமர்ந்து சுடச்சுட விருந்து பரிமாறுகிறார்.
நீ விடை பெற எழுந்த போது “என் வீட்டிற்கு எப்படி வந்தீர்கள்?” எனக் கேட்கிறார். “மெட்ரோ ரயிலில் ஐயா” என நீ பதிலிறுக்கிறாய்.
அவர் தன் ஓட்டுநரை அழைத்து உன்னை வீடு வரை விட்டு வரச் சொல்கிறார்
நீ வீட்டை நெருங்குகையில் அவரிடமிருந்து அலைபேசி அழைப்பு வருகிறது - “பத்திரமாகப் போய்ச் சேர்ந்தீர்களா?” என்று.
இப்போது சொல் - இப்பெரிய மனிதரை நீ எவ்வளவு நேரம் நினைவில் வைத்திருப்பாய்?”
இளைஞன் சொன்னான் - “ஆசானே அவரை என் வாழ்நாளில் மறக்க மாட்டேன். நான் சாகும் வரை அவர் முகம் என் நினைவிலிருக்கும்.”
கூட்டத்தினரிடம் திரும்பிக் குரு சொன்னார் - இது தான் வாழ்க்கையின் நிதர்சனம்.
அழகிய முகம் சிறிது நேரம் நினைவில் இருக்கும். அழகிய குணம் வாழ்நாள் முழுதும் ஞாபகம் இருக்கும்.
இது தான் வாழ்க்கையின் தாரக மந்திரம். உங்கள் முகப்பொலிவிலும் உடல் வனப்பிலும் காட்டும் அக்கறையை விடவும் அதிகமாக செயல்களின் அழகியலில் கவனம் செலுத்துங்கள். வாழ்தல் இனிதாயிருக்கும் - உங்களுக்கு. அடுத்தவர்களுக்கு - அது பெரிய உத்துவேகமாக இருக்கும்
- · Yathusan
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·