- · 5 friends
-
I
உப்பு கறை படிந்த பாத்ரூம் குழாய்களை பளிச்சினு மாத்த சூப்பர் ஐடியா
வீட்டில் இருக்கும் அனைத்தையும் ஒவ்வொன்றாக பார்த்து பார்த்து சுத்தம் செய்தால் கூட, இந்த பாத்ரூம் குழாய் அடிக்கடி கறை பிடித்து அழுக்காகி விடும். காரணம் உப்பு தண்ணீர். இதை போக்குவதும் எளிதான செயல் இல்லை.
பாத்ரூம் குழாய்களில் படிந்திருக்கும் உப்பு கறை போக இதற்கு முதலில் உப்புக்கறை படிந்த பாத்ரூம் குழாய்களின் மீது டொமேட்டோ ஸ்கெட்ச்ப் தேய்த்து விடுங்கள். பெரும்பாலும் துரித உணவுகள் வாங்கும் போது இதை தருவார்கள்.
அதைத் நாம் தூரத் தான் தூங்கி போடுவோம். ஒரு வேலை உங்களிடம் இல்லை என்றால் வாங்கி பயன்படுத்துங்கள். அதன் பிறகு ஸ்கெட்ச்ப் மேலே நீங்கள் பயன்படுத்தும் டூத் பேஸ்ட்டை தேய்த்து விடுங்கள்.
இதற்கு நீங்கள் எந்த வகையான டூத் பேஸ்ட் பயன்படுத்தினாலும் பரவாயில்லை. அதை கறை படிந்த அனைத்து இடத்திலும் நன்றாக தேய்த்து விடுங்கள். இதை தேய்த்த பிறகு ஒரு நிமிடம் அப்படியே விட்டு விடுங்கள். அதன் பிறகு கொஞ்சமாக தண்ணீர் எடுத்து அதில் கொஞ்சம் ஷாம்புவை நன்றாக கலந்து நுரை வரும்படி அடித்துக் கொள்ளுங்கள்.
அந்த தண்ணீரை வைத்து குழாய்களை கம்பி நார் வைத்து லேசாக தேய்த்து விடுங்கள். தண்ணீரில் ஷாம்பு கலந்து தேய்ப்பது முக்கியம் வெறும் தண்ணீர் ஊற்றி தேய்க்க கூடாது. இப்படி தேய்க்கும் போது நீங்கள் அதிக சிரமப்பட தேவை இல்லை. கம்பி நார் வைத்து லேசாக தேய்க்கும் போதே உப்பு கறை அனைத்தும் உதிர்ந்து குழாய்கள் புதிது போல மின்ன ஆரம்பிக்கும்.
எளிமையான முறை தான் ஆனால் நல்ல பலனை தரும். இனி உங்க வீட்டு பாத்ரூம் குழாயில் உப்புக் கறை படிந்து விட்டதே என்று கவலைப்பட வேண்டிய அவசியமே இருக்காது. இதை மாதம் ஒரு முறை தேய்த்து சுத்தப்படுத்தினால் கூட போதும் பாத்ரூம் குழாய்கள் எல்லாம் பளிச்சென்று இருக்கும்.
- · Yathusan
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·