- · 5 friends
-
I
இளநரை மற்றும் முடி உதிர்தல் பிரச்சினைக்கு எளிய தீர்வு
முடி அடர்த்தியாகவும், கருமை நிறத்துடனும் இருப்பதற்கு எந்த பட்டையை எண்ணெயில் கலந்து தேய்க்க வேண்டும் என்று பார்க்கலாம். இன்றைய காலத்தில் குழந்தைகள் முதற்கொண்டு அனைவருக்கும் இளநரை பிரச்சினையை தீர்ப்பதற்கு ஆரோக்கியமான உணவை எடுத்துக்கொள்ள வேண்டும். இருப்பினும் நாம் தலைக்கு தேய்க்கும் எண்ணெயில் சில பொருட்களை சேர்ப்பதன் மூலம் இளநரை பிரச்சினையை தீர்க்க முடியும்.
முடி உதிர்தல் என்ற பிரச்சினை நீங்குவதற்கு ஆரோக்கியமான உணவுகளையும், பழ வகைகளையும், கீரைகளையும் உணவில் தினமும் சேர்த்துக் கொள்வதோடு, தியானம், யோகா போன்ற மன அழுத்தத்திலிருந்து விடுபடும் பயிற்சிகளையும் மேற்கொண்டால் முடி உதிர்வு பிரச்சினை என்பது தீரும்.
இருப்பினும் வெளிப்புறமாக உபயோகப்படுத்துவதற்கு சில பொருட்களையும் நாம் பயன்படுத்தினால் முடி உதிர்தல் பிரச்சனை படிப்படியாக குறைய ஆரம்பிக்கும். இதற்கு நமக்கு தேவைப்படும் ஒரே ஒரு பொருள் வேம்பாளம் பட்டை. இது அனைத்து நாட்டு மருந்து கடைகளிலும் கிடைக்கக்கூடியது. இதில் இருக்கும் சத்துக்களால் முடியில் ஏற்படக்கூடிய இளநரைகள் மாறும்.
முடி உதிர்தல் தடுக்கப்படுவதோடு முடி வளர்ச்சியையும் அதிகரிக்கும். வேம்பாளம் பட்டை 50 கிராமை உரலில் போட்டு ஒன்றிரண்டாக இடித்துக் கொள்ளுங்கள். பிறகு ஒரு பாத்திரத்தை எடுத்து அதில் தட்டி வைத்திருக்கும் வேம்பாளம் பட்டையை போட வேண்டும். பிறகு அதனுடன் அரை லிட்டர் தேங்காய் எண்ணெயை சேர்க்க வேண்டும். அடுத்ததாக கால் லிட்டர் அளவிற்கு சுத்தமான ஆலிவ் எண்ணெயை சேர்க்க வேண்டும்.
ஆலிவ் எண்ணெய் வாங்க முடியாதவர்கள் விளக்கெண்ணையை சேர்த்துக் கொள்ளலாம். இப்பொழுது இந்த பாத்திரத்தை நாம் சூரிய வெளிச்சம் நன்றாக படும் இடங்களில் தொடர்ந்து மூன்று நாட்கள் வைத்து எடுத்தாலே போதும். அவ்வாறு செய்ய இயலாத பட்சத்தில் அடுப்பில் ஒரு அகலமான பாத்திரத்தை வைத்து அதில் தண்ணீரை ஊற்ற வேண்டும். தண்ணீர் நன்றாக கொதித்த பிறகு நாம் தயார் செய்து வைத்திருக்கும் இந்த எண்ணெய் பாத்திரத்தை உள்ளே வைத்து 20 நிமிடம் எண்ணெயை சூடு செய்ய வேண்டும்.
நேரடியாக எண்ணெயை அடுப்பில் வைத்து சூடு பண்ணுவதை விட இப்படி சூடு பண்ணினால் தான் எண்ணெயில் இருக்கும் சத்துக்கள் வெளியில் செல்லாமல் அப்படியே தங்கும். இந்த எண்ணையை நாம் தினமும் தலைக்கு உபயோகப்படுத்தலாம். தினமும் தலையில் எண்ணெய் வைக்க விரும்பாதவர்கள் தலைக்கு குளிப்பதற்கு முன்பாக இந்த எண்ணெயை நன்றாக தலையில் தேய்த்து மசாஜ் செய்து அரை மணி நேரம் ஊற வைத்து பிறகு தலைக்கு குளிக்கலாம்.
- · Yathusan
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·