·   ·  1499 posts
  •  ·  5 friends
  • I

    9 followers

சிரிப்பதற்கு மட்டுமன்று... சிந்திப்பதற்கும்

இந்தியாவிலிருந்து கனடா நாட்டிலுள்ள வன்கூவர் நகரத்துக்குச் சென்ற ஒரு திறமையான இளைஞன்,
அங்குள்ள மிகப் பெரிய சூப்பர் மார்க்கெட்டுக்கு சென்று அதன் முதலாளியைச் சந்தித்து, தனக்கு ஒரு விற்பனையாளர் வேலை தருமாறு கேட்டான். இந்தியாவில் ஏற்கெனவே விற்பனையாளராகப் பணிபுரிந்த அனுபவம் உண்டென்றும் சொன்னான். 
அவனது தோற்றத்தால் கவரப்பட்ட முதலாளி அவனை வேலையில் அமர்த்திக் கொண்டார். 
குண்டூசி முதல் வானூர்தி வரை கிடைக்கும் சூப்பர் மார்க்கெட் அது. 
முதல் நாளன்று அவனுக்கு மிகவும் கடுமையான வேலை. 
மாலையில் பணி முடிந்ததும் அவனை வரவழைத்த முதலாளி கேட்டார், "இன்று உன்னால் எத்தனை வாடிக்கையாளருக்கு  விற்பனை செய்ய முடிந்தது". 
இளைஞன், ஒருவருக்கு விற்பனை செய்ததாக சொன்னான். 
முதலாளிக்கு கோபம் வந்து விட்டது.
"இங்கே சராசரியாக ஒவ்வொரு விற்பனையாளரும், இருபது வாடிக்கையாளர்களுக்குப் பொருட்களை விற்பனை செய்ய வேண்டும். விரைவில் உன்னுடைய விற்பனையை அதிகரிக்கா விட்டால், உன் வேலை பறிபோய் விடும்" என்று எச்சரித்தார். 
"சரி, அந்த ஒரு வாடிக்கையாளருக்கு எத்தனை பவுண்டுக்கு விற்பனை செய்தாய் ?"
இளைஞன் சொன்னான்,
"933005  டொலர்கள்".  
அதிர்ச்சியடைந்த  முதலாளி,
"அப்படி என்ன விற்றாய்"
வாடிக்கையாளருக்கு ஒரு மீன் பிடிக்கும் முள், தூண்டில் மற்றும் அதற்குத் தேவையான பொருட்களை விற்றேன்."
"ஆனால்,  அவற்றின் விலை இவ்வளவு இல்லையே ?" 
இது முதலாளி.
"உண்மைதான்.  இவற்றை அவர் வாங்கிய பின், கடலில் சென்று மீன் பிடிக்கப் படகு இருக்கிறதா என்று கேட்டேன். அவர் இல்லை என்றதால், 
நமது படகுப் பிரிவுக்கு அழைத்துச் சென்று காட்டி, ஓர் இருபது அடி நீளப்
படகை விற்றேன். இந்த நீளமான படகை எப்படி எடுத்துச் செல்வீர்கள் என்றதற்கு, அவரிடம் அவ்வளவு பெரிய கார் இல்லாததால், ஒரு டீலக்ஸ் 4  x  4  ப்ளாஸர் வோல்க்ஸ்வேகன்  காரையும் விற்றேன். நடுவே ஓய்வில் அவருக்குத் தங்க இடம் இல்லாததால், மிகப்
பெரிய டென்ட் ஒன்றையும் விற்றேன்"
"அவர் இவ்வளவையும் வாங்கவா உன்னிடம் வந்தார் ?" நம்ப முடியாத முதலாளி கேட்டார். 
"இல்லை, அவர், தனக்குத் தலை வலிப்பதாகவும், ஒரு தலைவலி மாத்திரை வாங்க வந்ததாகவும்தான் சொன்னார். நான்தான்,
தலைவலிக்கு நல்ல மருந்து, இந்த மீன் பிடிக்கும் பொழுது போக்கு என்று சொன்னேன்."
முதலாளி கேட்டார்,
 "ஆமாம், இந்தியாவில் நீ எங்கு வேலை செய்தேன் என்று சொன்னாய் ?"
"அங்கு தனியார் மருத்துவமனையில் மாஸ்டர் செக்கப் பிரிவு ஆலோசகராக இருந்தேன், 
ஏன் ?"
"இங்கே வா, என் நாற்காலியில் அமர்ந்து இந்தக் கடையைப் பார்த்துக் கொள், நான் கொஞ்ச நாள் அங்கு சென்று வேலை பார்த்து விட்டு வருகிறேன்".
 படித்ததில் கவர்ந்தது.
இப்படித்தான் இருக்கிறது... *இன்றைய மருத்துவ உலகம்.*
  • 134
  • More
Info
Category:
Created:
Updated:
Comments (0)
Login or Join to comment.
Ads
Featured Posts
தமிழ் குழந்தைகளின் பெயர்கள்
  •  ·  Yathusan
  •  · 
1 = அகரன் > முதன்மையானவன்2 = அகவி > அகம் செம்மையானவள் / அகத்தூய்மையள்3 = அகன் > ஆழ்ந்த உளத்தவன்4 = அகன் > ஆழ்ந்த உள்ளம் உடையவன்5 = அகிலன்
S என்ற எழுத்தில் உங்கள் பெயர் ஆரம்பிக்கின்றதா?
குறிப்பிட்ட சில ஆங்கில எழுத்துகளை வைத்து ஒருவரது வாழ்க்கையையே தீர்மானித்து விடலாம். அதிலும், A, S, J போன்ற எழுத்துகள் மிகவும் சக்தி வாய்ந்த எழுத்துகளா
கிழவி தோற்றமா? தேவதை தோற்றமா? (குட்டிக்கதை)
இரண்டு மன்னர்களுக்குள் சண்டை. தோற்றவனிடம் வென்றவன் சொன்னான்.”நான் கேட்கும் கேள்விக்கு சரியான பதிலைச் சொன்னால் உன் நாடு உனக்கே”.கேள்வி : ஒரு பெண் தன் ஆ
உப்புமாவை நேசிக்கும் அன்பர்களுக்கு (நகைச்சுவை)
சிவன்: நக்கீரரே! எமது பாட்டில் எங்கு குற்றம் கண்டீர்? சொற்சுவையிலா? அல்லது பொருட்சுவையிலா?.நக்கீரர்: சொல்லில் குற்றமில்லை. இருந்தாலும் அது மன்னிக்கப்ப
சுவையான சம்பவம்...
கம்பன் ஒரு சமயம் கையில் காசில்லாமல் காய்ந்து போய் கிடந்தான்.அப்போது ஒரு தாசி வீட்டு வேலைக்காரன் அவள் கம்பனை சந்திக்க விரும்புவதாக கூறினான்.அவள் பெயர்
வைத்தியரின் தேடுதல்   (குட்டிக்கதை)
ஒரு வைத்தியரும் அவருடைய மனைவியும் காட்டில் நீண்ட நாட்களாக எதையோ தேடிக்கொண்டிருந்தனர்.கணவர் என்ன தேடுகிறார் என்று மனைவிக்கு தெரியாது!  வைத்தியரும் சொன்
சின்னப் பையன்     (குட்டிக்கதை)
இங்கிலாந்தின் பிரபல கம்பெனி ஒன்றிற்கு, பெரியதோர் இயந்திரம் ஜப்பானில் இருந்து வரவழைக்கப் பட்டது. கோடிக்கணக்கில் விலை. அந்த இயந்திரத்தை இன்ஸ்டால் செய்ய
வெற்றிக்கான சூத்திரம்
தன்னம்பிக்கை பயிற்சி வகுப்பில்வெற்றியாளர் ஒருவரை முறைத்து முறைத்துப் பார்த்துக் கொண்டிருந்தார் ஒருவர். முறைத்தவர் முகத்தில் எப்போதும் இறுக்கம். சிரிப்
பொன்னாங்கண்ணி கீரை சாப்பிடுவதால் கிடைக்கும் பயன்கள்
பொன்னாங்கண்ணி கீரையில் சாப்பிட்டால் ஆண்களுக்கு தேவையான சக்தி கிடைக்கும். குறிப்பாக, பாலுணர்வை அதிகரிக்கும் ஊட்டச்சத்துக்கள் இதில் நிறைந்துள்ளன. அதேபோல
தூக்கமின்மைக்கான காரணங்கள்
நாம் தூங்கும் பொழுது என்ன நடக்கின்றது என்பதனை நாம் அறிவதில்லை. தூக்கத்தில் நாம் என்னவெல்லாம் செய்கின்றோம் என்பதும் நமக்குத் தெரியாது. யாராவது நம்மைப்
வயதானாலும் நினைவாற்றல் இழப்பை தடுக்கலாம்
வயதானவர்களுக்கு ஏற்படும் நினைவாற்றல் இழப்பு அறிகுறிகளைக் குறைக்க உதவும் 6 சூப்பர்ஃபுட்களை உங்கள் அன்றாட உணவில் சேர்க்கலாம். முதுமையை நம்மால் தடுக்க மு
ஏசியை பயன்படுத்துவோர் கட்டாயம் கவனிக்கவேண்டியது
பல மென்பொருள் நிறுவனங்கள் தங்களது ஊழியர்களின் புத்துணர்ச்சி சூழலுக்கும், அவர்களின் செயல்பாடுகளை வெளிப்படுத்தும் கணினியின் பயன்பாட்டிற்கும் நாளொன்றுக்க
நீங்கள் புத்திசாலியா என அறிய அறிவியல் ரீதியான அறிகுறி
ஒருவரை என்ன சொன்னாலும் பொறுத்துக் கொள்வார்கள். ஆனால் முட்டாள் என்று சொன்னால் மட்டும் பயங்கரமாக கோபப்பட்டு விடுவார்கள். அப்படி யாரும் சொல்லிவிடாமல் புத
முகப்பொலிவினை இரண்டே நிமிடத்தில் பெற சூப்பரான ஐடியா
விசேஷத்திற்கு செல்ல வேண்டும் என்றால், ஐந்து நிமிடத்தில் முகம் பொலிவு பெற வேண்டும் என்றால், சமையலறையில் இருக்கும் பொருட்களை வைத்து ஐந்தே நிமிடத்தில் உங
அன்பை விதைப்போம்  (குட்டிக்கதை)
ஒரு இளைஞர் தினமும் ஒரு பாட்டியிடம் ஆரஞ்சு பழங்களை வாங்குவார்.பழங்களை எடை போட்டு வாங்கி பணம் கொடுத்த பின்..... அந்த பழங்களில் இருந்து ஒன்றை எடுத்து பிய