-
- 2 friends
சுலபமாக பூஜை பாத்திரங்களை சுத்தம் செய்வது எப்படி?
விசேஷ நாட்களில் வீட்டில் பூஜை செய்வதை நாம் காலம் காலமாக கடைப்பிடித்து கொண்டு வருகிறோம். இது வீட்டிற்கு நல்ல ஒரு சுபிச்சத்தையும், தெய்வக் கடாட்சத்தையும் தரும். இதை செய்ய யாரும் தயங்குவது கிடையாது.
ஆனால் இதை செய்வதற்காக நாம் இந்த பூஜை பாத்திரங்களை துலக்கி எடுக்கும் வேலையை நினைத்தால் தான் இந்த பூஜையை பற்றிய பயமே வந்து விடும். ஏனெனில் இதில் எண்ணெய் ஊற்றி தீபம் ஏற்றுவதால் உடனே அதில் எண்ணெய் பிசுக்கு படிந்து விளக்குகள் கருப்படைந்து தேய்ப்பதற்கு மிகவும் கடினமாகி விடும்.
பல வருடங்களாக எண்ணெய் பிசுக்கு படிந்து பயன்படுத்தாமல் வைத்திருக்கும் பூஜை பாத்திரங்களை கூட பளிச்சென்று மாற்ற ஒரு அருமையான அதே நேரத்தில் மிகவும் எளிதாக செய்யக் கூடிய ஒரு டிப்ஸ் பற்றி தான் இந்த வீட்டுக் குறிப்பு பதிவில் நாம் தெரிந்து கொள்ள போகிறோம்.
பூஜை பாத்திரங்களை சுத்தம் செய்ய முதலில் பூஜை பாத்திரங்கள் மீது இருக்கும் அழுக்கு எண்ணெய் பிசுக்குகளை ஒரு டிஷ்யூ பேப்பர் வைத்து துடைத்து விடுங்கள். அதன் பிறகு நன்றாக புளித்த தயிரை எடுத்து பூஜை பாத்திரங்களின் மீது தேய்த்து ஐந்து நிமிடம் வரை அப்படியே ஊற விட்டு விடுங்கள். இப்பொழுது நாம் விளக்குகளை தேய்ப்பதற்கான பேஸ்ட்டை தயார் செய்து கொள்வோம்.
2 ஸ்பூன் கோதுமை மாவு, 2 ஸ்பூன் பாத்திரம் தேய்க்கும் லிக்விட், 1 ரூபாய் ஷாம்பு பாக்கெட்டில் உள்ள ஷாம்பையும் சேர்த்து நன்றாக பேஸ்ட் பதத்திற்கு குழைத்துக் கொள்ளுங்கள். இந்த கலவை நீங்கள் பயன்படுத்தும் பூஜை பாத்திரங்களின் அளவிற்கு ஏற்றார் போல் கூடவோ குறையவோ செய்து கொள்ளுங்கள். அடுத்து குழைத்த இந்த பேஸ்ட்டை பூஜை பொருட்களின் மீது தேய்த்து மீண்டும் ஐந்து நிமிடம் வரை அப்படியே வைத்து விடுங்கள்.
இந்த பேஸ்ட் தேய்த்து ஐந்து நிமிடம் ஆன பிறகு பூஜை பாத்திரங்களை ஒரு ஸ்க்ரப்பர் வைத்து லேசாக தேய்த்து பாருங்கள். நீங்கள் புதிதாக கடையில் வாங்கிய பூஜை பாத்திரங்கள் போல பல பளப்பளவென்று நீங்கள் தேய்க்கும் போதே மின்ன ஆரம்பித்து விடும். அதன் பிறகு பாத்திரங்களை நல்ல தண்ணீர் கொண்டு கழுவி காட்டன் துணி வைத்து துடைத்த பிறகு வெயிலில் காய வைத்து எடுத்த பின் பூஜைக்கு பயன்படுத்துங்கள்.
இந்த முறையில் நீங்கள் பூஜை பாத்திரங்களை சுத்தம் செய்து வைத்தால் அப்போது தான் கடையில் வாங்கி வந்தது போல பளபளவென்று மின்னும்.இதில் சேர்த்து இருக்கும் பொருள் எல்லாம் நம் வீட்டில் எப்போதும் இருக்கும் எளிமையான பொருள் தான். இதை வைத்து தேய்க்கும் போது நாம் கை வலிக்க தேய்க்க வேண்டிய அவசியமும் இருக்காது எளிமையாகவே சுத்தம் செய்து விடலாம்.
- · Yathusan
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·