- · 5 friends
-
I
நாவில் எச்சில் ஊறவைக்கும் பீர்க்கங்காய் கடையல்
பீர்க்கங்காய் நீர்ச்சத்து மிக்கது. இது உடல் எடையை குறைக்க, கொழுப்பை கரைக்க அதிக அளவு உதவி செய்யும். அது மட்டுமின்றி இதன் தோலை துவையல் அரைத்தாலும் அத்தனை அட்டகாசமாக இருக்கும்.
நம்மில் பலருக்கும் பீர்க்கங்காய் என்றால் பிடிக்காது. பீர்க்கங்காய் மட்டுமல்ல பொதுவாக காய்கறிகள் என்றாலே அவ்வளவாக விரும்ப மாட்டார்கள். அப்படியானவர்கள் கூட இந்த முறையில் கடையல் செய்து கொடுத்தால் கேட்டு வாங்கி சாப்பிடுவார்கள் அந்த அளவிற்கு சுவை அட்டகாசமாக இருக்கும்.
இந்த கடையல் செய்ய முதலில் கால் கிலோ பீர்க்கங்காய் வாங்கி மேல் தோல் நீக்கி சின்ன சின்னதாக அரிந்து எடுத்துக் கொள்ளுங்கள். 10 சின்ன வெங்காயம், 10 பல் பூண்டு இது இரண்டையும் தோல் உரித்து வைத்துக் கொள்ளுங்கள். ஒரு நெல்லிக்காய் அளவு புளியை ஊறவைத்து கரைத்து வடிகட்டி எடுத்துக் கொள்ளுங்கள்.
இந்த கடையல் செய்ய அடுப்பில் கடாய் வைத்து இரண்டு டேபிள்ஸ்பூன் எண்ணெய் சேர்த்துக் கொள்ளுங்கள். எண்ணெய் சூடானவுடன் கால் டீஸ்பூன் கடுகு சேர்த்து பொரிந்த பிறகு அரை ஸ்பூன் கடலைப்பருப்பு, அரை ஸ்பூன் உளுத்தம் பருப்பு சேர்த்து பொரிய விடுங்கள்.
அதன் பிறகு கால் டீஸ்பூன் வெந்தயம், அரை டீஸ்பூன் சீரகம் சேர்த்து அதுவும் பொரிந்த பிறகு உரித்து வைத்த வெங்காயம் பூண்டு இரண்டையும் சேர்த்து வதக்குங்கள். இரண்டு காய்ந்த மிளகாய், இரண்டு பச்சை மிளகாய், ஒரு கொத்து கருவேப்பிலை இவைகளையும் சேர்த்த பிறகு வெங்காயம் போட்டு வதக்க வேண்டும்.
ஒரு பெரிய மீடியம் சைஸ் தக்காளியை சின்னதாக அரிந்து அதையும் இதில் சேர்த்து தக்காளி குழையும் வரை வதக்கி கொள்ளுங்கள். அதன் பிறகு அரிந்து வைத்த பீர்க்கங்காயும் சேர்த்து ஒரு முறை கலந்து விடுங்கள். இவையெல்லாம் நன்றாக கலந்த பிறகு அரை டம்ளர் தண்ணீர் ஊற்றி அரை ஸ்பூன் உப்பும் சேர்த்து மீண்டும் ஒருமுறை கலந்து மூடி போட்டு ஐந்து நிமிடம் வேக விடுங்கள்.
ஐந்து நிமிடம் கழித்து இதை அடுப்பில் இருந்து இறக்காமல் ஒரு சிறிய கரண்டி அல்லது மத்து வைத்து லேசாக இதை கடைந்து விடுங்கள். அதன் பிறகு கரைத்து வைத்த புளித்தண்ணீரை இதில் சேர்த்து மீண்டும் ஐந்து நிமிடம் வரை கொதிக்க விடுங்கள். இப்போது மூடி போட்டு கொதிக்க வைக்க வேண்டாம். பீர்க்கங்காய் கடைந்த பிறகு ஐந்து நிமிடம் கொதிக்க வேண்டும். அதன் பிறகு கொஞ்சம் கொத்தமல்லியை பொடியாக அரிந்து இதன் மேல் தூவி அடுப்பை அணைத்து விடுங்கள். பீர்க்கங்காய் கடையல் தயார்.
- · Yathusan
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·